7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 27/02/2020
7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 7th Standard Mathematics Tamil Medium Important Questions All Chapter 2020 )
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
படத்தில் உள்ள வளையலின் சுற்றளவைக் கணக்கிடுக. (π = 3.14 என்க)
2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான வடிவத்தில் உள்ள எண்ணை இடமதிப்புக் கட்டத்தில் குறிப்பிடுக. மேலும் அதனுடைய தசம எண்ணை எழுதுக.
40 + 6 + \(\frac { 7 }{ 10 } +\frac { 2 }{ 100 } +\frac { 6 }{ 1000 } \)
3.
முதல் வகையில் (–2), 3 ஐ ஒன்று சேர்ப்போம் மற்றும் இரண்டாவது வகையில் 3, (–4) ஐ ஒன்று சேர்ப்போம்
4.
பரப்பளவு 352 ச.செ.மீ மற்றும் இரு இணைப்பாக்களுக்கிடையேயான தொலைவு 16 செ.மீ கொண்ட சரிவகத்தின் இணைப் பக்கங்களில் ஒன்றின் அளவு 25 செ.மீ எனில், மற்றொன்றைக் காண்க.
5.
மதன், அலுவலகப் பணிக்காக கோயமுத்தூரிலிருந்து கரூருக்குச் செல்கிறார். அவர், பணிக்கு போகும்பொழுது, வெள்ளக்கோவில் வழியாகச் கரூர் சென்றடைகிறார். பணிமுடிந்து திரும்பும்பொழுது, ஈரோடு வழியாக கோயம்புத்தூருக்கு வந்தடைகிறார். மதன் பயணித்த பாதை வரைபடத்தின் விவரம் தரப்பட்டுள்ளது எனில், மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடம் எது என்பதை காண்க.
6.
சீதா தனது சேமிப்பான ரூ.225 இல் அலுவலகப் பொருள்களை வாங்கும் கடைக்குச் சென்று கடன் அட்டையைப் பயன்படுத்தி ரூ.400 இக்குப் பொருள்கள் வாங்குகிறாள் எனில், வங்கிக்கு அவள் மீதம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
7.
\(\angle \)ROS இன் மதிப்பைக் காண்க.
8.
பின்வரும் கோவைகளில் மாறி, உறுப்புகள் மற்றும் உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
(i)12 − x
(ii) 7 + 2y
(iii) 29 + 3x + 5y
(iv) 3x – 5 + 7z
9.
ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் முறையே 12 செ.மீ மற்றும் 9 செ.மீ சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 8 செ.மீ எனில் பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.
10.
24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல் கொடுத்தால் 18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு?
11.
49 மீ விட்டமுள்ள வட்ட வடிவப் பூந்தோட்டத்தைத் தேன்மொழி சீரமைக்க விரும்பினாள். ஒரு சதுர மீட்டருக்கு ரூ.150 வீதம் செலவாகுமெனில், மொத்தச் செலவுத் தொகையைக் கணக்கிடுக.
12.
பின்வரும் அட்டவணையிலுள்ள வட்டங்களுக்கு அதன் விடுபட்ட ஆரம் (r) , விட்டம் (d) மற்றும் சுற்றளவு (C) காண்க .
| வ. எண் | ஆரம் (r) | விட்டம் (d) | சுற்றளவு (C) |
| (i) | 15 செ.மீ | ||
| (ii) | 1760 செ.மீ | ||
| (iii) | 24 மீ |
13.
பின்வரும் தசம எண் சோடிகளில் எது பெரியது?
0.888, 0.28
14.
கீழ்க்கண்ட பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
\(\frac { 3 }{ 2 } \)
15.
ஒரு சாய்சதுரத்தின் மூலைவிட்ட அளவுகளின் கூடுதல் 24 மீ பெரிய மூலைவிட்டதின் அளவு சிறிய மூலைவிட்ட அளவைப் போல மூன்று மடங்கு எனில் அதன் பரப்பளவைக் காண்க.
16.
ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமும் உயரமும் 7:3 என்ற விகிதத்தில் உள்ளன.அதன் உயரம் 45 செ.மீ எனில், அதன் பரப்பளவைக் காண்க.
17.
RS ஆனது PQ இக்கு இணை எனில், x மற்றும் y இன் மதிப்பைக் காண்க.
18.
(−72) ஐ 8 ஆல் வகுக்க.
19.
-70 + 20 = [] - 10
20.
x + 3y, 2x + y, x − y ஆகியனவற்றைப் பக்கங்களாகக் கொண்ட முக்கோணத்தின் சுற்றளவு காண்க.
21.
கொடுக்கப்பட்ட பாதை வரைபடத்தைப் பயன்படுத்தி மண்டபத்திலிருந்து விவேகானந்தர் நினைவில்லத்திற்குச் செல்லக்கூடிய மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக் காண்க.
22.
தீர்க்க:
(i) x + 5 = 8
(ii) p − 3 = 7
(iii) 2x = 30
(iv) \(\frac { m }{ 6 } \) = 5
(v) 7x + 10 = 80
23.
ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?
24.
ஒரு புள்ளியில் ஆறு கோணங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒரு கோணம் 45o மற்ற ஐந்து கோணங்களும் சம அளவுள்ளவை எனில் அந்த ஐந்து கோணங்களின் அளவை காண்க.
25.
எண்களால் நிரப்பப்பட்டுள்ள நாற்சதுர இணைகளின் வடிவங்களைப் பயன்படுத்தி 4 x 4 மாயச் சதுரம் அமைக்க.
26.
அட்டவணையை நிரப்புக.
27.
ஒரு தோட்டத்தை களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக எத்தனை தோட்டக்காரர்கள் தேவை?
28.
30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள் எனில், 20 நபர்கள் எத்தனை நாட்களில் அவ்வயலை அறுவடை செய்வார்கள்? (அலகு முறையைப் பயன்படுத்துக)
29.
8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?
30.
வட்டப்பாதையின் அகலம் காணும் சூத்திரம்
( L − l ) அலகுகள்
( B − b ) அலகுகள்
( R − r ) அலகுகள்
( r − R ) அலகுகள்
31.
ஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரை வட்டத்தின் பரப்பளவிற்கும் இடையேயுள்ள விகிதம்
2: 1
1: 2
4: 1
1: 4
32.
ஒரு வட்டத்தின் சுற்றளவைக் காண உதவும் சூத்திரம்
2\(\pi \)r அலகுகள்
\(\pi \)r2 + 2r அலகுகள்
\(\pi \)r2 சதுர அலகுகள்
\(\pi \)r3 கன அலகுகள்
33.
78.56 \(\square\) 78.57
<
>
=
≠
34.
0.009 = ______
0.90
0.090
0.00900
0.900
35.
\(\frac { 3 }{ 5 } \)=_____
0.06
0.006
6
0.6
36.
85.073 என்ற எண்ணில் 3 இன் இடமதிப்பு _______
பத்தில் ஒன்று
நூறில் ஒன்று
ஆயிரம்
ஆயிரத்தில் ஒன்று
37.
படத்தில், x இன் மதிப்பு என்ன?

43˚
44˚
132˚
134˚
38.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் a மற்றும் b என்பவை

ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள்
ஒத்த கோணங்கள்
ஒன்றுவிட்ட உட்கோணங்கள்
குத்தெதிர்க் கோணங்கள்
39.
பின்வரும் எந்தச் செயலியில் முழுக்களின் தொகுப்பு ‘அடைவுப் பண்பை’ பெறாது?
கூட்டல்
கழித்தல்
பெருக்கல்
வகுத்தல்
40.
(-16) ÷ 4 இக்கு சமமானது எது?
-(-16 ÷ 4)
-(16) ÷ (-4)
16 ÷ (-4)
-4 ÷ 16
41.
(-12) x (-9) = _____
108
–108
+1
–1
42.
11 x (–1) = _____
-1
0
+1
-11
43.
ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு
சதுரம்
செவ்வகம்
இருசமபக்கச் சரிவகம்
இணைகரம்
44.
y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?
0
-1
1
-2
45.
அடுத்தடுத்த கோணங்களுக்கு
பொதுவான உட்பகுதி இல்லை; பொதுவான கதிர் இல்லை; பொதுவான முனை இல்லை
ஒரு பொதுவான முனை, ஒரு பொதுவான கதிர், பொதுவான உட்பகுதி உண்டு
ஒரு பொதுவான கதிர், பொதுவான முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை
ஒரு பொதுவான கதிர் உண்டு, பொதுவான முனை, பொதுவான உட்பகுதி இல்லை
46.
குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.
-9 + (-5) + 6
8 + (-12) - 6
-4 + 2 + 10
10 + (-4) + 8
47.
‘a’ யிலிருந்து ‘-a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______
0
2a
-2a
-a
48.
இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு
64 ச.செ.மீ
32 ச.செ.மீ
30 ச.செ.மீ
16 ச.செ.மீ
49.
−7mn என்னும் உறுப்பின் எண்கெழு
7
-7
p
-p
50.
அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு
12 செ.மீ
10 செ.மீ
24 செ.மீ
22 செ.மீ
51.
4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.
7
8
9
10
52.
3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை
ரூ.300
ரூ.320
ரூ.360
ரூ.400
53.
ஒரு குடுவையில் மாம்பழச் சாறு 4.5 லிட்டராக உள்ளது. இவற்றைப் பின்னத்தில் குறிப்பிடுக.
54.
l ஆனது m இக்கு இணை எனில், படத்தில் x மற்றும் y இன் மதிப்புகளைக் காண்க

55.
வகுக்க:
(i) (−85) ஐ 5 ஆல் வகுக்க
(ii) (–250) ஐ (–25) ஆல் வகுக்க
(iii) 120 ஐ (–6) ஆல் வகுக்க
(iv) 182 ஐ (–2) ஆல் வகுக்க
56.
ஓர் அலுவலகக் கட்டிடத் தரையில் 200 சாய்சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள் 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், தரையை மெருகூட்டச் சதுரமீட்டருக்கு ரூ. 45 வீதம் மொத்தச் செலவைக் காண்க.
57.
60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
1.
கொடுக்கப்பட்டது, d = 6 செ.மீ, ஆனா ல், d = 2r = 6 செ.மீ, r = 3 செ.மீ
வட்டத்தின் சுற்றளவு = 2πr அலகுகள்
= 2π x 3
= 18.8496 ≃ 18.84
எனவே , சுற்றளவு 18.84 செ.மீ ஆகும்.
2.
| பத்துகள் | ஒன்றுகள் | பத்தில் ஒன்றுகள் | நூறில் ஒன்றுகள் | ஆயிரத்தில் ஒன்றுகள் |
| 0 | 3 | 5 | 3 | 4 |
40 + 6 + \(\frac { 7 }{ 10 } +\frac { 2 }{ 100 } +\frac { 6 }{ 1000 } \) = 46.726
3.
இடது பக்கம் = [(–2) x 3] x (–4)
= (–6) x (–4) = 24
வலது பக்கம் = (–2) x [3 x (–4)]
= (–2) x (–12) = 24
எனவே, இடது பக்கம் = வலது பக்கம்.
[(–2) x 3] x (–4) = (–2) x [3 x (–4)] என நிறுவப்பட்டது.
4.

தேவைப்படும் பக்கத்தின் நீளம் 'x' செ.மீ என்க.
கொடுக்கப்பட்ட அளவுகள் உயரம்(h) = 16 செ.மீ, a = 25 செ.மீ
சரிவகத்தின் பரப்பளவு = \(\cfrac { 1 }{ 2 } \times h(a+b)\) ச.அலகுகள்
= \(\cfrac { 1 }{ 2 } \times 16(25+x)\)
= 200+8x
\(\cfrac { 1 }{ 2 } \times h\left( a+b \right) =352\)ச.செ.மீ (கொடுக்கப்பட்டுள்ளது)
200 + 8x = 352
-8x = 352 - 200
-8x = 152
\(-x=\cfrac { 152 }{ 8 } \)
-x = 19
எனவே, மற்றொரு இணைப்பக்கத்தின் அளவு 19 செ.மீ ஆகும்.
5.
மதன், கோயமுத்தூரிலிருந்து வெள்ளக்கோவில் வழியாகக் கரூருக்கு சென்ற தூரம் = 131 மீ
கரூரிலிருந்து ஈரோடு வழியாகச் கோயம்புத்தூருக்கு சென்ற தூரம் = 66 + 101 = 167 கி.மீ
ஆக, மதன் வெள்ளக் கோவில் வழியாகக் கரூர்க்குப் பயணித்தபோது மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தில் பயணித்தார்.
6.
சீதாவின் சேமிப்பு ரூ.225
கடன் அட்டையின் மூலமாக அலுவலகப் பொருள்கள் வாங்கச் செலவு செய்த தொகை = ரூ.400
வங்கிக்கு அவள் மீதம் செலுத்த வேண்டிய தொகை = ரூ.225 – ரூ.400 = – ரூ.175
எனவே, சீதா செலுத்த வேண்டிய தொகை ரூ.175
7.
\(\angle\)QOR + \(\angle\)ROS + \(\angle\)SOP = 180˚ என்பது நாம் அறிந்ததே
26˚ + \(\angle\)ROS + 32˚ = 180˚
\(\angle\)ROS + 58˚ = 180˚
இரு புறமும் 58˚ ஐ கழிக்க
\(\angle\)ROS = 180˚ – 58˚ = 122˚
8.
| வ.எண் | கோவை | மாறிகள் | உறுப்புகள் | உறுப்புகளின் எண்ணிக்கை |
| (i) | 12-x | x | 12, -x | 2 |
| (ii) | 7 + 2y | y | 7, 2y | 2 |
| (iii) | 29 + 3x + 5y | x, y | 29, 3x, 5y | 3 |
| (iv) | 3x -5 + 7z | x, z | 3x, -5, 7z | 3 |
9.

இணைகரத்தின் அடுத்துள்ள பக்கங்கள் 12 செ.மீ மற்றும் 9 செ.மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் சிறிய பக்கத்தை அடிப்பக்கமாகக் கொண்டால், அதாவது
b = 9 செ.மீ எனில், சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு அதாவது h = 8 செ.மீ
எனவே இணைகரத்தின் பரப்பு = b x h ச.அலகுகள்
= 9 x 8 = 72 ச.செ.மீ.

நாம் பெரிய பக்கத்தை அடிப்பக்கமாகக் கொண்டால், அதாவது b = 12 செ.மீ. எனில், பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவை ‘h‘ என்க.
ஆகவே, இணைகரத்தின் பரப்பளவு = 72 ச.செ.மீ
b x h = 72
12 x h = 72
\(h=\cfrac { 72 }{ 12 } =16\)
எனவே,பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 6 செ.மீ ஆகும்.
10.
18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கையை x என்க
| குழந்தைகளின் எண்ணிக்கை | 6 | 18 |
| பென்சில்களின் எண்ணிக்கை | 24 | x |
குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, பென்சில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
ஆகவே, இவை நேர் விகிதத்தில் அமைந்துள்ளன.
நேர் விகிதத்தில் = \(\frac { { x }_{ 1 } }{ { y }_{ 1 } } =\frac { { x }_{ 2 } }{ { y }_{ 2 } } \)
\(\frac { 6 }{ 24 } =\frac { 18 }{ x } \)
6 × x = 18 × 24
x = \(\frac { 18\times 24 }{ 6 } \) = 72
ஆகவே, 18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை 72.
11.
கொடுக்கப்பட்ட பூந்தோட்டத்தின் விட்டம் = 49 மீ
d = 49 மீ
2r = 49
\(r=\cfrac { 49 }{ 2 } \)மீ
வட்ட வடிவ பூந்தோட்டத்தின் பரப்பளவு
= \({ \pi r }^{ 2 }\) சதுர அலகுகள்
\( =\frac{11 \times 7 \times 49}{2} \)
\(=\frac{3773}{2}\) மீ2
1 ச.மீ.க்குச் செலவு = ரூ.150
\(\frac{3773}{2}\)ச.மீ.க்குச் செலவு = ரூ.\(150 \times \frac{3773}{2}\)
= ரூ.2772
= ரூ.282975
12.
(i) ஆரம் r = 15 செ.மீ
விட்டம் d = 2r = 2 x 15 = 30 செ.மீ
சுற்றளவு C = 2πr
= \(2\times \cfrac { 22 }{ 7 } \times 15=\cfrac { 660 }{ 7 } \) செ.மீ
விட்டம் = 30 செ.மீ
= 94.28 செ.மீ
(ii) சுற்றளவு C = 1760 செ.மீ
\(2\pi r=1760\)
\(2\times \cfrac { 22 }{ 7 } \times r=1760\)
r = 280 செ.மீ
விட்டம் d = 2r = 2 x 280
d = 560 செ.மீ
(iii) விட்டம் d = 24 மீ
2r = 24மீ
= \(\cfrac { d }{ 2 } =\cfrac { 24 }{ 2 } =12\) மீ
சுற்றளவு \(C=2\pi r\)
= \(2\times \cfrac { 22 }{ 7 } \times 12\)
= \(\cfrac { 528 }{ 7 } =75.42\) மீ
= 75.42மீ
13.
தசம எண்களில் முழுஎண் பகுதிகள் சமம் (0, 0) பத்தில் ஒன்று பகுதிகள் 8, 2
8 > 2
0.888 > 0.28
பெரிய எண் = 0.888
14.
\( \frac{3}{2} =\frac{3 \times 5}{2 \times 5} \)
\(=\frac{15}{10}=1.5 \) (தசம எண்)
15.
சாய்சதுர மூலைவிட்டத்தின் ஒரு அளவு, மற்ற அளவை விட மூன்று மடங்கு.
d₂ = 3d,
மூலைவிட்ட அளவுகளின் கூடுதல் = 24 மீ
\(\mathrm{d}_{1}+\mathrm{d}_{2} =24
\)
\(\mathrm{~d}_{1}+3 \mathrm{~d}_{1} =24
\)
\(4 \mathrm{~d}_{1} =24
\)
\(\mathrm{~d}_{1} =\frac{24}{4}=6
\)
\(\mathrm{~d}_{1} =6
\)
\(\mathrm{d}_{2}=3 \mathrm{~d}_{1}
\)
\(\mathrm{~d}_{2}=3 \times 6=18
\)
சாய்சதுரத்தின் பரப்பளவு = \(=\frac{1}{2} d_{1} \times d_{2}
\)
\(=\frac{1}{2} \times 6 \times 18
\)
சாய்சதுரத்தின் பரப்பளவு = 54 ச.மீ
16.
அடிப்பக்கமும் உயரமும் = 7:3, உயரம் h = 45 செ.மீ
\( \frac{b}{h} =\frac{7}{3} \)
\(\frac{b}{45} =\frac{7}{3} \)
\(b =\frac{7}{3} \times 45=105 \) செ.மீ
இணைகரத்தின் பரப்பளவு = b x h ச.அலகுகள்
= 105 x 45
= 4725 ச.செ.மீ
17.
படத்திலிருந்து
\(\angle\)RSO = \(\angle\)POT (ஒத்த கோணங்கள் சமம்)
x = 40o
\(\angle\)QOU = \(\angle\)SRO (ஒத்த கோணங்கள் சமம்)
y = 25o
18.

= -9
19.
-70 + 20 = x - 10
-50 = x - 10
x = -50 + 10 = -40
20.
முக்கோணத்தின் சுற்றளவு = 3 பக்கங்களின் கூடுதல்
= (x + 3y) + (2x + y) + (x - y)
= (x + 2x + x) + (3y + y - y)
= (1 + 2 + 1) x + (3 + 1 - 1) y = 4x + 3y
21.
மண்டபம் ➝ குருசடைதீவு ➝ விவேகானந்தர் நினைவுகூடம்
22.
(i) x + 5 = 8
x + 5 - 5 = 8 - 5 (இருபுறம் 5 ஐக் கழிக்க)
x = 3
(ii) p − 3 = 7
p − 3 + 3 = 7 + 3 (இருபுறம் 3 ஐக் கூட்ட )
p = 10
(iii) 2x = 30
\(\frac{2 x}{2}=\frac{30}{2}\) (இருபுறம் 2 ஆல் வகுக்க)
x = 15
(iv) \(\frac { m }{ 6 } \) = 5
\(\frac { m }{ 6 } \) x 6 = 5 x 6 [இருபுறமும் 6 ஆல் பெருக்க]
m = 5 x 6
m = 30
(v) 7x +10 = 80
7x + 10 - 10 = 80 - 10 [இருபுறமும் 10 ஐக் கழிக்க]
7x = 70
\(\frac{7 x}{7}=\frac{70}{7}\) [இருபுறமும் 7 ஆல் வகுக்க)
x = 10
23.
தரைத்தளம் = 0
மின்தூக்கி 5 தளங்கள் கீழே செல்கிறது = -5
மின்தூக்கி 10 தளங்கள் மேலே செல்கிறது = + 10
தற்போது மின்தூக்கி இருக்கும் தளம் = 10 - 5 = +5
மின்தூக்கி 5 தளத்தில் இருக்கும்
24.
ஐந்து கோணங்களின் மதிப்பை xo என்க.
ஒரு புள்ளியில் அமையும் அனைத்து கோணங்களின் கூடுதல் 360°.
i.e., 45° + x° x°+ x° + x° + x° = 360°
45° + 5x° = 360°
5x° = 360° -45°
5x° = 315°
x° = 63°
அந்த ஐந்து கோணங்களின் மதிப்பு 63°.
25.
26.

27.
| தோட்டக்காரர்களின் எண்ணிக்கை | 6 | x |
| எடுத்துக் கொள்ளும் (நேரம் நிமிடம்) | 120 | 30 |
இது எதிர் விகிதத்தில் அமைந்துள்ளது.
x1y1 = x2y2
6 x 120 = x x 30
x = 24
மொத்தம் 24 ஆட்கள் தேவை. ஏற்கெனவே 6 ஆட்கள் உள்ளனர். எனவே இன்னும் 18 ஆட்கள் தேவை.
28.
30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள்
20 நபர்கள் அவ்வயலை \(\frac{15}{20} \times 30=221 / 2\) நாட்களில் அறுவடை செய்வார்கள்
29.
| கம்பத்தின் நீளம் (மீ) | 8 | x |
| நிழலின் நீளம் (மீ) | 6 | 30 |
இது நேர் விகிதத்தில் அமைந்துள்ளது
\( \therefore \frac{x_{1}}{y_{1}} =\frac{x_{2}}{y_{2}} \)
\(\frac{8}{6} =\frac{x}{30} \)
\(6 x =8 \times 30 \)
\(\therefore x =\frac{8 \times 30}{6}\)
x = 40 மீ
30 மீ நிழலை ஏற்படுத்தும் கம்பத்தின் நீளம் 40 மீ
30.
(c)
( R − r ) அலகுகள்
31.
(a)
2: 1
32.
(a)
2\(\pi \)r அலகுகள்
33.
(a)
<
34.
(c)
0.00900
35.
(d)
0.6
36.
(d)
ஆயிரத்தில் ஒன்று
37.
(b)
44˚
38.
(a)
ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள்
39.
(d)
வகுத்தல்
40.
(c)
16 ÷ (-4)
41.
(a)
108
42.
(d)
-11
43.
(c)
இருசமபக்கச் சரிவகம்
44.
(b)
-1
45.
(c)
ஒரு பொதுவான கதிர், பொதுவான முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை
46.
(a)
-9 + (-5) + 6
47.
(c)
-2a
48.
(b)
32 ச.செ.மீ
49.
(b)
-7
50.
(d)
22 செ.மீ
51.
(b)
8
52.
(c)
ரூ.360
53.
4.5 = 4 + \(\frac { 5 }{ 10 } \)
= 4\(\frac { 5 }{ 10 } \) = 4\(\frac { 1 }{ 2 } \)
குடுவையில் 4\(\frac { 1 }{ 2 } \)லிட்டர் மாம்பழச் சாறு உள்ளது.
54.
ஆனது m இக்கு இணை எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
y = 2x [குத்தெதிர்க் கோணங்கள் சமம்]
y + 4x = 180˚ [குறுக்குவெட்டியில் ஒரே பக்கம் அமைந்த உட் கோணங்களின் கூடுதல்]
2x + 4x = 180˚ [y = 2x என்பதால்]
6x = 180˚
இருபுறமும் 6 ஆல் வகுக்க
\(\frac{6x}{6}=\frac {180^o}{6}\) ஆகவே, x = 30˚.
இப்போது , y = 2(30˚) = 60˚.
55.
(i) (-85) ÷ 5 = -17
(ii) (-250) ÷ (-25) = +10
(iii) 120 ÷ (-6) = -20
(iv) 182 ÷ (-2) = -91
56.
சாய்சதுர வடிவிலான ஓடுகளின் மூலைவிட்டங்களின் நீளங்கள் முறையே, 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், d1 = 40 செ.மீ, d2 = 25 செ.மீ
ஒரு சாய்சதுர வடிவ ஓட்டின் பரப்பளவு = \(\cfrac { 1 }{ 2 } \times \left( { d }_{ 1 }\times { d }_{ 2 } \right) \) ச.அலகுகள்
= \(\cfrac { 1 }{ 2 } \times 40\times 25\)
= 500 ச.செ.மீ
எனவே 200 ஓடுகளின் பரப்பளவு = 200 x 500 ச.செ.மீ
= 100000 செ.மீ
= \(\cfrac { 100000 }{ 10000 } \)(1 ச.மீ = 10000 ச.செ.மீ)
= 10 ச.மீ
தரையை மெருகூட்ட 1 ச.மீ க்கு ஆகும் Rs 4.
எனவே, மொத்த செலவு = 10 x 45 = ரூ. 450
57.
தேவையான நாட்களின் எண்ணிக்கையை x என்க
வேலையாட்களின் எண்ணிக்கை குறைவதால் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இது எதிர் விகிதம் ஆகும்
எனவே x1y1 = x2y2
| வேலையாட்களின் எண்ணிக்கை | 60 | 42 |
| நாட்களின் எண்ணிக்கை | 7 | x |
ஆதலால், \(60 \times 7=42 \times x\)
\(60 \times 7=42 \times x\)
x = \(\frac { 60\times 7 }{ 42 } \)
x = 10
ஆகவே, 42 வேலையாட்கள் 10 நாட்களில் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்றி முடிப்பார்கள்.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards