7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 01/10/2019
அளவைகள்
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பரப்பளவு 828 ச.செ.மீ.உம், இணைப்பக்க அளவுகள் 19.6 செ.மீ,16.4 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் உயரத்தைக் காண்க.
2.
சரிவகத்தின் இணைப்பக்கங்கள் முறையே 23 செ.மீ, 12 செ.மீ. இணைப்பக்கங்களுக்கு இடையே உள்ள தூரம் 9 செ.மீ எனில், சரிவகத்தின் பரப்பளவு காண்க.
3.
ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின், அடிப்பக்கத்தையும் உயரத்தையும் காண்க.
4.
ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் முறையே 12 செ.மீ மற்றும் 9 செ.மீ சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 8 செ.மீ எனில் பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.
5.
பரப்பளவு 368 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 23 செ.மீ அளவுகள் கொண்ட இணைகரத்தின் உயரம் காண்க.
6.
ஓர் அலுவலகக் கட்டிடத் தரையில் 200 சாய்சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள் 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், தரையை மெருகூட்டச் சதுரமீட்டருக்கு ரூ. 45 வீதம் மொத்தச் செலவைக் காண்க.
7.
ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில், மற்றொரு மூலைவிட்டத்தைக் காண்க.
8.
மூலைவிட்டங்கள் 6 செ.மீ, 8 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் பரப்பு காண்க.
9.
பக்க அளவு 17 செ.மீ மற்றும் உயரம் 8 செ.மீ சாய்சதுரத்தின் பரப்பளவு காண்க.
1.

சரிவகத்தின் பரப்பளவு = 828 ச.செ.மீ (கொடுக்கப்பட்டுள்ளது)
\(\cfrac { 1 }{ 2 } \times h\left( a+b \right) =828\)
\(\cfrac { 1 }{ 2 } \times h\left( 19.6+16.4 \right) =828\)
\(\cfrac { 1 }{ 2 } \times h\left( 36 \right) =828\)
\(h=\cfrac { 828 }{ 18 } \)
h = 46 செ.மீ
எனவே,சரிவகத்தின் உயரம் 46 செ.மீ ஆகும்.
2.

கொடுக்கப்பட்ட அளவுகள், உயரம் (h) = 9 செ.மீ
இணைப்பக்கங்கள் (a) = 23 செ.மீ மற்றும் (b) = 12 செ.மீ
சரிவகத்தின் பரப்பளவு = \(\cfrac { 1 }{ 2 } \times h(a+b)\)
= \(\cfrac { 1 }{ 2 } \times 9\left( 23+12 \right) \)
= \(\cfrac { 1 }{ 2 } \times 9(35)\)
= 157.5 செ.மீ
எனவே,சரிவகத்தின் பரப்பளவு 157.5 செ.மீ ஆகும்..
3.

இணைகரத்தின் உயரத்தை ‘h‘ செ.மீ எனக் கொள்க.
எனவே, அடிப்பக்கம் = 3h செ.மீ
இணைகரத்தின் பரப்பளவு = 192 ச.செ.மீ (கொடுக்கப்பட்டுள்ளது)
b x h = 192
3h x h = 192
3h² = 192
h² = 64
h x h = 8 x 8
h = 8 செ.மீ
அடிப்பக்கம் = 3h = 3 x 8 = 24 செ.மீ
எனவே, இணைகரத்தின் அடிப்பக்கம் 24 செ.மீ மற்றும் உயரம் 8 செ.மீ ஆகும்.
4.

இணைகரத்தின் அடுத்துள்ள பக்கங்கள் 12 செ.மீ மற்றும் 9 செ.மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் சிறிய பக்கத்தை அடிப்பக்கமாகக் கொண்டால், அதாவது
b = 9 செ.மீ எனில், சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு அதாவது h = 8 செ.மீ
எனவே இணைகரத்தின் பரப்பு = b x h ச.அலகுகள்
= 9 x 8 = 72 ச.செ.மீ.

நாம் பெரிய பக்கத்தை அடிப்பக்கமாகக் கொண்டால், அதாவது b = 12 செ.மீ. எனில், பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவை ‘h‘ என்க.
ஆகவே, இணைகரத்தின் பரப்பளவு = 72 ச.செ.மீ
b x h = 72
12 x h = 72
\(h=\cfrac { 72 }{ 12 } =16\)
எனவே,பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 6 செ.மீ ஆகும்.
5.

கொடுக்கப்பட்ட அளவுகள் ; இணைகரத்தின் பரப்பளவு = 368 ச.செ.மீ, அடிப்பக்கம் (b) = 23 செ.மீ
இணைகரத்தின் பரப்பளவு =368 ச.செ.மீ
b x h = 368
23 x h = 368
\(h=\cfrac { 368 }{ 23 } =16\)
எனவே, இணைகரத்தின் உயரம் 16 செ.மீ ஆகும்.
6.
சாய்சதுர வடிவிலான ஓடுகளின் மூலைவிட்டங்களின் நீளங்கள் முறையே, 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், d1 = 40 செ.மீ, d2 = 25 செ.மீ
ஒரு சாய்சதுர வடிவ ஓட்டின் பரப்பளவு = \(\cfrac { 1 }{ 2 } \times \left( { d }_{ 1 }\times { d }_{ 2 } \right) \) ச.அலகுகள்
= \(\cfrac { 1 }{ 2 } \times 40\times 25\)
= 500 ச.செ.மீ
எனவே 200 ஓடுகளின் பரப்பளவு = 200 x 500 ச.செ.மீ
= 100000 செ.மீ
= \(\cfrac { 100000 }{ 10000 } \)(1 ச.மீ = 10000 ச.செ.மீ)
= 10 ச.மீ
தரையை மெருகூட்ட 1 ச.மீ க்கு ஆகும் Rs 4.
எனவே, மொத்த செலவு = 10 x 45 = ரூ. 450
7.
கொடுக்கப்பட்ட அளவுகள், மூலைவிட்டம் (d1) = 8 செ.மீ
மூலைவிட்டம் d2 = ?
சாய்சதுரத்தின் பரப்பளவு = 60 ச.செ.மீ (கொடுக்கப்பட்டுள்ளது)
\(\cfrac { 1 }{ 2 } \times \left( { d }_{ 1 }\times { d }_{ 2 } \right) =60\)
\(\cfrac { 1 }{ 2 } \times \left( 8\times { d }_{ 2 } \right) =60\)
8 x d2 = 60 x 2
\({ d }_{ 2 }=\cfrac { 120 }{ 8 } \)
= 15
எனவே, மற்றொரு மூலைவிட்டத்தின் நீளம் 15 செ.மீ ஆகும்.
8.

கொடுக்கப்பட்ட அளவுகள்: d1 = 6 செ.மீ, d2 = 8 செ.மீ
சாய் சதுரத்தின் பரப்பு = \(\cfrac { 1 }{ 2 } \times \left( { d }_{ 1 }\times { d }_{ 2 } \right) \)ச.அலகுகள்
= \(\cfrac { 1 }{ 2 } \times \left( 6\times 8 \right) \)
= \(\cfrac { 48 }{ 2 } \)
= 24 ச.செ.மீ
எனவே, சாய்சதுரத்தின் பரப்பளவு 24 செ.மீ ஆகும்.
9.

கொடுக்கப்பட்ட அளவுகள்
பக்க அளவு = 17 செ.மீ, உயரம் = 8 செ.மீ
சாய்சதுரத்தின் பரப்பளவு = b x h ச.அலகுகள்
= 17 x 8 =136
எனவே சாய்சதுரத்தின் பரப்பளவு 136 ச.செ.மீ ஆகும்.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards