7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
2m + 8n + 10 லிருந்து, எதனைக் கழித்தால் −3m + 7n + 16 கிடைக்கும்?
2.
பரப்பளவு 576 ச.செ.மீ உம், உயரத்தைப்போல் நான்கு மடங்கு கொண்ட அடிப்பாகத்தையும் உடைய இணைகரத்தின் உயரம் காண்க.
3.
மதிப்பு காண்க: (–25) + 60 + (–95) + (–385)
4.
(–17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (–19) கிடைக்கும்?
5.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் \(\angle \)GEH ன் மதிப்பைக் காண்க.
6.
தேன்மலர் போட்டித் தேர்வில் பங்கேற்கிறாள். அத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும். முதல் தாளில் அவள் 25 வினாக்கள் தவறாகப் பதில் அளிக்கிறாள். மேலும் தாள் II இல் 13 வினாக்களுக்குத் தவறாகப் பதில் அளிக்கிறாள். அவளுக்குக் குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு எனக் கண்டறிக.
7.
அடிப்பக்கம் 14 செ.மீ உம், உயரம் 9 செ.மீ உம் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவைக் காண்க.
8.
x = 2 மற்றும் y = 3, எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக் காண்க.
(i) 2x − 3y
(ii) x + y
(iii) 4y − x
(iv) x + 1 − y
9.
ஜானகி என்பவரிடம் உள்ள ஓர் இணைகர வடிவிலான துணியின் உயரமும் நீளமும் முறையே, 12 செ.மீ மற்றும் 18 செ.மீ. மேலும் அதை நான்கு சமமான இணைகரங்களாக்கிப் பிரித்துப் (இணைப்பக்கங்களின் மையப்புள்ளி வழியாக) புதிய இணைகரத்தின் பரப்பளவு காண்க
10.
8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?
11.
ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல்
360˚
180˚
90˚
0˚
12.
குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.
-9 + (-5) + 6
8 + (-12) - 6
-4 + 2 + 10
10 + (-4) + 8
13.
3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்
mn
−mn
2mn
3mn
14.
சாய்சதுரத்தின் மூலை விட்டங்களுக்கு இடையே உள்ள கோணம்
120o
180º
90º
100º
15.
10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரத்தின் பரப்பு
70 ச.மீ
35 ச.மீ
7 ச.மீ
10 ச.மீ
16.
மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ரூ.75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ரூ.105 இக்கு ______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார்
6
7
8
5
17.
கூட்டுக
(i) (–40) மற்றும் (30)
(ii) 60 மற்றும் (–50)
18.
பின்வரும் உறுப்புகளின் எண்கெழுக்களைச் காண்க. மேலும், ஒவ்வொரு உறுப்பிற்கும் x மற்றும் y இன் கெழுக்களைக் காண்க: 3x, - 5xy, - yz, 7xyz, y, 16yx.
19.
அடிப்பக்கம் 12 மீ மற்றும் உயரம் 8 மீ அளவுகள் கொண்ட இணைகரத்தின் பரப்பளவு காண்க.
20.
80˚ அளவுடைய \(\angle \)ABC இன் கோண இரு சமவெட்டி வரைக.
21.
எண்கோட்டைப் பயன்படுத்திக் கழிக்க
(i) –3 – (–2)
(ii) +6 – (–5)
22.
இரவு உணவு சாப்பிடுவதற்காக மணி தன் நண்பன் முகமது உடன் உணவகம் சென்றான். 2 இட்லிகளும், 2 தோசைகளும் மணி சாப்பிட்டான். முகமது 4 இட்லிகளும், 1 தோசையும் சாப்பிட்டான். x மற்றும் y முறையே, ஒரு இட்லியின் விலை மற்றும் ஓர் தோசையின் விலை எனில், அவர்கள் செலுத்தவேண்டிய பட்டியல் தொகையை (bill amount) x மற்றும் y இல் கணக்கிடுக.
23.
சமசீர் தன்மை கொண்ட நாற்சதுர இணையை வரைக_______
24.
-44 + ____ = -88
25.
a = 5, எனில், 2a + 5 ன் மதிப்பு ______
26.
குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600 பாட்டில்களை 5 மணி நேரத்தில் நிரப்புகிறது எனில் அவ்வியந்திரம், 3 மணி நேரத்தில் நிரப்பும் பாட்டில்களின் எண்ணிக்கை ________.
27.
−3m லிருந்து 5m ஐக் கழிக்கக் கிடைப்பது ______
28.
ஒரு மிகை முழு, ஒரு குறை முழு ஆகியவற்றின் கூடுதல், எப்போதும் முழுவாகும்.
29.
12 நபர்கள் 8 நாட்களில் ஒரு குளத்தை வெட்டுவார்கள் எனில், அதே வேலையை 16 நபர்கள் 6 நாட்களில் செய்து முடிப்பார்கள்
30.
இரண்டு ஒத்த உறுப்புகளைக் கூட்டுவதற்கு அதன் கெழுக்களைக் கூட்ட வேண்டும்.
31.
(–32) இன் கூட்டல் எதிர்மறை (–32)
32.
ஒரு பேருந்து கடந்த தூரமும், அத்தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரமும் நேர் விகிதத் தொடர்புடையன.
1.
(2m + 8n +10) - கோவை = -3m + 7n + 16
கோவை = (2m + 8n + 10) - (-3m + 7n +16)
(-3m + 7n + 16 ன் கூட்டல் நேர்மாறு 3m - 7n - 16 ஐக் கூட்ட வேண்டும்.]
= (2m + 8n + 10) + (3m - 7n - 16)
= (2m +3m) + (8n - 7n) + (10-16)
கோவை = 5m + n - 6
2.
அடிப்பக்கம் (b) = உயரத்தைப் போல் நான்கு மடங்கு
b = 4h
இணைகரத்தின் பரப்பளவு = 576 ச.செ.மீ
b x h = 576
4h x h = 576
4h2 = 576
h2 = 144
h = 12
இணைகரத்தின் உயரம் (h) = 12 செ.மீ
3.

4.
அந்த எண் = x என்க
- 17 + x = -19
x = -19 + 17
x = -2
(-17) உடன் (-2) ஐக் கூட்ட (-19) கிடைக்கும்
5.
படத்திலிருந்து
\( \angle F E H =\angle F E G+\angle G E H \)
\(120^{\circ} =34^{\circ}+\angle G E H \)
\(\angle G E H =120^{\circ}-34^{\circ} \)
\(\angle G E H =86^{\circ}\)
6.
தவறான பதிலுக்கான மதிப்பெண் = -1
முதல் தாளில் தவறான 25 பதில்களுக்கு குறைக்கப்படும் மதிப்பெண் = -25
இரண்டாம் தாளில் தவறான 13 பதில்களுக்கு குறைக்கப்படும் மதிப்பெண் = -13
குறைக்கப்படும் மொத்த மதிப்பெண் = -25 + (-13)
= 25 - 13 = -38
-38 மதிப்பெண்
7.
அடிப்பக்கம் b = 14 செ.மீ, உயரம் h = 9 செ.மீ
சாய்சதுரத்தின் பரப்பளவு = b x h ச.அலகுகள்
= 14 x 9 = 126
சாய்சதுரத்தின் பரப்பளவு = 126 ச.செ.மீ
8.
(i) 2x - 3y = 2(2) - 3(3) = 4 - 9 = -5
(ii) x + y = 2 + 3 = 5
(iii) 4y - x = 4(3) - 2 = 12 - 2 = 10
(iv) x + 1-y = 2 + 1 - 3 = 3 - 3 = 0
9.
உயரம் = 12 செ.மீ, அடிப்பக்க நீளம் = 18 செ.மீ
இணைகர வடிவ துணியின் பரப்பளவு
= b x h = 18 x 12
= 216 செ.மீ 2
அந்த துணியானது 4 சமமான இணைகரமாக பிரிக்கப்படுகிறது.
புதிய இணைகரத்தின் பரப்பளவு \(=\frac{216}{4}=\)செ.மீ2
10.
| கம்பத்தின் நீளம் (மீ) | 8 | x |
| நிழலின் நீளம் (மீ) | 6 | 30 |
இது நேர் விகிதத்தில் அமைந்துள்ளது
\( \therefore \frac{x_{1}}{y_{1}} =\frac{x_{2}}{y_{2}} \)
\(\frac{8}{6} =\frac{x}{30} \)
\(6 x =8 \times 30 \)
\(\therefore x =\frac{8 \times 30}{6}\)
x = 40 மீ
30 மீ நிழலை ஏற்படுத்தும் கம்பத்தின் நீளம் 40 மீ
11.
(a)
360˚
12.
(a)
-9 + (-5) + 6
13.
(b)
−mn
14.
(c)
90º
15.
(a)
70 ச.மீ
16.
(b)
7
17.
(i) (–40) மற்றும் (30)
–40 + 30 = –10
(ii) 60 மற்றும் (–50)
60 + (–50) = 60 – 50 = 10
18.
| கோவை | எண்கெழு | x ன் கெழு | y ன் கெழு |
| 3x | 3 | 3 | வாய்ப்பில்லை |
| -5xy | -5 | -5y | -5x |
| -yz | -1 | வாய்ப்பில்லை | -x |
| 7xyz | 7 | 7yz | 7xz |
| y | 1 | வாய்ப்பில்லை | 1 |
| 16yx | 16 | 16y | 16x |
19.

கொடுக்கப்பட்ட அளவுகள்; அடிப்பக்கம் (b) = 12 மீ, உயரம் (h) = 8 மீ
இணைகரத்தின் பரப்பளவு = b x h ச.அலகுகள்
= 12 x 8 = 96 ச.மீ
ஆகவே, இணைகரத்தின் பரப்பளவு 96 ச.மீ ஆகும்.
20.
படி 1: பாகைமானியைப் பயன்படுத்தி 80˚ அளவுள்ளவாறு கோணம் \(\angle \)ABC யை அமைக்க.

படி 2: B ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரமுடைய வட்டவில்லை \(\angle \)BAC இன் உட்பகுதியில் BA மற்றும் BC ஐ முறையே E மற்றும் F இல் வெட்டுமாறு வரைக.

படி 3: E ஐ மையமாகக் கொண்டு அதே ஆரத்தில் \(\angle \)ABC இன் உட்புறத்தில் ஒரு வட்டவில் வரைக. இதே போல் F ஐ மையமாகக் கொண்டு முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில் வரைக.

படி 4: வட்டவிற்கள் வெட்டும் புள்ளியை G எனக் குறிக்க. கதிர் BG ஐ வரைக. கதிர் BG, \(\angle \)ABC இன் கோண இரு சமவெட்டி ஆகும்.

21.
(i) –3 – (–2)
எண்கோட்டைப் பயன்படுத்தி –3 லிருந்து –2 ஐக் கழிப்பதற்கு,

எனவே, –3 – (–2) = –3 + 2 = –1
(ii) +6 – (–5)
எண்கோட்டைப் பயன்படுத்தி 6 லிருந்து –5 ஐக் கழிப்பதற்கு

எனவே, +6 – (–5) = +6 + 5 = 11.
நாம் கூட்டல் நேர்மாறைப் பயன்படுத்தி முழுக்களின் கழித்தல் செயல்பாட்டைப் பற்றி பார்க்கலாம்.
22.
ஓர் இட்லியின் விலை ‘x’ எனவும், ஒரு தோசையின் விலை y எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மணியின் பட்டியல் தொகை: (2 x x) + (2 x y) = (2x + 2y)
முகமதுவின் பட்டியல் தொகை: (4 x x) + (1 x y) = 4x + y
எனவே, மொத்தப் பட்டியல் தொகை = (2x + 2y) + (4x + y)
= (2 + 4)x + (2 + 1)y = 6x + 3y
மாற்றுமுறை:
மொத்தத்தில், அவர்கள் சாப்பிட்டவை 2 + 4 = 6 இட்லிகள்.
அதாவது 6 x x = 6x
2 + 1 = 3 தோசைகள்
அதாவது 3 x y = 3y
எனவே, மொத்தப் பட்டியல் தொகை = 6x + 3y.
23.
24.
( )
-44
25.
( )
15
26.
( )
360
27.
( )
–8m
28.
(b)
29.
(b)
30.
(a)
31.
(b)
32.
(a)
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards