7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/11/2019
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ரேஞ்சர் விளையாட்டின் பயன் யாது?
2.
சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?
3.
Tux Paint என்றால் என்ன?
4.
புரோடிஸ்டா குறித்து இரண்டு குறிப்புகள் எழுதுக.
5.
மொனிராவிற்கு இரண்டு உதாரணம் தருக.
6.
இருபிளவு திறவுகோல் –வரையறு?
7.
ஐந்துலக வகைப்பாட்டினைப் பட்டியலிடுக
8.
"ஒரு வைரஸ் ஒரு உயிரினம் அல்ல " என ஆசிரியர் கூறினார். நீங்கள் அவரது கூற்றினை ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா? ஏன் என விளக்குக
9.
லைசோஸோம், செல்களின் துப்புரவாளர்கள் என ஏன் அழைக்கப்படுகிறது?
10.
செல் சவ்வு என்ன செய்கிறது?
11.
சூரியனின் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார்ச் தயாரிக்கும் நுண் உறுப்பு எது?
12.
இதயத்துடிப்பு கால ஒழுங்கு மாற்றமாகும். ஏன்?
13.
ஒரு காகிதத்தை வண்ணமடித்தல் எவ்வகை மாற்றமாகும்?
14.
செயற்கை முறையில் பழத்தினை பழுக்க வைத்தல் எந்த வகை மாற்றமாகும்?
15.
கால ஒழுங்கு மாற்றங்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
16.
அரிதிற்கடத்திகள் சிலவற்றைக் கூறுக.
17.
மின்னோட்டத்தின் வெப்பவிளைவின் மூலம் இயங்கும் சாதனங்களைக் கூறுக.
18.
மின் உருகி என்பது என்ன?
19.
மின்னோட்டத்தை உருவாக்கும் சாதனத்தின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.
20.
மின்கடத்துத்திறனின் S.I. அலகு என்ன?
21.
மின்னோட்டடத்தின் வேகம் என்ன?
22.
மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும்முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது?
23.
மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது?
24.
நம்மால் ஏன் மருத்துவ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி காற்றின் வெப்பநிலையினை அளக்க இயலாது?
25.
ஜோதி சூடான நீரின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தி அளக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இச்செயல் சரியானதா அல்லது தவறானதா ? ஏன்?
1.
Ranger விளையாட்டு 10 வரத்தக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் போன்றவற்றினை செய்ய பயன்படுகிறது.
2.
சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை Ctrl + S ஆகும்.
3.
1. Tux Paint என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இலவச ஓவியப்பயிற்சி செயலியாகும்.
2. இச்செயலியானது மகிழ்ச்சி தரும் ஒலிகளோடு, எளிமையாகப் பயன்படுத்தும் வகையில், மாணவர்களை வழிநடத்தும், உற்சாகமூட்டும் கேலிச்சித்திரங்களோடு உருவாக்கப்பட்டது.
4.
1. புரோடிஸ்டா உலகத்தில் ஒரு செல் உயிரிகளும் சில எளிய பல செல் யூகேரியோட்டுகளும் அடங்கும்.
2. தாவர வகை புரோடிஸ்டுகள் தற்சார்பு ஊட்ட மூலமும் விலங்கு வகை புரோடிஸ்டுகள் பிற ஊட்ட முறை மூலமும் உணவு எடுத்துக் கொள்ளும்.
5.
பாக்டீரியங்கள் மற்றும் நீலப்பசும்பாசிகள் மொனிரா வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
6.
பொருள்களுக்கிடையேயான ஒற்றுமை வேற்றுமைகளை இரு பகுதிகளாக பகுத்தல் இருபிளவு திறவுகோல் எனப்படும்.
7.
மொனிரா, புரோடிஸ்டா, பூஞ்சைகள், ப்ளாண்ட்டே, அனிமேலியா போன்றவை ஐந்துலக வகைப்பாட்டின் பிரிவுகள்.
8.
ஆம். ஆசிரியரின் கூற்றினை ஏற்றுக் கொள்கிறேன். வைரஸ்களால் உயிரினங்களைப் போல் இனப்பெருக்கம் செய்துகொள்ள இயலாது. மேலும் இவற்றில் செல்கள் கிடையாது.
9.
செல்லில் உள்ள தேவையில்லாத நுண்உறுப்புகளை அழிக்கக் கூடியது. எனவே இவை செல்களின் துப்புரவாளர்கள் என அழைக்கப்படுகிறது.
10.
செல் சவ்வு தாவர செல்லின் உள்ளே சில பொருட்களை மட்டும் ஊடுருவ அனுமதிக்கிறது. மேலும் செல்லைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது.
11.
சூரியனின் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார்ச் தயாரிக்கும் நுண் உறுப்பு பசுங்கணிகம் ஆகும்.
12.
இது குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றங்களானது மீண்டும் நிகழ்வதால் கால ஒழுங்கு மாற்றமாக கருதப்படுகிறது.
13.
இது இயற்பியல் மாற்றமாகும்.
14.
வேதியியல் மற்றும் கால ஒழுங்கற்ற மாற்றம்.
15.
1. பூமியின் சுழற்சி மற்றும் சுற்றுதல்
2. இதயத்துடிப்பு
16.
மரக்கட்டை, கண்ணாடி, நெகிழி, இரப்பர் போன்றவை அரிதிற்கடத்திகளாகும்.
17.
மின்விளக்கு, வெந்நீர் கொதிகலன், மூழ்கும் நீர் கொதிகலன், இஸ்திரிபெட்டி போன்றவை வெப்ப விளைவால் இயங்கும் சாதனங்களாகும்.
18.
மின் உருகியானது பெரும்பாலான மின்சாதனங்களிலும் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுகளிலும் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம் ஆகும்.
19.
மின்வேதிக் கலன்கள் மற்றும் மின்னியக்கி.
20.
மின்கடத்துத்திறனின் S.1. அலகு சீமென்ஸ் / மீட்டர் (S/m) ஆகும்.
21.
மின்னோட்டத்தின் வேகம் ஓரலகு நேரத்தில் செல்லும் 6.242 × 10 -18 புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களுக்குச் சமம்.
22.
பாதரச மட்டத்தினை கீழே கொண்டு வருவதற்காக வெப்பநிலைமானியை ஒரு சில முறை உதற வேண்டும். எனவே உடலின் வெப்பநிலையை பரிசோதிக்க பயன்படுத்தும் முன் உதறப்படுகிறது.
23.
இந்த குறுகிய வளைவானது வெப்பநிலைமானியை நோயாளியின் வாயிலிருந்து எடுத்தவுடன் பாதரசமானது மீண்டும் குமிழுக்குள் செல்வதைத் தடுக்கிறது.
24.
காற்று மூலக்கூறுகள் அங்குமிங்கும் இயங்கிக் கொண்டிருக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் துகள்களில் மருத்துவ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி வெப்பநிலையை அளவிட முடியாது.
25.
1. ஜோதியின் செயல் தவறானது. மருத்துவ வெப்பநிலைமானியில் 35°C முதல் 42°C வரையிலுள்ள அளவுகள் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கும். சூடான நீரின் வெப்பநிலை 42°Cஐ விட அதிகமாக இருக்கும்.
2. மேலும் வெப்பநிலைமானி உடைந்துவிடும் எனவே தவறானது.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards