6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 04/02/2020
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 6th Standard Social science Important Questions with Answer key )
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
1.புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.
2.புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.
3.புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
1 மற்றும் 3 சரி
2 மற்றும் 3 சரி
1 மற்றும் 2 சரி
1, 2 மற்றும் 3 சரி
2.
தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை
370
380
360
390
3.
வடதுருவம் என்பது
90° வ அட்சக்கோடு
90° தெ அட்சக்கோடு
90° மே தீர்க்கக்கோடு
90° கி தீர்க்கக்கோடு
4.
அ) பதஞ்சலி - 1. கலிங்கம்
ஆ) அக்னிமித்ரர் - 2. இந்தோ-கிரேக்கர்
இ) அரசர் காரவேலர் - 3. இந்தோ-பார்த்தியர்
ஈ) டெமிட்ரியஸ் - 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
உ) கோண்டோ பெர்னெஸ் - 5. மாளவிகாக்னிமித்ரம்.
4, 3, 2, 1, 5
3, 4, 5, 1, 2
1, 5, 3, 4, 2
2, 5, 3, 1, 4
5.
குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______
கனிஷ்கர்
முதலாம் கட்பிசஸ்
இரண்டாம் கட்பிசஸ்
பன்-சியாங்
6.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத் தி செய்கிறது.
ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன
ஐர
ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்
7.
இந்தியா ______ உ ற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.
துத்தநாகம்
மைக்கா
மாங்கனீசு
நிலக்கரி
8.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
| பட்டியல் I | பட்டியல் II |
| A. மலேசியா | 1. அத்தி |
| B. தாய்லா ந்து | 2. ரப்பர் |
| C. கொரியா | 3. தேக்கு |
| D. இஸ்ரேல் | 4. செர்ரி |
குறியீடுகள்
| A | B | C | D |
| 2 | 3 | 4 | 1 |
|
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 1 |
| A | B | C | D |
| 4 | 3 | 1 | 2 |
9.
நிலநடுக்கோட்டுக் காலநிலை என்ப து
i) ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
ii) சராசரி மழை யளவு 200மி.மீ ஆகும்.
iii) சராசரி வெ ப்பநிலை 10°C ஆகும்.
மேற்கண்ட கூற்றுகளில்
i மட்டும் சரி
ii மற்றும் iii சரி
i மற்றும் iii சரி
i மற்றும் ii சரி
10.
எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடை யில் அமைந்துள்ள மலையிடைப் பீடபூமி
திபெத்
ஈரான்
தக்காணம்
யுனான்
11.
அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
அ. சேரர் – 1. மீன்
ஆ.சோழர் - 2. புலி
இ. பாண்டியர் - 3. வில், அம்பு
3, 2, 1
1, 2, 3
3, 1, 2
2, 1, 3
12.
சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.
மண்டலம்
நாடு
ஊர்
பட்டினம்
13.
தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________
பாண்டியன் நெடுஞ்செழியன்
சேரன் செங்குட்டுவன்
இளங்கோ அடிகள்
முடத்திருமாறன்
14.
குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?
கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
தென்னிந்தியப் படையெழுச்சி
ஹூணர்களின் படையெடுப்பு
மதசகிப்புத்தன்மை
15.
பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ளள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?
குகைச் சுவர்களில்
கோவில்களின் விதானங்களில்
பாறைகளில்
பாப்பிரஸ் இலைகளில்
16.
அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம்_____
வேலூர்
திருவள்ளூர்
விழுப்புரம்
காஞ்சிபுரம்
17.
தேசிய ஊராட்சி தினம் ____________ ஆகும்.
ஜனவரி 24
ஜுலை 24
நவம்பர் 24
ஏப்ரல் 24
18.
உலக மக்களாட்சி தினம்______ ஆகும்
செபப்டம்பர் 15
அக்டோபர் 15
நவம்பர் 15
டிசம்பர் 15
19.
வங்காளத்தின் கெளட அரசர் _______
சசாங்கர்
மைத்திரகர்
ராஜ வர்த்தனர்
இரண்டாம் புலிகேசி
20.
சந்திரகுப்தரால் நிறுவப்பட்டட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில் உள்ளது.
மெக்ராலி
பிதாரி
கத்வா
மதுரா
21.
அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை _________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
101
100
78
46
22.
அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________
ஜனவரி 26
ஆகஸ்டு 15
நவம்பர் 26
டிசம்பர் 9
23.
விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர் _________
பிரதம அமைச்சர்
குடியரசுத்தலைவர்
துணைக்கூடியரசுத் தலைவர்
அரசியல் தலைவர் எவரேனும்
24.
1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் _________
பங்கிம் சந்திர சட்டர்ஜி
ரவீந்திரநாத் தாகூர்
மகாத்மா காந்தி
சரோஜினி நாயுடு
25.
ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர் _________
அக்பர்
ரவீந்திரநாத் தாகூர்
பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஜவஹர்லால் நேரு
26.
இந்தியாவின் தேசியக் கீதம் ________
ஜன கண மன
வந்தே மாதரம்
அமர் சோனார் பாங்கலே
நீராடுங் கடலுடுத்த
27.
தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் _________
பிங்காலி வெங்கையா
ரவீந்திரநாத் தாகூர்
பங்கிம் சந்திர சட்டர்ஜி
காந்திஜி
28.
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
சந்திரகுப்த மௌரியர்
அசோகர்
பிரிகத்ரதா
பிந்துசாரர்
29.
செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________
டாலமி
கௌடில்யர்
ஜெர்சக்ஸ்
மெகஸ்தனிஸ்
30.
சந்திரகுப்த மௌரியர் அறியணையைத் துறந்து _________ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.
பத்ரபாகு
ஸ்துலபாகு
பார்ஸவநாதா
ரிஷபநாதா
31.
மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?
ராஜகிரகம்
வைசாலி
பாடலிபுத்திரம்
காஷ்மீர்
32.
சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
23
24
25
26
33.
பௌத்த நூல்களின் பெயர் என்ன?
அங்கங்கள்
திரிபிடகங்கள்
திருக்குறள்
நாலடியார்
34.
ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.
சீனா
வடக்கு ஆசியா
மத்திய ஆசியா
ஐரோப்பா
35.
சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?
செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்
36.
தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.
ஆசியா
ஆப்பிரிக்கா
அமெரிக்கா
ஐரோப்பா
37.
பரிணாமத்தின் வழிமுறை ________
நேரடியானது
மறைமுகமானது
படிப்படியானது
விரைவானது
38.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
நாமக்கல்
சேலம்
கன்னியாகுமரி
சிவகங்கை
39.
இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு
செஸ்
மல்யுத்தம்
கேரம்
டென்னிஸ்
40.
பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தகரிக்கப்படுவது
திரைப்படங்கள்
விளம்பரங்கள்
தொலைக்காட்சி தொடர்கள்
இவை அனைத்தும்
41.
'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _________
ஜவஹர்லால் நேரு
மகாத்மா காந்தி
அம்பேத்கர்
இராஜாஜி
42.
மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் _________ மாநிலத்தில் உள்ளது.
மணிப்பூர்
சிக்கிம்
நாகலாந்து
மேகாலயா
43.
இந்தியா ஒரு _________ என்று அழைக்கப்படுகிறது.
கண்டம்
துணைக்கண்டம்
தீவு
இவற்றில் எதுவுமில்லை
44.
இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
27.9
29.7
28.7
28.9
45.
பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
வணிகம்
வேட்டையாடுதல்
ஓவியம் வரைதல்
விலங்குகளை வளர்த்தல்
46.
தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
அ) கல்லணை
ஆ) காஞ்சிபுர ஏரிகள்
இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
ஈ) காவிரி ஆறு - இவற்றில்
அ) மட்டும் சரி
ஆ) மட்டும் சரி
இ) மட்டும் சரி
அ மற்றும் ஆ சரி
47.
6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்
ஈராக்
சிந்துவெளி
தமிழகம்
தொண்டைமண்டலம்
48.
உறைந்த கண்டம்
வட அமெரிக்கா
ஆஸ்திரேலியா
அண்டார்டிகா
ஆசியா
49.
அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப்பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
50.
மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது
பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
51.
மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்
செவ்வாய்
சந்திரன்
புதன்
வெள்ளி
52.
மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
மார்ச் 21
ஜூன் 21
செப்டம்பர் 23
டிசம்பர் 22
53.
ஐரோப்பாவில் கொண்டாடப்படும் விழாக்கள் சிலவற்றை பெயர்களைக் குறிப்பிடு.
54.
ஐரோப்பாவில் மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்ட நாடுகளின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.
55.
ஆசியாவில் காணப்படும் முக்கிய துறைமுகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
56.
மதுரையைப் பற்றிய தகவல்களைக் குறிப்புகளில் எழுதியுள்ளவர் யார்?
57.
தமிழின் இரட்டைக் காப்பியங்கள் யாவை?
58.
சிந்து வெளி மக்கள் மட்பாண்டங்களை எவ்வாறு பயன்படுத்தினர்?
59.
சிந்து வெளி மக்கள் பயன்படுத்திய ஆபரணங்கள் யாவை?
60.
வரலாற்றின் தொடக்க காலம் என்றால் என்ன?
61.
அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?
62.
இடி, மின்னல் - குறிப்பு வரைக
63.
காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.
64.
சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.
65.
குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?
66.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை ?
67.
கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக
68.
உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யா து?
69.
மக்களாட்சி என்றால் என்ன?
70.
நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைதற்கான கரணம் என்ன?
71.
சேமிப்பு என்றால் என்ன ?
72.
சந்தை வரையறு.
73.
ஜனவரி 26 குடியரசு தினமாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
74.
மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
75.
தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் எவை?
76.
இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்தை வரைந்து வரையறுக்கவும்.
77.
நிலையான வளர்ச்சி என்றால் என்ன?
78.
மூன்றாம் நிலை செயல்பாடுகள்.
79.
தனிநபர் வளம்.
80.
நாளங்காடி, அல்லங்காடி - வேறுபடுத்துக.
81.
தமிழகத்தின் பண்டைய நகங்களை குறிப்பிடுக.
82.
ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்கு காரணம் என்ன?
83.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றைக் சிந்து வெளியின் சிறப்பங்சங்களைக் கவனித்து தற்காலத்துடன் ஒப்பிடு
1) விளக்கும் கம்பங்கள்
2) சட்ட செங்கற்கள்
3) நிலத்தடி வடிகால் அமைப்பு
4) எடைகள் மற்றும் அளவீடு
5) கப்பல் கட்டும் தளம்.
84.
சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம், காரணம் கூறு.
85.
இந்தியாவில் நிகழும் பல்வேறு பாகுபாட்டினை விவரி
86.
இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" நிலவும் நாடு என ஏன் அழைக்கப்படுகிறது?
87.
இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.
88.
பன்முகத் தன்மையின் வகைகள் யாவை?
89.
பாகுபாடு என்றால் என்ன?
90.
கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?
91.
மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்?
92.
அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளாக உள்ள கண்டங்கள் யாவை?
93.
கண்டம் என்றால் என்ன?
94.
பழையகற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.
95.
தொல்கைவினைப் பொருட்கள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
96.
பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றைக் கூறு.
97.
இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
டெல்லி
சென்னை
தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம்
கேரளா
கர்நாடகா
98.
பிளவுபட்ட கடற்கரை என்றால் என்ன? துறைமுகங்களை எவ்வாறு அது மோசமான காலநிலையில் இருந்து பாதுகாக்கின்றது?
99.
|
பல்லவர் காலத்துக் கட்டுமானக் |
சாளுக்கியர் காலத்தில் வளர்ச்சி பெற்ற புதிய கட்டடக் கலைப் பாணியின் பெயரென்ன? விடை: _________ |
அய்கோல் கல்வெட்டு கூறுவதென்ன? விடை:________ |
| எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலைக் கட்டியது யார்? விடை: ________ |
மாமல்லனின் கட்டடக்கலைப் பிராமியில் அமைந்துள்ள சிற்பமண்டபத்தின் பெயரென்ன? விடை:_________ |
சாளுக்கியரின் கட்டுமானக் கோவில்கள் எங்குள்ளன? விடை: _________ |
| பல்லவர் காலத்தில் பக்தி மார்க்கத்தைப் போதித்த இரு சைவ வைணவத் துறவியரின் பெயர்களைக் குறிப்பிடுக. விடை: ________ |
ராஷ்டிராகூட வம்சத்தை நிறுவியவர் யார்? விடை: _________ |
முதலாம் நரசிம்மவர்மன் சூட்டிக்கொண்ட பட்டங்கள் யாவை? விடை: _________ |
100.
அட்ச, தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் புவி எவ்வாறு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைப் படத்துடன் விவரி.
101.
கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.
102.
கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.
103.
சாகர்கள் யார்?
104.
கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்பப்படுகிறான்: நிறுவுக
105.
சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்
106.
படத்தை பார்த்து விடையளி

i) இந்த நிலத்தோற்றத்தின் பெயரைக் கூறுக.
ii) இது எவ்வகை நிலத்தோற்றம் ?
ii) இந்த நிலத்தோற்றம் ஆற்றின் எவ்வகைச் செயலால் தோற்றுவிக்கப்படுகிறது ?
107.
படத்தைப் பார்த்து பதிலளி :

i) படத்தில் உள்ள கோளின் பெயர் என்ன?
ii) கோளின் நிறம் என்ன?
iii) இந்நிறத்திற்கான காரணம் என்ன?
108.
படத்தை பார்த்து விடையளிக்கவும்
i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
ii) பெரியதான கோள் எது?
iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
iv) செந்நிறக் கோள் எது?
109.
உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களைப் பட்டியலிடுக.
110.
மனிதன் உருவாக்கிய வளத்திற்கும், மனித வளத்திற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுக/
111.
பெளத்தத்தைப் பரப்புவதற்கு அசோகர் என்ன செய்தார்?(ஏதேனும் மூன்று)
112.
கர்மா - ஒரு மனிதனின் செயல்கள். ஏதாவது 10 நல்ல செயல்களைக் குறிப்பிடுக.
113.
சங்ககாலத்தில் பெளத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.
114.
குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
115.
கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
116.
காஞ்சியில் பிறந்த சான்றோர்களின் பெயர்களை கூறு
117.
பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக.
118.
இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுளோம் - கலந்துரையாடுக.
119.
பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.
120.
பெருங்கடலின் முக்கியத்துவத்தை விளக்குக.
121.
பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்களை விளக்குக.
1.
(d)
1, 2 மற்றும் 3 சரி
2.
(c)
360
3.
(a)
90° வ அட்சக்கோடு
4.
(b)
3, 4, 5, 1, 2
5.
(a)
கனிஷ்கர்
6.
(d)
ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்
7.
(b)
மைக்கா
8.
(a)
| A | B | C | D |
| 2 | 3 | 4 | 1 |
9.
(a)
i மட்டும் சரி
10.
(b)
ஈரான்
11.
(a)
3, 2, 1
12.
(c)
ஊர்
13.
(b)
சேரன் செங்குட்டுவன்
14.
(a)
கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
15.
(a)
குகைச் சுவர்களில்
16.
(c)
விழுப்புரம்
17.
(d)
ஏப்ரல் 24
18.
(a)
செபப்டம்பர் 15
19.
(a)
சசாங்கர்
20.
(a)
மெக்ராலி
21.
(a)
101
22.
(c)
நவம்பர் 26
23.
(a)
பிரதம அமைச்சர்
24.
(b)
ரவீந்திரநாத் தாகூர்
25.
(c)
பங்கிம் சந்திர சட்டர்ஜி
26.
(a)
ஜன கண மன
27.
(c)
பங்கிம் சந்திர சட்டர்ஜி
28.
(c)
பிரிகத்ரதா
29.
(d)
மெகஸ்தனிஸ்
30.
(a)
பத்ரபாகு
31.
(c)
பாடலிபுத்திரம்
32.
(b)
24
33.
(b)
திரிபிடகங்கள்
34.
(c)
மத்திய ஆசியா
35.
(a)
செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
36.
(b)
ஆப்பிரிக்கா
37.
(c)
படிப்படியானது
38.
(c)
கன்னியாகுமரி
39.
(c)
கேரம்
40.
(d)
இவை அனைத்தும்
41.
(a)
ஜவஹர்லால் நேரு
42.
(d)
மேகாலயா
43.
(b)
துணைக்கண்டம்
44.
(d)
28.9
45.
(b)
வேட்டையாடுதல்
46.
(d)
அ மற்றும் ஆ சரி
47.
(a)
ஈராக்
48.
(c)
அண்டார்டிகா
49.
(b)
அட்லாண்டிக் பெருங்கடல்
50.
(c)
பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
51.
(b)
சந்திரன்
52.
(d)
டிசம்பர் 22
53.
கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புனித வெள்ளி, புனிதர்கள் நாள், ரெடன் டோர், டோமாட்டினா மற்றும் கார்னிவல் ஆகியன ஐரோப்பாவின் முக்கிய பண்டிகைகள்.
54.
இத்தாலி, கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின், வாட்டிகன் நகரம், மால்ட்டா
55.
டோக்கியோ, ஷங்காய், சிங்கப்பூர், ஹாங்காங், சென்னை, மும்பை, கராச்சி மற்றும் துபாய் ஆகியன ஆசியாவின் முக்கியத் துறைமுகங்களாகும்.
56.
கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸ் மதுரையைப் பற்றி எழுதியுள்ளார். சாணக்கியர் தனது அர்த்த சாஸ்த்திரத்தில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
57.
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
58.
மட்பாண்டங்களைச் சக்கரங்கள் கொண்டு உருவாக்கினர். அவை தீயிலிட்டுச் சுடப்பட்டன. மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன. அங்கு கிடைத்த உடைந்த பானைத் துண்டுகள் விலங்குகளின் உருவங்களுடன், வடிவில் வடிவமைப்புகளுடனும் காணப்படுகின்றன.
59.
சிந்து வெளி நாகரிக ஆண்களும் பெண்களும் ஆபரணங்களை அணிந்தனர். அவர்கள் அணிந்த ஆபரணங்களாவன: கழுத்தணிகள், ஒட்டியானம், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள். இவை தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் விலையுயர்ந்த கற்களை கொண்டு உருவாக்கப் பெற்றன.
60.
வரலாற்றுக்கும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம் வரலாற்றின் தொடக்க காலம் ஆகும்.
61.
புவி மாதிரி மற்றும் நிலவரைபடத்தில் கிடைமட்டமாக, கிழக்கு மேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் அட்சக்கோடுகள் எனப்படும்.
புவி மாதிரி மற்றும் நிலவரைப்படத்தில் செங்குத்தாக, வடக்கு தெற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் தீர்க்கக்கோடுகள் எனப்படும்.
62.
வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும். இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒளி அலைகளும் ஏற்படுகின்றது. இது மின்னல் என்றும் இடி என்றும் அழைக்கப்படுகிறது.
63.
காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியும் என்பனவாகும். அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம் ஆகியனவாகும்.
64.
சிரெஸ்தி: சிரெஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்களை ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் ஆவர்.
சார்த்தவாகா: சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.
65.
க்ஷேத்ரா: வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்
கிலா: தரிசு நிலங்கள்
அப்ரசுதா: வனம் அல்லது காட்டு நிலங்கள்
வஸ்தி: குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள்
கபத சரிகா: மேய்ச்சல் நிலங்கள்
66.
1. கிராம சபை அமைத்தல்
2. மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு
3. இடஒதுக்கீடு
4. தேர்தல்
5. பதிவிக்கலாம்
6. நிதிக் குழு
7. கணக்கு மற்றும் தணிக்கை போன்ற இன்னும் பிற.
67.
1. வீட்டுவரி
2. தொழில் வரி
3. கடைகள் மீதான வரி
4. குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
5. நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு
6. சொத்துரிமை மாற்றம் - குறிப்பிட்ட பங்கு
7. மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு
68.
(i) மக்களுக்குத் தேவையான பணிகளை அவசியப் பணிகள் விருப்பப் பணிகள் என பகுக்கலாம்
(ii) இவையிரண்டுமே உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படுகின்றன
69.
ஒரு நாட்டின் குடிமக்கள் தேர்தல் வழியில் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், அதன்மூலம் அரசு அதிகாரத்தில் நேரடியாகப் பங்கேற்பதையுந்தான் மக்களாட்சி என்கிறோம்.
70.
(i) பழங்காலத்தில் வேட்டையாடிகாக, உணவுசேகரிப்பாளர்கள் வாழ்ந்து வந்த மக்கள். படிப்படியாக வோண்மை செய்யக் கற்றுக்கொண்டனர்.
(ii) வேளாண்மை செய்வதற்கு வசதியாக நீர் நிலைகள் அருகே குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினர்.
(iii) இல்லாறு குடியேறிய இடங்களே கிராமம் ஊர் என்று வளர்ச்சியடைந்தன.
71.
சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்துபோக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.
72.
கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒருமுறை பொதுவான ஓர் இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட பொருள்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் இடம் தான் சந்தை என அழைக்கப்படுகிறது
73.
1929 ஆம் ஆண்டு லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்யத்தை அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது அதனைத் தொடர்ந்து 1930, ஜனவரி 26 அன்று முழு சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது பின்னாளில் அதுவே நமது குடியரசு தினமாக ஆனது.
74.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலி மலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.
75.
யானை,
குதிரை,
காளை,
சிங்கம்
76.
இந்தியாவின் ரூபாய்க்கான குறியீடு ?
இச்சின்னத்தை 2010 இல் வடிவமைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த டி.உதயகுமார் ஆவார்.
77.
நிகழ்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருங்காலத் தலை முறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைத்து சமநிலைத் தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி எனப்படும்.
78.
முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருள்களைப் பர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பே மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். (எ.கா) வங்கி வணிகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை.
79.
தனிநபர் வளங்கள் என்பது, ஒரு தனி நபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும். (எ.கா) அடுக்குமாடிக் கட்டடங்கள்.
80.
| நாளங்காடி | அல்லங்காடி |
| சங்ககாலத்தில் இருந்த பகல்நேரக் கடைகள் நாளங்காடி என்று அழைக்கப்பட்டன | சங்ககாலத்தில் இருந்த இரவு நேரக் கடைகள் அல்லங்காடி என்று அழைக்கப்பட்டன. |
81.
பூம்புகார்,
மதுரை,
காஞ்சிபுரம்
82.
சுற்றுச் சூழல் மாற்றம், படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாற்றம், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற காரணங்களால் ஹரப்பா அழிவுக்கு வந்தது என நம்பலாம்.
83.
1.விளங்குக் கம்பங்கள் 2.சுட்ட செங்கற்கள்
3.நிலத்தடி வடிகால் அமைப்பு 4.எடைகள் மற்றும் அளவீடு
5.கப்பல் கட்டும் தளம்
சிந்து சமவெளி நகரங்களில் இரவு நேர வெளிச்சத்திற்கு விளக்குத் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு சுட்ட செங்கற்களைக் கொண்டு வீடுகளும் ஏனைய கட்டடங்களும் கட்டப்பட்டிருந்தன. பாதாள சாக்கடை முறை நம்மை வியக்க வைக்கிறது. ஏனெனில் கழிவுநீர் விரைவாக வெளியே செல்வதற்காக சற்று சாய்வாகவும் சுத்தம் செய்வதற்கு வசதியாக துவாரங்களை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் திடக்கழிவுகள் வடிகட்டப்பட்டு வடிகால்களுக்கு கழிவு நீர் சென்றது. தரமான எடைகளும் அளவீடு முறைகளும் பின்பற்றப்பட்டன. குஜராத்தின் லெவ்த்தால் நகரில் சிறந்த கப்பல் கட்டும் தளம் இருந்தது அவர்களது மேம்பட்ட வர்த்தக தொடர்புகளை எடுத்துக் காட்டுகிறது.
84.
சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனப்படுவதற்கு அதன் திட்டமிட்ட நகர அமைப்பு சிறந்த கட்டடக்கலை, உடல்நலம் மற்றும் சுகாதார முறைகளே காரணமாகும்.
85.
(i) சாதி ஏற்றத்தாழ்வு, மதச் சமத்துவமின்மை, இன வேறுபாடு மற்றும் பாலின வேறுபாடு போன்ற பல்வேறு
ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.
(ii) மக்களுக்கெதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு எனப்படும். சாதி, மதம், பாலினம் சார்ந்து கடைப்பிடிக்கப்படும் பாகுபாடுகளே சமத்துவமின்மை, தீண்டாமை ஆகியவற்றுக்கான காரணிகள் ஆகும்.
(iii) வெள்ளை நிற நபர்களிடமிருந்து கடுமை வண்ண நிறத்தவர்களை வேறுபாடாக நடத்துதல், நிறம்-சாதி- பாலினம்-மதம் போன்றவை அடிப்படையில் உரிமைகள், வாய்ப்புகள், சமத்துவ நிலை ஆகியன மறுக்கப்படுதல் போன்ற பாகுபாடுகள் நிகழ்கின்றன.
(iv) எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம், என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(1) அறிவுறுத்துகிறது.
86.
இந்திய மக்கள் யாவரும் மதம், சாதி, மொழி, இனம், கலாச்சாரம் என பல்வேறு வேறுபாடுகளை உடையவர்களாக இருந்தாலும் இந்தியர்கள் என்ற உணர்வு எல்லா வேற்றுமைகளையும் களைந்து ஒற்றுமையுடன் வாழ வழி செய்கின்றது. இந்த சிறப்பம்சமே இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை நிலவும் நாடு என அழைக்கப்படுகிறது.
87.
இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்கள்
மாநிலங்கள்
(i) தமிழ்நாடு
(ii) கேரளா
(iii) கர்நாடகா
(iv) ஆந்திரப்பிரதேசம் & தெலுங்கானா
(v) ஒடிசா
(vi) மணிப்பூர்
(vii) அசாம்
(ix) வட இந்தியா
புகழ்பெற்ற செவ்வியல் நடனங்கள்
(i) பரத நாட்டியம்
(ii) கதகளி
(iii) யக்ஷகானம்
(iv) குச்சிப்புடி
(v) ஓடிசி
(vi) மணிப்புரி
(vii) சத்ரியா
(viii) கதக்
88.
(i) நில அமைப்புகள் மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத்தன்மை.
(ii) சமூகப் பன்முகத்தன்மை.
(iii) சமய பன்முகத்தன்மை.
(iv) மொழிசார் பன்முகத்தன்மை.
(v) பண்பாட்டுப் பன்முகத்தன்மை
89.
(i) பாகுபாடு என்பது மக்களின் மீது ஏற்படுத்திக் கொள்ளும் தவறான செயலாகும்.
(ii) பாகுபாடானது நிறம், வர்க்கம், மதம், பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்படுவது ஆகும்.
90.
கோடரிகள்
(i) மரம் வெட்டவும்
(ii) மரக்கிளைகளை நீக்கவும்
(iii) குழிதோண்டவும்
(iv) விலங்குகளை வேட்டையாடவும்
(v) விலங்குகளின் தோலை உரிக்கவும் உருவாக்கப்பட்டன.
91.
மனிதர்கள் உணவைத் தேடி இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்.
92.
கிழக்கு - ஐரோப்பா , ஆப்ரிக்கா
மேற்கு - வட அமெரிக்கா, தென் அமேரிக்கா
93.
மிகப்பெரும் நிலப்பரப்பு கண்டங்கள் எனப்படும்.
94.
| பழைய கற்கால வாழ்க்கை முறை | தற்கால வாழ்க்கை முறை |
| பழைய கற்கால மனிதன் உணவைத் தேடி நாடோடி வாழ்க்கை வாழதந்தான் | தற்கால மனிதன் குடியிருப்புகளை அமைத்து நிலையாக தங்கி வாழ்கிறான் |
| இலை, மரப்பட்டைகள், விலங்குகளின் தோல்களை ஆடையாக உடுத்தினான் | பருத்தி, பட்டு, கம்பளி, மற்றும் செயற்கை இழை துணிகளை ஆடையாக உடுத்துகிறான் |
| காய்கள், கனிகள், கிழங்குகள் மற்றும் இறைச்சியை உண்டான் | காய்கள், கனிகள், கிழங்குகள் இவைகளை வேக வைத்து உண்கிறான் |
| குறைகளில் வாழ்ந்தான் | வீடுகள் கட்டி வாழ்கிறான் |
| இயற்கையை அண்டி வாழ்ந்தான் | நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்கிறான் |
95.
பானைகள்
பொம்மைகள்
கருவிகள்
அணிகலன்கள்
96.
விலங்குகளின் எலும்புகள் மற்றும் கொம்புகள்
கரடு முரடான கூர்மையாக்கப்பட்ட கற்கருவிகள்
கூர்மையாக்கப்பட்ட மரக்கிளைகள்
97.
98.
ஃபியார்ட் (fjord) (பிளவுபட்ட கடற்கரை) செங்குத்தான பாறைகளுக்கினிடையே (பணியாற்றுச் செயல்பாடுகளின் காரணமாக) உள்ள குறுகிய, ஆழமான கடற்கரை பிளவுபட்ட கடற்கரை எனப்படும்.
பின்வரும் வழிகளில் பயன்படுகிறது.
1. இவை காற்று எத்திசையிலிருந்து வீசினாலும் அதன் வேகத்தைக் குறைகின்றன.
2. கடல் அலைகளின் வேகத்தையும் இவை கட்டுக்குள் வைக்கின்றன. எனவே, இப்பிளவுபட்ட கடற்கரையானது இயற்கை துறைமுகங்கள் அமைவதற்கு ஏற்றதாக உள்ளது.
99.
| காஞ்சி கைலாசநாதர் கோவில் | வெசாரா பாணி |
ஹர்ஷவர்த்தனர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. |
| முதலாம் கிருஷ்ணர் | மாமல்லபுரத்திலுள்ள திறந்தவெளிக் கலையரங்கம் |
அய்கோல், வாதாபி, பட்டடக்கல் |
|
சைவர்: அப்பர், மாணிக்கவாசகர் |
தந்திதுர்க்கர் | மாமல்லன், வாதாபி கொண்டான். |
100.

வட அரைக்கோளம் (Northern Hemisphere)


00 நிலநடுக்கோட்டிலிருந்து 900 வடதுருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி வட அரைக்கோளம் (Northern Hemisphere) எனப்படும்.
தென் அரைக்கோளம் (Southern Hemisphere)

00 நிலநடுக்கோட்டிலிருந்து 900 தென்துருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி தென் அரைக்கோளம் (Southern Hemisphere) எனப்படும்.
கிழக்கு அரைக்கோளம் (Eastern Hemisphere)

00 நிலநடுக்கோட்டிலிருந்து 1800 கிழக்கு தீர்க்கக்கூடு வரை காணப்படும் புவிப்பரப்புப் பகுதி 'கிழக்கு அரைக்கோளம்' என அழைக்கப்படுகிறது.
மேற்கு அரைக்கோளம் (Western Hemisphere)

00 தீர்க்கக் கோட்டிலிருந்து 1800 மேற்கு தீர்க்கக் கோடுவரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி 'மேற்கு அரைக்கோளம்' என அழைக்கப்படுகிறது.
101.
பல்லவர் காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற காலமாகும். மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனைய கோவில்களும், வராகர் குகையும் (ஏழாம் நூற்றாண்டு) பல்லவக் கட்டடக்கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகும். 1984ஆம் ஆண்டு யூனஸ்கோவின் உலகப் பாரம்பரியம்ச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது. பல்லவர் கட்டடக் கலையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.
அ) பாறைக் குடைவரைக் கோவில்கள் -மகேந்திரவர்மன் பாணி
ஆ) ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி
இ) கட்டுமானக் கோவில்கள் - ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
102.
கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தராவார். கனிஷ்கரின் பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு. பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தகத் துறவியான அஸ்வகோஷர் என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார். கனிஷ்கர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்த போதிலும் அதே அளவிற்கு மகாயான பௌத்தத்தை ஆதிரிப்பவராகவும் அதை தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார். கனிஷ்கர் பௌத்தத்தை அரச மதமாக்கினார். மேலும் பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் மத்திய ஆசியாவின் பலநாடுகளுக்கும் அனுப்பி வைத்தார். பௌத்தமதப் பிரிவுகளிடையே நிலவிய கருத்துவேற்பாடுகளைக் களைவதற்காக நான்காவது பௌத்தப் பேரவையை ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தல வனத்தில் கூட்டினார். இப்பேரவையில் தான் மகாயானம் எனப் பௌத்தம் பிளவுற்றது.
103.
இந்தியாவில் இந்தோ -கிரேக்கரின் ஆட்சிக்கு சாகர் முற்றுப்புள்ளி வைத்தனர். நாடோடி இனத்தவரான இவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர். இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினருக்கு எதிரானவர்கள். சாகர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சித்தியார் ஆவர். சம்ஸ்கிருத மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.
104.
சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கரிகால வளவன் அல்லது கரிகாலன் ஆவார். அவர் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த பதினொன்று வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையைத் தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றுரில் தோற்கடித்தார். அவர் காடுகளை விளைநிலங்களாக மாற்றினார். வேளாண்மையை மேம்படுத்துவதற்காகக் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டினார். பட்டினப்பாலை எனும் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல், கரிகாலனின் ஆட்சியில் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது.
105.
சமூக வாழ்வில் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. கற்றறிந்த, அறிவுக் கூர்மையுடைய பெண்கள் இருந்தனர். நாற்பது பெண் புலவர்கள் வாழ்வது அறிய நூல்களை கொடுத்துச் சென்றுள்ளனர். திருமணம் சொந்த விருப்பத்தை சார்ந்து அமைந்திருந்தது. இருந்தபோதிலும் 'கற்பு' பெண்களின் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டது. பெற்றோரின் சொத்துக்களில் மகனும், மகளும் சமமான பங்கைப் பெற்றுத்தனர்.
106.
1.சமவெளி
2.மூன்றாம் நிலை நிலத்தோற்றம்
3. அரித்தல், படிய வைத்தல்
107.
i) யுரேனஸ்
2) பச்சை
3) மீத்தேன் வாயு இருப்பதால்.
108.
i) புதன்
ii) வியாழன்
iii) நெப்டியூன்
iv) செவ்வாய்
109.
முதல்நிலைத் தொழில்கள்
(i) வேளாண்மை
(ii) கால்நடை வளர்த்தல்
(iii) மீன்பிடித்தல்
(iv) களிமங்கள், நாதுப்பொருட்கள் போன்ற மூலப்பொருட்களைச் சேகரித்தல்
(v) கணிகள் கொட்டைகள், தேன், மூலிகைகள் ரப்பர். பிசின் போன்றவற்றைச் சேகரித்தல்.
(vi) மரம் வெட்டுதல்
110.
|
மனிதனாய் உருவாக்கப்பட்ட வளங்கள் |
மனித வளம் |
| இயற்க்கை வளங்கள் தொழில்நுட்பத்தினால் மாற்றுருவாக்கம் செய்யப்பட்டு, புதிய பொருள்களாகக் கிடைக்கின்றன. அவ்வாறு பெறப்பட்ட வளங்களை மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் என்று அழைக்கிறோம். | இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனித வளம் என அழைக்கப்படுகிறது. |
| (எ.கா): கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, | (எ.கா) மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர். |
111.
அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பி வைத்தார். தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக மேற்கு ஆசியா, எகிப்து, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு சமயப்பரப்பாளர்களை அனுப்பி வைத்தார். அசோகர் தர்ம - மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார். பேரரசு முழுவதிலும் பௌத்தமதத்தைப் பரப்புவதே அவர்களுடைய பணியாகும். அசோகர் தனது தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாம் பௌத்தமத மாநாட்டைக் கூட்டினார்.
112.
(i) உயிர்களைக் கொல்லாமை
(ii) எந்த சூழ்நிலையிலும் திருபாமை
(iii) தவறான இச்சையின்மை.
(iv) நல்ல வாழ்க்கை
(v) நல்ல பேச்சு மற்றும் கருத்துக்கள்
(vi) நல்ல நம்பிக்கை
(vii) நல்ல முயற்சி.
(viii) நல்லறிவு.
(ix) பேராசையின்மை
(x) சினமின்மை.
113.
(i) மதுரைக்கருகில் 15 கி.மீ தொலைவில் கீழக்குயில்குடி கிராமத்தில் சமணர் மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது. சமணத்துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்ந்தங்கரர்களின் உருவங்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இது தொல்லியல் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படும் நினைவு சின்னமாக உள்ளது.
(ii) அறவோர் பள்ளி என்பது சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
தமிழகத்தின் பௌணத்தத்தின் செல்வாக்குக்கான சான்று
(i) சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இராடைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும்.
(ii) காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஒரு பொௗத்த மையமாகும். பேௗத்த தாக்கவியல் அறிஞரான தினைகர் மற்றும் நாளந்தா பல்கலைக் கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தாமபாலர் போன்றோர் இங்கு வாழ்ந்தார்கள்.
114.
| குருகுலக் கல்வி முறை | நவீன கல்விமுறை |
|
மாணவர்கள் குருவுடன் தங்கியிருந்து, அவருக்கு சேவை செய்து கல்வி சுற்று அறிவை வளர்த்தனர் |
மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக் கூடங்களுக்குச் சென்று ஆசிரியர் உதவியுடன் கல்வி கற்று அறிவை வளர்க்கின்றனர். |
|
வாய்மொழி வாயிலாக பாடங்களை மனப்பாடம் செய்து கற்றனர். |
மாணவர்கள் புத்தகங்கள் மூலம் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறைப்படி கல்வி கற்கின்றனர் |
|
வேதங்கள் புராணங்கள் போன்ற பாடங்கள் முக்கியமான பாடங்களாகக் கற்றுக் கொடுக்கப்பட்டன |
அறிவியல், கணிதம், கணினி மற்றும் மொழி சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. |
|
ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. |
வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. |
|
இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப் பட்டது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது |
அனைவருக்கும் தரமான ஒரேவிதமான கல்வி வழங்கப்படுகிறது. |
115.
தொல்லியல் ஆய்மிடம் கொடுமணல் :
(i) பதிற்றுப்பத்து என்னும் சங்ககால இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணல் என்ற ஊர் இதுவென அடையாளப் படுத்தப்படுகிறது.
(ii) இங்கு தமிழ்பிராமி எழுத்துகளைக்கொண்ட முன்னூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
(iii) மேலும், நூல் சுற்றிவைக்கப்பயன்படும் சுழல் அச்சுகள், சுருள்கள். துணிகளின் சிறிய நுண்டுகள். கருவிகள், ஆயுதங்கள். அணிகலன்கள். மணிகள் முக்கியமாக சிவப்புநிற மணிக்கற்கள் ஆகியவற்றையும் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
(iv) புதைஞழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
116.
தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி மற்றும் போதிதர்மர் ஆகியோர் காஞ்சியில் பிறந்த சான்றோர்கள் ஆவர்
போதிதர்மர்
(i) இவர் சீனர்களுக்கு சீன தேசத்திற்கு சென்று தற்காப்பு கலைகள், மூச்சுப் பயிற்சி மூலம் இரத்த சுத்தி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மனதை கட்டுப்படுத்தும் கலையைக் கற்றுக் கொடுத்தார்.
(ii) பொ. ஆ. 534 - இல் காலமானார்
தர்மபாலர்
(i) இவர் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள பட்டதிட்டா புத்த விகாரத்தில் வாழ்ந்தார்
(ii) திரிபீடத்தின் சில பகுதிகளுக்கு பழமொழியில் உரை எழுதினார்
(iii) நாளாந்த பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக பணியாற்றிய இவர் தன்னுடைய 32 - வது வயதில் காலமானார்
117.
(i) பூம்புகார் துறைமுகத்தில் சீரும், சிறப்புமாக நடந்த வணிகம் குறித்து சங்க இலக்கிய நூலான பட்டினப் பாலையிலிருந்தும், இரட்டை காப்பிய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்
(ii) இங்கு வணிகம் செய்ய கிரேக்கம், நேரம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்த்த வணிகர்கள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.
(iii) கடல் வழியாகக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
(iv) கருமிளகு தரைவழித் தடங்கள் வழியே இறக்குமதி செய்யப்பட்டது
(v) வடமலையிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது
(vi) மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சந்தனமும் , தென்கடல் பகுதியிலிருந்து முத்தும், கிழக்குப் பகுதியிலிருந்து பவளமும், ஈழத்தில் இருந்து உணவுப் பொருள்களும் இறக்குமதி ஆயின
118.
(i) இந்தியாவில் நில அமைப்பு. காலநிலை, இயற்கைத் தாவரம் மற்றும் மண் வகைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
(ii) மேலும் மொழி, இனம், மதம், சாதி, கலாச்சாரம் ஆகியவற்றிலும் இடத்திற்கு இடம் வேறுபாடுகள்
காணப்படுகின்றன.
(iii) நம்முடைய கலாச்சாரங்கள், கலை மற்றும் கட்டிடக்கலைகள், விழாக்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகிறது.
(iv) ஆனாலும் இந்திய மக்கள் யாவரும் பல்வேறு வேறுபாடுகளை உடையவர்களாக இருந்தாலும் தங்களை முதலில் இந்தியர்கள் என்று கூறுவதில் பெருமிதம் அடைகிறார்கள்.
(v) இத்தகைய உணர்வு எல்லா வேற்றுமைகளையும் களைந்து ஒற்றுமையுடன் வாழ வழி செய்கின்றது. இந்த சிறப்பம்சமே இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" காணும் நாடு என அழைக்கப்பட காரணமாகிறது.
119.
சாதி பாகுபாடு
பாலினப் பாகுபாடும்
மத பாகுபாடு
சாதி பாறுபாது:
(i) இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாறிமுறை ஆகும்.
(ii) இந்தியாவில் சாதி ஒடுக்கு முறைக்கெதிராக பலரும் போராடி வருகின்றனர்.
(iii) இவர்களுக்குமுன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் ஆனார்.
(iv) இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.
பாலினப் பாதயாறும் :
(i) பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல் நலம்.
கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.
(ii) எடுத்துக்காட்டாக ஒரு பெண் பள்ளிப் படிப்பை முத்தடியின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை.
(iii) இன்னும் ஒரு சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்தி. அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் அக்குடும்பத்தின் ஆண்பிள்ளையன் நவீன ஆடைகளை அணித்தி அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பாகுபாடு ஆகும்.
120.
(i) புவியின் மேற்பரப்பில் சுமார் 70% நீரம்பிக் காணப்படுவது பெருங்கடல்கள் ஆகும்.
(ii) புவியின் மிகப்பெரிய பல்லுயிர் பெருக்கம் மேலும் 50% மேல் முதல்துறை பொருட்கள் கிடைக்கும் இடமாகும் விளங்குகிறது.
(iii) வளிமண்டலத்தில் உள்ள கார்பனின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
(iv) வானிலை மற்றும் காலநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
(v) கடல்வழி வாணிபத்திற்கு மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.
(vi) பெருங்கடல் நீரோட்டங்கள் கடலோரக் காலநிலையை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகின்றன.
121.
பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்கள் :
(i) புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும்.
(ii) இது புவியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது.
(iii) இதன் பரப்பளவு சுமார் 168.72 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும்.
(iv) இப்பெருங்கடல் முக்கோண வடிவத்தில் காணப்படுகிறது.
(v) பேரிங் கடல், சீனக் கடல், ஜப்பான் கடல், தாஸ்மானியா கடல், பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவை பசிபிக் பெருங்கடலிலுள்ள எல்லையோரக் கடல்களாகும்.
(vi) இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹவாய், நியூசிலாந்து உள்ளிட்ட பல தீவுகள் உள்ளன.
(vii) புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழி 10,994 மீ பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
(viii) பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் "நெருப்பு வளையம்” என அழைக்கப்படுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards