7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 29/07/2019
நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள். அதே மகிழுந்து 210 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
2.
அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை ரூ.24 இக்கு வாங்கினார். அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?
3.
24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல் கொடுத்தால் 18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு?
4.
10 விவசாயிகள் 21 நாள்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாள்களில் உழுது முடிப்பர் ?
5.
ஒரு டசன் (dozen) சோப்புகளின் விலை ரூ.396 எனில், 35 சோப்புகளின் விலை என்ன?
6.
C = kd என்பதில்
(i) C இக்கும் d இக்கும் இடையேயுள்ள உறவு என்ன?
(ii) C = 30 மற்றும் d = 6 எனில், k ன் மதிப்பு என்ன?
(iii) d = 10 எனில், C ன் மதிப்பு என்ன?
7.
500 கிராம் எடையுள்ள 8 சிப்பங்களை (parcels) விரைவு அஞ்சலில் அனுப்பத் தேவையான பணம் மீனாவிடம் உள்ளது. அவளிடம் உள்ள அதே பணத்தில் 40 சிப்பங்களை (parcels) அவள் அனுப்புகிறாள் எனில், ஒரு சிப்பத்தின் (parcel) எடை எவ்வளவு இருக்கும் ?
8.
ஒரு குழி வெட்ட 10 இயந்திரங்கள் 60 நாள்கள் எடுத்துக்கொள்கின்றன. அனைத்து இயந்திரங்களும் ஒரே வேகத்தில் வேலை செய்கின்றன எனில், 30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட எத்தனை நாள்களாகும்?
9.
வள்ளி 10 பேனாக்களை ரூ.108 இக்கு வாங்குகிறார். கமலா 8 பேனாக்களை ரூ.96 இக்கு வாங்குகிறார். இருவரில் யார் குறைவான விலைக்குப் பேனாக்களை வாங்கினர்? (அலகு முறையைப் பயன்படுத்துக)
10.
அரை மீட்டர் துணியின் விலை ரூ.15 எனில், 8\(\frac { 1 }{ 3 } \) மீ நீளமுள்ள துணியின் விலை எவ்வளவு?
11.
8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?
12.
ஒரு டசன் (dozen) வாழைப்பழங்களின் விலை ரூ.20 எனில், 48 வாழைப் பழங்களின் விலை என்ன?
13.
4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.
7
8
9
10
14.
12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.
15
18
6
8
15.
ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.
150
70
100
147
16.
3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை
ரூ.300
ரூ.320
ரூ.360
ரூ.400
17.
ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை ரூ.260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்?
18.
60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
19.
40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்கள் முடிப்பார்கள் எனில் அதே வேலையை 4 நாள்களில் முடிக்க தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை _____ .
20.
குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600 பாட்டில்களை 5 மணி நேரத்தில் நிரப்புகிறது எனில் அவ்வியந்திரம், 3 மணி நேரத்தில் நிரப்பும் பாட்டில்களின் எண்ணிக்கை ________.
21.
ஒரு மகிழ்ந்து 60 கி.மீ தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதே மகிழ்ந்து 200 கி.மீ தூரத்தை சென்றடைய, தேவையான பெட்ரோலின் அளவு _________.
22.
8 ஆப்பிள்களின் விலை ரூ.56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________.
23.
12 நபர்கள் 8 நாட்களில் ஒரு குளத்தை வெட்டுவார்கள் எனில், அதே வேலையை 16 நபர்கள் 6 நாட்களில் செய்து முடிப்பார்கள்
24.
மல்லிகா 1 கி.மீ தூரத்தை 20 நிமிடத்தில் கடந்தால், அவள் 3 கி.மீ தூரத்தை 1 மணி நேரத்தில் கடந்து முடிப்பாள்.
25.
ஒரு விடுதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் உண்ணும் உணவின் அளவும் நேர் விகிதத்தில் இல்லை
26.
ஒரு குடும்பத்தின் செலவினமானது, அக்குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையோடு நேர்விகிதத் தொடர்புடையது.
27.
ஒரு பேருந்து கடந்த தூரமும், அத்தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரமும் நேர் விகிதத் தொடர்புடையன.
1.
90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் = 2 மணி 30 நிமிடங்கள்
= 150 நிமிடங்கள்
1 மணி = 60 நிமிடங்கள்
2 மணி = 120 நிமிடங்கள்
1 கி.மீ தூரத்தைக் கடக்க ஆகும் நேரம் = \(\frac { 150 }{ 90 } \) நிமிடங்கள்
210 கி.மீ தூரத்தைக் கடக்க ஆகும் நேரம் = \(\frac { 150 }{ 90 } \) x 210 நிமிடங்கள்
= 350 நிமிடங்கள் = \(\frac { 350 }{ 60 } \)
= 5 மணி 50 நிமிடங்கள்
ஆகவே, 210 கி.மீ தூரத்தைக் கடக்க மகிழுந்து எடுத்துக்கொள்ளும் நேரம் 5 மணி 50 நிமிடங்கள்.
2.
ஓரலகு முறையைப் பயன்படுத்தி இந்தக் கணக்கிற்குப் பின்வருமாறு விடையைக் காணலாம்:
2 நோட்டுப் புத்தகங்களின் விலை = ரூ.24
ஆகவே, 1 நோட்டுப் புத்தகத்தின் விலை = \(\frac { 24 }{ 2 } \) = ரூ.12
எனவே, 9 நோட்டுப் புத்தகங்களின் விலை = 9 x ரூ.12
= ரூ.108
ஆகவே, 9 நோட்டுப்புத்தகங்களை வாங்க, ரூ.108 தேவைப்படும்.
3.
18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கையை x என்க
| குழந்தைகளின் எண்ணிக்கை | 6 | 18 |
| பென்சில்களின் எண்ணிக்கை | 24 | x |
குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, பென்சில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
ஆகவே, இவை நேர் விகிதத்தில் அமைந்துள்ளன.
நேர் விகிதத்தில் = \(\frac { { x }_{ 1 } }{ { y }_{ 1 } } =\frac { { x }_{ 2 } }{ { y }_{ 2 } } \)
\(\frac { 6 }{ 24 } =\frac { 18 }{ x } \)
6 × x = 18 × 24
x = \(\frac { 18\times 24 }{ 6 } \) = 72
ஆகவே, 18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை 72.
4.
14 விவசாயிகள் உழுது முடிக்க ஆகும் நாட்கள் X என்க,
| விவசாயிகள் எண்ணிக்கை | 10 | 14 |
| நாட்களின் எண்ணிக்கை | 21 | x |
இது எதிர் விகிதத்தில் அமைந்துள்ளது.
x1y1 = x2y2
10 x 21 = 14 x x
x = 15
நிலத்தை உழுது முடிக்க ஆகும் நாட்கள் 15.
5.
ஒரு டசன் சோப்புகளின் விலை = ரூ 396
ie., 12 சோப்புகளின் விலை = ரூ 396
ஃ ஒரு சோப்பின் விலை = \(\frac{396}{12}\) = ரூ 33
ஃ 35 சோப்புகளின் விலை = 33 x 35
= ரூ 1155
6.
(i) C = kd எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஃ C இக்கும் d இக்கும் இடையேயுள்ள உறவு நேர் விகிதம் ஆகும்.
(ii) C = kd, C = 30 மற்றும் d = 6 எனில், k = ?
30 = k x 6
ஃ k = 5
(iii) C = kd, d = 10 மற்றும் k = 5 எனில், C= ?
C = 10 x 5 = 50
7.
| சிப்பங்களின் எண்ணிக்கை | 8 | 40 |
| எடை (கிராம்) | 500 | x |
இது எதிர் விகிதத்தில் அமைந்துள்ளது.
x1y1 = x2y2
8 x 500 = 40 x x
x = 100
ஒவ்வொரு சிப்பத்தின் எடை = 100 கிராம்.
8.
| இயந்திரங்களின் எண்ணிக்கை | 10 | 30 |
| நாட்களின் எண்ணிக்கை | 60 | x |
இது எதிர் விகிதத்தில் அமைந்துள்ளது.
x1y1 = x2y2
10 x 60 = 30 x x
x = 20
30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட 20 நாட்களாகும்.
9.
| வள்ளி | கமலா |
| 10 பேனாக்களின் விலை ரூ. 180 | 8 பேனாக்களின் விலை ரூ.96 |
| 1 பேனாவின் விலை \(\frac{180}{10}\) = ரூ.18 | 1 பேனாவின் விலை \(\frac{96}{8}\) = ரூ.12 |
கமலா குறைவான விலைக்குப் பேனாக்களை வாங்கியுள்ளார்.
10.
| துணியின் நீளம் (மீ) | \(\frac { 1 }{ 2 } \) | 8\(\frac { 1 }{ 3 } \) |
| துணியின் விலை (ரூ.) | 15 | x |
இது நேர் விகிதத்தில் அமைந்துள்ளது
\( \therefore \frac{x_{1}}{y_{1}}=\frac{x_{2}}{y_{2}} \)
\(\frac{1 / 2}{15}=\frac{81 / 3}{x} \)
\(\frac{1}{2} \times x=8 \frac{1}{3} \times 15 \)
\(\therefore x=\frac{25 \times 15 \times 2}{3}=250\)
8\(\frac { 1 }{ 3 } \)மீ நீளமுள்ள துணியின் நீளம் ரூ. 250
11.
| கம்பத்தின் நீளம் (மீ) | 8 | x |
| நிழலின் நீளம் (மீ) | 6 | 30 |
இது நேர் விகிதத்தில் அமைந்துள்ளது
\( \therefore \frac{x_{1}}{y_{1}} =\frac{x_{2}}{y_{2}} \)
\(\frac{8}{6} =\frac{x}{30} \)
\(6 x =8 \times 30 \)
\(\therefore x =\frac{8 \times 30}{6}\)
x = 40 மீ
30 மீ நிழலை ஏற்படுத்தும் கம்பத்தின் நீளம் 40 மீ
12.
1 டசன் வாழைப்பழங்களின் விலை = ரூ. 20
அதாவது, 12 வாழைப்பழங்களின் = ரூ. 20
ஒரு வாழைப்பழத்தின் விலை \(=\frac{20}{12}\)
ஃ 48 வாழைப்பழங்களின் விலை \(=\frac{20}{12} \times 48\)
= ரூ. 80
13.
(b)
8
14.
(c)
6
15.
(d)
147
16.
(c)
ரூ.360
17.
ஒரு பெட்டியின் விலை = ரூ.200
விலை அதிகரிக்கப்பட்ட ஒரு பெட்டியின் விலை = ரூ.260
வேந்தனால் வாங்கப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கை x என்க.
பெட்டிகளின் விலை அதிகரிக்கும்போது, பெட்டிகளின் எண்ணிக்கை குறையும்..
எனவே இவை எதிர் விகிதத்தில் உள்ளன.
அதாவது, x1y1 = x2y2
| பெட்டிகளின் எண்ணிக்கை | 13 | x |
| பெட்டிகளின் விலை ரூ. | 200 | 260 |
\( 13 \times 200=x \times 260 \)
\(x \times 260=13 \times 200 \)
x = \(\frac { 13\times 200 }{ 260 } \)
x = 10
ஆகவே, அவரிடம் உள்ள பணத்தில் 10 பெட்டிகளை வாங்கலாம்.
18.
தேவையான நாட்களின் எண்ணிக்கையை x என்க
வேலையாட்களின் எண்ணிக்கை குறைவதால் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இது எதிர் விகிதம் ஆகும்
எனவே x1y1 = x2y2
| வேலையாட்களின் எண்ணிக்கை | 60 | 42 |
| நாட்களின் எண்ணிக்கை | 7 | x |
ஆதலால், \(60 \times 7=42 \times x\)
\(60 \times 7=42 \times x\)
x = \(\frac { 60\times 7 }{ 42 } \)
x = 10
ஆகவே, 42 வேலையாட்கள் 10 நாட்களில் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்றி முடிப்பார்கள்.
19.
( )
80
20.
( )
360
21.
( )
10 லிட்டர்கள்
22.
( )
ரூ.84
23.
(b)
24.
(a)
25.
(b)
26.
(a)
27.
(a)
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards