7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
ஒரு மட்டைப்பந்து அணி (Cricket Team) கலந்து கொண்ட போட்டிகளில், தோற்றதை விட இரு ஆட்டங்கள் அதிகமாக வென்றார்கள். வெற்றிக்கு 5 புள்ளிகளும், தோல்விக்கு − 3 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. அந்த அணி மொத்தத்தில் 50 புள்ளிகள் பெற்றிருந்தால், அந்த அணி கலந்துகொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கையைக் காண்க.
2.
60 மாணவர்களுடன் ஒரு பள்ளிப்பேருந்து புறப்பட்டது. முதல் நிறுத்தத்தில் சில மாணவர்கள் இறங்கினார்கள். இரண்டாம் நிறுத்தத்தில், முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு மாணவர்கள் இறங்கினார்கள். மூன்றாம் நிறுத்தத்தில் 6 மாணவர்கள் இறங்கிய பிறகு, பேருந்தில் 3 மாணவர்கள் மட்டுமே இருந்தனர் எனில், முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
3.
ஒருவர் ரூ.960 இக்கு ரூ.1, ரூ.5 மற்றும் ரூ.10 ஆகிய மதிப்பிலான பணத் தாள்களை வைத்துள்ளார். இம்மூன்று மதிப்பிலுள்ள பணத்தாள்களின் எண்ணிக்கையும் சமமெனில், அவரிடமுள்ள மொத்தப் பணத்தாள்களின் எண்ணிக்கை எவ்வளவு?
4.
m = 2, n = -1 எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக் காண்க.
(i) 3m + 2n
(ii) 2m − n
(iii) mn − 1
5.
பின்வரும் உறுப்புகளின் எண்கெழுக்களைச் காண்க. மேலும், ஒவ்வொரு உறுப்பிற்கும் x மற்றும் y இன் கெழுக்களைக் காண்க: 3x, - 5xy, - yz, 7xyz, y, 16yx.
6.
5a − 3b + 2c உடன் எந்தக் கோவையைக் கூட்டினால், a − 4b − 2c கிடைக்கும்?
7.
தீர்க்க:
(i) x + 5 = 8
(ii) p − 3 = 7
(iii) 2x = 30
(iv) \(\frac { m }{ 6 } \) = 5
(v) 7x + 10 = 80
8.
கழிக்க:
(i) 12k லிருந்து 4k
(ii) 25q லிருந்து 15q
(iii) 17xyz லிருந்து 7xyz
9.
x = 2 மற்றும் y = 3, எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக் காண்க.
(i) 2x − 3y
(ii) x + y
(iii) 4y − x
(iv) x + 1 − y
10.
பின்வருவனவற்றுள் ஒத்த உறுப்புகளை வகைப்படுத்துக : 7x, 5y, −8x, 12y, 6z, z, −12x, −9y, 11z.
11.
ராணி வேலைக்குச் சென்ற முதல் நாள் ரூ.200 கூலியாகப் பெற்று, அதிலிருந்து ஒரு தொகையை அன்றே செலவு செய்தாள். மறுநாள் ரூ.300 கூலியாகப் பெற்று, அதிலிருந்து முதல்நாள் செலவழித்ததைப்போல், இருமடங்கு செலவு செய்தாள். மூன்றாம் நாள் ரூ.400 கூலியில், முதல் நாளைப்போல் 4 மடங்கு செலவு செய்தாள். இந்தச் சூழலிலிருந்து. அவளிடம் மூன்றாம் நாள் இறுதியில் மீதமிருக்கும் மொத்தத் தொகையைக் கணக்கிட உதவும் இயற்கணிதக் கோவையை உருவாக்குக.
12.
இரவு உணவு சாப்பிடுவதற்காக மணி தன் நண்பன் முகமது உடன் உணவகம் சென்றான். 2 இட்லிகளும், 2 தோசைகளும் மணி சாப்பிட்டான். முகமது 4 இட்லிகளும், 1 தோசையும் சாப்பிட்டான். x மற்றும் y முறையே, ஒரு இட்லியின் விலை மற்றும் ஓர் தோசையின் விலை எனில், அவர்கள் செலுத்தவேண்டிய பட்டியல் தொகையை (bill amount) x மற்றும் y இல் கணக்கிடுக.
13.
i) கூட்டுக: 3x − 4y + z and 2x − z + 3y
ii) 4x + 3y லிருந்து, 2x − 5y -ஐக் கழிக்க.
14.
கழிக்க:
i) 11pq லிருந்து 7pq
ii) a லிருந்து -a
iii) 21x + 9 லிருந்து 5x + 7
15.
y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?
0
-1
1
-2
16.
3x + 5 = x + 9 என்பதன் தீர்வு
2
3
5
4
17.
3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.
n
2n
3n
4n
18.
‘a’ யிலிருந்து ‘-a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______
0
2a
-2a
-a
19.
3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்
mn
−mn
2mn
3mn
1.
இழந்த ஆட்டங்களின் எண்ணிக்கை = x என்க.
எனவே, வென்ற ஆட்டங்கள் = x + 2.
கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து, 5(x + 2) + (− 3)x = 50
5x + 10 − 3x = 50
2x + 10 = 50
2x + 10 − 10 = 50 − 10 (இருபுறமும் 10 ஐ கழிக்க)
2x = 40
இருபுறமும் 2 ஆல் வகுக்க, \(\frac { 2x }{ 2 } =\frac { 40 }{ 2 } \) எனவே, x =20.
எனவே, மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை
x + x + 2 = 2x + 2
= (2 x 20) + 2
= 40 + 2
= 42
2.
முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்களின் எண்ணிக்கை நமக்குத் தெரியாததால், அந்த எண்ணை x என்க. எனவே, இரண்டாம் நிறுத்தத்தில் இறங்கியவர்களின் எண்ணிக்கை 2x ஆகும்.
ஆகவே, x + 2x + 6 + 3 = 60
(1 + 2) x + 9 = 60
3x + 9 = 60
3x + 9 - 9 = 60 − 9 (இருபுறம் 9-ஐக் கழிக்க)
3x = 51
\(\frac { 3x }{ 3 } =\frac { 51 }{ 3 } \) (இருபுறமும் 3 ஆல் வகுக்க)
ஆகவே, x = 17.
எனவே, முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர் எண்ணிக்கை 17 ஆகும்.
3.
ஒவ்வொரு மதிப்பிலும் உள்ள பணத்தாள்களின் எண்ணிக்கை x என்க.
ஆகவே, x + 5x + 10x = 960
(1 + 5 + 10)x = 960
16x = 960
இருபுறமும் 16 ஆல் வகுக்க,
\(\frac { 16x }{ 16 } =\frac { 960 }{ 16 } \)=60
எனவே, x = 60
எனவே, ஒவ்வொரு மதிப்பிலுமான பணத்தாள்களின் எண்ணிக்கை 60.
4.
i) 3m + 2n = 3(2) + 2(-1) = 6 −2 = 4
ii) 2m - n = 2(2) − (-1) = 4 + 1 = 5
iii) mn -1 = (2) (-1) −1 = −2 - 1 =-3
5.
| கோவை | எண்கெழு | x ன் கெழு | y ன் கெழு |
| 3x | 3 | 3 | வாய்ப்பில்லை |
| -5xy | -5 | -5y | -5x |
| -yz | -1 | வாய்ப்பில்லை | -x |
| 7xyz | 7 | 7yz | 7xz |
| y | 1 | வாய்ப்பில்லை | 1 |
| 16yx | 16 | 16y | 16x |
6.
(5a − 3b + 2c) + கோவை = a − 4b − 2c
கோவை = (a − 4b − 2c) - (5a − 3b + 2c)
(5a - 3b + 2c ன் கூட்டல் நேர்மாறு -5a + 3b - 2c ஐக் கூட்ட வேண்டும்]
= (a - 4b - 2c) + (-5a + 3b - 2c)
= (a -5a) + (-4b + 3b) + (-2c -2c)
= (1 - 5) a + (-4 + 3)b + (-2 - 2)c
கோவை = -4a -b - 4c
7.
(i) x + 5 = 8
x + 5 - 5 = 8 - 5 (இருபுறம் 5 ஐக் கழிக்க)
x = 3
(ii) p − 3 = 7
p − 3 + 3 = 7 + 3 (இருபுறம் 3 ஐக் கூட்ட )
p = 10
(iii) 2x = 30
\(\frac{2 x}{2}=\frac{30}{2}\) (இருபுறம் 2 ஆல் வகுக்க)
x = 15
(iv) \(\frac { m }{ 6 } \) = 5
\(\frac { m }{ 6 } \) x 6 = 5 x 6 [இருபுறமும் 6 ஆல் பெருக்க]
m = 5 x 6
m = 30
(v) 7x +10 = 80
7x + 10 - 10 = 80 - 10 [இருபுறமும் 10 ஐக் கழிக்க]
7x = 70
\(\frac{7 x}{7}=\frac{70}{7}\) [இருபுறமும் 7 ஆல் வகுக்க)
x = 10
8.
(i) 12k - 4k = (12 - 4)k = 8k
(ii) 25q - 15q = (25 - 15)q = 10q
(iii) 17xyz - 7xyz = (17 - 7)xyz = 10xyz
9.
(i) 2x - 3y = 2(2) - 3(3) = 4 - 9 = -5
(ii) x + y = 2 + 3 = 5
(iii) 4y - x = 4(3) - 2 = 12 - 2 = 10
(iv) x + 1-y = 2 + 1 - 3 = 3 - 3 = 0
10.
i) 7x, -8x, - 12x என்பன மாறி X க் கொண்ட ஒத்த உறுப்புகள்.
ii) 5y, 12y, -9y என்பன மாறி y ஐக் கொண்ட ஒத்த உறுப்புகள்.
iii) 6z,z, 11z என்பன மாறி Z ஐக் கொண்ட ஒத்த உறுப்புகள்.
11.
முதல் நாள் பெற்ற கூலி ரூ. 200.
அன்று செலவிட்ட தொகையை ரூ. x என்க. எனவே, முதல் நாள் மீதமிருக்கும் தொகை (200−x).
இரண்டாம் நாள் கூலி ரூ.300. அன்று செலவிட்ட தொகை ரூ. 2x . இரண்டாம் நாள் மீதமிருக்கும் தொகை (300 − 2x). இதேபோல், மூன்றாம் நாள் மீதமிருக்கும் தொகை ரூ.400 − 4x.
ஆகவே, மூன்றாம் நாள் இறுதியில் மொத்தமாக மீதமிருக்கும் தொகை (200−x) + (300 − 2x) + (400 − 4x).
அதாவது, 200 + 300 + 400 + ( − 1 − 2 − 4)x
= 900 + (−7)x
எனவே, 900 − 7x என்பது தேவையான இயற்கணிதக் கோவையாகும்.
12.
ஓர் இட்லியின் விலை ‘x’ எனவும், ஒரு தோசையின் விலை y எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மணியின் பட்டியல் தொகை: (2 x x) + (2 x y) = (2x + 2y)
முகமதுவின் பட்டியல் தொகை: (4 x x) + (1 x y) = 4x + y
எனவே, மொத்தப் பட்டியல் தொகை = (2x + 2y) + (4x + y)
= (2 + 4)x + (2 + 1)y = 6x + 3y
மாற்றுமுறை:
மொத்தத்தில், அவர்கள் சாப்பிட்டவை 2 + 4 = 6 இட்லிகள்.
அதாவது 6 x x = 6x
2 + 1 = 3 தோசைகள்
அதாவது 3 x y = 3y
எனவே, மொத்தப் பட்டியல் தொகை = 6x + 3y.
13.
i) (3x − 4y + z) + (2x − z + 3y)
= (3x + 2x) + ( −4y + 3y) + (z − z)
= (3 + 2)x + ( −4 + 3)y + (1 − 1)z
= 5x − 1y + 0z
= 5x − y.
மாற்று முறை:

ii) (4x + 3y) − (2x − 5y)
= (4x + 3y) + ( −2x + 5y)
= (4x − 2x) + (3y + 5y)
= (4 − 2)x + (3 + 5)y
= 2x + 8y.
மாற்று முறை:

14.
i) 7pq ன் கூட்டல் நேர்மாறு -7pq
11pq + (−7pq) = 11pq −7pq = (11 − 7)pq = 4pq
ii) −a ன் கூட்டல் நேர்மாறு a.
ஆகவே, a + a = 2a
iii) 21x + 9 – (5x + 7).
(21x + 9) + [– (5x + 7)] = (21x + 9) – (5x + 7)
= 21x + 9 − 5x − 7
= (21 − 5)x + (9 − 7)
= 16x + 2.
15.
(b)
-1
16.
(a)
2
17.
(c)
3n
18.
(c)
-2a
19.
(b)
−mn
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards