7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 27/02/2020
7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 7th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions All Chapter 2019-2020 )
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு வட்டத்தின் சுற்றளவு 132 மீ எனில், அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க. (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
2.
தரமான கலைக் காகிதம் (art paper) 0.05 மி.மி தடிமனும் மேல் பூச்சு பூசிய காகிதம் (matte coated paper) 0.09 மி.மீ தடிமனும் உள்ளது எனில், எந்தக் காகிதம் அதிக தடிமன் உடையது எனக் கண்டறிக?
3.
6 செ.மீ நீளமுள்ள AB என்ற கோட்டுத்துண்டிற்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக
4.
பரப்பளவு 352 ச.செ.மீ மற்றும் இரு இணைப்பாக்களுக்கிடையேயான தொலைவு 16 செ.மீ கொண்ட சரிவகத்தின் இணைப் பக்கங்களில் ஒன்றின் அளவு 25 செ.மீ எனில், மற்றொன்றைக் காண்க.
5.
கீழ்க்கண்ட சமன்பாடுகளிலுள்ள பண்புகளைக் குறிப்பிடுக.
(i) (-45)+ (-12) = -57
(ii) (-15) + 7 = (7)+ (-15)
(iii) -10 + 3 = -7
(iv) (-7) + (-5) = (-5) + (-7)
(v) (-7) + [(-4) + (-3)] = [(-7) + (-4)] + (-3)
(vi) 0 + (-7245) = -7245
6.
கூட்டுக
(i) (–40) மற்றும் (30)
(ii) 60 மற்றும் (–50)
7.
கொடுக்கப்பட்டுள்ள காட்சிப் பேழையில் நாற்சதுர இணை வடிவங்களைக் கண்டு பிடித்து, ஜியோ பலகையில் ரப்பர்பட்டை (rubberband)யைப் பயன்படுத்தி மேலே கண்ட வடிவங்களை வடிவமைத்துக் காட்டுக.
8.
x = 3, y = 2 எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக் காண்க.
(i) 4x + 7y
(ii) 3x + 2y − 5
(iii) x − y
9.
ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் முறையே 12 செ.மீ மற்றும் 9 செ.மீ சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 8 செ.மீ எனில் பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.
10.
ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள். அதே மகிழுந்து 210 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
11.
வட்டப்பாதையின் அகலம் காணும் சூத்திரம்
( L − l ) அலகுகள்
( B − b ) அலகுகள்
( R − r ) அலகுகள்
( r − R ) அலகுகள்
12.
ஆரம் ‘n’ அலகுகள் உடைய வட்டத்தின் பரப்பளவு
2\(\pi \)r2 ச. அலகுகள்
\(\pi \)m2ச. அலகுகள்
\(\pi \)r2 ச. அலகுகள்
\(\pi \)n2 ச. அலகுகள்
13.
C = 2\(\pi \)r என்னும் சூத்திரத்தில், ‘r’ என்பது
சுற்றளவு
பரப்பளவு
சுழற்சி
ஆரம்
14.
1.7 எந்த இரு எண்களுக்கிடையில் அமைந்துள்ளது?
2, 3
3, 4
1, 2
1, 7
15.
0.009 = ______
0.90
0.090
0.00900
0.900
16.
\(\frac { 3 }{ 5 } \)=_____
0.06
0.006
6
0.6
17.
85.073 என்ற எண்ணில் 3 இன் இடமதிப்பு _______
பத்தில் ஒன்று
நூறில் ஒன்று
ஆயிரம்
ஆயிரத்தில் ஒன்று
18.
(-16) ÷ 4 இக்கு சமமானது எது?
-(-16 ÷ 4)
-(16) ÷ (-4)
16 ÷ (-4)
-4 ÷ 16
19.
(-12) x (-9) = _____
108
–108
+1
–1
20.
(5 x 2) + (5 x 5) = 5 x (2 + 5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?
பரிமாற்றுப் பண்பு
அடைவுப் பண்பு
பங்கீட்டுப் பண்பு
சேர்ப்புப் பண்பு
21.
3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.
n
2n
3n
4n
22.
∠BOC-ன் மதிப்பு
90˚
180˚
80˚
100˚
23.
ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல்
360˚
180˚
90˚
0˚
24.
அடுத்தடுத்த கோணங்களுக்கு
பொதுவான உட்பகுதி இல்லை; பொதுவான கதிர் இல்லை; பொதுவான முனை இல்லை
ஒரு பொதுவான முனை, ஒரு பொதுவான கதிர், பொதுவான உட்பகுதி உண்டு
ஒரு பொதுவான கதிர், பொதுவான முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை
ஒரு பொதுவான கதிர் உண்டு, பொதுவான முனை, பொதுவான உட்பகுதி இல்லை
25.
(-100) - 0 + 100
200
0
100
-200
26.
20 + (-9) + 9 =____
20
29
11
38
27.
3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்
mn
−mn
2mn
3mn
28.
பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலை விட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு
12 செ.மீ
8 செ.மீ
4 செ.மீ
20 செ.மீ
29.
இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு
64 ச.செ.மீ
32 ச.செ.மீ
30 ச.செ.மீ
16 ச.செ.மீ
30.
−7mn என்னும் உறுப்பின் எண்கெழு
7
-7
p
-p
31.
ஓர் இணைகரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிப்பக்கம் உயரத்தைப் போல் மூன்று மடங்கு எனில், அதன் பரப்பளவு
64 செ.மீ
192 செ.மீ
32 செ.மீ
32 செ.மீ
32.
ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.
150
70
100
147
33.
மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ரூ.75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ரூ.105 இக்கு ______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார்
6
7
8
5
34.
கீழ்க்காணும் பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
\(\frac { 9 }{ 1000 } \)
35.
l ஆனது m இக்கு இணை எனில், படத்தில் x மற்றும் y இன் மதிப்புகளைக் காண்க

36.
கலைவிழி கலந்துகொண்ட ஒருபோட்டி தேர்வில் சரியான விடைக்கு 4 மதிப்பெண்களும், தவறான விடைக்கு –2 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. அவள் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தாள். அவற்றுள் பத்துச் சரியான விடைகள் இருந்தபோதிலும், அவளால் 20 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது எனில், அவள் எழுதிய தவறான விடைகள் எத்தனை
37.
ஓர் அலுவலகக் கட்டிடத் தரையில் 200 சாய்சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள் 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், தரையை மெருகூட்டச் சதுரமீட்டருக்கு ரூ. 45 வீதம் மொத்தச் செலவைக் காண்க.
38.
60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
39.
24 மீ நீளமும், 15 மீ அகலமும் உள்ள ஒரு வயல்வெளிக்கு உட்புறம் 1 மீ அகலமுள்ள வாய்க்கால் வெட்டப்படுகிறது எனில், ஒரு ச.மீ - க்கு ரூ.12 வீதம் வாய்க்கால் அமைக்க ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக.
40.
4.9 மீ நீளமுள்ள ஒரு கயிற்றால் ஓர் ஆடு கட்டப்பட்டுள்ளது எனில், ஆடு மேயக்கூடிய அதிகபட்சப் பகுதியின் பரப்பளவைக் கணக்கிடுக.

41.
கீழ்க்காணும் எண்களை ஒப்பிட்டுச் சிறிய எண்ணைக் கண்டுபிடி.
0.99, 1.9
42.
கீழ்க்கண்ட தசம எண்களை இடமதிப்பு அட்டவணையில் எழுதுக.
19.54
43.
படத்தில் காட்டியுள்ள ABCD என்ற இணைகரத்தின் பரப்பளவு 1470 ச.செ.மீ. AB = 49 செ.மீ, AD = 35 செ.மீ எனில், BE மற்றும் DF ஆகியவற்றின் அளவைக் காண்க.

44.
கீழே கொடுக்கப்பட்ட அளவுள்ள கோட்டுத்துண்டுகளை வரைக. மேலும் ஒவ்வொரு கோட்டுத் துண்டிற்கும், அளவு கோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்திச் செங்குத்து இரு சமவெட்டி வரைக.
(i) 8 செ.மீ
(ii) 7 செ.மீ
(iii) 5.6 செ.மீ
(iv) 10.4 செ.மீ
(v) 58 மி.மீ
45.
-70 + 20 = [] - 10
46.
பின்வரும் படம் ஒவ்வொன்றிலும் y இன் மதிப்பைக் காண்க.

47.
(-20) இல் எத்தனை (–4) உள்ளது?
48.
x + 3y, 2x + y, x − y ஆகியனவற்றைப் பக்கங்களாகக் கொண்ட முக்கோணத்தின் சுற்றளவு காண்க.
49.
3ab + 8 லிருந்து −3ab −8 ஐக் கழிக்க. மேலும், −3ab-8 லிருந்து 3ab + 8 ஐக் கழிக்க
50.
ஐந்து நாற்சதுர இணைகளை இருமுறை பயன்படுத்தி 8 x 5 வரிசையமைப்புடைய செவ்வகத்தை நிரப்புக.
51.
பரப்பளவு 1586 ச.செ.மீ உம், உயரம் 26 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் இணைப்பக்கங்கள் ஒன்றின் அளவு 84 செ.மீ எனில், மற்றொன்றின் அளவைக் காண்க.
52.
கொடுக்கப்பட்ட பாதை வரைபடத்தைப் பயன்படுத்தி மண்டபத்திலிருந்து விவேகானந்தர் நினைவில்லத்திற்குச் செல்லக்கூடிய மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக் காண்க.
53.
கொடுக்கப்பட்டுள்ள, எண்களால் நிரப்பட்டுள்ள நாற்சதுர இணைகளைப் பயன்படுத்தி மாயசதுரத்தை உருவாக்கவும்?
54.
ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?
55.
6 பழரசப் பாட்டில்களின் விலை ரூ.210 எனில், 4 பழரசப் பாட்டில்களின் விலை என்ன?
56.
நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12 கி.மீ/மணி ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு ?
57.
ஒரு குழி வெட்ட 10 இயந்திரங்கள் 60 நாள்கள் எடுத்துக்கொள்கின்றன. அனைத்து இயந்திரங்களும் ஒரே வேகத்தில் வேலை செய்கின்றன எனில், 30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட எத்தனை நாள்களாகும்?
1.
வட்டத்தின் சுற்றளவு C = 2πr அலகுகள்
\(\frac { C }{ 2\pi } \) = r
கொடுக்கப்பட்ட வட்டத்தின் சுற்றளவு = 132 மீ
r = \(\frac { 132 }{ 2\times \frac { 22 }{ 7 } } \)
=\(\frac { 132 }{ 2 } \times \frac { 7 }{ 22 } \)
எனவே , ஆரம் r = 21 மீ
விட்டம் d = 2r
= 2 x 21
= 42 மீ
2.
0.05 மற்றும் 0.09 ஐ ஒப்பிடுக.
மேற்கண்ட படிகளைக்கையாள, முழு எண் பகுதி மற்றும் பத்தில் ஒன்றாம் இலக்கம் இரண்டும் சமமானவை . நூறில் ஒன்றாம் இலக்கங்களை ஒப்பிட 5 < 9. எனவே , 0.05 < 0.09.
இதுவரை நாம் இரண்டு தசம எண்களின் ஒப்பீடு பற்றிக் கண்டோம். இதனை மேலும் இரண்டுக்கு மேற்பட்ட தசம எண்களுக்கு விரிவுபடுத்த , தசம எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தி எழுத இயலும்.
3.
படி 1: ஒரு நேர்கோட்டை வரைக. அதன் மீது A மற்றும் B என்ற புள்ளிகளை AB = 6 செ.மீ என்றவாறு குறிக்க.

படி 2: Aவை மையமாகக் கொண்டு, AB இன் நீளத்தின் அரை பங்கைவிட அதிகமான ஆரமுடைய வட்டவில்களை AB இக்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக

படி 3: B ஐ மையமாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் கூடிய வட்டவில்களை படி-2 இல் வரைந்த வட்டவில்களை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளிகளுக்கு C மற்றும் D எனப் பெயரிடுக.

படி 4: C மற்றும் D ஆகியவற்றை இணைக்கவும். CD ஆனது AB ஐ வெட்டும் புள்ளியை O எனக் குறிக்க. CD ஆனது AB இன் செங்குத்து இரு சமவெட்டி ஆகும். கோணம் ∠AOC ஐ அளவீடு செய்க. மேலும் OA மற்றும் OB இன் நீளங்களை அளந்து பார்க்கவும்
4.

தேவைப்படும் பக்கத்தின் நீளம் 'x' செ.மீ என்க.
கொடுக்கப்பட்ட அளவுகள் உயரம்(h) = 16 செ.மீ, a = 25 செ.மீ
சரிவகத்தின் பரப்பளவு = \(\cfrac { 1 }{ 2 } \times h(a+b)\) ச.அலகுகள்
= \(\cfrac { 1 }{ 2 } \times 16(25+x)\)
= 200+8x
\(\cfrac { 1 }{ 2 } \times h\left( a+b \right) =352\)ச.செ.மீ (கொடுக்கப்பட்டுள்ளது)
200 + 8x = 352
-8x = 352 - 200
-8x = 152
\(-x=\cfrac { 152 }{ 8 } \)
-x = 19
எனவே, மற்றொரு இணைப்பக்கத்தின் அளவு 19 செ.மீ ஆகும்.
5.
(i) அடைவுப் பண்பு
(ii) பரிமாற்றுப் பண்பு
(iii) அடைவுப் பண்பு
(iv) பரிமாற்றுப் பண்பு
(v) சேர்ப்புப் பண்பு
(vi) கூட்டல் சமனி
6.
(i) (–40) மற்றும் (30)
–40 + 30 = –10
(ii) 60 மற்றும் (–50)
60 + (–50) = 60 – 50 = 10
7.
8.
i) 4x + 7y = 4 (3) + 7 (2) = 12 + 14 = 26
ii) 3x + 2y – 5 = 3 (3) + 2 (2) – 5 = 9 + 4 – 5 = 8
iii) x – y = 3 – 2 = 1
9.

இணைகரத்தின் அடுத்துள்ள பக்கங்கள் 12 செ.மீ மற்றும் 9 செ.மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் சிறிய பக்கத்தை அடிப்பக்கமாகக் கொண்டால், அதாவது
b = 9 செ.மீ எனில், சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு அதாவது h = 8 செ.மீ
எனவே இணைகரத்தின் பரப்பு = b x h ச.அலகுகள்
= 9 x 8 = 72 ச.செ.மீ.

நாம் பெரிய பக்கத்தை அடிப்பக்கமாகக் கொண்டால், அதாவது b = 12 செ.மீ. எனில், பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவை ‘h‘ என்க.
ஆகவே, இணைகரத்தின் பரப்பளவு = 72 ச.செ.மீ
b x h = 72
12 x h = 72
\(h=\cfrac { 72 }{ 12 } =16\)
எனவே,பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 6 செ.மீ ஆகும்.
10.
90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் = 2 மணி 30 நிமிடங்கள்
= 150 நிமிடங்கள்
1 மணி = 60 நிமிடங்கள்
2 மணி = 120 நிமிடங்கள்
1 கி.மீ தூரத்தைக் கடக்க ஆகும் நேரம் = \(\frac { 150 }{ 90 } \) நிமிடங்கள்
210 கி.மீ தூரத்தைக் கடக்க ஆகும் நேரம் = \(\frac { 150 }{ 90 } \) x 210 நிமிடங்கள்
= 350 நிமிடங்கள் = \(\frac { 350 }{ 60 } \)
= 5 மணி 50 நிமிடங்கள்
ஆகவே, 210 கி.மீ தூரத்தைக் கடக்க மகிழுந்து எடுத்துக்கொள்ளும் நேரம் 5 மணி 50 நிமிடங்கள்.
11.
(c)
( R − r ) அலகுகள்
12.
(d)
\(\pi \)n2 ச. அலகுகள்
13.
(d)
ஆரம்
14.
(c)
1, 2
15.
(c)
0.00900
16.
(d)
0.6
17.
(d)
ஆயிரத்தில் ஒன்று
18.
(c)
16 ÷ (-4)
19.
(a)
108
20.
(c)
பங்கீட்டுப் பண்பு
21.
(c)
3n
22.
(c)
80˚
23.
(a)
360˚
24.
(c)
ஒரு பொதுவான கதிர், பொதுவான முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை
25.
(b)
0
26.
(a)
20
27.
(b)
−mn
28.
(b)
8 செ.மீ
29.
(b)
32 ச.செ.மீ
30.
(b)
-7
31.
(b)
192 செ.மீ
32.
(d)
147
33.
(b)
7
34.
\(\frac { 9 }{ 1000 } \) இல் பத்தில் ஒன்று, நூறில் ஒன்றின் இடமதிப்பு பூஜ்ஜியம்
எனவே , \(\frac { 9 }{ 1000 } \) = 0.009.
35.
ஆனது m இக்கு இணை எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
y = 2x [குத்தெதிர்க் கோணங்கள் சமம்]
y + 4x = 180˚ [குறுக்குவெட்டியில் ஒரே பக்கம் அமைந்த உட் கோணங்களின் கூடுதல்]
2x + 4x = 180˚ [y = 2x என்பதால்]
6x = 180˚
இருபுறமும் 6 ஆல் வகுக்க
\(\frac{6x}{6}=\frac {180^o}{6}\) ஆகவே, x = 30˚.
இப்போது , y = 2(30˚) = 60˚.
36.
ஒரு சரியான விடைக்கான மதிப்பெண்கள் = 4
பத்துச் சரியான விடைக்கான மதிப்பெண்கள் = 10 x 4 = 40
கலைவிழி பெற்ற மதிப்பெண்கள் = 20
எனவே, தவறான விடைக்காகப் பெற்ற மதிப்பெண்கள் = 40 − 20 = 20
ஒரு தவறான விடைக்கு மதிப்பெண்கள் = − 2
எனவே, தவறாக விடையளித்த வினாக்களின் எண்ணிக்கை = 20 ÷ 2 = 10
37.
சாய்சதுர வடிவிலான ஓடுகளின் மூலைவிட்டங்களின் நீளங்கள் முறையே, 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், d1 = 40 செ.மீ, d2 = 25 செ.மீ
ஒரு சாய்சதுர வடிவ ஓட்டின் பரப்பளவு = \(\cfrac { 1 }{ 2 } \times \left( { d }_{ 1 }\times { d }_{ 2 } \right) \) ச.அலகுகள்
= \(\cfrac { 1 }{ 2 } \times 40\times 25\)
= 500 ச.செ.மீ
எனவே 200 ஓடுகளின் பரப்பளவு = 200 x 500 ச.செ.மீ
= 100000 செ.மீ
= \(\cfrac { 100000 }{ 10000 } \)(1 ச.மீ = 10000 ச.செ.மீ)
= 10 ச.மீ
தரையை மெருகூட்ட 1 ச.மீ க்கு ஆகும் Rs 4.
எனவே, மொத்த செலவு = 10 x 45 = ரூ. 450
38.
தேவையான நாட்களின் எண்ணிக்கையை x என்க
வேலையாட்களின் எண்ணிக்கை குறைவதால் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இது எதிர் விகிதம் ஆகும்
எனவே x1y1 = x2y2
| வேலையாட்களின் எண்ணிக்கை | 60 | 42 |
| நாட்களின் எண்ணிக்கை | 7 | x |
ஆதலால், \(60 \times 7=42 \times x\)
\(60 \times 7=42 \times x\)
x = \(\frac { 60\times 7 }{ 42 } \)
x = 10
ஆகவே, 42 வேலையாட்கள் 10 நாட்களில் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்றி முடிப்பார்கள்.
39.

வயலின் நீளம் (L) = 24 மீ
வயலின் அகலம் (B) = 15 மீ
வாய்க்காலின் பரப்பளவு = வெளிப்புறத்தின் பரப்பளவு - உட்புறத்தின் பரப்பளவு-
= L x B - l x b
= 24 x 15 - 22 x 13
= 360 - 286 = 74 மீ2
ஒரு ச.மீ-க்கு வாய்க்கால் அமைக்க ஆகும் செலவு =ரூ. 12
74ச.மீ-க்கு வாய்க்கால் அமைக்க ஆகும் செலவு = ரூ. 12 x 74
= ரூ. 888
40.
கொடுக்கப்பட்ட கயிற்றின் நீளம் ஆரம் = 4.9 மீ
ஆடு மேயக்கூடிய பரப்பளவு = \(\pi\)r2
\(=\frac{22}{7} \) x 4.9 x 4.9
= 75.46 மீ
41.
இவ்விரு தசமஎண்களின் முழுஎண்கள் பகுதிகளை ஒப்பிட
0 < 1
0.99 < 1.99
சிறிய எண் = 0.99
42.
| வ. எண் | தசம வடிவம் | நூறுகள் (100) | பத்துகள் (10) | ஒன்றுகள் (1) | பத்தில் ஒன்றுகள்\(\left( \frac { 1 }{ 10 } \right) \) |
நூறில் ஒன்றுகள்\(\left( \frac { 1 }{ 100 } \right) \) |
ஆயிரத்தில் ஒன்றுகள் \(\left( \frac { 1 }{ 1000 } \right) \) |
| 1 | 19.54 | 0 | 1 | 9 | 5 | 4 | 0 |
43.
படம் (i) லிருந்து,

DF என்பது உயரம் (h), AB என்பது அடிப்பக்கம் (b) இணைகரத்தின் பரப்பளவு = 1470 ச.செ.மீ
b x h = 1470
49 x h = 1470
\(h=\frac{1470}{49}=30\)
உயரம் (h) DF = 30 செ.மீ
படம் (ii) லிருந்து,

BE என்பது உயரம் (h), AD என்பது அடிப்பக்கம் (b) இணைகரத்தின் பரப்பளவு = 1470 ச.செ.மீ
b x h = 1470
35 x h = 1470
\( h=\frac{1470}{35}=42 \)
உயரம் (h) BE = 42 செ.மீ
44.
i) 8 செ.மீ
படி 1
ஒரு நேர்க்கோட்டை வரைக. அதன் மீது A மற்றும் B என்ற புள்ளிகளை AB = 8 செ.மீ என்றவாறு குறிக்க.
படி 2
Aவை மையமாகக் கொண்டு, ABயின் நீளத்தின் அரை பங்கைவிட அதிகமான ஆரமுடைய வட்டவில்களை AB இக்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக.
படி 3
Bஐ மையமாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் கூடிய வட்டவில்களைப் படி - 2 இல் வரைந்த வட்டவில்களை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளிகளுக்கு C மற்றும் D எனப் பெயரிடுக.
படி 4
C மற்றும் D ஆகியவற்றை இணைக்கவும்.
CD ஆனது AB ஐ வெட்டும் புள்ளியை O எனக் குறிக்க.
CD ஆனது AB யின் செங்குத்து இரு சமவெட்டி ஆகும்.

(ii) 7 செ.மீ
படி 1
ஒரு நேர்க்கோட்டை வரைக. அதன் மீது A மற்றும் B என்ற புள்ளிகளை AB = 7 செ.மீ என்றவாறு குறிக்க.
படி 2
7 செ.மீ B
A வை மையமாகக் கொண்டு, A.Bயின் நீளத்தின் அரை பங்கைவிட அதிகமான ஆரமுடைய வட்டவில்களை AB இக்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக.
படி 3
Bஐ மையமாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் கூடிய வட்டவில்களைப் படி - 2 இல் வரைந்த வட்டவில்களை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளிகளுக்கு C மற்றும் D எனப் பெயரிடுக.
படி 4
C மற்றும் D ஆகியவற்றை இணைக்கவும்.
CD ஆனது AB ஐ வெட்டும் புள்ளியை எனக் குறிக்க.
CD ஆனது AB யின் செங்குத்து இரு சமவெட்டி ஆகும்.

iii) 5.6 செ.மீ
படி 1
ஒரு நேர்க்கோட்டை வரைக. அதன் மீது A மற்றும் B என்ற புள்ளிகளை AB = 5.6 செ.மீ என்றவாறு குறிக்க.
படி 2
A வை மையமாகக் கொண்டு, ABயின் நீளத்தின் பங்கைவிட அரை அதிகமான ஆரமுடைய வட்டவில்களை AB இக்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக.
படி 3
Bஐ மையமாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் கூடிய வட்டவில்களைப் படி - 2 இல் வரைந்த வட்டவில்களை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளிகளுக்கு C மற்றும் D எனப் பெயரிடுக.
படி 4

C மற்றும் D ஆகியவற்றை இணைக்கவும்.
CD ஆனது AB ஐ வெட்டும் புள்ளியை எனக் குறிக்க.
CD ஆனது AB யின் செங்குத்து இரு சமவெட்டி ஆகும்.
(iv) 10.4 செ.மீ
படி 1
ஒரு நேர்க்கோட்டை வரைக. அதன் மீது A மற்றும் B என்ற புள்ளிகளை AB = 10.4 செ.மீ என்றவாறு குறிக்க.
படி 2
A வை மையமாகக் கொண்டு, ABயின் நீளத்தின் பங்கைவிட அரை அதிகமான ஆரமுடைய வட்டவில்களை AB இக்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக.
படி 3
B ஐ மையமாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் கூடிய வட்டவில்களைப் படி - 2 இல் வரைந்த வட்டவில்களை வெட்டுமாறு வரைக. வரைக. வெட்டும் புள்ளிகளுக்கு C மற்றும் D எனப் பெயரிடுக.
படி 4
C மற்றும் D ஆகியவற்றை இணைக்கவும்.
CD ஆனது AB ஐ வெட்டும் புள்ளியை எனக் குறிக்க.
CD ஆனது AB யின் செங்குத்து இரு சமவெட்டி ஆகும்.

(v) 58 மி.மீ
ஒரு நேர்க்கோட்டை B என்ற என்றவாறு குறிக்க. வரைக. அதன் மீது A மற்றும் புள்ளிகளை AB = 58 மி.மீ= 5.8 செ.மீ
படி 2
A வை மையமாகக் கொண்டு, ABயின் நீளத்தின் அரை பங்கைவிட அதிகமான ஆரமுடைய வட்டவில்களை AB இக்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக.
படி 3
B ஐ மையமாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் கூடிய வட்டவில்களைப் படி - 2 இல் வரைந்த வட்டவில்களை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளிகளுக்கு C மற்றும் D எனப் பெயரிடுக.
படி 3
C மற்றும் D ஆகியவற்றை இணைக்கவும்.
CD ஆனது AB ஐ வெட்டும் புள்ளியை எனக் குறிக்க.
CD ஆனது AB யின் செங்குத்து இரு சமவெட்டி ஆகும்.

45.
-70 + 20 = x - 10
-50 = x - 10
x = -50 + 10 = -40
46.
i) y = 28° (ஒன்றுவிட்ட உட்கோணங்கள்)
ii) y = 58° (ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள்)
iii) y = 123° (ஒன்றுவிட்ட உட்கோணங்கள்)
iv) y = 108°(ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள்)
47.
\(\frac{-20}{-4}=5\)
48.
முக்கோணத்தின் சுற்றளவு = 3 பக்கங்களின் கூடுதல்
= (x + 3y) + (2x + y) + (x - y)
= (x + 2x + x) + (3y + y - y)
= (1 + 2 + 1) x + (3 + 1 - 1) y = 4x + 3y
49.
(i) (3ab + 8) - (-3ab - 8)
= (3ab + 8) + (3ab + 8)
= (3ab + 3ab) + (8 + 8)
= (3 + 3)ab + (8 + 8)
= 6ab + 16
(ii) (-3ab - 8) - (3ab - 8)
= (-3ab - 8) + (-3ab - 8)
= (-3ab - 3ab) + (-8 - 8)
= (-3 -3)ab + (-8 - 8)
= -6ab - 16
50.
51.
சரிவகத்தின் பரப்பளவு = 1586 ச.செ.மீ.
உயரம் h = 26 செ.மீ
இணைப்பக்கம் a = 84 செ.மீ, b = ?
\(\frac{1}{2} \times \mathrm{h}(a+\mathrm{b})=1586 \)
\(\frac{1}{2} \times 26(84+\mathrm{b}) =1586 \)
\(84+\mathrm{b} =\frac{1586 \times 2}{26} \)
b = 122 - 84 = 38 செ.மீ.
இணைப்பக்கம் (b) = 38 செ.மீ
52.
மண்டபம் ➝ குருசடைதீவு ➝ விவேகானந்தர் நினைவுகூடம்
53.
54.
தரைத்தளம் = 0
மின்தூக்கி 5 தளங்கள் கீழே செல்கிறது = -5
மின்தூக்கி 10 தளங்கள் மேலே செல்கிறது = + 10
தற்போது மின்தூக்கி இருக்கும் தளம் = 10 - 5 = +5
மின்தூக்கி 5 தளத்தில் இருக்கும்
55.
6 பழரசப் பாட்டில்களின் விலை = ரூ.210.
ஒரு பழரசப் பாட்டில்களின் விலை = ரூ.\(\frac{210}{6}\) = ரூ. 35.
4 பழரசப் பாட்டில்களின் விலை = ரூ.35 x 4 = ரூ.140
56.
| வேகம் (கி.மீ / ப) | 12 | x |
| நேரம் (நிமிடம்) | 20 | 15 |
இது எதிர் விகிதத்தில் அமைந்துள்ளது.
x1y1 = x2y2
12 x 20 = x x 15
x = 16
நீலவேணியின் வேகம் 16 கி.மீ/மணி. ஏற்கெனவே அவளின் வேகம் 12 கி.மீ/மணி. எனவே அதிகரித்த வேகம் 4 கி.மீ/ மணி.
57.
| இயந்திரங்களின் எண்ணிக்கை | 10 | 30 |
| நாட்களின் எண்ணிக்கை | 60 | x |
இது எதிர் விகிதத்தில் அமைந்துள்ளது.
x1y1 = x2y2
10 x 60 = 30 x x
x = 20
30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட 20 நாட்களாகும்.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards