6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 28/02/2020
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 6th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions All Chapter 2019-2020 )
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி
நீர் சந்தி
சிறுகடல்
தீவு
தீபகற்பம்
2.
செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________
டாலமி
கௌடில்யர்
ஜெர்சக்ஸ்
மெகஸ்தனிஸ்
3.
கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
அர்த்த சாஸ்திரம்
இண்டிகா
முத்ராராட்சஷம்
இவை அனைத்தும்
4.
நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
அங்கம்
மகதம்
கோசலம்
வஜ்ஜி
5.
சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
23
24
25
26
6.
சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?
ரிஷிபா
பார்சவ
வர்தமான
புத்தர்
7.
பௌத்த நூல்களின் பெயர் என்ன?
அங்கங்கள்
திரிபிடகங்கள்
திருக்குறள்
நாலடியார்
8.
ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.
சீனா
வடக்கு ஆசியா
மத்திய ஆசியா
ஐரோப்பா
9.
ஆற்றங்கரைகள் 'நாகரிகத்தொட்டில்கள்' என அழைக்கப்படக் காரணம்
மண் மிகவும் வளமானதால்
சீரான கால நிலை நிலவுவதால்
போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்
பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
10.
தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.
ஆசியா
ஆப்பிரிக்கா
அமெரிக்கா
ஐரோப்பா
11.
பரிணாமத்தின் வழிமுறை ________
நேரடியானது
மறைமுகமானது
படிப்படியானது
விரைவானது
12.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
நாமக்கல்
சேலம்
கன்னியாகுமரி
சிவகங்கை
13.
அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது ?
14(1)
15(1)
16(1)
17(1)
14.
இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு
செஸ்
மல்யுத்தம்
கேரம்
டென்னிஸ்
15.
'டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' என்ற நூலினை எழுதியவர் _________
இராஜாஜி
வ.உ.சி
நேதாஜி
ஜவஹர்லால் நேரு
16.
மோகினியாட்டம் _________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.
கேரளா
தமிழ்நாடு
மணிப்பூர்
கர்நாடகா
17.
_________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கேரளா
தமிழ்நாடு
பஞ்சாப்
கர்நாடகா
18.
மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் _________ மாநிலத்தில் உள்ளது.
மணிப்பூர்
சிக்கிம்
நாகலாந்து
மேகாலயா
19.
பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
வணிகம்
வேட்டையாடுதல்
ஓவியம் வரைதல்
விலங்குகளை வளர்த்தல்
20.
கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்
மதுரை
காஞ்சிபுரம்
பூம்புகார்
ஹரப்பா
21.
இவற்றுள் எது தமிழக நகரம்?
ஈராக்
ஹரப்பா
மொகஞ்சதாரோ
காஞ்சிபுரம்
22.
அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப்பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
23.
மிகச் சிறிய பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
24.
எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
வியாழன்
சனி
யுரேனஸ்
நெப்டியூன்
25.
புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்
சுற்றுதல்
பருவகாலங்கள்
சுழல்தல்
ஓட்டம்
26.
காஞ்சியில் பிறந்து வளர்ந்த சான்றோர்கள் யாவர்?
27.
சாணக்கியர் பற்றி குறிப்பி வரைக.
28.
சிந்து வெளி மக்கள் மட்பாண்டங்களை எவ்வாறு பயன்படுத்தினர்?
29.
லோத்தல் கப்பல் கட்டும் தளமாக எவ்வாறு சிறந்து விளங்கியது?
30.
வரலாற்றின் தொடக்க காலம் என்றால் என்ன?
31.
நம் நாட்டில் கொண்டாடப்படும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களை வரிசைப்படுத்துக.
32.
உயிரற்ற வளங்களை வரையறு.
33.
மூன்றாம் நிலை செயல்பாடுகள்.
34.
புதுப்பிக்க கூடிய வளங்கள்
35.
மதுரைக்கு வழங்கப்படும் வேறு சில பெயர்களைக் குறிப்பிடுக.
36.
தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் எது?
37.
ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்கு காரணம் என்ன?
38.
லோத்தல் ஒரு கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதன் மூலம் நீ அறிவது என்ன?
39.
பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றைக் கூறு.
40.
இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" நிலவும் நாடு என ஏன் அழைக்கப்படுகிறது?
41.
பன்முகத் தன்மையின் வகைகள் யாவை?
42.
மாறாக் கருத்து என்றால் என்ன?
43.
பாரபட்சம் என்றால் என்ன?
44.
பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.
45.
பரிணாமம் என்றால் என்ன?
46.
வட, தென் அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?
47.
கண்டம் என்றால் என்ன?
48.
பழையகற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.
49.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மக்களுக்கு நாய் எவ்வாறு பயனுள்ளதாக இருந்தது?
50.
அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை?
51.
ஒரு நில அமைப்பியல் அப்பகுதி மக்களின் தொழில்களை தீர்மானிக்கிறது. உதாரணம் மூலம் இக்கூற்றினை நிரூபி.
52.
படத்தை பார்த்து விடையளிக்கவும்
i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
ii) பெரியதான கோள் எது?
iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
iv) செந்நிறக் கோள் எது?
53.
நாட்டு வளம் மற்றும் பன்னாட்டு வளம் -ஒப்பிடுக.
54.
நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.
55.
பெளத்தத்தின் பிரிவுகளான ஹீனயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபடுகளை எழுதவும்.
56.
பெளத்தத்தின் நன்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும் :
57.
குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
58.
வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.
59.
கோயில் நகரம் - குறிப்பு வரைக.
60.
பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக.
61.
பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.
62.
பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்களை விளக்குக.
63.
நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக.
64.
பெருங்கடல் மற்றும் கடல்
65.
புவியின் சுழலுதல் மற்றும் சுற்றுதல் நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் யாவை?
66.
இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
டெல்லி
சென்னை
தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம்
கேரளா
கர்நாடகா
1.
(a)
நீர் சந்தி
2.
(d)
மெகஸ்தனிஸ்
3.
(d)
இவை அனைத்தும்
4.
(b)
மகதம்
5.
(b)
24
6.
(a)
ரிஷிபா
7.
(b)
திரிபிடகங்கள்
8.
(c)
மத்திய ஆசியா
9.
(d)
பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
10.
(b)
ஆப்பிரிக்கா
11.
(c)
படிப்படியானது
12.
(c)
கன்னியாகுமரி
13.
(b)
15(1)
14.
(c)
கேரம்
15.
(d)
ஜவஹர்லால் நேரு
16.
(a)
கேரளா
17.
(a)
கேரளா
18.
(d)
மேகாலயா
19.
(b)
வேட்டையாடுதல்
20.
(a)
மதுரை
21.
(d)
காஞ்சிபுரம்
22.
(b)
அட்லாண்டிக் பெருங்கடல்
23.
(d)
ஆர்க்டிக் பெருங்கடல்
24.
(b)
சனி
25.
(c)
சுழல்தல்
26.
தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர் ஆகிய சான்றோர்கள் காஞ்சியில் பிறந்து வளர்ந்தவர்கள் ஆவர்.
27.
கெளடியல்யர்(Kautilya) என்பது சாணக்கியரின் மறு பெயராகும். அவரது புகழ்மிக்க நூல் அர்த்த சாஸ்திரம் ஆகும்.
28.
மட்பாண்டங்களைச் சக்கரங்கள் கொண்டு உருவாக்கினர். அவை தீயிலிட்டுச் சுடப்பட்டன. மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன. அங்கு கிடைத்த உடைந்த பானைத் துண்டுகள் விலங்குகளின் உருவங்களுடன், வடிவில் வடிவமைப்புகளுடனும் காணப்படுகின்றன.
29.
லோத்தல்(Lothal) குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சிறந்த கப்பல் கட்டும் தளமாக விளங்கியதை அகழ்வாராய்ச்சியின் மூலமாக கிடைத்த கட்டுமானங்களின் மூலம் அறிய முடிகிறது.
30.
வரலாற்றுக்கும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம் வரலாற்றின் தொடக்க காலம் ஆகும்.
31.
(i) தமிழ்நாடு - பொங்கல்விழா
(ii) கேரளா - ஓணம்
(iii) மகாராஷ்டிரா - விநாயகர் சதுர்த்தி
(iv) கர்நாடகா - தசரா
(v) கல்கத்தா - துர்கா பூஜை
(vi) அஸ்ஸாம் - பீஹீ
32.
(i) உயிரில்லாத அனைத்து வாங்களும் உயிரற்ற வாங்கள் எனப்படும்
(ii) உதாரணம் - நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்.
33.
முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருள்களைப் பர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பே மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். (எ.கா) வங்கி வணிகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை.
34.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள், புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: காற்று, நீர், சூரிய ஒளி.
35.
தூங்கா நகரம்
கூடல் நகர்.
36.
(i) பண்டைய தமிழ் இலக்கியங்கள்
(ii) அயல் நாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகள்
(iii) தொல்லியல் கண்டுபுடிப்புகள் ஆகியவை தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் ஆகும்
37.
சுற்றுச் சூழல் மாற்றம், படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாற்றம், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற காரணங்களால் ஹரப்பா அழிவுக்கு வந்தது என நம்பலாம்.
38.
லோத்தல் என்ற கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்டதால் சிந்து மக்கள் கடல் கடந்து வணிகம் செய்தனர் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.
39.
பெருங்குளம் என்பது அகன்ற செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கமாகும். சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டு சுவரில் இயற்கை தார் பூசி நீர் கசிவு தடுக்கப்பட்டிருந்தது. நீர் வெளியேற வழி வகை செய்யப்பட்டிருந்தது.
40.
இந்திய மக்கள் யாவரும் மதம், சாதி, மொழி, இனம், கலாச்சாரம் என பல்வேறு வேறுபாடுகளை உடையவர்களாக இருந்தாலும் இந்தியர்கள் என்ற உணர்வு எல்லா வேற்றுமைகளையும் களைந்து ஒற்றுமையுடன் வாழ வழி செய்கின்றது. இந்த சிறப்பம்சமே இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை நிலவும் நாடு என அழைக்கப்படுகிறது.
41.
(i) நில அமைப்புகள் மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத்தன்மை.
(ii) சமூகப் பன்முகத்தன்மை.
(iii) சமய பன்முகத்தன்மை.
(iv) மொழிசார் பன்முகத்தன்மை.
(v) பண்பாட்டுப் பன்முகத்தன்மை
42.
(i) முன் முடிவு வலுவாக இருக்கும் பொது ஒத்த கருத்து உருவாகிறது.
(ii) ஒத்தக்கருத்து என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றி தவறான கருத்தாகும்.
43.
(i) பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர் மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
(ii) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தவறாக முன்முடிவு எடுப்பதாகும்.
44.
(i) சக்கர உருவாக்கம் மனித வரலாற்றில் ஒரு முதல் தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
(ii) மனிதர்கள் களிமண்ணில் பானை செய்யக் கற்றுக் கொண்டார்கள். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பானை செய்வதை எளிதாக்கியது.
(iii) மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர சக்கரம் உதவியது.
(iv) வாணிபம் பொருள்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்பட்டது.
(v) நவீன காலத்தில் அனைத்து வகையான போக்குவரத்திலும் சக்கரம் முக்கிய பங்காற்றுகிறது
(vi) மேலும் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்குவதிலும் பெரும்பங்காற்றுகிறது.
45.
மனித இனம் மாறுதல் அடைந்து, ஒரு மேம்பட்ட கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைவதே பரிணாமம் ஆகும்.
46.
அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்.
47.
மிகப்பெரும் நிலப்பரப்பு கண்டங்கள் எனப்படும்.
48.
| பழைய கற்கால வாழ்க்கை முறை | தற்கால வாழ்க்கை முறை |
| பழைய கற்கால மனிதன் உணவைத் தேடி நாடோடி வாழ்க்கை வாழதந்தான் | தற்கால மனிதன் குடியிருப்புகளை அமைத்து நிலையாக தங்கி வாழ்கிறான் |
| இலை, மரப்பட்டைகள், விலங்குகளின் தோல்களை ஆடையாக உடுத்தினான் | பருத்தி, பட்டு, கம்பளி, மற்றும் செயற்கை இழை துணிகளை ஆடையாக உடுத்துகிறான் |
| காய்கள், கனிகள், கிழங்குகள் மற்றும் இறைச்சியை உண்டான் | காய்கள், கனிகள், கிழங்குகள் இவைகளை வேக வைத்து உண்கிறான் |
| குறைகளில் வாழ்ந்தான் | வீடுகள் கட்டி வாழ்கிறான் |
| இயற்கையை அண்டி வாழ்ந்தான் | நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்கிறான் |
49.
(i) பழங்கால மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தனர்
(ii) வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்தனர்
(iii) குகைகள் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலில் அமையவில்லை
(iv) கொடிய விலங்குகள் தீடீரென குகைகளுக்குள் நுழைந்து விடும்
(v) அதனை மனிதர்களால் அறிய முடியாமல் போவதுண்டு
(vi) ஆனால், நாய்கள் தமது கூரிய மோப்ப உணர்வினால் விலங்குகளின் வகையை அறிந்து குறைத்தன
(vii) இதனைக் கண்ட மனிதர்கள் நாய்களை பழக்க தங்கள் பாதுகாப்பிற்கும், வேட்டையாடுவதற்காகவும் பயன்படுத்தினர்
50.
(i) பழங்கால மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள பயன்படுகிறது
(ii) ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்குத் தேவையான தகவல்களை தரும் இடமாக விளங்குகிறது
(iii) பொழுதுபோக்கோடு சிறந்த அறிவை வளர்த்துக் கொள்ளும் இடமாக விளங்குகிறது
51.
நில அமைப்பியல் அப்பகுதி மக்களின் தொழில்களை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதனை நன்கு அறிந்து கொள்ள தமிழக நில அமைப்பியலை எடுத்துக் கொள்ளலாம். பழங்கால தமிழர்கள் நிலத்தை ஐந்து வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். பழங்கால தமிழர்கள் நிலத்தை ஐந்து வகைகளாகப் பிரித்தனர், அவை : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகும். குறிஞ்சி மக்களின் தொழில்களாக வேட்டையாடுதல் மற்றும் தேன் சேகரித்தலே பிரதானமான இருந்தன. முல்லை நில தொழில் அப்பகுதியில் நில அமைப்பு சார்ந்தே இருந்தது. குறிப்பாக மருத நிலத்தை எடுத்துக் கொண்டால் அதன் சமவெளித்தன்மையும் நீர் ஆதாரமும் வேளாண்மையை முதன்மைத் தொழிலாக அம்மக்களை ஈடுபடவைத்தது. ஆகவே புவியின் எப்பகுதியிலும் நில அமைப்பியல்தான் தொழில்களைத் தீர்மானிக்கிறது.
52.
i) புதன்
ii) வியாழன்
iii) நெப்டியூன்
iv) செவ்வாய்
53.
| நாட்டு வளங்கள் | பன்னாட்டு வளங்கள் |
| நாட்டு வளங்கள் என்பது ஒரு நாட்டின் அரசியல் எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல் பகுதிகளுக்கு உட்பட்ட வளங்கள் ஆகும். | எந்த ஒரு நாட்டின் எல்லைக்கும் உட்படாத மிகப்பரந்த திறந்த வெளி பெருங்கடல் பகுதியில் காணப்படும் வளங்கள் பன்னாட்டு வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. |
| (எ.கா) இந்தியாவின் வெப்பமண்டல மழைக்காடுகள். | (எ.கா) திமிங்கலபுனுக்கு. |
54.
நான் அசோகரப் போல் ஒரு அரசராக இருந்தால் மருத்துவமனைகளை அமைத்து ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிப்பேன். கால்நடைகள், விலங்குகளுக்கு தனி மருத்துவமனை அமைப்பேன். பின்தங்கிய மக்களுக்கு இலவச உணவு, உடை வழங்குவேன். ஆதரவற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும் காப்பகம் அமைப்பேன். கால்வாய்கள், கண்மாய்களைச் சீர்திருத்தி விவசாயத்திற்கு உதவி செய்வேன்.
55.
| ஹூனயானம் | மகாயானம் |
| புத்தரின் சிலைகளையோ உருவப் படங்களையோ வணங்க மாட்டார்கள். | புத்தரின் உருவங்களை வணங்கினர். |
| மிக எளிமையாக இருப்பர். | விரிவான சடங்குகளைப் பின்பற்றினர். |
| தனிமனிதர்கள் முக்தி அடைவதே தங்களின் நோக்கம் என்று நம்பினர். | அனைத்து உயிரினங்களும் முக்தி பெறுவதே தங்களது நோக்கம் என நம்பினர். |
| பிராகிருத மொழியைப் பயன்படுத்தினர் |
சமஸ்கிரத மொழியைப் பயன்படுத்தினர். |
56.
புத்தரின் நான்கு பேருண்மைகள்
1. வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள், நிறைத்தது.
2. ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
3. ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கி விடலாம்.
4. சரியான பாதையைப் பின்பற்றாமல் (எண்வகை வழிகள்) ஆசைகளை வென்றுவிடலாம்.
57.
| குருகுலக் கல்வி முறை | நவீன கல்விமுறை |
|
மாணவர்கள் குருவுடன் தங்கியிருந்து, அவருக்கு சேவை செய்து கல்வி சுற்று அறிவை வளர்த்தனர் |
மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக் கூடங்களுக்குச் சென்று ஆசிரியர் உதவியுடன் கல்வி கற்று அறிவை வளர்க்கின்றனர். |
|
வாய்மொழி வாயிலாக பாடங்களை மனப்பாடம் செய்து கற்றனர். |
மாணவர்கள் புத்தகங்கள் மூலம் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறைப்படி கல்வி கற்கின்றனர் |
|
வேதங்கள் புராணங்கள் போன்ற பாடங்கள் முக்கியமான பாடங்களாகக் கற்றுக் கொடுக்கப்பட்டன |
அறிவியல், கணிதம், கணினி மற்றும் மொழி சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. |
|
ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. |
வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. |
|
இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப் பட்டது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது |
அனைவருக்கும் தரமான ஒரேவிதமான கல்வி வழங்கப்படுகிறது. |
58.
வேதகால பெண்களின் நிலை :
(i) ரிக்வேதகால சமூகத்தில் பெண்கள் ஓரளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர் ஆனால் பிற்கால வேதகாலத்தில் இது குறைந்துபோனது.
(ii) ரிக் வேதகாலத்தில் பெண்கள் தமது வீட்டில் சடங்குகளை நடத்தினர். ஆனால் பிற்கால வேதகாலத்தில்
சடங்குகளை நடத்தமுடியாத நிலை உருவானது.
(iii) ரிக்வேதகாலத்தில் கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்ளத் தடைகள் இல்லை. ஆனால் பிற்கால வேதகாலத்தில் கைம்பெண் மறுமணத்திற்கு ஊக்கம் அளிக்கப்படவில்லை.
(iv) சொத்துரிமை மற்றும் கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டது.
(v) பொது நிகழ்வுகளில் பெண்கள் எந்தப்பங்கும் வகிக்கவில்லை.
59.
(i) காஞ்சி கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது
(ii) இங்குள்ள கைலாசநாதர் கோவில் புகழ் பெற்றது
(iii) பிற்காலப் பல்லவ மன்னன் இரண்டாம் இராஜசிம்மன் இந்த கற்கோவிலைக் காட்டினார்
(iv) பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்களும் கட்டப்பட்டன
60.
(i) பூம்புகார் துறைமுகத்தில் சீரும், சிறப்புமாக நடந்த வணிகம் குறித்து சங்க இலக்கிய நூலான பட்டினப் பாலையிலிருந்தும், இரட்டை காப்பிய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்
(ii) இங்கு வணிகம் செய்ய கிரேக்கம், நேரம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்த்த வணிகர்கள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.
(iii) கடல் வழியாகக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
(iv) கருமிளகு தரைவழித் தடங்கள் வழியே இறக்குமதி செய்யப்பட்டது
(v) வடமலையிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது
(vi) மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சந்தனமும் , தென்கடல் பகுதியிலிருந்து முத்தும், கிழக்குப் பகுதியிலிருந்து பவளமும், ஈழத்தில் இருந்து உணவுப் பொருள்களும் இறக்குமதி ஆயின
61.
சாதி பாகுபாடு
பாலினப் பாகுபாடும்
மத பாகுபாடு
சாதி பாறுபாது:
(i) இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாறிமுறை ஆகும்.
(ii) இந்தியாவில் சாதி ஒடுக்கு முறைக்கெதிராக பலரும் போராடி வருகின்றனர்.
(iii) இவர்களுக்குமுன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் ஆனார்.
(iv) இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.
பாலினப் பாதயாறும் :
(i) பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல் நலம்.
கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.
(ii) எடுத்துக்காட்டாக ஒரு பெண் பள்ளிப் படிப்பை முத்தடியின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை.
(iii) இன்னும் ஒரு சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்தி. அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் அக்குடும்பத்தின் ஆண்பிள்ளையன் நவீன ஆடைகளை அணித்தி அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பாகுபாடு ஆகும்.
62.
பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்கள் :
(i) புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும்.
(ii) இது புவியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது.
(iii) இதன் பரப்பளவு சுமார் 168.72 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும்.
(iv) இப்பெருங்கடல் முக்கோண வடிவத்தில் காணப்படுகிறது.
(v) பேரிங் கடல், சீனக் கடல், ஜப்பான் கடல், தாஸ்மானியா கடல், பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவை பசிபிக் பெருங்கடலிலுள்ள எல்லையோரக் கடல்களாகும்.
(vi) இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹவாய், நியூசிலாந்து உள்ளிட்ட பல தீவுகள் உள்ளன.
(vii) புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழி 10,994 மீ பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
(viii) பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் "நெருப்பு வளையம்” என அழைக்கப்படுகிறது.
63.
நிலத்தோற்றத்தின் வகைகள் :
முதல் நிலை ;
கண்டங்கள் - மிகப்பெரும் நிலப்பரப்பு ஆகும்.
பெருங்கடல்கள் - பெரும் நீர்ப்பரப்பு ஆகும்.
இரண்டாம் நிலை :
(i) மலைகள் - சுற்றுப் புற நிலப் பகுதியை விட 600 மீக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகளாகும்
(ii) பீப்பூமிகள் - சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும்.
(iii) சமவெளிகள் - சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றம் சமவெளி ஆகும்.
மூன்றாம் நிலை :
(i) ஆறுகள், பனியாறுகள், காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கியச் செயல்கள் அரித்தல் மற்றும் படியவைத்தல் ஆகும்.
(ii) இச்செயல்களால் மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
64.
| பெருங்கடல் | கடல் |
|
பெரும் நீர்ப்பரப்பு, பெருங்கடல் எனப்படும். |
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிலத்தால் சூழப்பட்ட பெரிய நீர்ப்பரப்பு கடல் எனப்படும். |
65.
புலியின் சுழலுதல் :
(i) புவி தன் அச்சில் தன்னைத் தானே சுற்றுவதைச் சுழலுதல் என்று கூறுகிறோம்.
(ii) புவி சுழலுவதன் காரணமாக இரவு, பகல் ஏற்படுகிறது.
(iii) புவி கோள வடிவமாக உள்ளதால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரிய வெளிச்சம் புவியின் ஒரு பகுதியில் மட்டுமே படுகிறது.
(iv) அப்பகுதிக்கு அது பகல் பொழுது ஆகும்,
(v) புவியின் ஒளி படாத பகுதி இரவாக இருக்கும்.
புவியின் சுற்றாதவ் :
(i) புவி தன் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும் நகர்வையே சுற்றுதல் என்று கூறுகிறோம்.
(ii) புவி சூரியனைச் சுற்றி வருவதால் பருவ காலங்கள் தோன்றுகின்றன.
66.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards