7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
10 விவசாயிகள் 21 நாள்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாள்களில் உழுது முடிப்பர் ?
2.
105 நோட்டுப் புத்தகங்களின் விலை ரூ.2415. ரூ.1863 இக்கு எத்தனை நோட்டுப் புத்தகங்கள் வாங்கலாம் ?
3.
ஒரு சரக்கு வண்டி 594 கி.மீ தூரத்தைக் கடக்க 108 லி டீசல் தேவைப்படுகிறது எனில், அவ்வண்டி 1650 கி.மீ தூரத்தைக் கடக்கத் தேவைப்படும் டீசலின் அளவு எவ்வளவு?
4.
6 பழரசப் பாட்டில்களின் விலை ரூ.210 எனில், 4 பழரசப் பாட்டில்களின் விலை என்ன?
5.
தமிழ்ச்செல்வன் ரூ.5000 ஐ மூன்று மாதத்திற்கு ஒரு முறை வங்கிக்கணக்கில் சேமித்து வருகிறார். அவர் ரூ.1,50,000 ஐ சேமிக்க எத்தனை வருடங்களாகும்?
6.
7 கி.கி வெங்காயத்தின் விலை ரூ.84 எனில் பின்வருவனவற்றைக் காண்க
(i) ரூ.180 இக்கு வாங்கிய வெங்காயத்தின் எடை
(ii) 3 கி.கி வெங்காயத்தின் விலை.
7.
ஒரு தோட்டத்தை களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக எத்தனை தோட்டக்காரர்கள் தேவை?
8.
500 கிராம் எடையுள்ள 8 சிப்பங்களை (parcels) விரைவு அஞ்சலில் அனுப்பத் தேவையான பணம் மீனாவிடம் உள்ளது. அவளிடம் உள்ள அதே பணத்தில் 40 சிப்பங்களை (parcels) அவள் அனுப்புகிறாள் எனில், ஒரு சிப்பத்தின் (parcel) எடை எவ்வளவு இருக்கும் ?
9.
ஒரு நீர்த்தேக்கத் தொட்டியை நிறைப்பதற்கு 6 குழாய்கள் 1 மணி 30 நிமிடம் எடுத்துக்கொள்கின்றன. ஒரு குழாயை அடைத்துவிட்டால் அதே தொட்டியை நிறைக்க எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு ?
10.
வள்ளி 10 பேனாக்களை ரூ.108 இக்கு வாங்குகிறார். கமலா 8 பேனாக்களை ரூ.96 இக்கு வாங்குகிறார். இருவரில் யார் குறைவான விலைக்குப் பேனாக்களை வாங்கினர்? (அலகு முறையைப் பயன்படுத்துக)
11.
30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள் எனில், 20 நபர்கள் எத்தனை நாட்களில் அவ்வயலை அறுவடை செய்வார்கள்? (அலகு முறையைப் பயன்படுத்துக)
12.
அரை மீட்டர் துணியின் விலை ரூ.15 எனில், 8\(\frac { 1 }{ 3 } \) மீ நீளமுள்ள துணியின் விலை எவ்வளவு?
13.
ஒரு அஞ்சற்காரர் 738 கடிதங்களை 6 மணிநேரத்தில் முகவரிப்படி பிரித்து விடுகிறார் எனில், அவர் 9 மணி நேரத்தில் எத்தனை கடிதங்களைப் பிரிப்பார்?
14.
ஒரு மாயாஜாலக் காட்சியைக் கண்டுகளிக்க 21 மாணவர்களுக்கு ரூ.840 நுழைவுக் கட்டணமாகச் செலுத்தப்பட்டது. ரூ.1680 ஐ நுழைவுக் கட்டணமாகச் செலுத்தினால் எத்தனை மாணவர்கள் அக்காட்சியைக் காண முடியும்?
15.
ஒரு டசன் (dozen) வாழைப்பழங்களின் விலை ரூ.20 எனில், 48 வாழைப் பழங்களின் விலை என்ன?
1.
14 விவசாயிகள் உழுது முடிக்க ஆகும் நாட்கள் X என்க,
| விவசாயிகள் எண்ணிக்கை | 10 | 14 |
| நாட்களின் எண்ணிக்கை | 21 | x |
இது எதிர் விகிதத்தில் அமைந்துள்ளது.
x1y1 = x2y2
10 x 21 = 14 x x
x = 15
நிலத்தை உழுது முடிக்க ஆகும் நாட்கள் 15.
2.
ரூ.1863 இக்கு வாங்கக் கூடிய நோட்டுப் புத்தகங்களின் விலை x என்க.
| நோட்டுப் புத்தகங்களின் எண்ணிக்கை | 105 | x |
| விலை | 2415 | 1863 |
இது நேர் விகிதத்தில் அமைந்துள்ளது.
\(\therefore \frac{x_{1}}{y_{1}}=\frac{x_{2}}{y_{2}}
\)
\(\frac{105}{2415}=\frac{x}{1863}
\)
x x 2415 = 1863 x 105
x = 81
ரூ 1863 இக்கு 81 நோட்டுப் புத்தகங்கள் வாங்கலாம்.
3.
1650 கி.மீ தூரத்தைக் கடக்க தேவைப்படும் டீசலின் அளவு x என்க.
| டீசல் (லிட்டர்) | 108 | x |
| தூரம் (கி.மீ) | 594 | 1650 |
இது நேர் விகிதத்தில் அமைந்துள்ளது.
\(
\therefore \frac{x_{1}}{y_{1}}=\frac{x_{2}}{y_{2}}
\)
\(\frac{108}{594}=\frac{x}{1650}\)
x = 300
1650 கி.மீ தூரத்தைக் கடக்க 300 லி டீசல் தேவை.
4.
6 பழரசப் பாட்டில்களின் விலை = ரூ.210.
ஒரு பழரசப் பாட்டில்களின் விலை = ரூ.\(\frac{210}{6}\) = ரூ. 35.
4 பழரசப் பாட்டில்களின் விலை = ரூ.35 x 4 = ரூ.140
5.
தமிழ்ச்செல்வன் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரூ.5000 சேமிக்கின்றார்.
அவரின் ஒருவருட சேமிப்பு = 20,000.
x என்பது ரூ.1,50,000 சேமிக்க ஆகும் வருடங்கள் என்க.
| வருடங்கள் | 1 | x |
| தொகை ரூ. | 20,000 | 1,50,000 |
இது நேர் விகிதத்தில் அமைந்துள்ளது.
\( \therefore \frac{x_{1}}{y_{1}} =\frac{x_{2}}{y_{2}} \)
\(\frac{1}{20000} =\frac{x}{150000} \)
\(x =71 / 2 \)
அவர் ரூ. 1,50,000 ஐ சேமிப்பதற்கு 71/2 ஆண்டுகள் ஆகும்.
6.
(i) ரூ.180 இக்கு வாங்கிய வெங்காயத்தின் எடை x என்க
| எடை (கி.கி) | 7 | x |
| விலை (ரூ) | 84 | 180 |
இது நேர் விகிதத்தில் அமைந்துள்ளது.
\(
\therefore \frac{x_{1}}{y_{1}} =\frac{x_{2}}{y_{2}}
\)
\(\frac{7}{84} =\frac{x}{180}\)
84x = 7 x 180
x = 15
எனவே ரூ 180 இக்கு வாங்கிய வெங்காயத்தின் எடை 15 கி.கி.
(ii)
7கி.கி வெங்காயத்தின் விலை = ரூ .84
1 கி.கி வெங்காயத்தின் விலை = ரூ.12
ஃ 3கி.கி வெங்காயத்தின் விலை = 3 x 12
= ரூ. 36
7.
| தோட்டக்காரர்களின் எண்ணிக்கை | 6 | x |
| எடுத்துக் கொள்ளும் (நேரம் நிமிடம்) | 120 | 30 |
இது எதிர் விகிதத்தில் அமைந்துள்ளது.
x1y1 = x2y2
6 x 120 = x x 30
x = 24
மொத்தம் 24 ஆட்கள் தேவை. ஏற்கெனவே 6 ஆட்கள் உள்ளனர். எனவே இன்னும் 18 ஆட்கள் தேவை.
8.
| சிப்பங்களின் எண்ணிக்கை | 8 | 40 |
| எடை (கிராம்) | 500 | x |
இது எதிர் விகிதத்தில் அமைந்துள்ளது.
x1y1 = x2y2
8 x 500 = 40 x x
x = 100
ஒவ்வொரு சிப்பத்தின் எடை = 100 கிராம்.
9.
6 குழாய்கள் தொட்டியை நிரப்ப ஆகும் நேரம்
= 1 மணி 30 நிமிடங்கள் = 90 நிமிடங்கள்
ஒரு குழாயை அடைத்துவிட்டால் மொத்த குழாய்களின் எண்ணிக்கை = 5
| குழாய்களின் எண்ணிக்கை | 6 | 5 |
| எடுத்துக் கொள்ளும் நேரம் | 90 | x |
இது எதிர் விகிதத்தில் அமைந்துள்ளது.
x1y1 = x2y2
6 x 90 = 5 x x
x = 108
தொட்டியை நிரப்ப எடுத்துக் கொள்ளும் நேரம் = 108 நிமிடங்கள் = 1 மணி 48 நிமிடங்கள்.
10.
| வள்ளி | கமலா |
| 10 பேனாக்களின் விலை ரூ. 180 | 8 பேனாக்களின் விலை ரூ.96 |
| 1 பேனாவின் விலை \(\frac{180}{10}\) = ரூ.18 | 1 பேனாவின் விலை \(\frac{96}{8}\) = ரூ.12 |
கமலா குறைவான விலைக்குப் பேனாக்களை வாங்கியுள்ளார்.
11.
30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள்
20 நபர்கள் அவ்வயலை \(\frac{15}{20} \times 30=221 / 2\) நாட்களில் அறுவடை செய்வார்கள்
12.
| துணியின் நீளம் (மீ) | \(\frac { 1 }{ 2 } \) | 8\(\frac { 1 }{ 3 } \) |
| துணியின் விலை (ரூ.) | 15 | x |
இது நேர் விகிதத்தில் அமைந்துள்ளது
\( \therefore \frac{x_{1}}{y_{1}}=\frac{x_{2}}{y_{2}} \)
\(\frac{1 / 2}{15}=\frac{81 / 3}{x} \)
\(\frac{1}{2} \times x=8 \frac{1}{3} \times 15 \)
\(\therefore x=\frac{25 \times 15 \times 2}{3}=250\)
8\(\frac { 1 }{ 3 } \)மீ நீளமுள்ள துணியின் நீளம் ரூ. 250
13.
| கடிதங்களின் எண்ணிக்கை | 738 | x |
| பிரிப்பதற்காகும் நேரம் (மணி ) | 6 | 9 |
இது நேர் விகிதத்தில் அமைந்துள்ளது
\( \therefore \frac{738}{6} =\frac{x}{9} \)
\(6 x =738 \times 9 \)
\(x =\frac{738 \times 9}{6}=1107\)
9 மணி நேரத்தில் 1107 கடிதங்களைப் பிரிப்பார்.
14.
ரூ. 840 கட்டணமாக செலுத்தப்படும் போது 21 மாணவர்கள் காட்சியை கண்டு களித்தனர்.
ரூ. 1680 (இருமடங்கு கட்டணம்) கட்டணமாகச் செலுத்தப்பட்டால் 42 மாணவர்கள் (இருமடங்கு மாணவர்கள்) காட்சியைக் காணமுடியும்.
15.
1 டசன் வாழைப்பழங்களின் விலை = ரூ. 20
அதாவது, 12 வாழைப்பழங்களின் = ரூ. 20
ஒரு வாழைப்பழத்தின் விலை \(=\frac{20}{12}\)
ஃ 48 வாழைப்பழங்களின் விலை \(=\frac{20}{12} \times 48\)
= ரூ. 80
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards