6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/02/2019
Term 3 SA Model Test Question 2019
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
1.புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.
2.புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.
3.புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
1 மற்றும் 3 சரி
2 மற்றும் 3 சரி
1 மற்றும் 2 சரி
1, 2 மற்றும் 3 சரி
2.
0° முதல் 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.
தெற்கு அரைக்கோளம்
மேற்கு அரைக்கோளம்
வடக்கு அரைக்கோளம்
கிழக்கு அரைக்கோளம்
3.
கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
அய்கோல்
சாரநாத்
சாஞ்சி
ஜுனாகத்
4.
சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.
சிர்கப்
தட்சசீலம்
மதுரா
புருஷபுரம்
5.
ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?
ஐஸ்லா ந்து
நெதர்லாந்து
போலந்து
சுவிட்சர்லா ந்து
6.
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடை யில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை
ஆஸ்ப்ஸ்
பைரனீஸ்
கார்பேதியன்
காகஸஸ்
7.
கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
பாண்டியர்
சோழர்
பல்லவர்
சேரர்
8.
குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -
நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை
தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை
அரசாட்சி செழிப்பாக இருந்ததை
மன்னர்களின் ஆடம்பர இயல்பை
9.
மாநகராட்சியின் தலைவர் ___________ என அழைக்கப்படுகிறார்
மேயர்
கமிஷனர்
பெ ருந்தலைவர்
தலைவர்
10.
ஆதிமனிதன்_________ பகுதியில் குடியே றி விவசாயம் செய்யத் தொடங்கினான்
சமவெளி
ஆற்றோரம்
மலை
குன்று
11.
தலநேரம் என்பது என்ன?
12.
ஜியாய்டு என்பது என்ன?
13.
இடி, மின்னல் - குறிப்பு வரைக
14.
பேரிடர் – விளக்குக
15.
குப்தர்கள் காகாலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?
16.
ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.
17.
கிராம சபையின் முக்கியத்துவம் யாது?
18.
கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாள்கள் யாவை ? அந்நாள்களின் சிறப்புகள் யாவை ?
19.
கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக
20.
நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை ?
21.
மக்களாட்சியின் வகைகள் யாவை?
22.
இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக
23.
புவி மாதிரியின் பயன்கள் யாவை?
24.
கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.
25.
கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.
26.
சாகர்கள் யார்?
27.
களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக
28.
நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்
29.
உலகின் மிக ஈரப்பதமான இடம் _____
30.
பல்லவ அரசர் _______ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
31.
இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் ____________ ஆகும்
32.
தென்னிந்திய ஆறுகள் வரைபடத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எல்லைகளைக் குறித்து, வர்ணம் தீட்டவும்
33.
0° தீர்க்கக்கோடு, கிரீன்விச் தீர்க்கக்கோடு என்று அழைக்கப்படுகிறது.
1.
(d)
1, 2 மற்றும் 3 சரி
2.
(d)
கிழக்கு அரைக்கோளம்
3.
(a)
அய்கோல்
4.
(a)
சிர்கப்
5.
(a)
ஐஸ்லா ந்து
6.
(b)
பைரனீஸ்
7.
(c)
பல்லவர்
8.
(c)
அரசாட்சி செழிப்பாக இருந்ததை
9.
(a)
மேயர்
10.
(b)
ஆற்றோரம்
11.
ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இடங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே தல நேரம் எனப்படும்.
12.
புவியானது துருவப் பகுதிகளில் தட்டையாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் சற்றுப் பருத்தும், கோள (Sherical) வடிவமாக காணப்படுகிறது. ஆனாலும் புவியின் வடிவத்தை எந்த வடிவியல் உருவத்துடனும் ஒப்பிட முடியாது. எனவே, இதன் வடிவம் புவிவடிவம் (Geoid) என்ற அழைக்கப்படுகின்றது.
13.
வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும். இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒளி அலைகளும் ஏற்படுகின்றது. இது மின்னல் என்றும் இடி என்றும் அழைக்கப்படுகிறது.
14.
ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகளே பேரிடர் எனப்படுகிறது.
15.
பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பும், அதன் பரிணாம வளர்ச்சியாகத் தசம எண் முறையும் குப்தர்கள் நவீன உலகிற்கு விட்டுச்சென்றுள்ள மரபுவழிச் சொத்தாகும். ஆரியபட்டர், வராகமிகிரர், பிரம்மகுப்தா அகியோல் அக்காலப் பகுதியைச் சேர்ந்த மிக முக்கிய கணிதவியல், வானியல் அறிஞ்சர்கள் ஆவர். ஆரியபட்டர் தனது நூலான 'சூரிய சித்தாந்தா' வில் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார். பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் அவரேயாவார்.
16.
ஹர்ஷரே ஒரு கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். அவர் சிறந்த கவிஞர்களையும் தன்னைச் சூழ்ந்து இருக்கச் செய்தார். அவருடைய புகழ்பெற்ற நூல்கள் ரத்னாவளி, நாகநந்தா, புரியதர்சிகா ஆகியனவாகும். பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் ஆகியோர் அவருடைய அவையை அலங்கரித்தனர்.
17.
(i) இது ஒரு பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் நிரந்தர அமைப்பு
(ii) கிராம சபையே மக்களாட்சி அமைப்பின் ஆணிவேராகும்.
(iii) ஆண்டுக்கு நான்கு முறை கூடும். மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆசிரியர் போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
(iv) அப்போது மக்கள் தங்கள் தேவைகளையும் குறைகளையும் நேரடியாகச் சொல்லலாம்.
18.
(i) ஜனவரி 26 - குடியரசு தினம்
(ii) மே 1 - தொழிலாளர் தினம்
(iii) ஆகஸ்டு 15 - சுதந்திர தினம்
(iv) அக்டோபர் 02 - காந்தி ஜெயந்தி
19.
1. வீட்டுவரி
2. தொழில் வரி
3. கடைகள் மீதான வரி
4. குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
5. நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு
6. சொத்துரிமை மாற்றம் - குறிப்பிட்ட பங்கு
7. மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு
20.
(i) அரசு நிறுவனங்களின் வடிவமைப்பு. அவை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், அவற்றின் அதிகாரம்நிறுவனங்களின் வடிவமைப்பு, அவை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், அவற்றின் அதிகாரம் மற்றும் கடமைகளை விளக்குகிறது.
(ii) மேலும், குடிமக்களுக்கான உரிமைகள், கடமைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் நிர்ணயம் செய்துள்ளது.
21.
நேரடி மக்களாட்சி,
பிரதிநிதித்துவ மக்களாட்சி.
22.
இந்தியாவின் தீர்க்கக் கோடுகளின் பரவல் 680 7' கிழக்கு முதல் 970 25' கிழக்கு வரை உள்ளது. இதனடிப்படையில், சுமார் 29 தீர்க்கக்கோடுகள் இந்தியாவின் வழியே செல்கின்றன. ஆகவே, இந்தியாவிற்கு 29 திட்டநேரங்கள் கணக்கிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே, இந்தியாவின் மையத்தில் செல்லும் 82 \(\frac { 1 }{ 2 }\)0 கிழக்கு தீர்க்கக்கோட்டினை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்டநேரம் IST (Indian standard time) கணக்கிடப்படுகிறது.

23.
புவி மாதிரியின் பயன்கள்: உலகிலுள்ள கண்டங்களைப் பற்றி அறிய பயன்படுகிறது. இடங்கள், கடல் வழிகள், வான் வழிகள் பற்றி அறிய உதவுகிறது. கண்டங்கள், கடல்கள், நாடுகள், ஆறுகள் மற்றும் நகரங்கள் பற்றி அறிய உதவுகிறது.
24.
பல்லவர் காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற காலமாகும். மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனைய கோவில்களும், வராகர் குகையும் (ஏழாம் நூற்றாண்டு) பல்லவக் கட்டடக்கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகும். 1984ஆம் ஆண்டு யூனஸ்கோவின் உலகப் பாரம்பரியம்ச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது. பல்லவர் கட்டடக் கலையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.
அ) பாறைக் குடைவரைக் கோவில்கள் -மகேந்திரவர்மன் பாணி
ஆ) ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி
இ) கட்டுமானக் கோவில்கள் - ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
25.
கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தராவார். கனிஷ்கரின் பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு. பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தகத் துறவியான அஸ்வகோஷர் என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார். கனிஷ்கர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்த போதிலும் அதே அளவிற்கு மகாயான பௌத்தத்தை ஆதிரிப்பவராகவும் அதை தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார். கனிஷ்கர் பௌத்தத்தை அரச மதமாக்கினார். மேலும் பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் மத்திய ஆசியாவின் பலநாடுகளுக்கும் அனுப்பி வைத்தார். பௌத்தமதப் பிரிவுகளிடையே நிலவிய கருத்துவேற்பாடுகளைக் களைவதற்காக நான்காவது பௌத்தப் பேரவையை ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தல வனத்தில் கூட்டினார். இப்பேரவையில் தான் மகாயானம் எனப் பௌத்தம் பிளவுற்றது.
26.
இந்தியாவில் இந்தோ -கிரேக்கரின் ஆட்சிக்கு சாகர் முற்றுப்புள்ளி வைத்தனர். நாடோடி இனத்தவரான இவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர். இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினருக்கு எதிரானவர்கள். சாகர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சித்தியார் ஆவர். சம்ஸ்கிருத மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.
27.
களப்பிரர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி இரண்டரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். களப்பிரர்களைப் பற்றி அறிய நமக்கு குறைவான குறிப்புகளே கிடைத்து உள்ளன. அவர்கள் விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள், தொல்கலைப் பொருட்கள் என எதுவுமில்லை. ஆனால் அவர்களின் ஆட்சி குறித்து இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. இலக்கியச் சான்றுகள், தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரியபுராணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகிய இரண்டும் இக்காலத்தில் எழுதப்பட்டவைகளாகும். தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் முக்கியத்துவம் பெற்ற காலம் அது. சமஸ்கிரதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து என்னும் புதிய எழுத்துமுறை உருவானது. பதினெண்கீழ்கணக்கைச் சேர்ந்த பல நூல்கள் இயற்றப்பட்டன. இக்காலத்தில் வணிகமும் வர்த்தகமும் தொடர்ந்து செழித்தோங்கின. எனவே களப்பிரர் காலமானது பொதுவாகச் சித்திரிக்கப்பட்டதைப் போன்று இருந்த காலம் அல்ல.
28.
| நேரடி மக்களாட்சி | பிரதிநிதித்துவ மக்களாட்சி |
|
நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை |
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டங்களை |
|
அனைத்து சட்டதிருத்தங்களையும் மக்களே |
பிரதிநிதிகள் அடங்கிய மன்றங்கள் கூடி சட்டதிருத்தங்களை ஏற்படுத்துவர். |
|
நாடாளுமன்ற செயல் முறைகளின் படி ஆட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் மூலம் ஆட்சி நடைபெறும். |
29.
( )
மௌசின்ராம்
30.
( )
விஷ்ணுகோபன்
31.
( )
தமிழ்நாடு
32.
33.
00 தீர்க்கக்கோடு கிரீன்விச் வழியே செல்வதால் 'கிரீன்விச் தீர்க்கக்கோடு' (Greenwich Meridian) எனவும் அழைக்கப்படுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards