7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 04/11/2019
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஐந்து உலக வகைப்பாட்டின் வரைபடம் வரைக
2.
ஏதேனும் மூன்று நுண்உறுப்புகளைப் பற்றி விவரிக்கவும்.
3.
மின்னோட்டத்தின் வெப்ப விளைவைப் பற்றி விளக்குக
4.
தொலைபேசி ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக
5.
கால்நடை மருத்துவரை சந்தித்து வீட்டு விலங்குகளான விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் சராசரி உடல் வெப்பநிலையினை கண்டறியவும்.
6.
மருத்துவ வெப்பநிலைமானியின் படம் வரைந்து அதன் பாகங்களை குறிக்கவும்.
7.
சாறுண்ணி, ஒட்டுண்ணி மற்றும் கூட்டுயிரி உணவூட்டம் எந்தப் பேருலகத்தில் காணப்படுகிறது ஏன்?
8.
நீர் கொதித்தல் ஒரு இயற்பியல் மாற்றம், முட்டை வேகவைத்தல் ஒரு வேதியியல் மாற்றம். ஏன்?
9.
மிகச் சூடான கண்ணாடி ஒன்று குளிர்ந்த நீரில் போட்டவுடன் விரிசல் அடைகிறது. இம்மாற்றம் எதை உணர்த்துகிறது?
10.
உரித்த வாழைப்பழமும், உரிக்காத வாழைப்பழமும் பார்ப்பதற்கு வேறு வேறாகத் தெரிகிறது. இதிலிருந்து வாழைப்பழம் உரிப்பது வேதியியல் மாற்றம் என்று கூற இயலுமா?
1.
2.
1) கோல்கை உறுப்புகள்:
சவ்வால் சூழப்பட்ட பைகள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு, சுரப்பி குழல்களுடன் அமைந்துள்ள அமைப்பு கோல்கை உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன. கோல்கை உறுப்புகள் நொதிகளைச் சுரப்பது, உணவு செரிமானம் அடையச் செய்வது, உணவிலிருந்து புரதத்தை பிரித்து செல்லுக்கும், உடலுக்கும் வலு சேர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றன.
2) லைசோசோம் - தற்கொலைப்பை :
தற்கொலைப்பை “நான் எவ்வவற்றை தொடுகிறேனோ, அவை அழியும்”. லைசோசோம் நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கக் கூடிய மிகவும் சிறிய அமைப்பாகும். இவை செல்லின் முதன்மையான செரிமான பகுதி ஆகும். இவை செல்லிலேயே சிதைவடைவதால் இவற்றை "தற்கொலைப்பை " என்று அழைக்கிறோம்.
3) நியூக்ளியஸ்:
உட்கரு செல்லின் மூளையாகச் செயல்படுகிறது. தாவர மற்றும் விலங்கு செல்களில், சைட்டோபிளாசத்திற்கு உள்ளே உட்கரு உள்ளது. உட்கரு உறை உட்கருவைச் சூழ்ந்துள்ளது. ஒன்று அல்லது இரண்டு நியூக்ளியோலஸ் மற்றும் குரோமேட்டின் உடல் ஆகியவை உட்கருவின் உள்ளே உள்ளன. செல்பிரிதலின் போது, குரோமேட்டின் உடலானது குரோமோசோமாக அமைக்கப்படுகிறது.
3.
1. ஓர் கம்பியின் வழியே மின்னோட்டம் பாயும் போது மின்னாற்றலானது வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. வெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பொருளானது அதிக உருகுநிலை கொண்டவை ஆகும். நிக்ரோம் அவ்வகையானப் பொருளுக்கு எடுத்துக்காட்டாகும். (நிக்கல், இரும்பு மற்றும் குரோமியம் சேர்ந்த கலவை)
2. மின்னோட்டத்தின் வெப்ப விளைவானது பல்வேறு செய்முறைப் பயன்பாடுகளை கொண்டதாகும்.
3. மின்விளக்கு, வெந்நீர் கொதிகலன், மூழ்கும் நீர்கொதிகலன் ஆகியவை இவ்வகையான விளைவினை அடிப்படையாகக் கொண்டது, இச்சாதனங்களில் அதிக மின்தடை கொண்ட வெப்பமூட்டும் கம்பிச் சுருள் இணைக்கப்பட்டிருக்கும்.
மின்னோட்டத்தின் வெப்ப விளைவை பாதிக்கும் காரணிகள்
1. பாயும் மின்னோட்டத்தின் அளவு
2. மின்தடை
3. மின்னோட்டம் செலுத்தப்படும் நேரம்
1. மின் உருகியானது பெரும்பாலான மின்சாதனங்களிலும் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுகளிலும் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம் ஆகும். மின் உருகியானது பீங்கானால் உருவாக்கப்படுகிறது. மின்உருகியில் மின் உருகு இழையை இணைப்பதற்காக இரு மின்புள்ளிகளைக் கொண்டிருக்கும், உருகு இழையானது மின் சுற்றில் அதிக பளு ஏற்படும்போது உருகிவிடும்.
2. இதன் விளைவாக மின்சுற்று துண்டிக்கப்பட்டு விலைமதிப்பு மிக்க மின்சாதனங்கள் மற்றும் மின்கம்பிகள் பழுதடையாமல் பாதுகாப்பாக இருக்க உதவுகிறது. மின் சாதனங்களில், கண்ணாடியால் ஆன மின் உருகி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ஓர் சிறிய கண்ணாடிக் குழாய் ஒன்றினுள் மின் உருகு இழையானது இணைக்கப்பட்டிருக்கும்.
4.
தொலைபேசிகளில், மாறும் காந்த விளைவானது ஒரு மெல்லிய உலோகத்தாளை (டையபார்ம்) அதிர்வுக்கு உட்படுத்துகிறது. டையபார்ம்களானது காந்தங்களால் ஈர்க்கக்கூடிய ஒரு உலோகத்தால் செய்யப்படுகின்றன.
1. தொலைபேசியின் கேட்பானில் பொருத்தப்பட்டுள்ள கம்பிச்சுருளுடன் டையபார்ம் இணைக்கப்பட்டிருக்கும்.
2. கம்பிகள் வழியே மின்னோட்டம் பாயும் போது மென்மையான இரும்புப் பட்டையானது ஓர் மின்காந்தமாக மாற்றம் அடைகிறது.
3. டையபார்மானது மின்காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது.
4. மறுமுனையில் உள்ள நபர் பேசும் போது பேசுபவரின் குரலானது மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மாற்றமுறச் செய்கின்றது.
இந்த மாற்றம் கேட்பானில் உள்ள டையபார்மை அதிர்வுறச் செய்து ஒலியை உண்டாக்குகிறது.
5.
| விலங்கு மற்றும் பறவைகள் | உடல் வெப்பநிலை (செல்சியஸ்) |
| நாய் | 37.5 - 39.09 |
| பூனை | 38.0 - 39.5 |
| முயல் | 38.5 - 39.5 |
| விலங்கு மற்றும் பறவைகள் | உடல் வெப்பநிலை (செல்சியஸ்) |
| புறா | 41.0 - 44.1 |
| காகம் | 40.0 |
| கோழி | 41.7 |
6.
7.
சாறுண்ணி, ஒட்டுண்ணி மற்றும் கூட்டுயிரி உணவூட்டம் பூஞ்சைகள் உலகத்தில் காணப்படுகிறது. ஏனெனில் இவைகள் பச்சையமற்ற யூகேரியோட்டிக் செல்களைக் கொண்டவை. எனவே இவற்றால் உணவு தயாரிக்க முடியாது. எனவே சாறுண்ணி, ஒட்டுண்ணி மற்றும் கூட்டுயிரி உணவூட்டம் காணப்படுகிறது.
8.
1. நீர் கொதித்தல் இயற்பியல் மாற்றம் ஏனெனில் புதிய பொருள் உண்டாவதில்லை. மேலும் மீள்வினை நடைபெறுகிறது. எனவே இயற்பியல் மாற்றம் ஆகும்.
2. முட்டை வேகவைத்தல் வேதியியல் மாற்றம் ஆகும். இங்கு மீளாவினை நடைபெறுகிறது. புதிய பொருள் உண்டாகிறது. மீண்டும் முட்டையில் மாற்றம் ஏற்படுவது இல்லை. எனவே வேதியியல் மாற்றம் ஆகும்.
9.
மிகச் சூடான கண்ணாடியை குளிர்ந்த நீரில் போட்டவுடன் விரிசல் அடைகிறது. ஏனெனில் வெப்பநிலையில் திடீர் மாற்றம் ஏற்படுவதால் உடனடியாக அவை சுருங்க முடியவில்லை, இதனால் அவற்றில் விரிசல் ஏற்படுகிறது. இங்கு வெப்பம் உட்கொள்ளப்பட்டு வெளியேற்றப்படுகிறது. எனவே வெப்ப உமிழ்வினை நடை பெறுகிறது.
10.
ஆம். உரித்த வாழைப்பழம் வேதியியல் மாற்றம் ஆகும். வாழைப்பழத்தில் பாலிபினைல் ஆக்சிடேஸ் என்ற நொதி காணப்படுகிறது. இந்த நொதியானது வாழைப்பழம் உரிக்கப்பட்ட பின் வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜனுடன் வினை புரிகிறது. இதனால் உரித்த வாழைப்பழத்தில் நிறம் மாற்றமடைகிறது. எனவே உரித்தபழம் வேதியியல் மாற்றம் ஆகும்.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards