7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 11/12/2019
Term 1 எண்ணியல் Number System
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கீழுள்ளவற்றைச் சமமானவையா எனச் சோதிக்க. சமம் எனில், அப்பண்பின் பெயரைக் கூறுக.
(i ) (8 - 13) x 7 மற்றும் (-6) - [8 x 9 - 4)]
(ii) [(-6) - (+8)] x (-4) மற்றும் (-6)[8 x (-4)]
(iii) 3 x [(-4) + (-10) மற்றும் [3 x (-4) + 3 x (-10)
2.
ஒரு மாணவரிடம் (–47) லிருந்து (–12) ஐக் கழிக்கக் கேட்கப்பட்டது. அவருக்கு விடை (–30) எனக் கிடைத்தது. அது சரியா/தவறா? நியாயப்படுத்துக.
3.
ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?
4.
கூட்டினால் தீர்வு 2 வரும்படி ஏதாவது 5 இணை முழுக்களைக் காண்க.
5.
ஒரு வினாடி வினாவில் மூன்று அடுத்தடுத்த சுற்றுகளில் குழு A பெற்ற மதிப்பெண்கள் +30,–20, 0 மற்றும் குழு B பெற்ற மதிப்பெண்கள் –20, 0, +30 எனில், வெற்றி பெற்ற குழு எது? முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலுமா?
6.
கொடி தினத்தை முன்னிட்டுப் பெரோஸ்கான் தன் வகுப்புத் தோழர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.25 வீதம் மொத்தம் ரூ.1150 வசூலிக்கிறான். ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு வகுப்புக்கும் ரூ.8 திருப்பித் தருகிறான் எனில், ஆசிரியரிடம் ஒப்படைத்தத் தொகையினைக் காண்க.
7.
3 x [(–4) + 6], [3 x (–4)] + (3 x 6) ஆகியவை சமமானவையா? எனில் பண்பின் பெயரைக் கூறுக.
8.
(–81) x [5 x (–2)], [(–81) x 5] x (–2) ஆகியவை சமமானவையா? அவ்வாறு இருப்பின் அப்பண்பின் பெயரைக் கூறுக.
9.
ஒரு பழ வியாபாரி கிலோவுக்கு ரூ.15 லாபம் வீதம் 5 கிலோ மாம்பழங்களை விற்றார் பிறகு கிலோவுக்கு ரூ.30 நட்டம் வீதம் 3 கிலோ ஆப்பிள்களை விற்றார் எனில் அவருடைய நிகர லாபம் அல்லது நட்டம் எவ்வளவு?
10.
(i) 120 + 51 மற்றும் 51 + 120 ஆகிய இரண்டும் சமமானவையா?
(ii) (-5) + [(-4) + (-3)] மற்றும் [(-5) + (-4)] + (-3) ஆகிய இரண்டும் சமமானவையா?
11.
பின்வரும் எந்தச் செயலியில் முழுக்களின் தொகுப்பு ‘அடைவுப் பண்பை’ பெறாது?
கூட்டல்
கழித்தல்
பெருக்கல்
வகுத்தல்
12.
(-16) ÷ 4 இக்கு சமமானது எது?
-(-16 ÷ 4)
-(16) ÷ (-4)
16 ÷ (-4)
-4 ÷ 16
13.
(5 x 2) + (5 x 5) = 5 x (2 + 5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?
பரிமாற்றுப் பண்பு
அடைவுப் பண்பு
பங்கீட்டுப் பண்பு
சேர்ப்புப் பண்பு
14.
(-5) - (-18) = _____
23
-13
13
-23
15.
20 + (-9) + 9 =____
20
29
11
38
16.
வணிகர் ஒருவர் தனது பழைய இருப்பிலிருந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தை விற்பதன் மூலம் ரூ.5 இலாபமும், ஒரு பேனாவை விற்பதன் மூலம் ரூ.2 நட்டமும் அடைகிறார். 20 புத்தகங்களை விற்ற ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு இலாப - நட்டம் ஏதுமின்றி இருந்தார் எனில், அன்று அவர் விற்பனை செய்த பேனாக்களின் எண்ணிக்கையைக் காண்க.
17.
கலைவிழி கலந்துகொண்ட ஒருபோட்டி தேர்வில் சரியான விடைக்கு 4 மதிப்பெண்களும், தவறான விடைக்கு –2 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. அவள் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தாள். அவற்றுள் பத்துச் சரியான விடைகள் இருந்தபோதிலும், அவளால் 20 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது எனில், அவள் எழுதிய தவறான விடைகள் எத்தனை
18.
செழியன் என்பவர் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1079 மதிப்புள்ள பொருள்களை வாங்குகிறார். அதற்கு முன்பு அவருடைய கணக்கில் ரூ.5000 இருந்திருந்தால், தற்போது அவருடைய கணக்கில் எவ்வளவு பணம் இருக்கும்?
19.
சித்ரா என்பவர் தன்னிடம் ரூ.150 வைத்துள்ளார். அவர் ரூ.225 மதிப்புள்ள ஒரு கைப்பையை வாங்க நினைத்தால் அவர் தோழியிடம் கடன் பெற வேண்டிய தொகை எவ்வளவு?
1.
(i) (8 - 13) x 7 = -5 x 7 = -35
(8 - 13) x 7 = 8 -91 = -83
இவை சமம் அல்ல
(ii) [(-6) - (+8)] x (-4) = -14 x -4 = 56
[(-6) - (+8)] x (-4) = -6 - (-32)
இவை சமம் அல்ல
(iii) 3 x [(-4) + (-10) = 3 x -14 x = -42
3 x [(-4) + (-10) = -12 -30 = -42
இவை சமம் (கூட்டலின் மேல் பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு)
2.
-47 - (-12) = -47 + 12 = -35
(-47) லிருந்து (-12) ஐக் கழித்தால் கிடைப்பது (-35)
ஆனால் மாணவருக்கு கிடைத்த விடை (-30).
எனவே மாணவரின் விடை தவறானது
3.
தரைத்தளம் = 0
மின்தூக்கி 5 தளங்கள் கீழே செல்கிறது = -5
மின்தூக்கி 10 தளங்கள் மேலே செல்கிறது = + 10
தற்போது மின்தூக்கி இருக்கும் தளம் = 10 - 5 = +5
மின்தூக்கி 5 தளத்தில் இருக்கும்
4.
5 இணை முழுக்கள்
(0,2) ஏனெனில் 0 + 2 = 2
(-2,4) ஏனெனில் -2 + 4 = 2
(-1,3) ஏனெனில் -1 + 3 = 2
(1,1) ஏனெனில் 1 + 1 = 2
(-3,5) ஏனெனில் -3 + 5 = 2
5.

இரு குழு பெற்ற மதிப்பெண்கள் 10 வினாடி வினா சமநிலையில் முடிந்தது .
ஆம் ,முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலும்.
6.
கொடி தினத்தை முன்னிட்டுப் பெரோஸ்கான் தன் வகுப்புத் தோழர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.25 வீதம் மொத்தம் ரூ.1150 வசூலிக்கிறான்.
மொத்தத் தொகையாக வசூலித்தது = ரூ.1150
ஒரு மாணவனிடம் வசூலித்த தொகை = ரூ.25
மாணவர்களின் எண்ணிக்கை = 1150 ÷ 25 = 46

ஒவ்வொரு மாணவனும் திரும்பப் பெற்ற தொகை ரூ.8
ஆகவே 46 மாணவர்கள் திரும்பப் பெற்ற தொகை = 46 x 8 = ரூ.368

ஆகவே, ஆசிரியரிடம் ஒப்படைத்த தொகை ரூ.782.
7.
3 x [(–4) + 6] = 3 x 2 = 6
[3 x (–4)] + [3 x 6] = –12 + 18 = 6
ஆகவே, 3 x [(–4) + 6] மற்றும் [3 x (–4)]+3 x 6 சமம்.
இது பெருக்கலின் கீழ்க் கூட்டலின் பங்கீட்டுப் பண்பை நிறைவு செய்கிறது.
8.
(–81) x [5 x (–2)] = (–81) x (–10) = 810
[(–81) x 5] x (–2) = (–405) x (–2) = 810
ஆகவே, (–81) x [5 x (–2)] , [(–81) x 5] x (–2) ஆகியவை சமமானவையாகும்.
இது பெருக்கலின் கீழ்ச் சேர்ப்புப் பண்பு ஆகும்.
9.
1 கி.கி மாம்பழம் விற்றதில் கிடைக்கும் லாபம் = ரூ.15
5 கி.கி மாம்பழம் விற்றதில் கிடைக்கும் லாபம் = ரூ. 15 x 5 = ரூ.75
1 கி.கி ஆப்பிள் விற்றதில் கிடைக்கும் நட்டம் = ரூ.30
3 கி.கி ஆப்பிள் விற்றதில் கிடைக்கும் நட்டம் = 30 x 3 = ரூ.90
லாபத்தை விட நட்டம் அதிகம் என்பதால் மொத்த நட்டம் = ரூ.90 − ரூ.75 = ரூ.15
10.
(i) 120 + 51 = 171; 51 + 120 = 171 என எழுதலாம்.
மேலும், இவ்விரு நிகழ்வுகளிலும் நமக்குக் கிடைக்கும் விடை சமம். முழுக்களை வரிசை மாற்றிக் கூட்ட இயலும். முழுக்களின் கூட்டல் பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்கிறது.
(ii) (-5) + [(-4) + (-3)] மற்றும் [(-5) + (-4)] + (-3)
(-5) + [(-4) + (-3)], இல் முதலில் (–4) மற்றும் (–3) கூட்டப்பட்டுள்ளது. பின்னர் இதனுடைய விடையுடன் (–5) ஐக் கூட்டுகிறோம்.

(–5) + [(–4) +(–3)] = –12
[(-5) + (-4)] + (-3) இல், முதலில் (–5) மற்றும் (–4) கூட்டப்பட்டு அதன் விடையுடன் (–3) ஐக் கூட்டுகிறோம்.

[(–5) +(–4)] + (–3) = – 12
இவ்விரு வகையிலும், −12 என்ற விடை கிடைக்கிறது.
ஆகவே, (-5) + [(-4) + (-3)] = [(-5) + (-4)] + (-3)
முழுக்களின் கூட்டலானது சேர்ப்புப் பண்பை நிறைவு செய்கிறது.
11.
(d)
வகுத்தல்
12.
(c)
16 ÷ (-4)
13.
(c)
பங்கீட்டுப் பண்பு
14.
(c)
13
15.
(a)
20
16.
அன்று, இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை
எனவே, இலாபம் + நட்டம் = 0
அதாவது இலாபம் = - நட்டம்
ஒரு புத்தகத்தில் ஈட்டிய இலாபம் = ரூ.5
20 புத்தகங்களில் ஈட்டிய மொத்த இலாபம் = 20 x ரூ.5
= ரூ.100
எனவே, பேனா விற்பனையின் நட்டம் = ரூ.100 = –100
ஒரு பேனா விற்பனையின் நட்டம் = ரூ.2 = – 2
எனவே, மொத்தமாக விற்ற பேனாக்களின் எண்ணிக்கை = (−100) ÷ (−2) = 50 பேனாக்கள்.
17.
ஒரு சரியான விடைக்கான மதிப்பெண்கள் = 4
பத்துச் சரியான விடைக்கான மதிப்பெண்கள் = 10 x 4 = 40
கலைவிழி பெற்ற மதிப்பெண்கள் = 20
எனவே, தவறான விடைக்காகப் பெற்ற மதிப்பெண்கள் = 40 − 20 = 20
ஒரு தவறான விடைக்கு மதிப்பெண்கள் = − 2
எனவே, தவறாக விடையளித்த வினாக்களின் எண்ணிக்கை = 20 ÷ 2 = 10
18.
ஆரம்ப இருப்பு = ரூ.5000
செலவிட்ட தொகை = ரூ.1079 (−)
மீதமுள்ள இருப்பு = ரூ.3921
19.
சித்ராவிடம் இருப்புத் தொகை = ரூ.150
கைப்பையின் மதிப்பு = ரூ.225
கடன் பெறவேண்டிய தொகை = ரூ.225 - ரூ.150
= ரூ.75
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards