7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 22/10/2019
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு நீர்மூழ்கிக் கப்பல், கடல் மட்டத்திலிருந்து 650 அடி ஆழத்தில் உள்ளது. அது 200 அடி கீழிறங்கினால், அது இருக்கும் ஆழத்தைக் காண்க
2.
கீழ்க்காணும் மாயச் சதுரத்தில் நிரை, நிரல் மற்றும் மூலைவிட்டத்தில் உள்ள எண்களின் கூடுதல் சமம் எனில், x, y மற்றும் z இன் மதிப்புகளைக் காண்க.
| 1 | -10 | x |
| y | -3 | -2 |
| -6 | 4 | z |
3.
ஒரு நாள் தண்ணீர் குடிப்பதற்காக, ஒரு கிணற்றின் படிக்கட்டுகளில் நாய் தாவிக் குதித்துக் கீழிறங்கியது. ஒரு தாவலில், 4 படிக்கட்டுகளைக் கடந்தது. அந்தக் கிணற்றின் நீர்மட்டத்தை அடைய 20 படிகள் இருந்தால், அந்த நாய் எத்தனை முறை தாவிக்குதித்து நீரை அடைந்திருக்கும்?
4.
A யிலிருந்து M வரையிலான ஆங்கில எழுத்துகள், முறையே 1 லிருந்து 13 வரையான எண்களைக் குறிக்கின்றன; N என்பது 0 ஐக் குறிக்கிறது; O விலிருந்து Z வரையான ஆங்கில எழுத்துகள் முறையே (−1) லிருந்து (−12) வரையிலான எண்களைக் குறிக்கின்றன என்க. பின்வரும் ஆங்கில வார்த்தைகளுக்கான முழுக்களின் கூடுதலைக் காண்க.
உதாரணமாக, MATH ⟶ கூட்டல் பலன் ⟶ 13 + 1 - 6 + 8 = 16
(i) YOUR NAME
(ii) SUCCESS
5.
72 + (-5) - ? = 72 என்னும் சமன்பாட்டில், கேள்விக்குறி(?)ஐ நிறைவு செய்யும் எண்ணைக் காண்க.
6.
புத்தர் கி.மு (பொ.ஆ.மு) 563 இல் பிறந்து, கி.மு (பொ.ஆ.மு) 483 இல் இறந்தார். அவர் கி.மு. (பொ.ஆ.மு) 500 இல் உயிர் வாழ்ந்தாரா? அவருடைய ஆயுட்காலம் எவ்வளவு?
7.
காமாட்சி என்னும் பழ வணிகர், 30 ஆப்பிள்களையும், 50 மாதுளைகளையும் விற்கிறார். அவருக்கு, ஓர் ஆப்பிளால் ரூ.8 இலாபமும், ஒரு மாதுளையால் ரூ.5 நட்டமும் கிடைத்தது எனில், அவரது ஒட்டுமொத்த இலாப/நட்டத் தொகையினைக் காண்க.
8.
என்னுடன் 2 ஐக் கூட்டுங்கள். பிறகு 5 ஆல் பெருக்கவும், அதிலிருந்து 10 ஐக் கழிக்கவும். அதனை நான்கால் வகுத்தால் 15 கிடைக்கும் எனில், நான் யார்?
9.
வெப்பத்தை அளவிட, வழக்கமான செல்சியஸ் பாகைகளுக்கு (oC) பதிலாகக் கெல்வின் அளவுகளை (K) அறிவியலாளர் பயன்படுத்துவர். இரண்டிற்கும் உள்ள உறவைக் கூறும் சமன்பாடு T°C = (T + 273) K. பின்வரும் அளவுகளைக் கெல்வினாக மாற்றி எழுதுக.
(i) –275˚C
(ii) 45˚C
(iii) –400˚C
(iv) –273˚C
10.
காஷ்மீரில், ஒரு நாள் இரவின் வெப்ப நிலை –5˚C. மறுநாள், அவ்வெப்பநிலை 9˚C ஆக உயர்ந்தது எனில், அதிகரித்த வெப்ப அளவினைக் காண்க.
11.
01.01.2018 அன்று கலைவாணியின் வங்கிக் கணக்கு இருப்பு ரூ.5000. அவர், சனவரியில் ரூ.2000 பணம் செலுத்தினார், பிப்ரவரியில் ரூ.700 பணம் எடுத்தார். மார்ச் மாதத்தில் ரூ.1000 செலுத்தி, ரூ.500 எடுத்திருந்தால், அவர் கணக்கில் 01.04.2018 அன்று உள்ள வங்கி இருப்பைக் காண்க.
12.
பின்வருவனவற்றைச் சரிபார்க்க.
(i) (11 + 7) + 10 மற்றும் 11 + (7 + 10) ஆகியவை சமம்.
(ii) (8 - 13) x 7 மற்றும் 8 - (13 x 7) ஆகியவை சமம்.
(iii) [(-6) - (+8)] x (-4) மற்றும் (-6) - [8 x (-4)] ஆகியவை சமம்.
(iv) 3 x [(-4) + (-10)] மற்றும் [3 x (-4) + 3 x (-10)] ஆகியவை சமம்.
13.
(−72) ஐ 8 ஆல் வகுக்க.
14.
(-30) x (-70) x 15 இன் பெருக்கற்பலன் காண்க.
15.
மதிப்பு காண்க: (–25) + 60 + (–95) + (–385)
16.
-70 + 20 = [] - 10
17.
168 x 32 = 5376 தரப்பட்டுள்ளது. (-5376) ÷ (-32) ஐக் காண்க.
18.
30 நாள்கள் நடைபயணத்திற்குப் பிறகு, நான் 4800 கலோரிகள் இழந்திருந்தேன், என் கலோரி இழப்பு சீரானது எனில், ஒரு நாளில் இழந்த கலோரியைக் காண்க.
19.
ஓர் இடத்தில் வெப்பம் சீராகக் குறைகிறது. மேலும் 8 மணிநேர இடைவெளியின்போது, வெப்பம் 24OC குறைந்தது எனில், ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் குறைந்த வெப்பத்தின் அளவு என்ன?
20.
பெருக்கற் பலன்−50 ஐத் தரக்கூடிய அனைத்துச் சோடி முழுக்களையும் காண்க.
21.
பெருக்கற் பலனைக் காண்க.
(i) (-35) x 22
(ii) (-10) x 12(-9)
(iii) (-9) x (-8) x (-7) x (-6)
(iv) (-25) x 0 x 45 x 90
(v) (-2) x (+50) x (-25) x 4
22.
(–17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (–19) கிடைக்கும்?
23.
ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?
24.
கீழுள்ளவற்றின் மதிப்பைக் காண்க.
(i) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: – 3 – (–4)
(ii) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: 7 – (–10)
(iii) 35 - (-64)
(iv) -200 - (+100)
25.
தேன்மலர் போட்டித் தேர்வில் பங்கேற்கிறாள். அத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும். முதல் தாளில் அவள் 25 வினாக்கள் தவறாகப் பதில் அளிக்கிறாள். மேலும் தாள் II இல் 13 வினாக்களுக்குத் தவறாகப் பதில் அளிக்கிறாள். அவளுக்குக் குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு எனக் கண்டறிக.
1.
ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கடல் மட்டத்திலிருந்து கீழே உள்ள ஆழம் = -650 அடி
கீழிறங்கிய ஆழம் = -200 அடி
தற்போது நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் ஆழம் = (-650) + (-200)
= -850 அடி
தற்போது நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் ஆழம் -850 அடி
2.
இரண்டாவது நிரல் = 10 - 3 + 4 = -9
முதல் நிரை = +1 + (-10)+ x = -9
-9 + x =- 9 x
= -9 + 9
x = 0
இரண்டாவது நிரை y + (-3) + (-2) = -9
y + (-5) = -9
y = -9 + 5
y = -4
மூன்றாவது நிரை = 6 + 4 + z = -9
-2 + z = -9
z = -9 + 2
z = -7
x = 0, y = -4, z = -7
3.
4 படிக்கட்டுகளைக் கடக்க தேவை = 1 தாவல்
20 படிக்கட்டுகளைக் கடக்க தேவை = \(\frac{20}{4}\)
= 5 தாவல்கள்
அந்த நாய் ஆனது 5 முறை தாவிக்குதித்து நீரை அடைந்திருக்கும்
4.

YOUR NAME
= (-11) + (-1) + (-7) + (-4) + 0 + 1 + 13 + 5
= -23 + 19 = -4
Success
= (-5) + (-7) + 3 + 3 + 5 + (-5) + (-5)
= (-12) + 11 + (-10)
= -22 + 11 = -11
5.
72 + (-5) - x = 72
-5 - x = 72 - 72
-5 - x = 0
-x = 5
x = -5
6.

(i) ஆம், கி.மு 500 இல் உயிர் வாழ்ந்தார்.
(ii) புத்தரின் ஆயுட்காலம் 80 வருடங்கள் .
7.
1 ஆப்பிளுக்கான இலாபம் = ரூ 8
30 ஆப்பிளுக்கான இலாபம் = 30 x ரூ 8 = ரூ. 240
1 மாதுளைக்கான நட்டம் = -ரூ 5
50 மாதுளைக்கான நட்டம் =50 x -5 = ரூ. -250
அவளின் மொத்த நட்டம் = ரூ. -250 + ரூ. 240
= -ரூ. 10
நட்டம் = -ரூ. 10
8.

\(\frac{(x+2) 5-10}{4}=15\)
(x + 2) 5 - 10 = 15 x 4
(x + 2) 5 - 10 = 60
5x + 10 - 10 = 60
5x = 60
\(x=\frac{60}{5}=12\)
x = 12
நான் = 12
9.
(i) –275˚C
T = -275oC
T°C = (T + 273)K
= (-275 + 273)K
= - 2 K
= 275°C = -2 கெல்வின்
ii) 45°C
T = 45oC
T°C = (T + 273)K
= (45 + 273)K
= 318 K
45°C = 318 கெல்வின்
iii) -400°C
T = -400° C
ToC = (T + 273)K
= (-400 + 273)K
= -127 K கெல்வின்
(iv) –273˚C
T = –273˚C
ToC = (T + 273)K
= (-273 + 273)K
= 0 k
–273˚C = 0 கெல்வின்
10.

முதல் நாள் வெப்பநிலை = –5˚C
மறுநாள் வெப்பநிலை = 9˚C
அதிகரித்த வெப்பநிலை = 9˚C - (–5˚C) = 14oC
11.
01.01.2018 அன்று கலைவாணியின் வங்கிக் கணக்கு இருப்பு = ரூ.5000.
சனவரியில் செலுத்தப்பட்ட பணம் = ரூ.2000(+)
சனவரியில் மொத்த இருப்பு = ரூ.7000
பிப்ரவரியில் எடுக்கப்பட்ட பணம் = ரூ.- 700
பிப்ரவரியில் மொத்த இருப்பு = ரூ.6300
மார்ச் மாதத்தில் செலுத்தப்பட்ட பணம் = ரூ 1000
மார்ச் மாதத்தில் மொத்த இருப்பு = ரூ 7300
மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்ட பணம் = ரூ- 500
மொத்த இருப்பு = ரூ.6800
01.04.2018 அன்று கலைவாணியின் வங்கி இருப்பு = ரூ.6800
12.
(i) (11 + 7) + 10 = 18 + 10 = 28 ...(1)
11(7 + 10) = 11 + 17 = 28 ....(2)
(1) = (2)
(ii) (8 - 13) x 7 = -5 x 7 = -35 .......(1)
8 - (13 x 7) = 8 - 91 = -83 ..... (2)
\((1) \neq(2)\)
(iii) (-6) - (+8)] x (-4) = [ 6 - 8] x (-4)
= -14 x -4 = +56 .(1)
(-6) - [ 8 x (-4)] = (-6) - [-32]
= -6 + 32 = 26 .....(2)
\((1) \neq(2)\)
(iv) 3 x [(-4) + (-10)] = 3 x (-14)
= -42 .......(1)
3 x (-4) + 3 x (-10) = (-12) + (-30)
= -42 ...(2)
(1) = (2)
13.

= -9
14.

15.

16.
-70 + 20 = x - 10
-50 = x - 10
x = -50 + 10 = -40
17.
168 x 32 = 5376
\(\frac{-5376}{-32}=\frac{-(168 \times 32)}{-32}=168\)
18.
30 நாள்களில் இழந்த கலோரியின் அளவு = -4800
1 நாளில் இழந்த கலோரியின் அளவு \(=\frac{-4800}{30}=-160\)
1 நாளில் இழந்த கலோரியின் அளவு = -160
19.
8 மணி நேரத்தில் குறைந்த வெப்பத்தின் அளவு = -24oc
1 மணி நேரத்தில் குறைந்த வெப்பத்தின் அளவு \(=-24 \div 8=-3^{\circ} \mathrm{C}\)
ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் 3oC குறைகிறது
20.
சோடி முழுக்கள்
(1,-50),(2,-25),(5,-10),(50,-1),(25,-2),(10,-5)
21.
(i) −770
(ii) 1080
(iii) 3024
(iv) 0
(v) 10,000
22.
அந்த எண் = x என்க
- 17 + x = -19
x = -19 + 17
x = -2
(-17) உடன் (-2) ஐக் கூட்ட (-19) கிடைக்கும்
23.
தரைத்தளம் = 0
மின்தூக்கி 5 தளங்கள் கீழே செல்கிறது = -5
மின்தூக்கி 10 தளங்கள் மேலே செல்கிறது = + 10
தற்போது மின்தூக்கி இருக்கும் தளம் = 10 - 5 = +5
மின்தூக்கி 5 தளத்தில் இருக்கும்
24.
(i)

(ii)

(iii) 35 - (-64) = 35 + 64 = 99
(iv) -200 - (+100) = -200 - 100 = -300
25.
தவறான பதிலுக்கான மதிப்பெண் = -1
முதல் தாளில் தவறான 25 பதில்களுக்கு குறைக்கப்படும் மதிப்பெண் = -25
இரண்டாம் தாளில் தவறான 13 பதில்களுக்கு குறைக்கப்படும் மதிப்பெண் = -13
குறைக்கப்படும் மொத்த மதிப்பெண் = -25 + (-13)
= 25 - 13 = -38
-38 மதிப்பெண்
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards