7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 02/11/2019
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ஊடகத்தின் ஏதாவது இரண்டு பொறுப்புகளைக் கூறுக
2.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் நிரூபிக்கவும்
3.
சட்டமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?
4.
ஊடகம் என்றால் என்ன?
5.
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் யார்?
6.
லோக் அதாலத் பற்றி எழுதுக.
7.
எதிர்க்கட்சியினர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
8.
மாநில ஆளுநராவதற்கான தகுதிகள் யாவை?
9.
1761 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர்.
10.
சாம்பாஜிக்கு எதிராக முகலாய இராணுவத்தின் தாக்குதல்.
11.
மராத்தியர்களின் வருவாய் நிர்வாகத்தில் காமவிஸ்தரின் பங்கு.
12.
சௌத் மற்றும் சர்தேஷ்முகி.
13.
மராத்தியர்களிடத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்.
14.
மன்சப்தாரி முறையைப் பற்றிக் குறிப்பு வரைக.
15.
ஹிமாயூன் 1555இல் டெ ல்லியை மீண்டும் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிடுக.
16.
1526 இல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழலை எழுதுக.
17.
அலாவுதீன் ஹசன் ஷா கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைக் கூறுக
18.
தக்காண சுல்தானத்தின் ஐந்து சுதந்திர அரசுகள் யாவை?
19.
விஜயநகர அரசின் அரசமைப்பு முறையைப் பற்றி எழுதுக.
20.
விஜயநகர் பேரரசின் நான்கு வம்சங்களின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களை எழுதுக.
1.
1. ஊடகம் மக்களுக்கு தேவையான தகவல்களை சேகரிப்பதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறது.
2. அதே சமயம் எந்த விதத்திலும் மக்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் இருத்தல் கூடாது.
3. நம்பகத் தன்மையான தகவல்களை மக்களிடம் வழங்குவதில் பொறுப்புடன் செயல்படவேண்டும்.
2.
1. சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகம் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகக் கருதப்படுகிறது.
2. ஊடகம் மற்று மூன்று துறை செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது.
3. இந்த நான்காவது தூண் நாட்டின் தொலை தூரப்பகுதிகளில் வாழும் அனைத்து மக்களும் நாட்டின் பிறபகுதிகளில் என்ன நடக்கிறது என அறிய உதவுகிறது.
3.
1. ஊடகம் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் மக்களிடம் எடுத்துச் செல்கிறது.
2. இதன் மூலம் சட்டமன்ற செயல்பாடுகளையும் அரசின் அன்றாட நிகழ்வுகளையும் குடிமக்கள் அறிந்து கொள்ளுகிறார்கள்.
4.
ஊடகம் என்பது ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளக்கூடிய சாதனமாகும்.
5.
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் ஆளுநர் ஆவார்.
6.
திருமணம் அல்லது குடும்பம் தொடர்பாக எழும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைக்கும் குடும்ப நல நீதிமன்றங்கள் 'லோக் அதாலத்' என அழைக்கப்படுகின்றன.
7.
ஆளும் கட்சியைச் சேராத வேறு பல கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினர் என அழைக்கப்படுவர்.
8.
1. இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
2. 35 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
3. வாழ்வில் சிறந்த நிலையில் இருக்க வேண்டும்.
4. எவ்வித வருவாய் தரும் எந்தவொரு அரசு பதவியிலும் இருக்கக் கூடாது.
9.
1. மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 இல் டெல்லிக்கு அருகேயுள்ள பானிப்பட்டில் முடிந்தது.
2. 1761 இல் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போரைப் பீரங்கி படைகள் தீர்மானித்தன.
3. தப்பிப் பிழைத்த மராத்திய வீரர்கள் பானிப்பட்டிலிருந்து மகாராஷ்டிரா திரும்பி நடந்ததைக் கூற ஆறுமாத காலமானது.
10.
1. 1687 இல் பீஜப்பூர், கோல்கொண்டா ஆகிய இரு சுல்தானியங்களும் ஔரங்கசீப்பிடம் வீழ்ந்தன.
2. முகலாயப் படைகள் சாம்பாஜியைக் கைது செய்த போது கவிகலேஷீம் உடனிருந்தார்.
3. ஆகவே இருவரும் ஔரங்கசீப்பின் கட்டளையின் படி அனைத்து வகைப்பட்ட சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
11.
1. பேஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தார் என்னும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது.
2. அவர் பேஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார்.
3. கப்பமோ வரியோ வசூலிக்கப்பட வேண்டிய பகுதியில் பாதுகாப்பிற்காக சில வீரர்கள் அடங்கிய படைப்பிரிவை வைத்துக் கொள்ள இவர் அதிகாரம் பெற்றிருந்தார்.
12.
1. சௌத் - மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு, பாதுகாப்புக் கட்டணமாக வரி செலுத்த வேண்டும்.
2. சர்தேஷ்முகி பத்தில் ஒரு பங்கு, அரசருக்கான கட்டணமாக வரி செலுத்த வேண்டும்.
13.
1. மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
2. மேலும், மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாகச் சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.
14.
1. மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகம் செய்தார்.
2. இம்முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே பணியாக மாற்றப்பட்டன.
15.
பாரசீக அரசர், சபாவிட் வம்சத்தைச் சேர்ந்த ஷா - தாமஸ்ப் என்பவரின் உதவியால் 1555-ல் டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.
16.
1. டெல்லி சுல்தான் இப்ராகிம்லோடியைப் பதவியை விட்டு நீக்க, தௌலக்கான் லோடியின் வேண்டுகோளையேற்று பாபர் டெல்லியின் மீது படையெடுத்தார்.
2. 1526 இல் நடைபெற்ற புகழ்பெற்ற முதலாம் பானிப்பட் போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து டெல்லியையும், ஆக்ராவையும் கைப்பற்றினார்.
3. இவ்வாறு முகலாய வம்சத்தின் ஆட்சி ஆக்ராவைத் தலைநகரமாகக் கொண்டு துவங்கியது.
17.
1. பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் ஹசன் ஷா, அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதிகளில் ஒருவரான ஜாபர்கான் என்பவரின் முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார். அவர் அரசரான பின்னர் தமது மகன்கள் கல்வி கற்பதற்காக ஒரு பள்ளியை நிறுவுவதில் சிறப்பு கவனம் செலுத்தினார்.
2. அவருடைய மகன் முதலாம் முகமது கல்வி கற்பதை ஆதரித்தவராவார்.
3. பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் போர்வீரர்களுக்கான கலைகளில் பயிற்சி பெறுவதற்காகப் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தினார்.
18.
1. அகமதுநகர்
2. கோல்கோண்டா
3. பீஜப்பூர்
4. பீடார்
5. பீரார்
19.
பேரரசு பல்வேறு மண்டலங்கள் (மாநிலம்), நாடுகள் (மாவட்டங்கள்). ஸ்தலங்கள் (வட்டங்கள்). கிராமங்கள் என பிரிக்கப்பட்டிருந்தது.
20.
1) சங்கம வமிசம் - இரண்டாம் தேவராயர்
2) சாளுவ வமிசம் - சாளுவ நரசிம்மர்
3) துளுவ வமிசம் - கிருஷ்ண தேவராயர்
4) ஆரவீடு வமிசம் - திருமலை தேவராயர்
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards