7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 31/10/2019
Term 2 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
புறாவின் இருசொற் பெயர்
ஹோமோ செப்பியன்
ராட்டஸ் ராட்டஸ்
மாஞ்சிபெரா இண்டிகா
கொலம்பா லிவியா
2.
ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
அரிஸ்டாட்டில்
லின்னேயஸ்
விட்டேக்கர்
பிளேட்டோ
3.
உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு
வரிசை
பேருலகம்
தொகுதி
குடும்பம்
4.
ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை
8.7 மில்லியன்
8.6 மில்லியன்
8.5 மில்லியன்
8.8 மில்லியன்
5.
கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?
ஒற்றுமை
வேறுபாடு
இரண்டும்
எதுவும் இல்லை
6.
புரோடிஸ்டா குறித்து இரண்டு குறிப்புகள் எழுதுக.
7.
மொனிராவிற்கு இரண்டு உதாரணம் தருக.
8.
இருபிளவு திறவுகோல் –வரையறு?
9.
ஐந்து உலக வகைப்பாட்டின் இரண்டு நிறைகளை எழுதுக.
10.
தாவர உலகம் மற்றும் விலங்கு உலகத்தை வேறுபடுத்துக.
11.
வகைப்பாட்டின் படிநிலைகளைப் பற்றி எழுதுக.
12.
முதுகுநாணற்றவையின் வகைப்பாட்டினை அவற்றின் பொதுப்பண்புகள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் எழுது.
13.
இருசொற் பெயரிடும் முறை குறிப்பு வரைக.
14.
ஐந்து உலக வகைப்பாட்டின் வரைபடம் வரைக
1.
(d)
கொலம்பா லிவியா
2.
(c)
விட்டேக்கர்
3.
(b)
பேருலகம்
4.
(a)
8.7 மில்லியன்
5.
(c)
இரண்டும்
6.
1. புரோடிஸ்டா உலகத்தில் ஒரு செல் உயிரிகளும் சில எளிய பல செல் யூகேரியோட்டுகளும் அடங்கும்.
2. தாவர வகை புரோடிஸ்டுகள் தற்சார்பு ஊட்ட மூலமும் விலங்கு வகை புரோடிஸ்டுகள் பிற ஊட்ட முறை மூலமும் உணவு எடுத்துக் கொள்ளும்.
7.
பாக்டீரியங்கள் மற்றும் நீலப்பசும்பாசிகள் மொனிரா வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
8.
பொருள்களுக்கிடையேயான ஒற்றுமை வேற்றுமைகளை இரு பகுதிகளாக பகுத்தல் இருபிளவு திறவுகோல் எனப்படும்.
9.
i) இவ்வகைபாட்டின் அமைப்பானது அதிகமாக அறிவியல் ரீதியாகவும் மற்றும் இயற்கையின் முறைப்படியும் அமைந்துள்ளது.
ii) இந்த வகைப்பாடு செல்லின் அமைப்பு உணவு ஊட்ட முறை மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப நிலையின் பண்புகளைத் தெளிவாக குறிக்கின்றது.
10.
| வ.எண் | தாவர உலகம் | விலங்கு உலகம் |
| 1. | தற்சார்பு ஊட்டமுறையினை கொண்டது. | பிறசார்பு ஊட்டமுறையினை கொண்டது. |
| 2. | இடம் விட்டு இடம் நகருவதில்லை. | இடம் விட்டு இடம் நகரும் தன்மையுடையது. |
| 3. | எ.கா. சிறுசெடி, புதர்செடி மற்றும் மரங்கள் | எ.கா. மீன், தவளை, முதலை, பறவைகள் |
11.
1. வகைப்பாட்டில் ஏழு முக்கிய படிநிலைகள் உள்ளன.
2. அவை உலகம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், சிற்றினம் ஆகும்.
3. வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினமாகும்.
12.
| வ.எண் | பொதுப்பணிகள் | பிரிவு |
| 1. | நுண்ணோக்கி மூலம் பார்க்க கூடிய ஒரு செல் உயிரி,போலிக் கால்கள் கசையிழை,குறு இழை மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.இனப்பெருக்கம் பிளவு முறையிலோ அல்லது இணைவு முறையிலோ நடைபெறுகிறது. | தொகுதி ஒரு செல் உயிரிகள் அல்லது புரோட்டாசாவா எ.கா:அமீபா,யூக்ளினா,பாரமீசியம் |
| 2. | இவை பல செல்களால் ஆனவை.உடல் முழுவதும் துளைகள் நிறைந்து காணப்படும் முட்களால் ஆன அகச்சட்டகத்தைக் கொண்டுள்ளது.இனப்பெருக்கம் பால் மற்றும் பாலிலா முறையில் நடைபெறுகிறது. | தொகுதி துலையுடலிகள் அல்லது பொரிபெரா எ.கா:லியூகோசொலினியா ஸ்பான்ஜில்லா, சைகான் |
| 3. | பல செல் உயிரினங்கள்,ஈரடுக்கு உயிரிகள்,ஒட்டியோ,நீரில் நீந்தியோ மற்றும் தனித்து அல்லது கூட்டமாகக் காணப்படும் பாலின மற்றும் பாலிலா வகை இனப்பெருக்கத்தை மேற்கொள்கிறது. | தொகுதி குளியுடலிகள் அல்லது சீலேன்டிரேட்டா எ.கா:ஹைட்ரா,கடல் சாமந்தி ஜெல்லி மீன்கள்,பவளங்கள். |
| 4. | உடற்குழி அற்றவை ஒட்டுண்ணிகளாக விலங்குகள் மற்றும் மனிதர்களில் உடலின் உட்பகுதியில் காணப்படுகிறது.பெரும்பாலும் இரு பால் உயிரிகளாகக் காணப்படுகின்றன. |
தொகுதி தட்டை புழுக்கள் அல்லது பிளாட்டிஹெல்மின்தஸ். |
| 5. | உடற்கண்டங்கள் அற்றவை,பெரும்பாலும் மனிதன் மற்றும் விலங்குகளில் நோய்களை உருவாக்கும் ஒட்டுண்ணிகள் ஆகும்.இனப்பெருக்கம் பாலின முறையில் நடைபெறுகிறது. | தொகுதி உருளைப் புழுக்கள் அல்லது நெமடோடா எ.கா:அஸ்காரிஸ் லும்பிரிக்காய்ட்டஸ். |
| 6. | மூவடுக்கு உயிரிகள்,உடல் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.பெரும்பாலும் இருபால் உயிரிகள்(இருபால் மற்றும் ஒற்றை பாலியல்) | தொகுதி வளைதசைப் புழுக்கள் அல்லது அனலிடா எ.கா:மண்புழு,நீரிஸ் அட்டை. |
| 7. | உடல் கண்டங்களை உடையது உடற்பரப்பு தடித்த கைட்டின் ஆன புறசட்டகத்தைக் கொண்டுள்ளது.இணைக் கால்கள் மற்றும் இணை உறுப்புகளால் ஆனது.இவை ஒரு பால் உயிரிகள்,இவற்றில் ஆண்,பெண் வேறுபாடு உண்டு. | தொகுதி கணுக்காலிகள் அல்லது ஆர்த்ரோபோடோ. எ.கா:நண்டு,இறால்,மரவட்டை,பூச்சிகள்,தேன்,சிலந்தி |
| 8. | மென்மையான கண்டங்களற்ற உடல் அமைப்பு உடையவை.மேலும் தசையிலான தலைப்பகுதி,பாதப்பகுதி மற்றும் உள்ளுறுப்பு தொகுப்பு,மாண்டில்,கால்சியத்தினால் ஆன ஓடு காணப்படுகிறது.பால் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. | தொகுதி மெல்லுடலிகள் அல்லது மொலஸ்கா எ.கா:கணவாய் மீன்கள்,நத்தை ஆக்டோபஸ் |
| 9. | கடலில் மட்டுமே வாழ்பவை.உடற்சுவர் முட்களை கொண்டுள்ளது.நீர்க் குழல் மண்டலமும்,குழாய்க் கால்களும் உணவூட்டத்திற்கும்,சுவாசத்திற்கும் மற்றும் இடப்பெயர்ச்சிக்கும் உதவுகிறது.பால் வழி இனப்பெருக்கத்தை மேற்கொள்கிறது. | தொகுதி முட்தோலிகள் அல்லது ஈகைடெர் மேட்டா எ.கா:நட்சத்திர மீன்,கால் சாமந்தி,நொறுங்குறு நட்சத்திர மீன்,கடல் வெள்ளரி மற்றும் கடல் அல்லி. |
13.
1. காஸ்பார்டு பாஹின், 1623 ஆம் ஆண்டு உயிரினங்களை இரண்டு சொல் கொண்ட பெயர்களோடு அழைப்பதை அறிமுகப்படுத்தினார். இதற்கு இருசொல் பெயரிடும் முறை என்று பெயர். இதனை 1753 ஆம் ஆண்டு கரோலஸ் லின்னேயஸ் என்பவர் செயல்படுத்தினார். இவரே “நவீன வகைப்பாட்டியலின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
2. இரு சொல் பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு உலக அளவில் பெயரிடும் முறை ஆகும். இந்த முறைப்படி ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேரினப்பெயரும், இரண்டாவதாக சிற்றினப்பெயருமாக இரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். ஆங்கிலத்தில் எழுதும் போது பேரினப் பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்திலும், சிற்றினப் பெயரின் முதல் எழுத்து சிறிய எழுத்திலும் எழுதப்பட வேண்டும்.
3. உதாரணம்: வெங்காயத்தின் இரு சொல் பெயர் அல்லியம் சட்டைவம். அல்லியம் பேரினப் பெயர் சட்டைவம் சிற்றினப் பெயர் ஆகும். வட்டார மொழிப் பெயர் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் அறியப்படும் ஒரு உள்ளூர் பெயராகும்.
4. இரு சொற் பெயர் என்பது என்றும் மாறாத ஒரு உலகளாவிய பெயர் ஆகும். அறிவியல் அறிஞர்கள் புதிய உயிரினங்களை இனம் கண்டு, அதனைக் குறிப்பிட்ட படிநிலையில் வைப்பதற்கு இரு சொல் பெயரிடும் முறையும் வகைப்படுத்துதலும் உதவுகிறது.
14.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards