7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 04/11/2019
அறிவியல் Term 2 மூன்று மதிப்பெண்
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஐந்து உலக வகைப்பாட்டின் இரண்டு நிறைகளை எழுதுக.
2.
தாவர உலகம் மற்றும் விலங்கு உலகத்தை வேறுபடுத்துக.
3.
வகைப்பாட்டின் படிநிலைகளைப் பற்றி எழுதுக.
4.
கீழே உள்ள வரிகளில், இந்த பாடத்தில் நீங்கள் கற்றவற்றைப் பற்றி எழுதுங்கள் செல்களைப் பற்றி நான் கற்றுக்கொண்ட முக்கியமான சில விஷயங்களைப் பற்றி நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். முதலில், நான் தொடங்குகிறேன்_______
5.
பின்வரும் அட்டவணையில் செல்கள், திசுக்கள், உறுப்புக்கள் என வகைப்படுத்தவும்,
நரம்பு செல், நுரையீரல் சைலம், மூளை, கொழுப்புத்திசு, இலை, சிவப்பனு, வெள்ளையனு செல்கள் கை, தசை, இதயம், முட்டை, செதில், புளோயம், குருத்தெலும்பு.
| செல் | திசு | உறுப்பு |
6.
உட்கரு பற்றி சிறு குறிப்பு எழுதுக.
7.
செல்லிருந்து உயிரினம் வரையிலான வரிசையை சரியாக எழுது?
8.
பின்வரும் ஜோடிகளுக்கு இடையே உள்ள வேறுபாடு தருக.
I) சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல்.
II) செல் சுவர் மற்றும் செல் சவ்வு.
III) பசுங்கணிகம், மைட்டோகாண்ட்ரியா.
9.
செல் நமக்கு ஏன் மிக முக்கியம்?
10.
சர்க்கரைக் கரைதல் மற்றும் சர்க்கரை எரிதல் – இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
11.
சூரியக் கிரகணம் கால ஒழுங்கு மாற்றமா? காரணம் தருக.
12.
கடல் நீரில் இருந்து நீரைப் பெறும் முறை ஒன்றினை உம்மால் கூற முடியுமா?
13.
ஒரு பொருளில் மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது?
14.
பின்வரும் மாற்றங்களை இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களாக வகைப்படுத்துக
சொரப்பான மரக்கட்டையினை மணலிட்டு தேய்த்து வழுவழுப்பாக்குவது, இரும்பு ஆணி துருப்பிடித்தல் இரும்பு கதவில் பெயிண்ட்டில் பூசுவது, ஒரு காகித கிளிப்பினை வளைப்பது, வெள்ளியை தட்டாக மாற்றுவது, சப்பாத்தி மாவை உருட்டி மெலிதாக்குவது, இரவு-பகல் மாற்றம், எரிமலை வெடிப்பது, தீக்குச்சி எரிவது, மாவிலிருந்து தோசை தயாரிப்பது, கண் இமை சிமிட்டுதல், இடி முழக்கம் தோன்றுவது, புவியின் சுழற்சி, கிரகணங்கள் தோன்றுதல்.
| இயற்பியல் மாற்றங்கள் | வேதியியல் மாற்றங்கள் |
15.
மின் கடத்துத்திறனை வரையறு
16.
பக்க இணைப்பு மற்றும் தொடர் இணைப்பு - வேறுபடுத்துக
17.
மின்னோட்டம் வரையறு.
18.
இராமுவின் உடல் வெப்பநிலை 99°F. அவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? ஏன்?
19.
சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள் . நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும்
20.
வெப்பநிலைமானியில் நாம் ஏன் பாதரசத்தினை பயன்படுத்துகிறோம்?
பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலுமா?
அவ்வாறு பயன்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
1.
i) இவ்வகைபாட்டின் அமைப்பானது அதிகமாக அறிவியல் ரீதியாகவும் மற்றும் இயற்கையின் முறைப்படியும் அமைந்துள்ளது.
ii) இந்த வகைப்பாடு செல்லின் அமைப்பு உணவு ஊட்ட முறை மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப நிலையின் பண்புகளைத் தெளிவாக குறிக்கின்றது.
2.
| வ.எண் | தாவர உலகம் | விலங்கு உலகம் |
| 1. | தற்சார்பு ஊட்டமுறையினை கொண்டது. | பிறசார்பு ஊட்டமுறையினை கொண்டது. |
| 2. | இடம் விட்டு இடம் நகருவதில்லை. | இடம் விட்டு இடம் நகரும் தன்மையுடையது. |
| 3. | எ.கா. சிறுசெடி, புதர்செடி மற்றும் மரங்கள் | எ.கா. மீன், தவளை, முதலை, பறவைகள் |
3.
1. வகைப்பாட்டில் ஏழு முக்கிய படிநிலைகள் உள்ளன.
2. அவை உலகம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், சிற்றினம் ஆகும்.
3. வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினமாகும்.
4.
உயிரினத்தின் அடிப்படை செயல் அலகு செல் என்று அழைக்கப்படுகிறது. இது நுண்ணோக்கியின் மூலமே பார்க்க முடியும். செல்லின் உட்பகுதியில் பல செல் நுண் உறுப்புகள் உள்ளன. இந்த நுண் உறுப்புகள் செல்லின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.அதாவது செல்சவ்வு செல்லிற்கு வடிவத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கிறது. மைட்டோகாண்ட்ரியா ஆற்றல் மையமாக செயல்படுகிறது. தாவர செல்களில் பசுங்கணிகங்கள் உணவினை தயாரிக்கப் பயன்படுகிறது. லைசோசோம்கள் செல்லின் தற்கொலைப்பையாக செயல்படுகிறது. எண்டோபிளாச வலையமைப்பு புரதம், மற்றும் ஸ்டீராய்டுகள், கொழுப்புகள் தயாரிப்பில் பங்கு கொள்கிறது. மேலும் நியூக்ளியஸ் செல்லின் கட்டுப்பாட்டு அறையாக செயல்படுகிறது.
5.
| செல் | திசு | உறுப்பு |
| நரம்பு செல் | சைலம் | நுரையீரல் |
| சிவப்பணு | கொழுப்புத்திசு | மூளை |
| வெள்ளையணு செல்கள் | தசை | இலை |
| முட்டை | செதில் | கை |
| புளோயம் | இதயம் | |
| குருத்தெலும்பு |
6.
1. உட்கரு தாவர மற்றும் விலங்கு செல்லின் உள்ளே சைட்டோபிளாசத்திற்கு உள்ளே காணப்படுகிறது.
2. உட்கரு உறை, உட்கருவினை சூழ்ந்துள்ளது. ஒன்று அல்லது இரண்டு நியூக்ளியோலஸ் மற்றும் குரோமேட்டின் உடல் ஆகியவை உட்கருவினுள் காணப்படுகிறது. செல்லின் மூளையாகச் செயல்படுகிறது.
7.
செல் ➝திசு➝ உறுப்பு➝ உறுப்பு மண்டலம் ➝உயிரினம்
8.
(i) சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல்.
| வ. எண் | மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல் | சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் |
| 1. | ரைபோசோம்கள் அற்ற வலைப்பின்னல். | ரைபோசோம்கள் உள்ள வலைப்பின்னல் |
| 2, | கொழுப்புகள் மற்றும் ஸ்டீராய்டுகள் தயாரிப்பதில் பங்கு கொள்கிறது. | புரத சேர்க்கைக்கு உதவுகிறது. |
ii) செல் சுவர் மற்றும் செல் சவ்வு
| வ.எண் | செல் சுவர் | செல் சவ்வு |
| 1. | தாவர செல்களில் காணப்படும். | விலங்கு செல்களில் காணப்படும். |
| 2. | செல்லுலோஸால் ஆக்கப்பட்டவை. | புரதம் மற்றும் லிப்பிடுகளால் ஆனவை. |
iii) பசுங்கணிகம் மற்றும் மைட்டோகாண்ட்ரியா
| வ.எண் | பசுங்கணிகம் | மைட்டோகாண்ட்ரியா |
| 1. | இவை தாவர செல்களில் மட்டுமே காணப்படும். | இது தாவர மற்றும் விலங்கு செல்களில் காணப்படும். |
| 2. | இது உணவு தயாரிப்பில் பங்கு கொள்கிறது. | இது செல்லின் ஆற்றல் மையமாக செயல்படுகிறது. |
9.
ஒரு கட்டிடம் செங்கல் சுவரால் ஆனது. அந்த செங்கல் சுவர் ஏராளமான செங்கற்களால் ஆனது, அது போல் நமது உடலும் பல செல்களால் ஆனது. உயிரினத்தின் அடிப்படை செயல் அலகு செல். எனவே நமக்கு செல் மிக அவசியம்.
10.
| வ.எண் | சர்க்கரை கரைதல் | சர்க்கரை எரிதல் |
| 1. | கரைசல் உருவாகிறது. | சாம்பல் உருவாகிறது. |
| 2. | இயற்பியல் மாற்றம். | வேதியியல் மாற்றம். |
| 3. | மீள்வினை நடைபெறும். | மீளாவினை நடைபெறும். |
| 4. | வெப்பநிலையில் மாற்றமில்லை. | வெப்பநிலை மாறுகிறது. |
11.
ஆம். சூரிய கிரகணம் கால ஒழுங்கு மாற்றமே. குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றங்களானது மீண்டும் நிகழ்கிறது. எனவே சூரிய கிரகணம் கால ஒழுங்கு மாற்றமாகும்.
12.
ஆவியாதல் என்ற தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி கரைந்த நிலையில் உள்ள திண்மங்களை அதன் திண்மம் திரவம் கலவையில் இருந்து பிரித்தெடுக்க முடியும். இம்முறையின் மூலம் கடல் நீரினை ஆவியாக்கி நல்ல நீரினை பெறலாம்.
13.
வெப்பநிலை மாற்றம் பொருளில் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட உருகுநிலை உள்ளது. அந்த உருகுநிலையை வினை பொருட்கள் எட்டியவுடன் பொருட்களில் மாற்றம் ஏற்படுகிறது.
14.
| இயற்பியல் மாற்றங்கள் | வேதியியல் மாற்றங்கள் |
| சொரசொரப்பான மரக்கட்டையினை மணலிட்டு தேய்த்து வழுவழுப்பாக்குவது | இரும்பு ஆணி துருபிடித்தல் |
| ஒரு காகித கிளிப்பினை வளைப்பது | இரும்பு கதவில் பெயிண்ட் பூசுவது |
| வெள்ளியை தட்டாக மாற்றுவது | எரிமலை வெடிப்பது. |
| சப்பாத்தி மாவை உருட்டி மெலிதாக்குவது | தீக்குச்சி எரிவது |
| இரவு பகல் மாற்றம் | இடி முழக்கம் தோன்றுவது |
| மாவிலிருந்து தோசை தயாரிப்பது | |
| கண் இமை சிமிட்டுதல் | |
| புவியின் சுழற்சி | |
| கிரகணங்கள் தோன்றுதல் |
15.
கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு அக்கடத்தியின் மின் கடத்துதிறன் அல்லது தன் மின் கடத்து திறன் எனப்படும். இது (சிக்மா) எ என்ற கிரேக்க எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. மின்கடத்து திறனின் அலகு சீமென்ஸ் / மீட்டர் (S/m) ஆகும்.
16.
| வ.எண் | பக்க இணைப்பு | தொடரிணைப்பு |
| 1. | மின்விளக்குகள் வெவ்வேறு பாதைகளில் இணையாக இணைக்கப்பட்டிருக்கும். | மின்விளக்குகள் ஒரே தொடரில் இணைக்கப்பட்டிருக்கும். |
| 2. | மின்விளக்கு அதிக பிரகாசத்துடன் ஒளிரும். | மின்விளக்கு குறைந்த பிரகாசத்துடன் ஒளிரும். |
| 3. | ஒவ்வொரு மின்விளக்கும் மின்திறனை பெறுகின்றன. | மின்விளக்குகள் மின்திறனை பகிர்ந்து கொள்கின்றன. |
| 4. | ஒரு மின்விளக்கு பழுதானாலும் மற்ற விளக்குகள் ஒளிரும். | ஒரு மின்விளக்கு பழுதானாலும் மற்ற விளக்குகள் ஒளிராது. |
17.
மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும். மின்சாதனங்கள் இயங்க வேண்டும் எனில் அச்சாதனங்கள் வழியே மின்னோட்டம் பாய வேண்டும். ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டமானது ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதேனும் ஓர் புள்ளி வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவால் அளவிடப்படுகிறது.
18.
இராமு காய்ச்சலினால் பாதிக்கப்படவில்லை. ஒவ்வொரு மனிதனும் நாள் முழுவதும் ஒரே மதிப்பிலான வெப்பநிலையைப் பெற்றிருப்பதில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கு ஏற்பவும், புற சூழலுக்கு ஏற்றார் போலவும் நம் உடல் வெப்பநிலையானது நாள் முழுவதும் சிறிது உயர்வதும் தாழ்வதுமாக இருக்கும். எனவே இராமு காய்ச்சலினால் பாதிக்கப்படவில்லை.
19.
ஆம். ரமணியின் கூற்றினை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் ரமணியின் கூற்று சரியானது. மேலும் ஆய்வக வெப்பநிலைமானியில் குறுகிய வளைவு காணப்படுவதில்லை. எனவே நாம் அளவிடும் பொருளை விட்டு வெளியே எடுத்தவுடன் பாதரசம் குமிழிக்குள் சிறிதளவு சென்றுவிடும். சரியான அளவீடு நமக்கு கிடைக்காது. எனவே சுவாதியின் அளவீடு தவறானதாகும்.
20.
பாதரசத்தினை வெப்பநிலைமானியில் பயன்படுத்துவதற்கான காரணம்:
1. பாதரசம் சீராக விரிவடைகிறது.
2. இது ஒளி ஊடுருவாதது மற்றும் பளபளப்பானது.
3. இது கண்ணாடி குழாயின் சுவர்களில் ஒட்டாது
4. இது வெப்பத்தை நன்கு கடத்தக்கூடியது.
மேலும் பாதரசத்திற்கு பதிலாக நீரினை பயன்படுத்த இயலாது ஏனெனில்,
1. நீர் சீராக விரிவடையக்கூடியது அல்ல.
2. நீர் கண்ணாடி குழாயின் சுவர்களில் ஒட்டிக் கொள்ளும்.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards