7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/02/2020
7 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 7th Standard Mathematics Tamil Medium Important Questions 2019-2020 )
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
30 மீ x 19 மீ பரிமாணங்களுடைய ஒரு கோ - கோ விளையாட்டுத் திடல், அதன் அனைத்துப் பக்கங்களிலும் லாபியியுடன் (lobby) அமைந்துள்ளது. விளையாடும் பகுதிக்கான பரிமாணங்கள் 27 மீ x 16 மீ எனில், லாபியின் பரப்பளவைக் காண்க.
2.
பிரவின் அவனது நண்பர்களுடன் மலை ஏறுவதற்குச் செல்கிறார். அவனது விளையாட்டுப் புத்தகத்தில் அவன் கடந்த தூரத்தினை கிலோமீட்டரில் பதிவு செய்ய விரும்புகிறார். அவனுக்கு உன்னால் உதவ முடியுமா? நான்கு நாள்களுக்கான மலை ஏறிய பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன?
28 மீ
3.
3 x [(–4) + 6], [3 x (–4)] + (3 x 6) ஆகியவை சமமானவையா? எனில் பண்பின் பெயரைக் கூறுக.
4.
(–7) x (+8) ஒரு முழு என நிரூபி, பண்பின் பெயரைக் கூறுக.
5.
பரப்பளவு 828 ச.செ.மீ.உம், இணைப்பக்க அளவுகள் 19.6 செ.மீ,16.4 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் உயரத்தைக் காண்க.
6.
அமுதாவின் வீட்டிற்குத் தொலைபேசி இணைப்பு வழங்குவதற்காகத் தொலைபேசி இந்த இணைப்பகத்தின் ஊழியர் குறைந்த அளவு கேபிள் பயன்படுத்த முயற்சிக்கிறார். கேபிள் இணைப்பு வழங்குவதற்காக அனைத்து வாய்ப்புகளும் விளக்கப்பட்டுள்ளன எனில், படத்தின் உதவியுடன் குறைந்த கேபிள் பயன்படுத்துவதற்கான வழித்தடத்தைக் காண்க
7.
இரண்டு கோணங்கள் 3:2 என்ற விகிதத்தில் உள்ளன. அவை நேரிய கோண இணைகள் எனில் அவற்றைக் காண்க.
8.
பின்வரும் கோவைகளில் மாறி, உறுப்புகள் மற்றும் உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
(i)12 − x
(ii) 7 + 2y
(iii) 29 + 3x + 5y
(iv) 3x – 5 + 7z
9.
படத்தில் உள்ள இணைகரங்களின் பரப்பளவு மற்றும் சுற்றளவு

10.
15 அட்டைகளின் (charts) மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2\(\frac { 1 }{ 2 } \) கி.கி எடையில் எத்தனை அட்டைகள் (charts) இருக்கும்?
11.
நீளம் 120 மீ மற்றும் அகலம் 90 மீ உள்ள ஒரு செவ்வக வடிவத் தோட்டத்தைச் சுற்றி 2 மீ நீளமும், 1 மீ அகலமும் உள்ள பாதை அமைக்கப்படுகிறது. அந்தப் பாதையின் பரப்பளவு காண்க.
12.
வெவ்வேறு வட்டங்களின் விட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுற்றளவைக் காண்க . (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
d = 70 செ.மீ
13.
பின்வரும் தசமப் பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
\(\frac { 23 }{ 10000 } \)
14.
கீழ்க்காணும் தொகையைத் தசம எண்ணில் எழுதுக.
147 ரூபாய் 70 பைசா
15.
இரு இணைகோடுகள் ஒரு குறுக்குவெட்டியால் வெட்டப்படுகின்றன. ஒத்த கோணங்களில், ஒரு கோணத்தை மற்ற கோணத்தின் மூன்று மடங்கை விட 42˚ குறைவாக உள்ளது எனில், அக்கோணத்தின் மதிப்பைக் காண்க
16.
x என்னும் பொருளின் விலை, ஒவ்வொரு வருடமும் ரூ.10 அதிகரிக்கிறது. y என்னும் பொருளின் விலை, ஒவ்வொரு வருடமும் ரூ.15 குறைகிறது. 2018 ஆம் ஆண்டில், x இன் விலை ரூ.50 ஆகவும், y இன் விலை ரூ.90 ஆகவும் இருந்தால், 2020 இல் எந்தப் பொருளின் விலை அதிகமானதாக இருக்கும்?
17.
676 ச.செ.மீ பரப்பளவு கொண்ட ஓர் இணைகரத்தின் உயரம் அதன் அடிப்பக்கத்தில் 4 ல் ஒரு பங்கு எனில், அதன் அடிப்பக்கத்தின் அளவையும், உயரத்தையும் காண்க.
18.
விடுபட்ட விவரத்தினைக் காண்க.
| வ.எண் | உயரம் 'h' | இணைப்பக்கம்'a' | இணைப்பக்கம்'b' | பரப்பளவு |
| (i) | 10 மீ | 12 மீ | 20 மீ | |
| (ii) | 13 செ.மீ | 28 செ.மீ | 492 ச.செ.மீ | |
| (iii) | 19 மீ | 16 மீ | 323 ச.மீ | |
| (iv) | 16 செ.மீ | 15 செ.மீ | 360ச.செ.மீ |
19.
பெருக்கற் பலன்−50 ஐத் தரக்கூடிய அனைத்துச் சோடி முழுக்களையும் காண்க.
20.
கொடுக்கப்பட்ட நாற்கர இணை வடிவங்களைப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள செவ்வகத்தை நிரப்பவும்.
21.
கொடுக்கப்பட்ட படத்தில் x˚ மற்றும் y˚ கோணங்களைக் காண்க.
22.
கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:
(i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: 8 மற்றும் –12
(ii) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (–3) மற்றும் (–5)
(iii) (−100) + (-10)
(iv) 20 + (-72)
(v) 82 + (-75)
(vi) -48 + (-15)
(vii) -225 + (-63)
23.
இரு வெவ்வேறு விதங்களில் வண்ணமிடப்பட்டுள்ள , நாற்சதுர இணைகளைக் கொண்டு அடுத்தடுத்த இரு கட்டடங்கள் ஒரே வண்ணத்தில் அமையாத வகையில் கொடுக்கப்பட்டுள்ள கட்டடத்தை நிரப்புக.
24.
ஐந்து நாற்சதுர இணைகளை ஒருமுறை மட்டும் பயன்படுத்திக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தை முழுவதுமாக நிரப்புக.
25.
x = 2 மற்றும் y = 3, எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக் காண்க.
(i) 2x − 3y
(ii) x + y
(iii) 4y − x
(iv) x + 1 − y
26.
பின்வரும் கோவைகளுக்கு மாறி, மாறிலி, உறுப்புகளை எழுதுக.
(i) 18 + x − y
(ii) 7p − 4q + 5
(iii) 29x + 13y
(iv) b + 2
27.
நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12 கி.மீ/மணி ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு ?
28.
ஓர் இருசக்கர வாகனம் 100 கி.மீ தொலைவைக் கடக்க 2 லி பெட்ரோல் தேவைப்படுகிறது எனில், 250 கி.மீ தொலைவைக் கடக்கத் தேவையான பெட்ரோல் எவ்வளவு? (அலகு முறையைப் பயன்படுத்துக).
29.
8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?
30.
வட்டப்பாதையின் அகலம் காணும் சூத்திரம்
( L − l ) அலகுகள்
( B − b ) அலகுகள்
( R − r ) அலகுகள்
( r − R ) அலகுகள்
31.
வட்டத்தின் சுற்றளவு என்பது எப்போதும்
அதன் விட்டத்தைப் போல் மூன்று மடங்கு
அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட அதிகம்
அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விடக் குறைவு
அதன் ஆரத்தைப் போல் மூன்று மடங்கு
32.
ஒரு வட்டத்தின் சுற்றளவு 82\(\pi \) எனில், அதன் ‘r’ இன் மதிப்பு
41 செ. மீ
82 செ. மீ
21 செ. மீ
20 செ. மீ
33.
1.7 எந்த இரு எண்களுக்கிடையில் அமைந்துள்ளது?
2, 3
3, 4
1, 2
1, 7
34.
30 கிலோகிராம் 43 கிராமுக்குச் சமமான தசம எண் ____ கி.கி
30.43
30.430
30.043
30.0043
35.
கிராமை கிலோ கிராமாக மாற்றுவதற்கு நாம் எவற்றால் வகுக்க வேண்டும்?
10000
1000
100
10
36.
85.073 என்ற எண்ணில் 3 இன் இடமதிப்பு _______
பத்தில் ஒன்று
நூறில் ஒன்று
ஆயிரம்
ஆயிரத்தில் ஒன்று
37.
இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?
ஒத்த கோணங்கள், மிகை நிரப்புக்கோணங்கள்
ஒன்றுவிட்ட உட்கோணங்கள் மிகை நிரப்பிகள்
ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் மிகை நிரப்பிகள்
குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள்
38.
(-200) ÷ 10 என்பது
20
-20
-190
210
39.
(-12) x (-9) = _____
108
–108
+1
–1
40.
∠BOC-ன் மதிப்பு
90˚
180˚
80˚
100˚
41.
அடுத்தடுத்த கோணங்களுக்கு
பொதுவான உட்பகுதி இல்லை; பொதுவான கதிர் இல்லை; பொதுவான முனை இல்லை
ஒரு பொதுவான முனை, ஒரு பொதுவான கதிர், பொதுவான உட்பகுதி உண்டு
ஒரு பொதுவான கதிர், பொதுவான முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை
ஒரு பொதுவான கதிர் உண்டு, பொதுவான முனை, பொதுவான உட்பகுதி இல்லை
42.
(-100) - 0 + 100
200
0
100
-200
43.
20 + (-9) + 9 =____
20
29
11
38
44.
நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +180C ஆகும். வெப்பநிலை மணிக்கு 30C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை –120C ஆக இருக்கும்?
12 நள்ளிரவு
12 நண்பகல்
10 மு.ப
10 பி.ப.
45.
3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்
mn
−mn
2mn
3mn
46.
பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம்
8 மீ
10 மீ
2 மீ
4 மீ
47.
ஒத்த உறுப்புகளின் இணையைத் தேர்ந்தெடுக்க.
7p, 7x
7r, 7x
−4x, 4
−4x, 7x
48.
−7mn என்னும் உறுப்பின் எண்கெழு
7
-7
p
-p
49.
ஓர் இணைகரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிப்பக்கம் உயரத்தைப் போல் மூன்று மடங்கு எனில், அதன் பரப்பளவு
64 செ.மீ
192 செ.மீ
32 செ.மீ
32 செ.மீ
50.
அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு
12 செ.மீ
10 செ.மீ
24 செ.மீ
22 செ.மீ
51.
12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.
15
18
6
8
52.
ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.
150
70
100
147
53.
கீழ்க்கண்டவற்றை எளிய பின்னங்களாக மாற்றுக.
3.46
54.
(i) கோணம் \(\angle \)1 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
(ii) கோணம் \(\angle \)3 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக.
(iii) கோணம் \(\angle \)8 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
(iv) கோணம் \(\angle \)8 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
(v) கோணம் \(\angle \)7 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
(vi) கோணம் \(\angle \)6 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக

55.
வகுக்க:
(i) (−85) ஐ 5 ஆல் வகுக்க
(ii) (–250) ஐ (–25) ஆல் வகுக்க
(iii) 120 ஐ (–6) ஆல் வகுக்க
(iv) 182 ஐ (–2) ஆல் வகுக்க
56.
ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில், மற்றொரு மூலைவிட்டத்தைக் காண்க.
57.
ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை ரூ.260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்?
1.
கொடுக்கப்பட்ட பரிமாணங்களில் இருந்து
L = 30 மீ; B = 19 மீ; l = 27 மீ; b = 16 மீ
கோ - கோ திடலின் பரப்பளவு = L x B
= 30 x 19
=570மீ2
விளையாடுவதற்கான பகுதியின் பரப்பளவு = l x b
= 27 x 16
= 432 மீ2
லாபியின் பரப்பளவு = கோ - கோ திடலின் பரப்பளவு − விளையாடுவதற்கான பரப்பளவு
= 570 − 432
= 148 மீ2

2.
28 மீ = \(\frac { 28 }{ 1000 } \) கி.மீ = 0.028 கி.மீ
3.
3 x [(–4) + 6] = 3 x 2 = 6
[3 x (–4)] + [3 x 6] = –12 + 18 = 6
ஆகவே, 3 x [(–4) + 6] மற்றும் [3 x (–4)]+3 x 6 சமம்.
இது பெருக்கலின் கீழ்க் கூட்டலின் பங்கீட்டுப் பண்பை நிறைவு செய்கிறது.
4.
(–7) x (+8) = (–56)
–56 என்பது ஒரு முழு
ஆகையால் (–7) x (+8) பெருக்கலின் கீழ் அடைவுப் பண்பை நிறைவு செய்கிறது.
5.

சரிவகத்தின் பரப்பளவு = 828 ச.செ.மீ (கொடுக்கப்பட்டுள்ளது)
\(\cfrac { 1 }{ 2 } \times h\left( a+b \right) =828\)
\(\cfrac { 1 }{ 2 } \times h\left( 19.6+16.4 \right) =828\)
\(\cfrac { 1 }{ 2 } \times h\left( 36 \right) =828\)
\(h=\cfrac { 828 }{ 18 } \)
h = 46 செ.மீ
எனவே,சரிவகத்தின் உயரம் 46 செ.மீ ஆகும்.
6.
A விலிருந்து D இக்கான இடைப்பட்ட தூரம் = 7 மீ
A விலிருந்து ( B வழியாக ) D இக்கான தூரம் = 4 + 5 = 9 மீ
A விலிருந்து ( C வழியாக) D இக்கான தூரம் = 2 + 6 = 8 மீ
எனவே, A விலிருந்து D இக்கு நேரடியாக இணைப்பு வாங்கும்பொழுது குறைந்த அளவு கேபிள் பயன்படுகிறது.
7.
தேவையான கோணங்கள் 3x மற்றும் 2x என்க.
அவை, நேரிய கோண இணை என்பதால், அவற்றின் கூடுதல் 180o ஆகும்.
எனவே. 3x + 2x = 180˚
5x = 180˚
\(x=\frac{180^ o}{5}\)
x = 36˚
அந்தக் கோணங்கள் 3x = 3 x 36 = 108˚
2x = 2 x 36 = 72˚
8.
| வ.எண் | கோவை | மாறிகள் | உறுப்புகள் | உறுப்புகளின் எண்ணிக்கை |
| (i) | 12-x | x | 12, -x | 2 |
| (ii) | 7 + 2y | y | 7, 2y | 2 |
| (iii) | 29 + 3x + 5y | x, y | 29, 3x, 5y | 3 |
| (iv) | 3x -5 + 7z | x, z | 3x, -5, 7z | 3 |
9.
(i) படத்திலிருந்து, அடிப்பக்கம் (b) = 15 செ.மீ, உயரம் (h) = 4 செ.மீ
இணைகரத்தின் பரப்பளவு = b x h ச.அலகுகள்
= 15 x 4 = 60 ச.செ.மீ
ஆகவே, இணைகரத்தின் பரப்பளவு = 60 ச.செ.மீ ஆகும்.
இணைகரத்தின் சுற்றளவு = நான்கு பக்கங்களின் நீளங்களின் கூடுதல்
= (15 + 5 + 15 + 5) = 40 செ.மீ
(ii) படத்திலிருந்து
அடிப்பக்கம்(b) = 9செ.மீ, உயரம் (h) = 16 செ.மீ
இணைகரத்தின் பரப்பளவு = b x h ச.அலகுகள்
= 9 x 16 = 144 ச.செ.மீ
ஆகவே, இணைகரத்தின் பரப்பளவு 144 ச.செ.மீ ஆகும்
இணைகரத்தின் சுற்றளவு = நான்கு பக்கங்களின் நீளங்களின் கூடுதல்
= (18 + 9 + 18 + 9) = 54 செ.மீ
10.
தேவையான அட்டைகளின் எண்ணிக்கை x என்க.
அட்டைகளின் எடை அதிகரிக்கும்போது அவற்றின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
ஆகவே, இவை நேர் விகிதத்தில் அமைந்துள்ளன.
நேர் விகிதத்தில் \(\frac { { x }_{ 1 } }{ { y }_{ 1 } } =\frac { { x }_{ 2 } }{ { y }_{ 2 } } \)
| அட்டைகளின் எண்ணிக்கை | 15 | x |
| எடை (கி) | 50 | 2500 |
\(\frac { 15 }{ 50 } =\frac { x }{ 2500 } \)
\( 15 \times 2500 =x \times 50 \)
\(x \times 50 =15 \times 2500\)
x = \(\frac { 15\times 2500 }{ 50 } \) = 750
ஆகவே,2\(\frac { 1 }{ 2 } \) கி.கி எடையில் 750 அட்டைகள் (charts) இருக்கும்.
11.

பாதையின் பரப்பளவு = வெளிச்செவ்வகத்தின் பரப்பளவு - உட்செவ்வகத்தின் பரப்பளவு
= LB - lb
= 124 x 92 - 120 x 90
= 11408 - 10800
= 608 மீ2
12.
d = 70 செ.மீ
சுற்றளவு \(C=\pi d\)
சுற்றளவு = 220 செ.மீ.
13.
\( \frac{23}{10000} \)\(=\frac{20+3}{10000} \)
\(=\frac{20}{10000}+\frac{3}{10000} \)
\(=\frac{2}{1000}+\frac{3}{10000} \)
\(=\frac{0}{10}+\frac{0}{100}+\frac{2}{1000}+\frac{3}{10000} \)
(பத்தில் ஒன்று மற்றும் நூறில் ஒன்று இல்லாததால் அவற்றிற்கு \(\frac{0}{10}, \frac{0}{100}\) என போட வேண்டும்.)
= 0.0023 (தசம எண்)
14.
147 ரூபாய் 70 பைசா = 147 + 70 x 1 பைசா
= \(147+\cfrac { 70 }{ 100 } \) ரூபாய்
= 147 + 0.70 ரூபாய்
= ரூபாய் 147.7
15.
கோணங்களை X மற்றும் y என்க.
கணக்கின்படி, y = 3x - 42°
x = y
ஒத்தக் கோணங்கள் சமம்)
x = 3x - 42°
2x = 42°
x = 21°
அக்கோணம் 21°
16.
ஒவ்வொரு வருடமும் அதிகரித்த x பொருளின் விலை = ரூ.10
ஒவ்வொரு வருடமும் குறைந்த y பொருளின் விலை = ரூ.- 15
2018 ஆம் ஆண்டில் x பொருளின் விலை = ரூ.50
2020 ஆம் ஆண்டில் x பொருளின் விலை = ரூ.50 + 2 x ரூ.10
= ரூ.50 + ரூ.20 = 70
2018 ஆம் ஆண்டில் y பொருளின் விலை = ரூ.90
2020 ஆம் ஆண்டில் y பொருளின் விலை = ரூ.90 + 2 x ரூ. - 15
ரூ.90 - ரூ.30 = ரூ.60
2020 இல் x பொருளின் விலை அதிகமாக இருக்கும்
17.
இணைகரத்தின் உயரம் = அடிப்பக்கத்தின் \(\frac{1}{4}\) பங்கு
\(h=\frac{1}{4} b\)
இணைகரத்தின் பரப்பளவு 676 ச.செ.மீ
b x h = 676
\(b \times \frac{1}{4} b=676\)
b x b = 676 x 4
b x b = 26 x 26 x 2 x 2
b = 26 x 2 = 52
இணைகரத்தின் அடிப்பக்கம் (b) = 52 செ.மீ
\(h=\frac{1}{4} b
\)
\(h=\frac{1}{4} \times 52=13
\)
இணைகரத்தின் உயரம் h = 13 செ.மீ
18.
(i) உயரம் : (h) = 10 மீ, இணைப்பக்கம் (a) = 12 மீ, b = 20 மீ, பரப்பளவு = ?
சரிவகத்தின் பரப்பளவு = \(=\frac{1}{2} \times \mathrm{h}(a+b) \text { ச.அ } \)
\(=\frac{1}{2} \times 10(12+20) \)
\(=\frac{1}{2} \times 10 \times 32=160 \)
சரிவகத்தின் பரப்பளவு = 160 ச.மீ
(ii) இணைப்பக்கம் (a) = 13 செ.மீ ; (b) = 28 செ.மீ; பரப்பளவு = 492 ச.செ.மீ; உயரம் = ?
சரிவகத்தின் பரப்பளவு = 492 ச.செ.மீ
\(\frac{1}{2} \times h(a+b) =492 \)
\(\frac{1}{2} \times h(13+28) =492 \)
\(\frac{1}{2} \times h \times 41 =492 \)
\(h =\frac{492 \times 2}{41}=24 \)
உயரம் h = 24 செ.மீ
iii) உயரம் h = 19 மீ, இணைப்பக்கம் (b) = 16 மீ, பரப்பளவு = 323 ச.மீ; இணைப்பக்கம் (a} = ?
சரிவகத்தின் பரப்பளவு = 323 ச.மீ
\(\frac{1}{2} \times \mathrm{h}(a+\mathrm{b}) =323 \)
\(\frac{1}{2} \times 19(a+16) =323 \)
\(a+16 =\frac{323 \times 2}{19} \)
a + 16 = 34
a = 34 - 16 = 18
இணைப்பக்கம் a = 18 மீ
iv) உயரம் h = 16 செ.மீ, இணைப்பக்கம் a = 15 செ.மீ, பரப்பளவு = 360 ச.செ.மீ இணைப்பக்கம் b = ?
சரிவகத்தின் பரப்பளவு = 360 ச.செ.மீ
\(\frac{1}{2} \times \mathrm{h}(a+\mathrm{b}) =360 \)
\(\frac{1}{2} \times 16^{\prime}(15+\mathrm{b}) =360 \)
\(15+\mathrm{b} =\frac{360 \times 2}{16} \)
15 + b = 45
b = 45 - 15 = 30 செ.மீ
இணைப்பக்கம் b = 30 செ.மீ
19.
சோடி முழுக்கள்
(1,-50),(2,-25),(5,-10),(50,-1),(25,-2),(10,-5)
20.
21.
படத்திலிருந்து
i) xo + 3xo = 180° (நேரிய கோண இணைகள்)
4x° = 180°
x° = 45°
ii) y° = 3x° (குத்தெதிர்க் கோணங்கள்)
y° = 3 x 45°
y° = 135°
22.
(i)

(ii)

(iii) -110
(iv) -52
(v) 7
(vi) -63
(vii) -288
23.
24.

25.
(i) 2x - 3y = 2(2) - 3(3) = 4 - 9 = -5
(ii) x + y = 2 + 3 = 5
(iii) 4y - x = 4(3) - 2 = 12 - 2 = 10
(iv) x + 1-y = 2 + 1 - 3 = 3 - 3 = 0
26.
| வ.எண் | கோவை | மாறி | மாறிலி | உறுப்புகள் |
| (i) | 18 + x - y | x,y | 18 | 18,x,y |
| (ii) | 7p - 4q + 5 | p,q | 5 | 7p,-4q,5 |
| (iii) | 29x + 13y | x,y | 0 | 29x,13y |
| (iv) | b + 2 | b | 2 | b,2 |
27.
| வேகம் (கி.மீ / ப) | 12 | x |
| நேரம் (நிமிடம்) | 20 | 15 |
இது எதிர் விகிதத்தில் அமைந்துள்ளது.
x1y1 = x2y2
12 x 20 = x x 15
x = 16
நீலவேணியின் வேகம் 16 கி.மீ/மணி. ஏற்கெனவே அவளின் வேகம் 12 கி.மீ/மணி. எனவே அதிகரித்த வேகம் 4 கி.மீ/ மணி.
28.
100 கி.மீ தூரத்தைக் கடக்க தேவைப்படும் பெட்ரோல் = 2 லிட்டர்.
1 கி.மீ தூரத்தைக் கடக்க தேவைப்படும் பெட்ரோல் \(=\frac{2}{100}\)லிட்டர்.
250 கி.மீ தூரத்தைக் கடக்க தேவைப்படும் பெட்ரோல் \(=\frac{2}{100} \times 250\) = 5 லிட்டர்.
29.
| கம்பத்தின் நீளம் (மீ) | 8 | x |
| நிழலின் நீளம் (மீ) | 6 | 30 |
இது நேர் விகிதத்தில் அமைந்துள்ளது
\( \therefore \frac{x_{1}}{y_{1}} =\frac{x_{2}}{y_{2}} \)
\(\frac{8}{6} =\frac{x}{30} \)
\(6 x =8 \times 30 \)
\(\therefore x =\frac{8 \times 30}{6}\)
x = 40 மீ
30 மீ நிழலை ஏற்படுத்தும் கம்பத்தின் நீளம் 40 மீ
30.
(c)
( R − r ) அலகுகள்
31.
(b)
அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட அதிகம்
32.
(a)
41 செ. மீ
33.
(c)
1, 2
34.
(c)
30.043
35.
(b)
1000
36.
(d)
ஆயிரத்தில் ஒன்று
37.
(d)
குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள்
38.
(b)
-20
39.
(a)
108
40.
(c)
80˚
41.
(c)
ஒரு பொதுவான கதிர், பொதுவான முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை
42.
(b)
0
43.
(a)
20
44.
(d)
10 பி.ப.
45.
(b)
−mn
46.
(d)
4 மீ
47.
(d)
−4x, 7x
48.
(b)
-7
49.
(b)
192 செ.மீ
50.
(d)
22 செ.மீ
51.
(c)
6
52.
(d)
147
53.
3.46 = 3 + \(\frac { 46 }{ 100 } \)
= 3 + \(\frac { 46÷2 }{ 100÷2 } \)
= 3 + \(\frac { 23 }{ 50 } \)
= 3 \(\frac { 23 }{ 50 } \)
54.
(i) கோணம் \(\angle \)1 இன் ஒத்த கோணம் \(\angle \)5 ஆகும்.
(ii) கோணம் \(\angle \)3 இன் ஒன்றுவிட்ட உட்கோணம் \(\angle \)5 ஆகும்.
(iii) கோணம் \(\angle \)8 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணம் \(\angle \)2 ஆகும்.
(iv) கோணம் \(\angle \)8 இன் ஒத்த கோணம் \(\angle \)4 ஆகும்.
(v) கோணம் \(\angle \)7 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணம் \(\angle \)1 ஆகும்.
(vi) கோணம் \(\angle \)6 இன் ஒன்றுவிட்ட உட்கோணம் \(\angle \) 4 ஆகும்.
55.
(i) (-85) ÷ 5 = -17
(ii) (-250) ÷ (-25) = +10
(iii) 120 ÷ (-6) = -20
(iv) 182 ÷ (-2) = -91
56.
கொடுக்கப்பட்ட அளவுகள், மூலைவிட்டம் (d1) = 8 செ.மீ
மூலைவிட்டம் d2 = ?
சாய்சதுரத்தின் பரப்பளவு = 60 ச.செ.மீ (கொடுக்கப்பட்டுள்ளது)
\(\cfrac { 1 }{ 2 } \times \left( { d }_{ 1 }\times { d }_{ 2 } \right) =60\)
\(\cfrac { 1 }{ 2 } \times \left( 8\times { d }_{ 2 } \right) =60\)
8 x d2 = 60 x 2
\({ d }_{ 2 }=\cfrac { 120 }{ 8 } \)
= 15
எனவே, மற்றொரு மூலைவிட்டத்தின் நீளம் 15 செ.மீ ஆகும்.
57.
ஒரு பெட்டியின் விலை = ரூ.200
விலை அதிகரிக்கப்பட்ட ஒரு பெட்டியின் விலை = ரூ.260
வேந்தனால் வாங்கப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கை x என்க.
பெட்டிகளின் விலை அதிகரிக்கும்போது, பெட்டிகளின் எண்ணிக்கை குறையும்..
எனவே இவை எதிர் விகிதத்தில் உள்ளன.
அதாவது, x1y1 = x2y2
| பெட்டிகளின் எண்ணிக்கை | 13 | x |
| பெட்டிகளின் விலை ரூ. | 200 | 260 |
\( 13 \times 200=x \times 260 \)
\(x \times 260=13 \times 200 \)
x = \(\frac { 13\times 200 }{ 260 } \)
x = 10
ஆகவே, அவரிடம் உள்ள பணத்தில் 10 பெட்டிகளை வாங்கலாம்.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards