7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/10/2019
Term 2 விஜயநகர், பாமினி அரசுகள்
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
அலாவுதீன் ஹசன்விரா
முகம்மது – I
சுல்தான் பெரோஸ்
முஜாஹித்
2.
மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
சாளுவ நரசிம்மர்
இரண்டாம் தேவராயர்
குமார கம்பண்ணா
திருமலைதேவராயர்
3.
சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
ராமராயர்
திருமலதேவராயா
இரண்யம் தேவராயர்
இரண்டாம் விருபாக்சராயர்
4.
விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
யானை
குதிரை
பசு
மான்
5.
அலாவுதீன் ஹசன் ஷா கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைக் கூறுக
6.
விஜயநகர அரசின் அரசமைப்பு முறையைப் பற்றி எழுதுக.
7.
விஜயநகர் பேரரசின் நான்கு வம்சங்களின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களை எழுதுக.
8.
கிருஷ்ண தேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுக.
9.
விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.
10.
விஜயநகர் மற்றும் பாமினி அரசுகளின் எல்லைகளைக் குறிப்பிடுக.
1.
(c)
சுல்தான் பெரோஸ்
2.
(c)
குமார கம்பண்ணா
3.
(d)
இரண்டாம் விருபாக்சராயர்
4.
(b)
குதிரை
5.
1. பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் ஹசன் ஷா, அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதிகளில் ஒருவரான ஜாபர்கான் என்பவரின் முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார். அவர் அரசரான பின்னர் தமது மகன்கள் கல்வி கற்பதற்காக ஒரு பள்ளியை நிறுவுவதில் சிறப்பு கவனம் செலுத்தினார்.
2. அவருடைய மகன் முதலாம் முகமது கல்வி கற்பதை ஆதரித்தவராவார்.
3. பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் போர்வீரர்களுக்கான கலைகளில் பயிற்சி பெறுவதற்காகப் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தினார்.
6.
பேரரசு பல்வேறு மண்டலங்கள் (மாநிலம்), நாடுகள் (மாவட்டங்கள்). ஸ்தலங்கள் (வட்டங்கள்). கிராமங்கள் என பிரிக்கப்பட்டிருந்தது.
7.
1) சங்கம வமிசம் - இரண்டாம் தேவராயர்
2) சாளுவ வமிசம் - சாளுவ நரசிம்மர்
3) துளுவ வமிசம் - கிருஷ்ண தேவராயர்
4) ஆரவீடு வமிசம் - திருமலை தேவராயர்
8.
கிருஷ்ணதேவராயர்:
1. துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் கிருஷ்ணதேவராயர். இவர் இருபது ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
2. ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவதே அவரின் முதற்கட்ட தலையாயப் பணியாக இருந்தது.
3. இம்முயற்சியில் வெற்றிபெற்ற பின்னர் குல்பர்காவைக் கைப்பற்றுவது அவரின் இரண்டாவது இலக்கானது.
4. இச்சமயத்தில் பாமினி சுல்தான் முகமதுஷா, அவருடைய அமைச்சரால் பதவி பறிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தார்.
5. மேலும், போர்த்துகீசியப் பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை கிருஷ்ண தேவராயர் எளிதாகத் தோற்கடித்தார். தொடர்ந்து பீஜப்பூர் சுல்தானிடமிருந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்.
சிறந்த கட்டட வல்லுநர்:
1. கிருஷ்ண தேவராயர் மழைநீரைச் சேமிப்பதற்காகப் பெரிய நீர்ப்பாசன குளங்களையும், நீர்த் தேக்கங்களையும் உருவாக்கினார்.
2. இவர் தமது தலைநகரான ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில், ஹசாரா கோவில், விட்டலாசுவாமி கோவில் போன்ற புகழ்பெற்ற கோவில்களை கட்டினார்.
3. கிருஷ்ண தேவராயர் கலை, இலக்கியத்தை ஆதரித்தார்.
4. அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் அவரின் அவையை அலங்கரித்தனர்.
9.
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள்:
1. 1565 -ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போர் விஜயநகர அரசின் வீழ்ச்சிக்கு முழு காரணமாகும்.
2. தக்காண சுல்தான்களின் கூட்டுப்படை விஜயநகரப் படைகளைத் தோற்கடித்தன.
3. விஜய நகரம் கொள்ளையிடப்பட்டு அனைத்து கட்டடங்கள். அரண்மனைகள், கோவில்கள், சிற்பங்கள் அழிக்கப்பட்டன. மேலும் பயங்கரமான மனிதப் படுகொலைகளும் நடந்தன.
4. இறுதியாக விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டது.
பாமினி சுல்தான்களின் பங்களிப்பு:
1. கட்டடக் கலைக்கு பாமினி சுல்தான்களின் பங்களிப்பை குல்பர்காவில் காணலாம்.
2. குல்பர்கா, பீடார், தௌலதாபாத் மற்றும் காண்டகார் ஆகிய இடங்களில் கல்விக் கூடங்களை நிறுவி கல்வி கற்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தினர்.
10.

7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards