7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/11/2019
அறிவியல்
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?
எளிய கூட்டல்
வகுத்தல்
படம் வரைதல்
பெருக்கல்
2.
புறாவின் இருசொற் பெயர்
ஹோமோ செப்பியன்
ராட்டஸ் ராட்டஸ்
மாஞ்சிபெரா இண்டிகா
கொலம்பா லிவியா
3.
ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
அரிஸ்டாட்டில்
லின்னேயஸ்
விட்டேக்கர்
பிளேட்டோ
4.
________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.
எண்டோபிளாஸ்மிக் வளை
கோல்கை உறுப்புகள்
சென்ட்ரியோல்
உட்கரு
5.
செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?
லைசோசோம்
ரைபோசோம்
மைட்டோகாண்ட்ரியா
உட்கரு
6.
________ வேதிமாற்றம் அல்ல.
அம்மோனியா நீரில் கரைவது
கார்பன் - டை - ஆக்ஸைடு நீரில் கரைவது
உலர் பனிக்கட்டி நீரில் கரைவது
துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது
7.
கீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.
நீர் மேகங்களாவது
ஒரு மரத்தின் வளர்ச்சி
பசுஞ்சாணம் உயிர் - எரிவாயுவாவது
பனிக்கூழ் கரைந்த நிலை - பனிக்கூழாவது
8.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?
சாவி L மட்டும்
சாவி M மற்றும்
சாவிகள் M மற்றும் N மட்டும்
சாவி L அல்லது M மற்றும் N
9.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 'x' எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?
10 ஆம்பியர்
1 ஆம்பியர்
10 வோல்ட்
1 வோல்ட்
10.
வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்
விரிவடைகிறது
சுருங்குகிறது
அதே நிலையில் உள்ளது
மேற்கூறிய ஏதுமில்லை
11.
சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?
12.
பனுவல் கருவியின் (Text Tool) பயன் என்ன?
13.
Tux Paint என்றால் என்ன?
14.
புரோடிஸ்டா குறித்து இரண்டு குறிப்புகள் எழுதுக.
15.
இருசொற்பெயரைக் குறிப்பிடுக.
அ.மனிதன்
ஆ.நெல்
16.
ஐந்துலக வகைப்பாட்டினைப் பட்டியலிடுக
17.
வகைப்பாட்டியல் என்றால் என்ன?
18.
செல் சவ்வு என்ன செய்கிறது?
19.
சூரியனின் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார்ச் தயாரிக்கும் நுண் உறுப்பு எது?
20.
தாவர செல்லில் செல் சுவரின் பணிகள் யாவை ?
21.
இதயத்துடிப்பு கால ஒழுங்கு மாற்றமாகும். ஏன்?
22.
ஒரு காகிதத்தை வண்ணமடித்தல் எவ்வகை மாற்றமாகும்?
23.
குளிர்ந்த பாலினை வெப்பப்படுத்தினால் அது சூடாகிறது. இது எந்த வகையான மாற்றம்?
24.
இரு வெப்ப உமிழ் வினைகளைக் குறிப்பிடுக.
25.
மின்கலம் என்பது என்ன?
26.
அரிதிற்கடத்திகள் சிலவற்றைக் கூறுக.
27.
மின்னோட்டத்தின் வெப்பவிளைவின் மூலம் இயங்கும் சாதனங்களைக் கூறுக.
28.
மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும்முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது?
29.
மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது?
30.
ஜோதி சூடான நீரின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தி அளக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இச்செயல் சரியானதா அல்லது தவறானதா ? ஏன்?
31.
தாவர உலகம் மற்றும் விலங்கு உலகத்தை வேறுபடுத்துக.
32.
கீழே உள்ள வரிகளில், இந்த பாடத்தில் நீங்கள் கற்றவற்றைப் பற்றி எழுதுங்கள் செல்களைப் பற்றி நான் கற்றுக்கொண்ட முக்கியமான சில விஷயங்களைப் பற்றி நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். முதலில், நான் தொடங்குகிறேன்_______
33.
உரித்த வாழைப்பழமும், உரிக்காத வாழைப்பழமும் பார்ப்பதற்கு வேறு வேறாகத் தெரிகிறது. இதிலிருந்து வாழைப்பழம் உரிப்பது வேதியியல் மாற்றம் என்று கூற இயலுமா?
34.
இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் வேறுபடுத்துக.
35.
மின்னோட்டம் வரையறு.
36.
சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள் . நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும்
37.
தாவர செல் மற்றும் விலங்கு செல்களை ஒப்பிட்டு கீழே உள்ளவற்றை நிறைவு செய்யுங்கள்.
38.
ஆய்வக வெப்பநிலைமானிக்கும், மருத்துவ வெப்பநிலைமானிக்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை?
1.
(a)
எளிய கூட்டல்
2.
(d)
கொலம்பா லிவியா
3.
(c)
விட்டேக்கர்
4.
(c)
சென்ட்ரியோல்
5.
(d)
உட்கரு
6.
(d)
துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது
7.
(c)
பசுஞ்சாணம் உயிர் - எரிவாயுவாவது
8.
(d)
சாவி L அல்லது M மற்றும் N
9.
(a)
10 ஆம்பியர்
10.
(a)
விரிவடைகிறது
11.
சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை Ctrl + S ஆகும்.
12.
பனுவல் கருவியைப் பயன்படுத்தி எழுத்துக்களைத் தட்டச்சு செய்யலாம்.
13.
1. Tux Paint என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இலவச ஓவியப்பயிற்சி செயலியாகும்.
2. இச்செயலியானது மகிழ்ச்சி தரும் ஒலிகளோடு, எளிமையாகப் பயன்படுத்தும் வகையில், மாணவர்களை வழிநடத்தும், உற்சாகமூட்டும் கேலிச்சித்திரங்களோடு உருவாக்கப்பட்டது.
14.
1. புரோடிஸ்டா உலகத்தில் ஒரு செல் உயிரிகளும் சில எளிய பல செல் யூகேரியோட்டுகளும் அடங்கும்.
2. தாவர வகை புரோடிஸ்டுகள் தற்சார்பு ஊட்ட மூலமும் விலங்கு வகை புரோடிஸ்டுகள் பிற ஊட்ட முறை மூலமும் உணவு எடுத்துக் கொள்ளும்.
15.
அ. மனிதன் - ஹோமோ சேப்பியன்ஸ்
ஆ. நெல் - ஒரைசா சட்டைவா
16.
மொனிரா, புரோடிஸ்டா, பூஞ்சைகள், ப்ளாண்ட்டே, அனிமேலியா போன்றவை ஐந்துலக வகைப்பாட்டின் பிரிவுகள்.
17.
வகைப்பாட்டியல் என்பது உயிரினங்களின் பண்புகள் ஒற்றுமை மற்றும் வேற்றுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
18.
செல் சவ்வு தாவர செல்லின் உள்ளே சில பொருட்களை மட்டும் ஊடுருவ அனுமதிக்கிறது. மேலும் செல்லைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது.
19.
சூரியனின் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார்ச் தயாரிக்கும் நுண் உறுப்பு பசுங்கணிகம் ஆகும்.
20.
செல்சுவர் செல்லைப் பாதுகாக்கவும் அதன் வடிவத்தை நிலைப்படுத்தவும் பயன்படுகிறது.
21.
இது குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றங்களானது மீண்டும் நிகழ்வதால் கால ஒழுங்கு மாற்றமாக கருதப்படுகிறது.
22.
இது இயற்பியல் மாற்றமாகும்.
23.
வெப்ப உமிழ் வினை.
24.
சோப்புத்தூளுடன் நீரைச் சேர்த்தால் வெப்பம் வெளியிடப்படும். மரக்கட்டை எரியும் போது ஒளியும், வெப்பமும் வெளியிடப்படும்.
25.
மின்சாரத்தை நேரடியாகவோ அல்லது எளிதாகவோ பெற முடியாத மின்சாதனங்களுக்கு மின்சாரத்தை அளிக்கவல்ல சாதனமே மின்கலனாகும்.
26.
மரக்கட்டை, கண்ணாடி, நெகிழி, இரப்பர் போன்றவை அரிதிற்கடத்திகளாகும்.
27.
மின்விளக்கு, வெந்நீர் கொதிகலன், மூழ்கும் நீர் கொதிகலன், இஸ்திரிபெட்டி போன்றவை வெப்ப விளைவால் இயங்கும் சாதனங்களாகும்.
28.
பாதரச மட்டத்தினை கீழே கொண்டு வருவதற்காக வெப்பநிலைமானியை ஒரு சில முறை உதற வேண்டும். எனவே உடலின் வெப்பநிலையை பரிசோதிக்க பயன்படுத்தும் முன் உதறப்படுகிறது.
29.
இந்த குறுகிய வளைவானது வெப்பநிலைமானியை நோயாளியின் வாயிலிருந்து எடுத்தவுடன் பாதரசமானது மீண்டும் குமிழுக்குள் செல்வதைத் தடுக்கிறது.
30.
1. ஜோதியின் செயல் தவறானது. மருத்துவ வெப்பநிலைமானியில் 35°C முதல் 42°C வரையிலுள்ள அளவுகள் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கும். சூடான நீரின் வெப்பநிலை 42°Cஐ விட அதிகமாக இருக்கும்.
2. மேலும் வெப்பநிலைமானி உடைந்துவிடும் எனவே தவறானது.
31.
| வ.எண் | தாவர உலகம் | விலங்கு உலகம் |
| 1. | தற்சார்பு ஊட்டமுறையினை கொண்டது. | பிறசார்பு ஊட்டமுறையினை கொண்டது. |
| 2. | இடம் விட்டு இடம் நகருவதில்லை. | இடம் விட்டு இடம் நகரும் தன்மையுடையது. |
| 3. | எ.கா. சிறுசெடி, புதர்செடி மற்றும் மரங்கள் | எ.கா. மீன், தவளை, முதலை, பறவைகள் |
32.
உயிரினத்தின் அடிப்படை செயல் அலகு செல் என்று அழைக்கப்படுகிறது. இது நுண்ணோக்கியின் மூலமே பார்க்க முடியும். செல்லின் உட்பகுதியில் பல செல் நுண் உறுப்புகள் உள்ளன. இந்த நுண் உறுப்புகள் செல்லின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.அதாவது செல்சவ்வு செல்லிற்கு வடிவத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கிறது. மைட்டோகாண்ட்ரியா ஆற்றல் மையமாக செயல்படுகிறது. தாவர செல்களில் பசுங்கணிகங்கள் உணவினை தயாரிக்கப் பயன்படுகிறது. லைசோசோம்கள் செல்லின் தற்கொலைப்பையாக செயல்படுகிறது. எண்டோபிளாச வலையமைப்பு புரதம், மற்றும் ஸ்டீராய்டுகள், கொழுப்புகள் தயாரிப்பில் பங்கு கொள்கிறது. மேலும் நியூக்ளியஸ் செல்லின் கட்டுப்பாட்டு அறையாக செயல்படுகிறது.
33.
ஆம். உரித்த வாழைப்பழம் வேதியியல் மாற்றம் ஆகும். வாழைப்பழத்தில் பாலிபினைல் ஆக்சிடேஸ் என்ற நொதி காணப்படுகிறது. இந்த நொதியானது வாழைப்பழம் உரிக்கப்பட்ட பின் வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜனுடன் வினை புரிகிறது. இதனால் உரித்த வாழைப்பழத்தில் நிறம் மாற்றமடைகிறது. எனவே உரித்தபழம் வேதியியல் மாற்றம் ஆகும்.
34.
| இயற்பியல் மாற்றம் | வேதியியல் மாற்றம் |
| புதிய பொருள்கள் உண்டாவது இல்லை. | புதிய பொருள்கள் உண்டாகிறது. |
| வேதியியல் பண்புகளில் மாற்றம் ஏற்படவில்லை. | வேதியியல் பண்புகளில் மாற்றம் ஏற்படுகிறது. |
| மாற்றம் தற்காலிகமானது. | மாற்றம் நிலையானது. |
| மீள்வினை நடைபெறுகிறது. | மீளாவினை நடைபெறுகிறது. |
35.
மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும். மின்சாதனங்கள் இயங்க வேண்டும் எனில் அச்சாதனங்கள் வழியே மின்னோட்டம் பாய வேண்டும். ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டமானது ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதேனும் ஓர் புள்ளி வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவால் அளவிடப்படுகிறது.
36.
ஆம். ரமணியின் கூற்றினை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் ரமணியின் கூற்று சரியானது. மேலும் ஆய்வக வெப்பநிலைமானியில் குறுகிய வளைவு காணப்படுவதில்லை. எனவே நாம் அளவிடும் பொருளை விட்டு வெளியே எடுத்தவுடன் பாதரசம் குமிழிக்குள் சிறிதளவு சென்றுவிடும். சரியான அளவீடு நமக்கு கிடைக்காது. எனவே சுவாதியின் அளவீடு தவறானதாகும்.
37.
38.
| மருத்துவ வெப்பநிலைமானி | ஆய்வக வெப்பநிலைமானி |
| மருத்துவ வெப்பநிலைமானியானது 35oC முதல் 42oC வரை அல்லது 94oF முதல் 108oF வரை அளவீட்டினைக் கொண்டுள்ளது. | ஆய்வக வெப்பநிலைமானியானது பொதுவாக -10oC முதல் 110oC வரை அளவிடப்பட்டிருக்கும். |
| பாதரச மட்டமானது தானாகவே கீழ் இறங்காது.அதில் உள்ள குறுகிய வளைவானது பாதரச மட்டத்தினை கீழ் இறங்காமல் பாதுகாக்கிறது. | குறுகிய வளைவு இல்லாத காரணத்தினால் பாதரச மட்டமானது தானாகவே கீழ் இறங்கிவிடும். |
| கைகளுக்கு அடியில் இருந்தோ அல்லது வாயிலிருந்தோ வெப்பநிலைமானியினை எடுத்த பிறகு அளவீடானது எடுக்கப்படுகிறது. | வெப்பநிலைமானியானது வெப்பமூலத்தில் இருக்கும் நிலையிலேயே அளவீடானது எடுக்கப்படுகிறது.எ.கா .திரவம் அல்லது வேறு ஏதேனும் பொருள். |
| பாதரசத்தினை கீழே கொண்டு வர வெப்பநிலைமானியினை உதற வேண்டும். | பாதரச மட்டத்தினை கீழே கொண்டுவர வெப்பநிலைமானியினை உதற வேண்டியதில்லை. |
| இது உடல் வெப்பநிலையினை அளக்க பயன்படுகிறது. | இது ஆய்வகத்தில் பல்வேறு பொருள்களின் வெப்பநிலையை அளக்க பயன்படுகிறது. |
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards