6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 27/09/2019
HIS - வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ஆதிச்சநல்லூர்____________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
2.
___________ முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.
3.
வேதகாலத்தில் மக்களிடமிருந்து __________ என்ற வரி வசூலிக்கப்பட்டது.
4.
வேதப்பண்பாடு ______________ இயல்பைக் கொண்டிருந்தது.
5.
பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
6.
கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.
7.
படைத்தளபதி 'கிராமணி' என அழைக்கப்பட்டார்.
8.
நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும்.
9.
பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியத் தொல் பொருட்கள் இந்திய-ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.
10.
தமிழ்நாட்டில் காணப்படும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
11.
முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன?
12.
'கற்திட்டைகள்' என்பது என்ன ?
13.
'பெருங்கற்காலம்' பற்றி நீங்கள் அறிந்தது ஏன்ன?
14.
நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
15.
குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
16.
கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
17.
நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" _________ லிருந்து எடுக்கப்பட்டது.
பிராமணா
ஆரண்யகா
வேதம்
உபநிடதம்
18.
ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.
சீனா
வடக்கு ஆசியா
மத்திய ஆசியா
ஐரோப்பா
19.
ஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.
பஞ்சாப்
கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
காஷ்மீர்
வடகிழக்கு
20.
கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தை பொறுத்தமட்டில் சரியானது?
அ) கிராமா < குலா < விஷ் < ராஸ்டிரா < ஜனா
ஆ) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
இ) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்
ஈ) ஜனா < கிராமா < குலா < விஷ் < ராஸ்டிரா
21.
கூற்று1: தீபகற்ப இந்தியாவில் இருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன்மீது அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிபிளஸ் குறிப்பிடுகிறார்.
கூற்று2: இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன
அ) கூற்று1 தவறானது.
ஆ) கூற்று2 தவறானது
இ) இரண்டு கூற்றுகளும் தவறானவை
ஈ) இரண்டு கூற்றுகளும் சரியானவை
22.
கூற்று: வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.
காரணம்: நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடந்தங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
அ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி
23.
| இரண்டு இதிகாசங்களைக் குறிப்பிடவும் ________ | இறந்தவர்களின் நினைவாக நடத்தப்படும் ஒற்றைக் கல்தூணின் பெயர் ________ | சிவகங்கை மாவட்டத்திலுள்ள சங்க காலத்தைச் சேர்ந்த நகரத்தின் பெயர் ________ |
| தமிழ்நாட்டிலுள்ள ஏதாவது இரண்டு இரும்புக்கால வாழ்விடங்களின் பெயர்களைக் கூறுக ________ | தொடர்கால ஆரியர்கள் பின்பற்றிய வேளாண் முறை என்ன? ________ | வேதகாலத்தில் உருவான இரண்டு பெரிய நகரங்களின் பெயரென்ன? ________ |
1.
( )
தூத்துக்குடி
2.
( )
குரு குலக்கல்வி
3.
( )
பாலி
4.
( )
குகைகள்
5.
(a)
6.
(a)
7.
(b)
8.
(a)
9.
(a)
10.
முதுமக்கள் தாழிகள்,
கற்திட்டைகள்,
நினைவுகற்கள்,
நடுகற்கள்
ஆகியவை
11.
இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண்பானைகள் முதுமக்கள் தாழிகள் என அழைக்கப்படுகின்றன
12.
'கற்திட்டைகள்' என்பது இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கபற்பலகைகள் செங்குத்தாக நடப்பட்டு அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும்.
13.
இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.
14.
ரிக் வேதம்,
யஜுர் வேதம்,
சாம வேதம்,
அதர்வண வேதம்.
15.
| குருகுலக் கல்வி முறை | நவீன கல்விமுறை |
|
மாணவர்கள் குருவுடன் தங்கியிருந்து, அவருக்கு சேவை செய்து கல்வி சுற்று அறிவை வளர்த்தனர் |
மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக் கூடங்களுக்குச் சென்று ஆசிரியர் உதவியுடன் கல்வி கற்று அறிவை வளர்க்கின்றனர். |
|
வாய்மொழி வாயிலாக பாடங்களை மனப்பாடம் செய்து கற்றனர். |
மாணவர்கள் புத்தகங்கள் மூலம் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறைப்படி கல்வி கற்கின்றனர் |
|
வேதங்கள் புராணங்கள் போன்ற பாடங்கள் முக்கியமான பாடங்களாகக் கற்றுக் கொடுக்கப்பட்டன |
அறிவியல், கணிதம், கணினி மற்றும் மொழி சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. |
|
ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. |
வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. |
|
இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப் பட்டது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது |
அனைவருக்கும் தரமான ஒரேவிதமான கல்வி வழங்கப்படுகிறது. |
16.
தொல்லியல் ஆய்மிடம் கொடுமணல் :
(i) பதிற்றுப்பத்து என்னும் சங்ககால இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணல் என்ற ஊர் இதுவென அடையாளப் படுத்தப்படுகிறது.
(ii) இங்கு தமிழ்பிராமி எழுத்துகளைக்கொண்ட முன்னூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
(iii) மேலும், நூல் சுற்றிவைக்கப்பயன்படும் சுழல் அச்சுகள், சுருள்கள். துணிகளின் சிறிய நுண்டுகள். கருவிகள், ஆயுதங்கள். அணிகலன்கள். மணிகள் முக்கியமாக சிவப்புநிற மணிக்கற்கள் ஆகியவற்றையும் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
(iv) புதைஞழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
17.
(d)
உபநிடதம்
18.
(c)
மத்திய ஆசியா
19.
(b)
கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
20.
குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
21.
இரண்டு கூற்றுகளும் சரியானவை
22.
கூற்று தவறு காரணம் சரி
23.
| இராமாயணம், மகாபாரதம் | நினைவு கற்கள் | கீழடி |
| பொருந்தல் (திண்டுக்கல் மாவட்டம்) பையம்பள்ளி (வேலூர் மாவட்டம்) | அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறை | அயோத்தியா இந்திரபிரஸ்தா |
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards