7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/10/2019
Term 2 முகலாயப் பேரரசு
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
பீர்பால்
ராஜா பகவன்தாஸ்
இராஜ தோடர்மால்
இராஜா மான்சிங்
2.
மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஷெர்ஷா
அக்பர்
ஜஹாங்கீர்
ஷாஜஷான்
3.
ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?
பாபர்
ஹிமாயூன்
இப்ராஹிம் லோடி
ஆலம்கான்
4.
அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?
பானிபட்
செளசா
ஹால்டிகட்
கன்னோசி
5.
இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஹூமாயூன்
பாபர்
ஜஹாங்கீர்
அக்பர்
6.
ஹிமாயூன் 1555இல் டெ ல்லியை மீண்டும் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிடுக.
7.
1526 இல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழலை எழுதுக.
8.
அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.
9.
முகலாயர்களின் நிலவருவாய் முறையைப் பற்றி விவரி.
10.
முகலாயர் ஆட்சியில் ஷாஜகானின் காலத்தை மற்ற முகலாய ஆட்சியாளர்களோடு ஒப்பிடுக.
11.
முகலாயப் பேரரசில் அக்பர் மற்றும் ஔரங்கசீப்பின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும், முகலாயர்களின் முக்கிய போர்களைக் குறிக்கவும்
1.
(c)
இராஜ தோடர்மால்
2.
(b)
அக்பர்
3.
(b)
ஹிமாயூன்
4.
(c)
ஹால்டிகட்
5.
(b)
பாபர்
6.
பாரசீக அரசர், சபாவிட் வம்சத்தைச் சேர்ந்த ஷா - தாமஸ்ப் என்பவரின் உதவியால் 1555-ல் டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.
7.
1. டெல்லி சுல்தான் இப்ராகிம்லோடியைப் பதவியை விட்டு நீக்க, தௌலக்கான் லோடியின் வேண்டுகோளையேற்று பாபர் டெல்லியின் மீது படையெடுத்தார்.
2. 1526 இல் நடைபெற்ற புகழ்பெற்ற முதலாம் பானிப்பட் போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து டெல்லியையும், ஆக்ராவையும் கைப்பற்றினார்.
3. இவ்வாறு முகலாய வம்சத்தின் ஆட்சி ஆக்ராவைத் தலைநகரமாகக் கொண்டு துவங்கியது.
8.
1. அக்பர் கல்வியைப் பெரிதும் ஆதரித்தார். அவருடைய சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன.
2. பல்வேறு விதமான நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் கொண்டிருந்த அறிஞர்களை அவர் ஆதரித்தார்.
3. அபுல் பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான் -இ - கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா பகவன் தாஸ், ராஜா மான் சிங் ஆகியோர் அக்பரின் அவையில் இடம் பெற்றிருந்தனர்.
4. பாடலாசிரியரும் இசை மேதையுமான தான்சேன், ஓவியர் தஷ்வந் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்தனர்.
9.
முகலாயர்களின் நிலவருவாய் நிர்வாகம்:
1. அக்பரின் ஆட்சியின் போது நிலவருவாய் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.
2. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் ஷெர்ஷா அறிமுகம் செய்த முறையைப் பின்பற்றினார்.
3. இம்முறையின் படி நிலங்கள் அளவை செய்யப்பட்டு அவற்றின் இயல்புக்கும் வளத்திற்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன.
4. பத்தாண்டு காலத்திற்குச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு (1/3) அரசுக்கு வரியாகச் செலுத்தப்பட வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது.
5. முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை ஜாகீர் எனப் புதிய பெயரிட்டுச் செயல்படுத்தினர்.
6. இந்நிலவுரிமை ஒப்பந்த காலமுறை டெல்லி சுல்தான்களின் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதாகும்.
7. ஜமீன்தார்கள் முகலாய அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோரின் உதவியுடன் நிலவரியை வசூல் செய்தனர்.
10.
1. முகலாயப் பேரரசும் அதன் புகழும் ஷாஜகான் காலத்தில் உச்சத்தை எட்டியது.
2. பேரரசர் அமர்வதற்காக விலையுயர்ந்த நவரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட மயிலாசனம் தயாரிக்கப்பட்டது.
3. யமுனை நதிக்கரையில் உலகப்புகழ்பெற்ற தாஜ்மகால் எழுப்பப்பட்டது.
4. மேலும் ஆக்ராவில் உள்ள முத்து மசூதி, டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதி, செங்கோட்டை ஆகியவை ஷாஜகானால் கட்டப்பட்டது.
5. திவான் -இ-காஸ், திவான் -இ- ஆம், பஞ்ச்மஹால், ரங்மஹால், புலந்தர்வாசா, போன்றவை அக்பர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டவையாகும்.
6. ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் கட்டடக்கலை பெரிய அளவிலான ஆதரவைப் பெறவில்லை.
11.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards