7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/11/2019
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
வெகுஜன ஊடகம் என்பது
வானொலி
தொலைக்காட்சி
அ மற்றும் ஆ
இவற்றில் எதுவுமில்லை
2.
எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
தருமபுரி
திருநெல்வேலி
நாமக்கல்
தேனி
3.
குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்
பாலாஜி விஸ்வநாத்
பாஜிராவ்
பாலாஜி பாஜிராவ்
ஷாகு
4.
இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஹூமாயூன்
பாபர்
ஜஹாங்கீர்
அக்பர்
5.
சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?
புக்கர்
தேவராயா -II
ஹரிஹரர்-II
கிருஷ்ண தேவராயர்
6.
பத்திரிக்கையாளர் சந்திப்பை பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
7.
சூழல் சுற்றுலா குறித்துச் சிறு குறிப்பு வரைக.
8.
இரும்பின் பயன்கள் யாவை?
9.
மராத்தியர்களின் ஆட்சியில் சிவாஜியின் சிறப்பு அம்சங்களை மதிப்பிடுக.
10.
அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.
11.
முகலாயப் பேரரசில் அக்பர் மற்றும் ஔரங்கசீப்பின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும், முகலாயர்களின் முக்கிய போர்களைக் குறிக்கவும்
12.
சட்டமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?
13.
சட்டமன்ற தொகுதி என்றால் என்ன?
14.
சாம்பாஜிக்கு எதிராக முகலாய இராணுவத்தின் தாக்குதல்.
15.
மராத்தியர்களிடத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்.
16.
புதுப்பிக்க இயலா வளங்கள் - குறித்து விரிவாக எழுதுக.
17.
பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.
1.
(c)
அ மற்றும் ஆ
2.
(b)
திருநெல்வேலி
3.
(b)
பாஜிராவ்
4.
(b)
பாபர்
5.
(b)
தேவராயா -II
6.
1. பத்திரிக்கையாளர் சந்திப்பு என்பது தகவல்களை பத்திரிக்கையாளர்களின் வினாக்களுக்கு ஏற்ப விடையளிப்பதன் மூலம் கொடுப்பதாகும்.
2. இது பொதுவாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக ஒழுங்குசெய்யப்பட்டு கருத்துகளை வெளியிடுவதாகும்.
7.
1. பொதுவாக இயற்கை சூழலில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் செழித்து வளரும் இடங்களுக்கு செல்வது சூழல் சுற்றுலா எனப்படுகிறது.
2. அமேசான் மலைக்காடுகள், ஆப்பிரிக்க வனப்பயணம் மற்றும் இமயமலை சிகரங்களில் மலையேற்றம் ஆகியவை புகழ் பெற்ற சூழல் சுற்றுலா தலங்களாகும்.
8.
இரும்பானது மலிவு விலை மற்றும் வலிமையினாலும் பொறியியல் தொழில்துறையில் அதாவது இயந்திர கட்டுமானப் பணி, இயந்திர கருவிகள், ஆட்டோ மொபைல்ஸ் கப்பல் கட்டுமானப் பணி பாலம் மற்றும் கட்டட கட்டுமானப் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
9.
1. சிவாஜியின் கீழ் மராத்தியர் நிர்வாகம்:
2. சிவாஜியின் அரசியல் முறை மூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது.
3. இரண்டாவது வட்டத்தில் அவர் மேலாதிக்கம் செலுத்தினாலும் நேரடி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.
4. மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
5. கிராமங்கள் தேஷ்முக் என்பவர்களால் நிர்வகிக்கப்பட்டு இருபது முதல் நூறு எண்ணிக்கை வரையிலான கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன.
6. இராணுவம் மீதும், இராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதிலும் சிவாஜி மிகப்பெரும் கவனம் செலுத்தினார்.
7. சிவாஜி எட்டு அமைச்சர்களைக் கொண்ட குழுவிற்கு அஷ்டப்பிரதான் எனப் பெயரிட்டார்.
8. ஒவ்வொருவரும் ஒரு முக்கிய துறையைக் கொண்டிருந்தனர்.
9. முகலாயரின் நிர்வாகமுறை சிவாஜியின் மீது செல்வாக்குச் செலுத்தியிருந்தது. நிலவரியானது உண்மையான விளைச்சலின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது.
10. நீதித்துறையில் சிவில் வழக்குகள் பஞ்சாயத்து எனப்படும் கிராமக் குழுக்களால் தீர்த்து வைக்கப்பட்டன.
10.
1. அக்பர் கல்வியைப் பெரிதும் ஆதரித்தார். அவருடைய சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன.
2. பல்வேறு விதமான நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் கொண்டிருந்த அறிஞர்களை அவர் ஆதரித்தார்.
3. அபுல் பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான் -இ - கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா பகவன் தாஸ், ராஜா மான் சிங் ஆகியோர் அக்பரின் அவையில் இடம் பெற்றிருந்தனர்.
4. பாடலாசிரியரும் இசை மேதையுமான தான்சேன், ஓவியர் தஷ்வந் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்தனர்.
11.
12.
1. ஊடகம் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் மக்களிடம் எடுத்துச் செல்கிறது.
2. இதன் மூலம் சட்டமன்ற செயல்பாடுகளையும் அரசின் அன்றாட நிகழ்வுகளையும் குடிமக்கள் அறிந்து கொள்ளுகிறார்கள்.
13.
1. தேர்தலுக்காக நாடு மக்கள் தொகை அடிப்படையில் பல தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.
2. மாநில அளவில் மக்கள் தங்கள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிக்கான தொகுதி சட்டமன்ற தொகுதி எனப்படும்.
14.
1. 1687 இல் பீஜப்பூர், கோல்கொண்டா ஆகிய இரு சுல்தானியங்களும் ஔரங்கசீப்பிடம் வீழ்ந்தன.
2. முகலாயப் படைகள் சாம்பாஜியைக் கைது செய்த போது கவிகலேஷீம் உடனிருந்தார்.
3. ஆகவே இருவரும் ஔரங்கசீப்பின் கட்டளையின் படி அனைத்து வகைப்பட்ட சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
15.
1. மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
2. மேலும், மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாகச் சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.
16.
அலோக வளங்கள்:
உலோகத்தினைக் கொண்டிராத வளங்கள் அலோக வளங்கள் என அழைக்கப்படுகின்றன.
மைக்கா:
1. மஸ்கோவைட் மற்றும் பயோடைட் ஆகியவை மைக்காவின் தாதுக்கள் ஆகும்.
2. மின் மற்றும் மின்னணு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கனிமங்களில் இதுவும் ஒன்று.
3. மின் தொழில்களில் காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மசகு எண்ணெய் மற்றும் அலங்காரச் சுவரொட்டிகள் தயாரிப்பில் பொடி வடிவில் சேர்க்கப்படுகிறது.
4. சீனா தான் மைக்கா உற்பத்தி செய்வதில் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.
கண்ணாம்புக்கல்:
அதிகப்படியாக நொறுக்கப்பட்ட சுண்ணாம்புக்கற்கள் கட்டுமானப் பணிக்கெனப் பயன்படுத்தப்படுகிறது.
முகப்புக்கல் தரையில் பதிக்கப்படும் கற்கள், சாளரங்கள். அடிமணை,படிக்கட்டுகள் போன்றவை அமைக்கப்படுவதில் சுண்ணாம்புக்கல் பயன்படுகின்றன.
17.
சிவாஜியின் வருவாய் நிர்வாக முறை:
1. சிவாஜி, கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார்.
2. அதற்காக அம்மக்கள் சௌத் - மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு பாதுகாப்புக் கட்டணமாக, சர்தேஷ்முகி - பத்தில் ஒரு பங்கு அரசருக்கு கட்டணமாக வரிகளைச் செலுத்த வேண்டும்.
3. மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
4. முகலாயரின் நிர்வாக முறை சிவாஜியின் மீது செல்வாக்குச் செலுத்தியிருந்தது.
5. நிலவரியானது உண்மையான விளைச்சலின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு, ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டு ஐந்தில் இரண்டு பங்கு அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பேஷ்வாக்களின் வருவாய் நிர்வாக முறை:
1. வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொரு முறை ஏலம் விடப்பட்டன. குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை பேஷ்வாவின் அதிகாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஏலம் நடத்தப்பட்டது.
2. ஏலத்தில் வெற்றி பெற்று எதிர்கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராகவும் நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும்.
3. எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் சரிபாதி வரை அவர் முதலில் செலுத்திட வேண்டும். தமது சொந்தப் பணத்திலிருந்து அவர் அதைச் செலுத்தலாம் அல்லது வட்டிக்குக் கடன் தருவோரிடமிருந்து பெற்றுக் கட்ட வேண்டும்.
4. செய்திப் பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards