7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
ஒரு மட்டைப்பந்து அணி (Cricket Team) கலந்து கொண்ட போட்டிகளில், தோற்றதை விட இரு ஆட்டங்கள் அதிகமாக வென்றார்கள். வெற்றிக்கு 5 புள்ளிகளும், தோல்விக்கு − 3 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. அந்த அணி மொத்தத்தில் 50 புள்ளிகள் பெற்றிருந்தால், அந்த அணி கலந்துகொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கையைக் காண்க.
2.
60 மாணவர்களுடன் ஒரு பள்ளிப்பேருந்து புறப்பட்டது. முதல் நிறுத்தத்தில் சில மாணவர்கள் இறங்கினார்கள். இரண்டாம் நிறுத்தத்தில், முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு மாணவர்கள் இறங்கினார்கள். மூன்றாம் நிறுத்தத்தில் 6 மாணவர்கள் இறங்கிய பிறகு, பேருந்தில் 3 மாணவர்கள் மட்டுமே இருந்தனர் எனில், முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
3.
ஒருவர் ரூ.960 இக்கு ரூ.1, ரூ.5 மற்றும் ரூ.10 ஆகிய மதிப்பிலான பணத் தாள்களை வைத்துள்ளார். இம்மூன்று மதிப்பிலுள்ள பணத்தாள்களின் எண்ணிக்கையும் சமமெனில், அவரிடமுள்ள மொத்தப் பணத்தாள்களின் எண்ணிக்கை எவ்வளவு?
4.
பின்வரும் உறுப்புகளின் எண்கெழுக்களைச் காண்க. மேலும், ஒவ்வொரு உறுப்பிற்கும் x மற்றும் y இன் கெழுக்களைக் காண்க: 3x, - 5xy, - yz, 7xyz, y, 16yx.
5.
பின்வரும் கோவைகளில் மாறி, உறுப்புகள் மற்றும் உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
(i)12 − x
(ii) 7 + 2y
(iii) 29 + 3x + 5y
(iv) 3x – 5 + 7z
6.
ராணி வேலைக்குச் சென்ற முதல் நாள் ரூ.200 கூலியாகப் பெற்று, அதிலிருந்து ஒரு தொகையை அன்றே செலவு செய்தாள். மறுநாள் ரூ.300 கூலியாகப் பெற்று, அதிலிருந்து முதல்நாள் செலவழித்ததைப்போல், இருமடங்கு செலவு செய்தாள். மூன்றாம் நாள் ரூ.400 கூலியில், முதல் நாளைப்போல் 4 மடங்கு செலவு செய்தாள். இந்தச் சூழலிலிருந்து. அவளிடம் மூன்றாம் நாள் இறுதியில் மீதமிருக்கும் மொத்தத் தொகையைக் கணக்கிட உதவும் இயற்கணிதக் கோவையை உருவாக்குக.
7.
i) கூட்டுக: 3x − 4y + z and 2x − z + 3y
ii) 4x + 3y லிருந்து, 2x − 5y -ஐக் கழிக்க.
8.
சுருக்குக: 100x + 99y – 98z + 10x + 10y + 10z – x – y + z.
9.
கழிக்க:
i) 11pq லிருந்து 7pq
ii) a லிருந்து -a
iii) 21x + 9 லிருந்து 5x + 7
10.
கோவைகளைக் கூட்டுக:
(i) pq −1 மற்றும் 3pq + 2
(ii) 8x + 3 மற்றும் 1 − 7x
1.
இழந்த ஆட்டங்களின் எண்ணிக்கை = x என்க.
எனவே, வென்ற ஆட்டங்கள் = x + 2.
கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து, 5(x + 2) + (− 3)x = 50
5x + 10 − 3x = 50
2x + 10 = 50
2x + 10 − 10 = 50 − 10 (இருபுறமும் 10 ஐ கழிக்க)
2x = 40
இருபுறமும் 2 ஆல் வகுக்க, \(\frac { 2x }{ 2 } =\frac { 40 }{ 2 } \) எனவே, x =20.
எனவே, மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை
x + x + 2 = 2x + 2
= (2 x 20) + 2
= 40 + 2
= 42
2.
முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்களின் எண்ணிக்கை நமக்குத் தெரியாததால், அந்த எண்ணை x என்க. எனவே, இரண்டாம் நிறுத்தத்தில் இறங்கியவர்களின் எண்ணிக்கை 2x ஆகும்.
ஆகவே, x + 2x + 6 + 3 = 60
(1 + 2) x + 9 = 60
3x + 9 = 60
3x + 9 - 9 = 60 − 9 (இருபுறம் 9-ஐக் கழிக்க)
3x = 51
\(\frac { 3x }{ 3 } =\frac { 51 }{ 3 } \) (இருபுறமும் 3 ஆல் வகுக்க)
ஆகவே, x = 17.
எனவே, முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர் எண்ணிக்கை 17 ஆகும்.
3.
ஒவ்வொரு மதிப்பிலும் உள்ள பணத்தாள்களின் எண்ணிக்கை x என்க.
ஆகவே, x + 5x + 10x = 960
(1 + 5 + 10)x = 960
16x = 960
இருபுறமும் 16 ஆல் வகுக்க,
\(\frac { 16x }{ 16 } =\frac { 960 }{ 16 } \)=60
எனவே, x = 60
எனவே, ஒவ்வொரு மதிப்பிலுமான பணத்தாள்களின் எண்ணிக்கை 60.
4.
| கோவை | எண்கெழு | x ன் கெழு | y ன் கெழு |
| 3x | 3 | 3 | வாய்ப்பில்லை |
| -5xy | -5 | -5y | -5x |
| -yz | -1 | வாய்ப்பில்லை | -x |
| 7xyz | 7 | 7yz | 7xz |
| y | 1 | வாய்ப்பில்லை | 1 |
| 16yx | 16 | 16y | 16x |
5.
| வ.எண் | கோவை | மாறிகள் | உறுப்புகள் | உறுப்புகளின் எண்ணிக்கை |
| (i) | 12-x | x | 12, -x | 2 |
| (ii) | 7 + 2y | y | 7, 2y | 2 |
| (iii) | 29 + 3x + 5y | x, y | 29, 3x, 5y | 3 |
| (iv) | 3x -5 + 7z | x, z | 3x, -5, 7z | 3 |
6.
முதல் நாள் பெற்ற கூலி ரூ. 200.
அன்று செலவிட்ட தொகையை ரூ. x என்க. எனவே, முதல் நாள் மீதமிருக்கும் தொகை (200−x).
இரண்டாம் நாள் கூலி ரூ.300. அன்று செலவிட்ட தொகை ரூ. 2x . இரண்டாம் நாள் மீதமிருக்கும் தொகை (300 − 2x). இதேபோல், மூன்றாம் நாள் மீதமிருக்கும் தொகை ரூ.400 − 4x.
ஆகவே, மூன்றாம் நாள் இறுதியில் மொத்தமாக மீதமிருக்கும் தொகை (200−x) + (300 − 2x) + (400 − 4x).
அதாவது, 200 + 300 + 400 + ( − 1 − 2 − 4)x
= 900 + (−7)x
எனவே, 900 − 7x என்பது தேவையான இயற்கணிதக் கோவையாகும்.
7.
i) (3x − 4y + z) + (2x − z + 3y)
= (3x + 2x) + ( −4y + 3y) + (z − z)
= (3 + 2)x + ( −4 + 3)y + (1 − 1)z
= 5x − 1y + 0z
= 5x − y.
மாற்று முறை:

ii) (4x + 3y) − (2x − 5y)
= (4x + 3y) + ( −2x + 5y)
= (4x − 2x) + (3y + 5y)
= (4 − 2)x + (3 + 5)y
= 2x + 8y.
மாற்று முறை:

8.
கொடுக்கப்பட்ட இயற்கணிதக் கோவையில், x,y,z ஆகியன மாறிகள்
ஒத்த உறுப்புகளைக் கண்டறிந்து தொகுத்து எழுதுவோம்.
100x + 99y − 98z + 10x + 10y + 10z − x − y + z
= (100x + 10x − x) + (99y + 10y − y) + ( −98z + 10z + z)
= (100 + 10 − 1)x + (99 + 10 − 1)y + ( −98 + 10 + 1)z
= (110 − 1)x + (109 − 1)y + ( −98 + 11)z
= 109x + 108y + ( −87)z
= 109x + 108y − 87z.
9.
i) 7pq ன் கூட்டல் நேர்மாறு -7pq
11pq + (−7pq) = 11pq −7pq = (11 − 7)pq = 4pq
ii) −a ன் கூட்டல் நேர்மாறு a.
ஆகவே, a + a = 2a
iii) 21x + 9 – (5x + 7).
(21x + 9) + [– (5x + 7)] = (21x + 9) – (5x + 7)
= 21x + 9 − 5x − 7
= (21 − 5)x + (9 − 7)
= 16x + 2.
10.
i) (pq − 1) + (3pq + 2) = (pq + 3pq) + ( − 1 + 2)
= (1 + 3)pq + 1
= 4pq + 1
ii) (8x + 3) + (1 − 7x) = 8x + 3 + 1 − 7x
= (8x − 7x) + (3 + 1)
= (8 − 7) x + 4
= x + 4.
முழுக்களில் கற்றதைப் போலவே, இயற்கணிதக் கோவையின் உறுப்புகளைக் கழிப்பதும் அதன் கூட்டல் நேர்மாறைக் கூட்டுவதேயாகும். இயற்கணிதக் கோவைகளின் கழித்தலை நன்கு புரிந்துகொள்ள, ஓருறுப்பு இயற்கணிதக் கோவைகளின் கழித்தலைக் கருதுவோம்.
உதாரணமாக, 12y லிருந்து 6y ஐக் கழிக்க. நாம் 12y ஐயும், (− 6y) ஐயும் கூட்ட வேண்டும்.
ஆகவே, 12y + (−6y) = 12y − 6y
= (12 − 6)y = 6y
இதேபோல் 3mn லிருந்து −mn ஐக் கழிப்போம். −mn ன் கூட்டல் நேர்மாறு mn ஆகும். எனவே, 3mn ஐயும் mn ஐயும் கூட்டவேண்டும். அதாவது, 3mn + mn = (3 + 1)mn = 4mn.
இவ்வாறாக, இரு இயற்கணிதக் கோவைகளைக் கழிக்க முடியும். 25a + 11 என்னும் கோவையிலிருந்து 13a − 2 என்னும் கோவையைக் கழிக்க, 13a–2 இன் கூட்டல் நேர்மாறை 25a + 11 உடன் கூட்டவும்.
13a - 2 இன் கூட்டல் நேர்மாறு −(13a − 2) = −13a + 2.
எனவே, 25a + 11 மற்றும் −(13a − 2) ஐக் கூட்ட,
எனவே, 25a + 11 − (13a – 2) = (25a + 11) + (−13a +2)
= (25a − 13a) + (11 + 2)
= 12a + 13
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards