7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
6 செ.மீ நீளமுள்ள AB என்ற கோட்டுத்துண்டிற்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக
2.
x˚ இன் மதிப்பைக் காண்க
3.
இரண்டு கோணங்கள் 3:2 என்ற விகிதத்தில் உள்ளன. அவை நேரிய கோண இணைகள் எனில் அவற்றைக் காண்க.
4.
பின்வரும் அடுத்துள்ள கோண இணைகளில் எவை நேரிய கோண இணைகளாக அமையும்?
(i) 89˚, 91˚
(ii) 105˚, 65˚
(iii) 117˚, 62˚
(iv) 40˚, 140˚
5.
கொடுக்கப்பட்டுள்ள படம் -ல்,\(\angle \)AOC - ஐக் காண்க.

6.
80˚ அளவுடைய \(\angle \)ABC இன் கோண இரு சமவெட்டி வரைக.
7.
l ஆனது m இக்கு இணை எனில், படத்தில் x மற்றும் y இன் மதிப்புகளைக் காண்க

8.
(i) b˚ இன் ஒத்த கோணங்கள் எவை?
(ii) b˚ இன் கோண அளவு என்ன?
(iii) எந்தெந்தக் கோணங்கள் 68˚ அளவுடையவை?
(iv) எந்தெந்தக் கோணங்கள் 112˚ அளவுடையவை?

9.
(i) கோணம் \(\angle \)1 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
(ii) கோணம் \(\angle \)3 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக.
(iii) கோணம் \(\angle \)8 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
(iv) கோணம் \(\angle \)8 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
(v) கோணம் \(\angle \)7 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
(vi) கோணம் \(\angle \)6 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக

1.
படி 1: ஒரு நேர்கோட்டை வரைக. அதன் மீது A மற்றும் B என்ற புள்ளிகளை AB = 6 செ.மீ என்றவாறு குறிக்க.

படி 2: Aவை மையமாகக் கொண்டு, AB இன் நீளத்தின் அரை பங்கைவிட அதிகமான ஆரமுடைய வட்டவில்களை AB இக்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக

படி 3: B ஐ மையமாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் கூடிய வட்டவில்களை படி-2 இல் வரைந்த வட்டவில்களை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளிகளுக்கு C மற்றும் D எனப் பெயரிடுக.

படி 4: C மற்றும் D ஆகியவற்றை இணைக்கவும். CD ஆனது AB ஐ வெட்டும் புள்ளியை O எனக் குறிக்க. CD ஆனது AB இன் செங்குத்து இரு சமவெட்டி ஆகும். கோணம் ∠AOC ஐ அளவீடு செய்க. மேலும் OA மற்றும் OB இன் நீளங்களை அளந்து பார்க்கவும்
2.
98˚ + 23˚ + 76˚ + x˚ = 360˚
197˚ + x˚ = 360˚
x˚ = 360˚ – 197˚ = 163˚
3.
தேவையான கோணங்கள் 3x மற்றும் 2x என்க.
அவை, நேரிய கோண இணை என்பதால், அவற்றின் கூடுதல் 180o ஆகும்.
எனவே. 3x + 2x = 180˚
5x = 180˚
\(x=\frac{180^ o}{5}\)
x = 36˚
அந்தக் கோணங்கள் 3x = 3 x 36 = 108˚
2x = 2 x 36 = 72˚
4.
(i) 89˚ + 91˚ = 180˚ என்பதால், இவை நேரிய கோண இணை ஆகும்.
(ii) 105˚ + 65˚ = 170˚ ≠ 180˚ என்பதால், இவை நேரிய கோண இணையாக அமையவில்லை.
(iii) 117˚ + 62˚ = 179˚ ≠ 180˚ என்பதால், இவை நேரிய கோண இணையாக அமையவில்லை.
(iv) 40˚ + 140˚ = 180˚ என்பதால் இவை நேரிய கோண இணையாகும்.
5.
\(\angle \)AOC = \(\angle \)AOB + \(\angle \)BOC
= 46° + 51°
= 97°
6.
படி 1: பாகைமானியைப் பயன்படுத்தி 80˚ அளவுள்ளவாறு கோணம் \(\angle \)ABC யை அமைக்க.

படி 2: B ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரமுடைய வட்டவில்லை \(\angle \)BAC இன் உட்பகுதியில் BA மற்றும் BC ஐ முறையே E மற்றும் F இல் வெட்டுமாறு வரைக.

படி 3: E ஐ மையமாகக் கொண்டு அதே ஆரத்தில் \(\angle \)ABC இன் உட்புறத்தில் ஒரு வட்டவில் வரைக. இதே போல் F ஐ மையமாகக் கொண்டு முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில் வரைக.

படி 4: வட்டவிற்கள் வெட்டும் புள்ளியை G எனக் குறிக்க. கதிர் BG ஐ வரைக. கதிர் BG, \(\angle \)ABC இன் கோண இரு சமவெட்டி ஆகும்.

7.
ஆனது m இக்கு இணை எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
y = 2x [குத்தெதிர்க் கோணங்கள் சமம்]
y + 4x = 180˚ [குறுக்குவெட்டியில் ஒரே பக்கம் அமைந்த உட் கோணங்களின் கூடுதல்]
2x + 4x = 180˚ [y = 2x என்பதால்]
6x = 180˚
இருபுறமும் 6 ஆல் வகுக்க
\(\frac{6x}{6}=\frac {180^o}{6}\) ஆகவே, x = 30˚.
இப்போது , y = 2(30˚) = 60˚.
8.
(i) b˚ இன் ஒத்த கோணங்கள் d˚ மற்றும் 68˚.
(ii) கோணம் b˚ இன் மதிப்பு 68˚ (ஏனெனில் b˚ உம், 68˚ உம் ஒத்த கோணங்கள்)
(iii) b˚, d˚, g˚, i˚ மற்றும் k˚ ஆகியவை 68˚ மதிப்புடையவை.
(iv) a˚, c˚, e˚, f˚, h˚ மற்றும் j˚ ஆகியவை 112˚ மதிப்புடையவை.
9.
(i) கோணம் \(\angle \)1 இன் ஒத்த கோணம் \(\angle \)5 ஆகும்.
(ii) கோணம் \(\angle \)3 இன் ஒன்றுவிட்ட உட்கோணம் \(\angle \)5 ஆகும்.
(iii) கோணம் \(\angle \)8 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணம் \(\angle \)2 ஆகும்.
(iv) கோணம் \(\angle \)8 இன் ஒத்த கோணம் \(\angle \)4 ஆகும்.
(v) கோணம் \(\angle \)7 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணம் \(\angle \)1 ஆகும்.
(vi) கோணம் \(\angle \)6 இன் ஒன்றுவிட்ட உட்கோணம் \(\angle \) 4 ஆகும்.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards