7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது
காவேரி
பெண்ணாறு
சிற்றாறு
வைகை
2.
எரிமலைக் குழம்பு கூம்புகள் _______ ஆகும்
மலைகளின் குவியல்
மலைகளின் உருக்குலைவு
எஞ்சியமலைகள்
மடிப்பு மலைகள்
3.
கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
மண்டலம்
நாடு
கூற்றம்
ஊர்
4.
கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?
சிலை வழிபாட்டை ஒழிப்பது
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.
இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.
5.
________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.
சோழர்
பாண்டியர்
ராஜபுத்திரர்
விஜயநகர அரசர்கள்
6.
குடிமை சமத்துவம் _________ க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.
7.
_______ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
8.
பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி ___________ என்று அழைக்கப்படுகிறது.
9.
_________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.
10.
காந்தர்யா கோவில் ______________ ல் அமைந்துள்ளது.
11.
அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர்_________ ஆவார்.
12.
வேம்பநாடு ஏரி
13.
அலாவுதீன்
14.
சுனாமி
15.
சூரியனார் கோவில்
16.
தில்வாரா
17.
தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ் ஷா மறுத்துவிட்டார்
18.
சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.
19.
இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.
20.
'ராஜபுத்ர' என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும்.
21.
டோமிங்கோ்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி.பி.1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார்.
22.
வேலை பகுப்பு முறை –வரையறு
23.
பயன்பாடு என்பது என்ன?
24.
சமத்துவம் என்றால் என்ன?
25.
‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.
26.
சியால் என்றால் என்ன ?
27.
ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக
28.
‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?
29.
அரசியல் சமத்துவம் என்றால் என்ன?
30.
1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.
31.
டெல்லிசுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.
32.
தொழில் முனைவோரின் பணிகளைக் கூறுக.
33.
ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியமா?
34.
எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகளை விளக்குக.
1.
(c)
சிற்றாறு
2.
(a)
மலைகளின் குவியல்
3.
(d)
ஊர்
4.
(b)
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
5.
(a)
சோழர்
6.
( )
சட்டத்திற்கு
7.
( )
நகர்ப்புறக்
8.
( )
வாய்ப்பகுதி உமிழ்தல்
9.
( )
முதலாம் வரகுணபாண்டியன்
10.
( )
மத்தியப் பிரதேசம்
11.
( )
மின்கஜ் உஸ் - சிராஜ்
12.
காயல்
13.
சிர்கந்தின் ஆளுநர்
14.
ஜப்பானிய சொல்
15.
கொனார்க்
16.
ராஜஸ்தான்
17.
(a)
18.
(a)
19.
(b)
20.
(b)
21.
(b)
22.
அ) வேலை பகுப்பு முறையை, ஆடம்ஸ்மித் தனது “நாடுகளின் செல்வமும்" அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும், ஓர் ஆய்வு என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆ) ஒரு உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தலே வேலைப்பகுப்பு முறை எனப்படும்.
23.
பயன்பாடு என்பது, நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.
24.
சமத்துவம் என்பது ஒரு தனி மனிதன் அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பால், இயலாமை, சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல் சார்ந்த போக்கு வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் முதலியவற்றை உறுதி செய்தலாகும்.
25.
1. இல்துமிஷ் ஆட்சி காலத்தில் மங்கோலியர்கள் செங்கிஸ்கானின் தலைமையில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை அச்சுறுத்தினர்.
2. செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலூதீன் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளை மறுத்தது மூலம் மங்கோலிய ஆபத்தைத் தவிர்த்தார்.
3. மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்ள துருக்கிய பிரபுக்கள் 40 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அதுவே சகல்கானி அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.
26.
அ) புவிமேலோடு இரண்டு பிரத்யேக பிரிவுகளைக் கொண்டது.
ஆ) கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது.
இ) இப்பகுதி முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது.
ஈ) இதனையே சியால் என்று இணைத்து அழைக்கின்றோம்.
27.
1. பிரதிகாரர்கள்
2. சௌகான்கள்
3. சாளுக்கியர்கள்
4. பரமாரர்கள்
28.
தசுக் என்பது பாரசீகச் சொல் இதன் பொருள் சுயசரிதை எனப்படும்.
29.
இந்தியா உள்ளிட்ட அனைத்து மக்களாட்சி நாடுகளும் அவற்றின் குடிமக்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதியளிக்கின்றன. அவை பின்வருமாறு.
1. வாக்களிக்கும் உரிமை.
2. பொது அலுவலகத்தில் பங்கு கொள்ளும் உரிமை.
3. அரசை விமர்சனம் செய்யும் உரிமை.
அ) குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும்.
ஆ) இந்த உரிமைகள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்கின்றது.
இ) இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஈ) 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
உ) சுவிட்சர்லாந்து நாட்டில் 1971 ஆம் ஆண்டில் தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
ஊ) இந்தியாவில் 25 வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடாலம்.
எ) அரசை விமர்சிக்கலாம் என்ற உரிமை ஒரு முக்கியமான உரிமை என்பதோடு மக்கள் தங்களது மாறுபட்டக் கருத்துக்களை பல்வேறு வகையிலும் தெரிவிக்கலாம்.
ஏ) நாட்டின் பிரதமரின் வாக்கின் மதிப்பும் ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது.
30.
1. பிரோஷ் ஷா துக்ளக் மரணமுற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் ‘தாமர்லைன்' என்று அழைக்கப்பட்ட தைமூர் டெல்லியைத் தாக்கி சூறையாடி மாபெரும் மனிதப் படுகொலையை அரங்கேற்றினார்.
2. மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த தைமூர் வட இந்தியாவின் மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார்.
3. இந்தியாவின் வலிமையை சாதகமாக்கிக் கொண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து 1398 டிசம்பரில் டெல்லியைக் கொள்ளையடித்தனர்.
4. தைமூர் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி பஞ்சாப் ஆகும்.
5. தைமூர் தங்கம், வெள்ளி நகைகள் என பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி சாமகண்டில் நினைவுச் சின்னங்களை கட்டுவதற்காக தச்சு வேலை செய்வோர், கட்டிடக் கலைஞர்கள், போன்ற கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றார்.
31.
1. முகமதுகோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்க செய்திருந்தார்.
2. இந்நாணயம், இந்தத் தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர் மதவிசயங்களில் தாராளத் தன்மையுடன் நடந்துகொண்டார் என்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் உணர்த்துகிறது.
3. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்து கொள்ள 'ஜிட்டல்' என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன,
4. இல்துமிஷ் அறிமுகம் செய்த 'டங்கா' எனப்படும். வெள்ளி நாணயங்கள், அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள், முகமது பின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள் போன்றவை நாணயங்கள் பரவலாக பயன்பாட்டில் இருந்ததையும் நாட்டின் பொருளாதார வளம் அல்லது நலிவு ஆகியவற்றைச் சுட்டுவதாகவும் அமைந்தது.
32.
1. தொழில் முனைவோர், எனப்படுபவர் பல உற்பத்திக் காரணிகளை (நிலம், உழைப்பு, மூலதனம்) ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார். அக்காரணிகளைச் சரியான அளவிலும், முறையிலும் தொடங்கி. இடர்பாடுகளை ஏற்று, உற்பத்தி அதிகரிக்க முயல்பவரே தொழில் முனைவோர் ஆவார்.
2. தொழில் முனைவோர், 'தொழில் அமைப்பாளர்' எனவும் அழைக்கப்படுகிறார். தற்காலத்தில், தொழில் முனைனவோர், "சமுதாய மாற்றம் காணும் முகவர்" என அழைக்கப்படுகிறார்.
3. இவர் சமுதாய விருப்பமுள்ள உற்பத்தியைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாய நலம் மேம்படவும் காரணமாகிறார்.
4. இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல்.
5. உற்பத்தி அலகின் இருப்பிடத்தை தீர்மானித்தல்.
6. புதுமைகளை உருவாக்குதல்.
7. வெகுமதி செலவைத் தீர்மானித்தல்
8. இடர்களை ஏற்றல் மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளல்
33.
1. அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் முதுகெலும்பு எனலாம்.
2. அரசியல் கட்சிகள் முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
3. பொதுக் கருத்துக்களை உருவாக்குகின்றன.
4. கட்சிகள் குடிமக்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்கின்றன.
34.
எரிமலைகள் அதன் எரிமலை குழம்பு வெளியேறும் கால அளவினை கொண்டு மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
i) செயல்படும் எரிமலை,
ii) செயல்படாத எரிமலை
iii) செயலிழந்த எரிமலை.
1. இப்பிரிவுகள் அதன் வகைகளைவிட அவை செயல்படும் விதத்தை கொண்டு பிரிக்கப்படுகின்றன.
2. செயல்படும் எரிமலை (Active Volcano) அடிக்கடி வெடித்தும் பாறைக்குழம்பை வெளியேற்றும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் என்றழைக்கப்படுகின்றன.
3. பசிபிக் கடற்கரையோரமாக பெரும்பாலான எரிமலைகள் இவ்வகையைச் சார்ந்தது. சராசரியாக உலகெங்கும் 600 செயல்படும் எரிமலைகள் உள்ளன.
4. மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள ஸ்ட்ராம்போலி, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள செயிண்ட் ஹெலன், பிலிப்பைன்ஸ் தீவிலுள்ள பினாடுபோ ஹவாய் தீவிலுள்ள மவுனாலோ (3,255 மீட்டர்) உலகின் மிகப் பெரிய செயல்படும் எரிமலையாகும்.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards