7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/11/2019
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மாநில அரசின் சில துறைகளின் பெயர்களை குறிப்பிடுக.
2.
தமிழ்நாட்டிலுள்ள நீர்வீழ்ச்சிகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.
3.
புதை படிம எரிபொருள் வளங்கள் யாவை? அவற்றை விளக்குக.
4.
புதுப்பிக்கக்கூடிய வளங்களின் வெவ்வேறு வகைகளை விளக்குக.
5.
பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.
6.
முகலாயர் ஆட்சியில் ஷாஜகானின் காலத்தை மற்ற முகலாய ஆட்சியாளர்களோடு ஒப்பிடுக.
7.
கிருஷ்ண தேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுக.
8.
ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
9.
ஊடகம் அவசியமா? ஏன்?
10.
சரணாலயங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை ?
1.
1. வருவாய்த்துறை
2. கல்வித்துறை
3. வேளாண்மைத் துறை
4. நீதித் துறை
5. சுகாதாரத் துறை
6. காவல் துறை
7. போக்குவரத்துத் துறை
2.
1. தமிழ்நாட்டில் மலைகளும் ஆறுகளும் இணைந்து பல அருமையான நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி உள்ளன.
2. இயற்கையின் அதிசயமான தமிழகத்தின் நீர்வீழ்ச்சிகள், சுற்றுலா பயணிகளைக் கவர்கின்றன.
3. அடர்த்தியான பச்சை மரங்களுக்கிடையில் செங்குத்தான குன்றுகளில் மலையேற்றம் செய்வதும் மலைகளிலிருந்து பாயும் நீரில் குளிப்பதும் மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது.
4. தமிழகத்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகள் கீழே அட்டவணையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
| வ.எண் | நீர் வீழ்ச்சிகள் | புவியியல் தல அமைவிடம் |
| 1. | ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி | தருமபுரி மாவட்டம் |
| 2. | கும்பக்கரை நீர் வீழ்ச்சி | கொடைக்கானல் (தேனி மாவட்டம்) |
| 3. | குரங்கு நீர்வீழ்ச்சி | கோயம்புத்தூர் மாவட்டம் |
| 4. | கிளியூர் நீர்வீழ்ச்சி | சேர்வராயன் குன்றுப் பகுதி |
| 5. | ஆகாய கங்கை | திருநெல்வேலி மாவட்டம் |
| 6. | ஆகாய கங்கை | கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம்) |
| 7. | சுருளி நீர்வீழ்ச்சி | தேனி மாவட்டம் |
3.
புதைபடிம எரிபொருள் வளங்கள்:
நிலக்கரி:
1. நிலக்கரி என்பது, தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும்.
2. முற்றா நிலக்கரி அல்லது பீட் முதலில் உருவாவது ஆகும்.
3. நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது வெப்ப சக்தி என அழைக்கப்படுகிறது.
பெட்ரோலியம்:
1. பாறைகளின் அடுக்குகளுக்கு இடையேயும், கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில்
2. அமைந்துள்ள எண்ணெய் வயல்களில் இருந்தும் துளையிட்டு பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது.
இயற்கை வாயு:
1. இயற்கை வாயுவானது பெட்ரோலியம் படிவுகளுடன் காணப்படுகிறது. கச்சா எண்ணெய் மேற்பரப்பிற்கு வரும்போது வெளியேற்றப்படுகிறது.
2. இது வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
4.
i) சூரிய ஆற்றல்:
1. சூரியன் தனது ஆற்றலை வெப்பமாகவும், ஒளியாகவும் வெளியிடுகிறது.
2. சூரிய ஆற்றல் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காது.
3. ஒளி மின்னழுத்தக்கலம் அல்லது சூரியகலமானது நேரடியாகச் சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக் கூடியது.
4. உலகில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் முதன்மையான நாடுகள் இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகும்.
ii) நீர் மின்சக்தி:
1. தற்போது நீரானது நீர்மின்சக்தி உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
2. நாம் அறிந்த ஆற்றல் வளங்களிலேயே நீர் மின்சக்தியானது, மலிவானதாகவும் மற்றும் மிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவுமுள்ளது.
3. இவ்வளமானது, புதுப்பிக்கக்கூடிய வளமாகும்.
iii) காற்று ஆற்றல்:
1. காற்றாற்றல் என்பது, ஒரு தூய்மையான ஆற்றலாகும். ஏனெனில், டர்பன்கள் காற்றாற்றலானது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பதில்லை.
2. அண்மைக் காலங்களில் காற்றாற்றலானது, மிகவும் சிக்கனமான மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தொழில்நுட்பங்களில் ஒன்றாகிவிட்டது.
5.
சிவாஜியின் வருவாய் நிர்வாக முறை:
1. சிவாஜி, கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார்.
2. அதற்காக அம்மக்கள் சௌத் - மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு பாதுகாப்புக் கட்டணமாக, சர்தேஷ்முகி - பத்தில் ஒரு பங்கு அரசருக்கு கட்டணமாக வரிகளைச் செலுத்த வேண்டும்.
3. மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
4. முகலாயரின் நிர்வாக முறை சிவாஜியின் மீது செல்வாக்குச் செலுத்தியிருந்தது.
5. நிலவரியானது உண்மையான விளைச்சலின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு, ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டு ஐந்தில் இரண்டு பங்கு அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பேஷ்வாக்களின் வருவாய் நிர்வாக முறை:
1. வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொரு முறை ஏலம் விடப்பட்டன. குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை பேஷ்வாவின் அதிகாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஏலம் நடத்தப்பட்டது.
2. ஏலத்தில் வெற்றி பெற்று எதிர்கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராகவும் நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும்.
3. எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் சரிபாதி வரை அவர் முதலில் செலுத்திட வேண்டும். தமது சொந்தப் பணத்திலிருந்து அவர் அதைச் செலுத்தலாம் அல்லது வட்டிக்குக் கடன் தருவோரிடமிருந்து பெற்றுக் கட்ட வேண்டும்.
4. செய்திப் பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது.
6.
1. முகலாயப் பேரரசும் அதன் புகழும் ஷாஜகான் காலத்தில் உச்சத்தை எட்டியது.
2. பேரரசர் அமர்வதற்காக விலையுயர்ந்த நவரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட மயிலாசனம் தயாரிக்கப்பட்டது.
3. யமுனை நதிக்கரையில் உலகப்புகழ்பெற்ற தாஜ்மகால் எழுப்பப்பட்டது.
4. மேலும் ஆக்ராவில் உள்ள முத்து மசூதி, டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதி, செங்கோட்டை ஆகியவை ஷாஜகானால் கட்டப்பட்டது.
5. திவான் -இ-காஸ், திவான் -இ- ஆம், பஞ்ச்மஹால், ரங்மஹால், புலந்தர்வாசா, போன்றவை அக்பர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டவையாகும்.
6. ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் கட்டடக்கலை பெரிய அளவிலான ஆதரவைப் பெறவில்லை.
7.
கிருஷ்ணதேவராயர்:
1. துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் கிருஷ்ணதேவராயர். இவர் இருபது ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
2. ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவதே அவரின் முதற்கட்ட தலையாயப் பணியாக இருந்தது.
3. இம்முயற்சியில் வெற்றிபெற்ற பின்னர் குல்பர்காவைக் கைப்பற்றுவது அவரின் இரண்டாவது இலக்கானது.
4. இச்சமயத்தில் பாமினி சுல்தான் முகமதுஷா, அவருடைய அமைச்சரால் பதவி பறிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தார்.
5. மேலும், போர்த்துகீசியப் பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை கிருஷ்ண தேவராயர் எளிதாகத் தோற்கடித்தார். தொடர்ந்து பீஜப்பூர் சுல்தானிடமிருந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்.
சிறந்த கட்டட வல்லுநர்:
1. கிருஷ்ண தேவராயர் மழைநீரைச் சேமிப்பதற்காகப் பெரிய நீர்ப்பாசன குளங்களையும், நீர்த் தேக்கங்களையும் உருவாக்கினார்.
2. இவர் தமது தலைநகரான ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில், ஹசாரா கோவில், விட்டலாசுவாமி கோவில் போன்ற புகழ்பெற்ற கோவில்களை கட்டினார்.
3. கிருஷ்ண தேவராயர் கலை, இலக்கியத்தை ஆதரித்தார்.
4. அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் அவரின் அவையை அலங்கரித்தனர்.
8.
1. ஊடகம் மக்களிடையே ஒரு பொதுவான கருத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. இது சம காலத்தின் சக்திவாய்ந்த கருவியாகும்.
3. மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.
4. இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த பார்வை மற்றும் புரிதலில் பொதுமைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
9.
1. ஊடகம் மிகவும் அவசியம், ஏனெனில் இவ்வுலகில் ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த கட்டமைப்பு ஆகும்.
2. இது நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார செயல்பாடுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழுகிறது.
3. இதனை மக்கள் பல்வேறு தேவைகளுக்காக சார்ந்து இருக்கின்றனர். குறிப்பாக தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கிற்காக சார்ந்துள்ளனர்.
10.
1. வனவிலங்குகளை வேட்டையாடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
2. காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
3. வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
4. வனவிலங்கு வாழிடங்களை அழித்தல் கூடாது.
5. புதிய மரங்களை நட்டு காடுகளைப் பாதுகாக்க வேண்டும்.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards