7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/09/2019
நிலத்தோற்றங்கள்
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று _____________
கடல் ஓங்கல்கள்
கடல் வளைவுகள்
கடல் தூண்கள்
கடற்கரை
2.
குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது
காவேரி
பெண்ணாறு
சிற்றாறு
வைகை
3.
மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் _____________ ஆகும்.
உட்பாயத் தேக்கம்
வண்டல் விசிறி
வெள்ளச் சமவெளி
டெல்டா
4.
உலகின் மிக நீண்டகடற்கரை _____________ ஆகும்.
5.
காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் _____________ பாலைவனத்தில் காணப்படுகிறது
6.
பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் _____________ என்கிறோம்.
7.
காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.
8.
காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக.
9.
வீழ்ச்சி குளம் என்றால் என்ன?
10.
அரித்தல் வரையறு
11.
அரெட்டுகள் எவ்வாறு தோன்றுகின்றன?
12.
ஆற்றின் அரிப்பால் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்களை விவரிக்க.
13.
கடற்கரை எவ்வாறு உருவாகிறது?
14.
கழிமுகம் (டெல்டா) என்றால் என்ன? சில கழிமுகங்களின் பெயர்களைக் கூறு.
15.
பிரசித்தி பெற்ற உலகத்தின் சில நீர்வீழ்ச்சிகளைப் பெயரிடுக.
16.
'சமப்படுத்துதல்' என்றால் என்ன?
1.
(d)
கடற்கரை
2.
(c)
சிற்றாறு
3.
(b)
வண்டல் விசிறி
4.
( )
மியாமி கடற்கரை
5.
( )
கலஹாரி
6.
( )
பாறைச்சிதைவு
7.
1. கடற்கரையிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாக பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும்.
2. எ.கா: ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி, தமிழ்நாட்டிலுள்ள பழவேற்காடு ஏரி மற்றும் கேரளாவில் உள்ள வேம்பநாடு ஏரி.
8.
1. பாறையின் மேற்பகுதியைவிட கீழ்ப்பகுதியை காற்று வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப்பாறைகளின் மேற்பகுதி அகன்றும் மற்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகின்றன.
2. இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன. இதை பாலை வனப்பகுதியில் நம்மால் காண முடியும்.
9.
வீழ்ச்சி குளம் (அல்லது) வீழ்ச்சி உட்பாய்த்தேக்கம்:
நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் வீழ்ச்சி உட்பாயத்தேக்கம் (அல்லது) வீழ்ச்சிக் குளம் எனப்படும்.
10.
நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்.
11.
1. பனியாறுகள் மேற்பரப்பில் உள்ள துகள்கள் மற்றும் கற்களை அரிப்பதன் மூலம் கீழே உள்ள கடின பாறைப் பகுதியை வெளிப்படுத்துகிறது. மலைச்சரிவில் பனி அரிப்பால் சர்க்குகள் (Cirque) ஏற்படுகின்றன.
2. சர்க்குகள் என்பது பனியாறுகளால் அரிபடா பாறைகளில் தோன்றும் கை நாற்காலி போன்ற ஒரு நிலத் தோற்றமாகும். இதன் அனைத்து பக்கமும் செங்குத்தாகவும் தலைப்பகுதி செங்குத்து சுவர் போன்றும் காணப்படும்.
3. இந்நிலத் தோற்றம் ஸ்காட்லாந்தில் கார்ரி சர்க் என்றும் ஜெர்ம னியில் கார்சர்க் என்றும் அழைக்கப்படுகிறது. பனி உருகும் போது, சர்க் நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப்பகுதிகளில் தோற்றமளிக்கின்றன. இந்த ஏரிகள் டார்ன் ஏரி என்று அழைக்கப்படுகின்றன.
4. இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சரக்குகள் ஒன்றை நோக்கி ஒன்று நகரும்போது குறுகிய, செங்குத்து மற்றும் சரிவான பக்கங்களுடன் கூடிய முகடுகளாக மாற்றம் அடைகின்றன. இம்முகடுகள் அரெட்டுகள் என்ற கத்திமுனைக் குன்றுகளாக உருவெடுக்கின்றன.
12.
1. ஆற்று நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகின்றது. (உதாரணம்) தமிழ்நாட்டில் சிற்றாற்றின் குறுக்கே உள்ள குற்றால நீர்வீழ்ச்சி.
2. நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் உட்பாய்த்தேக்கம் (Plunge pool) எனப்படுகின்றது. ஆறு ஒரு சமவெளிப் பகுதியையோ அல்லது மலைஅடிவாரப் பகுதியையோ அடையும் போது ஏற்படுத்தும் படிவுகள் வண்டல் விசிறிகள் என்கிறோம்.
3. ஆறானது சமவெளிப்பகுதியை அடையும் போது நீரின் அலைதலால் ஆற்றில் வளைவுகள் தோன்றுகின்றன. ஆறு வளைந்து மற்றும் சுழன்று செல்வதால் தோன்றும் பெரிய வளைவுகள் ஆற்று வளைவுகள் (Meanders) எனப்படுகின்றன. (உதாரணம்) தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்று பகுதியில் காணப்படுகின்றன.
4. ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன. நாளடைவில், ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக்குளம்பு ஏரி (Oxbow lake) எனப்படுகிறது.
13.
கடற்கரை:
கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை எனப்படும்.
எ.கா: மியாமி கடற்கரை, மெரினா கடற்கரை
14.
கழிமுகம்:
அனைத்து முகத்துவாரங்களின் படிவுகளும் ஒருங்கிணைந்து டெல்டா எனப்படும் கழிமுகப்பகுதியை ஏற்படுத்துகின்றன. கழிமுகப் பகுதிகள் அனைத்தும் மிகச் சிறந்த உற்பத்தி நிலங்களாகும்.
சில கழிமுகங்களின் பெயர்கள்:
1. காவேரி டெல்டா
2. கங்கை டெல்டா
3. மிசிசிபி டெல்டா
15.
உலகப் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகள்:
1. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா, தென் அமெரிக்கா)
2. நயாகரா நீர்வீழ்ச்சி (கனடா, அமெரிக்க எல்லை, வட அமெரிக்கா)
3. விக்டோரியா நீர்வீழ்ச்சி (ஜாம்பியா, ஜிம்பாப்வே எல்லை, ஆப்பிரிக்கா)
4. குற்றாலம் நீர்வீழ்ச்சி (தமிழ்நாடு, இந்தியா)
16.
சமப்படுத்துதல்:
உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களை படிதல் செய்தல் மூலம் உயர்நிலங்களாகவும் மாற்றுவதற்கு நிலங்களை சமப்படுத்துதல் என்று பெயர்.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards