7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 31/10/2019
Term 2 ஊடகமும் ஜனநாயகமும்
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்
நிறைய பணம் ஈட்ட
நிறுவனத்தை ஊக்கப்படுத்த
நடுநிலையான தகவலை தருவதற்கு
இவற்றில் எதுவுமில்லை
2.
வெகுஜன ஊடகம் என்பது
வானொலி
தொலைக்காட்சி
அ மற்றும் ஆ
இவற்றில் எதுவுமில்லை
3.
உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்
தட்டச்சு
தொலைக்காட்சி
தொலைப்பேசி
இவற்றில் எதுவும் இல்லை
4.
கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது
இதழ்கள்
அறிக்கைகள்
நாளிதழ்கள்
வானொலி
5.
கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?
வானொலி
தொலைக்காட்சி
செய்தித்தாள்
இணையதளம்
6.
ஊடகத்தின் ஏதாவது இரண்டு பொறுப்புகளைக் கூறுக
7.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் நிரூபிக்கவும்
8.
உள்ளூர் ஊடகத்தின் முக்கியத்துவம் யாவை?
9.
சட்டமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?
10.
ஊடகம் என்றால் என்ன?
11.
ஊடகத்தினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
12.
ஜனநாயகத்தில் ஊடகம் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது?
13.
ஊடகம் அவசியமா? ஏன்?
1.
(c)
நடுநிலையான தகவலை தருவதற்கு
2.
(c)
அ மற்றும் ஆ
3.
(b)
தொலைக்காட்சி
4.
(d)
வானொலி
5.
(c)
செய்தித்தாள்
6.
1. ஊடகம் மக்களுக்கு தேவையான தகவல்களை சேகரிப்பதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறது.
2. அதே சமயம் எந்த விதத்திலும் மக்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் இருத்தல் கூடாது.
3. நம்பகத் தன்மையான தகவல்களை மக்களிடம் வழங்குவதில் பொறுப்புடன் செயல்படவேண்டும்.
7.
1. சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகம் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகக் கருதப்படுகிறது.
2. ஊடகம் மற்று மூன்று துறை செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது.
3. இந்த நான்காவது தூண் நாட்டின் தொலை தூரப்பகுதிகளில் வாழும் அனைத்து மக்களும் நாட்டின் பிறபகுதிகளில் என்ன நடக்கிறது என அறிய உதவுகிறது.
8.
உள்ளூர் ஊடகம் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மக்களின் நலனுக்காக செயல்படுவதாகும்.
9.
1. ஊடகம் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் மக்களிடம் எடுத்துச் செல்கிறது.
2. இதன் மூலம் சட்டமன்ற செயல்பாடுகளையும் அரசின் அன்றாட நிகழ்வுகளையும் குடிமக்கள் அறிந்து கொள்ளுகிறார்கள்.
10.
ஊடகம் என்பது ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளக்கூடிய சாதனமாகும்.
11.
1. ஊடகம் மக்களை விழிப்போடு இருக்கச் செய்கிறது. மேலும் சமூகமாற்றத்திற்கான மிகமுக்கிய சாதனமாகவும் இருக்கிறது.
2. ஊடகம் உலகின் அன்றாட நிகழ்வுகளை மட்டுமல்லாமல் ஒரு அரசின் பலம் மற்றும் பலவீனத்தை வெளிக்கொண்டு வருகிறது.
3. தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை மக்களிடம் விளம்பரப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
4. அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் தேசிய மற்றும் பன்னாட்டு செய்திகளை ஒளிபரப்புகின்றன, மேலும் பல திரைப்படங்களில் சமூகப் பிரச்சனைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
5. ஊடகம் சமூக அரசியல் பிரச்சனைகளுக்கெதிராகவும், சமூக அநீதிக்கு எதிராகவும் போராடுகிறது.
6. மேலும், இது மக்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
12.
ஜனநாயகத்தில் ஊடகத்தில் பங்கு:
1. ஊடகமானது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும்.
2. நமது ஜனநாயக சமுதாயத்தில் ஊடகம் பொதுமக்களின் கருத்துக்களைச் செயல்படுத்தும் உந்து சக்தியாகும்.
3. இது ஜனநாயகத்தின் மதிப்புகளை பலப்படுத்துகிறது.
4. இது மக்களுக்கு அறிவையும் வலிமையையும் அளிக்கிறது.
5. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மேலும் அரசின் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்பினையும் உறுதிசெய்கிறது.
6. அரசின் ஒவ்வொரு செயலையும் மக்களிடம் எடுத்துச்செல்கிறது.
7. இதன் மூலம் குடிமக்கள் அரசின் செயல்பாடுகளையும், அன்றாட நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளுகிறார்கள்.
8. மேலும் ஊடகம் அரசாங்கத்தை கண்காணிக்கும் பணியையும் செய்கிறது.
9. ஊடகம் இல்லாத ஜனநாயகம் என்பது சக்கரம் இல்லாத வாகனத்திற்கு ஒப்பாகும்.
13.
1. ஊடகம் மிகவும் அவசியம், ஏனெனில் இவ்வுலகில் ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த கட்டமைப்பு ஆகும்.
2. இது நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார செயல்பாடுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழுகிறது.
3. இதனை மக்கள் பல்வேறு தேவைகளுக்காக சார்ந்து இருக்கின்றனர். குறிப்பாக தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கிற்காக சார்ந்துள்ளனர்.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards