7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/02/2020
7ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 7th Standard Science Important Questions with Answer key )
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?
எளிய கூட்டல்
வகுத்தல்
படம் வரைதல்
பெருக்கல்
2.
முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?
Ctrl + Z
Ctrl + R
Ctrl + Y
Ctrl + N
3.
புறாவின் இருசொற் பெயர்
ஹோமோ செப்பியன்
ராட்டஸ் ராட்டஸ்
மாஞ்சிபெரா இண்டிகா
கொலம்பா லிவியா
4.
ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
அரிஸ்டாட்டில்
லின்னேயஸ்
விட்டேக்கர்
பிளேட்டோ
5.
கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?
ஒற்றுமை
வேறுபாடு
இரண்டும்
எதுவும் இல்லை
6.
செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?
லைசோசோம்
ரைபோசோம்
மைட்டோகாண்ட்ரியா
உட்கரு
7.
உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது
செல்
புரோட்டோப் பிளாசம்
செல்லுலோஸ்
உட்கரு
8.
________ வேதிமாற்றம் அல்ல.
அம்மோனியா நீரில் கரைவது
கார்பன் - டை - ஆக்ஸைடு நீரில் கரைவது
உலர் பனிக்கட்டி நீரில் கரைவது
துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது
9.
கீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.
நீர் மேகங்களாவது
ஒரு மரத்தின் வளர்ச்சி
பசுஞ்சாணம் உயிர் - எரிவாயுவாவது
பனிக்கூழ் கரைந்த நிலை - பனிக்கூழாவது
10.
பின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.
குளிர்வடைதல் மற்றும் உருகுதல்
குளிர்வடைதல் மற்றும் உறைதல்
ஆவியாதல் மற்றும் உருகுதல்
ஆவியாதல் மற்றும் உறைதல்
11.
கீழ்க்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது?
12.
ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________
பாதுகாப்பான திரவம்
தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது.
ஒரே சீராக விரிவடையக்கூடியது.
விலை மலிவானது
13.
வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்
விரிவடைகிறது
சுருங்குகிறது
அதே நிலையில் உள்ளது
மேற்கூறிய ஏதுமில்லை
14.
_____ நேர்மின் சுமையுடையது.
புரோட்டான்
எலக்ட்ரான்
மூலக்கூறு
நியூட்ரான்
15.
பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.
தனிமம்
அணு
மூலக்கூறு
எலக்ட்ரான்
16.
கீழ்க்காண்பவற்றுள் கணினியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது எது?
இங்க்ஸ்கேப்
போட்டோ ஸ்டோரி
மெய்நிகர் தொழில் நுட்பம்
அடோபி இல்லுஸ்ட்ரேட்டர்
17.
போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன் படுத்துபவர்கள் யார்?
ஆசிரியர்
மருத்துவர்
வண்ணம் அடிப்பவர்
புகைப்படக் கலைஞர்கள்.
18.
அசைவூட்டம் எதற்கு உதாரணம்?
ஒலித் தொடர்பு
காட்சித் தொடர்பு
வெக்டர் தொடர்பு
ராஸ்டர் தொடர்பு
19.
அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் எது?
குளோரின்
சல்பர்
பாதரசம்
வெள்ளி
20.
கீழ்க்கண்டவற்றுள் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறைக் குறிக்க க்கூடிய எளிய மற்றும் அறிவியல் பூர்வமான முறை எது?
கணித வாய்ப்பாடு
வேதியியல் வாய்ப்பாடு
கணிதக் குறியீடு
வேதியியல் குறியீடு
21.
கீழ்க்கண்டவற்றுள் உலோகம் எது?
இரும்பு
ஆக்சிஜன்
ஹீலியம்
தண்ணீர்
22.
கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது?




23.
கீழே கொடுக்கப்பட்டுள்ள திசைவேகம்- காலம் வரைபடத்திலிருந்து அப்பொ ருளானது

சீரான இயக்கத்தில் உள்ளது
ஓய்வு நிலையில் உள்ளது
சீரற்ற இயககத்தில் உள்ளது
சீரான முடுககத்தில் பொருள் இயங்குகிறது
24.
முதலுதவி என்பதன் நோக்கம்
பணத்தைச் சேமித்தல்
வடுக்களைத் தடுத்தல்
மருத்துவப் பராமரிப்பைத் தடுத்தல்
வலி நிவாரணம்
25.
புகையிலையை மெல்லுவதால் ஏற்படுவது
இரத்த சோகை
பற்குழிகள்
காசநோய்
நிமோனியா
26.
பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
வெற்றிலை
மிளகு
இவை இரண்டும்
இவை இரண்டும் அல்ல
27.
ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
ஸ்போர்கள்
துண்டாதல்
மகரந்த சேர்க்கை
மொட்டு விடுதல்
28.
இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
பிரையோபில்லம்
பூஞ்சை
வைரஸ்
பாக்டீரியா
29.
சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்
1:2
2:1
4:1
1:4
30.
அடர்த்தியின் SI அலகு
கிகி / மீ2
கிகி / மீ3
கிகி / மீ
கி / மீ3
31.
பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
நிறை
நேரம்
பரப்பு
நீளம்
32.
Tux Math என்றால் என்ன?
33.
சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?
34.
புரோடிஸ்டா குறித்து இரண்டு குறிப்புகள் எழுதுக.
35.
இரு சொற்பெயரிடும் முறை என்பது யாது?
36.
மொனிராவிற்கு இரண்டு உதாரணம் தருக.
37.
லைசோஸோம், செல்களின் துப்புரவாளர்கள் என ஏன் அழைக்கப்படுகிறது?
38.
செல் சவ்வு என்ன செய்கிறது?
39.
ஒரு காகிதத்தை வண்ணமடித்தல் எவ்வகை மாற்றமாகும்?
40.
செயற்கை முறையில் பழத்தினை பழுக்க வைத்தல் எந்த வகை மாற்றமாகும்?
41.
இரு வெப்ப உமிழ் வினைகளைக் குறிப்பிடுக.
42.
மின்கலம் என்பது என்ன?
43.
மின்னோட்டத்தை உருவாக்கும் சாதனத்தின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.
44.
மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது?
45.
ஸ்ரீநகரின்(ஜம்மு&காஷ்மீர்)வெப்பநிலை -40C மேலும் கொடைக்கானலின் வெப்பநிலை 30C. இவற்றில் எப்பகுதியின் வெப்பநிலை அதிகமாகும். அப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு எவ்வளவு?
46.
புரோட்டான்களின் பண்புகள் யாவை?
47.
அணு எண் என்றால் என்ன?
48.
கந்தக அமிலத்தின் (H2SO4) அணுக்கட்டு எண்ணைக் கணக்கிடுக.
49.
மூலக்கூறு - வரையறு.
50.
கீழ்க்காணும் தனிமங்களை உலோகம், அலோகம் மற்றும் உலோகப் போலிகள் என வகைப்படுத்துக.
சோடியம், பிஸ்மத் , வெள்ளி, நைட்ரஜன், சிலிக்கான், கார்பன், குளோரின், இரும்பு மற்றும் தாமிரம்.
51.
கீழ்க்காணும் தனிமங்களின் குறியீடுகளை எழுதி அவற்றை திண்மம், திரவம் மற்றும் வாயு அடிப்படையில் வகைப்படுத்தவும். அலுமினியம், கார்பன், குளோரின், பாதரசம், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.
52.
கீழ்க்கண்ட சேர்மங்களின் வேதியியல் வாய்ப்பாட்டையும், அதில் அடங்கியுள்ள தனிமங்களின் பெயர்களை எழுதவும்.
1. சோடியம் குளோரைடு
2. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
3. கார்பன்டை ஆக்ஸைடு
4. கால்சியம் ஆக்ஸைடு
5. சல்பர் டை ஆக்ஸைடு
53.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?
54.
சஃபைரா மாறாத திசையில் மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள். அவளது இயக்கத்தை தொடர்புபடுத்தி எழுதவும்.
55.
காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?
56.
உனது முடியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணுவது எவ்வாறு?
57.
சுகாதாரம் என்றால் என்ன?
58.
ஒரு மீட்டர் பக்க அளவு கொண்ட 10 சதுரங்களை கொண்ட பொருளொன்றின் பரப்பளவு என்ன?
59.
முட்கள் என்றால் என்ன?
60.
தாவரத்தில் உள்ள இரு வகையான இனப்பெருக்க முறைகளை எழுது.
61.
தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?
62.
எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?
63.
வகைப்பாட்டின் படிநிலைகளைப் பற்றி எழுதுக.
64.
வைரஸ் செல்லற்றவை என்று அழைக்கப்படுகிறது. ஏன்?
65.
செல்லிருந்து உயிரினம் வரையிலான வரிசையை சரியாக எழுது?
66.
கடல் நீரில் இருந்து நீரைப் பெறும் முறை ஒன்றினை உம்மால் கூற முடியுமா?
67.
மின்னோட்டம் வரையறு.
68.
சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள் . நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும்
69.
சாதாரண உப்பு என்பது யாது? அதில் உள்ள தனிமங்கள் யாவை? சாதாரண உப்பின் மூலக்கூறு வாய்ப்பாட்டினை எழுதுக. அத்தனிமங்களின் அணு எண் மற்றும் நிறை எண் மதிப்பு என்ன? அந்த சேர்மத்திலுள்ள அயனிகளை எழுதவும்.
70.
சீரான முடுக்கம் என்பது பற்றி நீவிர் கருதுவது யாது?
71.
மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் போன்ற குறைபாட்டைக் குறைக்க நீங்கள் கூறும் ஆலோசனை யாது?
72.
உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைக்க நீங்கள் எடுக்க நடவடிக்கைகள் என்னென்ன?
73.
அயல் மகரந்தச் சேரந்தச் சேர்க்கை என்றால் என்ன?
74.
பின்வருமாறு மூன்று கோளங்கள் உள்ளன.

கோளங்கள் 'A' மற்றும் 'B' ஒரே பொருளால் செய்யப்பட்டவை . கோளம் 'C' வே று ஒரு பொருளால் செய்யப்பட்டது. கோளங்கள் 'A' மற்றும் 'C' ஒரே ஆரம் கொண்டவை . கோளம் 'B' இன் ஆரம் கோளம் 'A' இன் ஆரத்தில் பா தியாக இருக்கும். கோளம் 'A' இன் அடர்த் தி கோளம் 'C' ஐ விட இரு மடங்காக உள்ளது.
இப்போ து, பின்வரும் வினாக்களுக்கு விடையளி:
1. கோளங்கள் A மற்றும் B இன் நிறை களின் விகிதத்தைக் காண்க.
2. கோளங்கள் A மற்றும் B இன் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க.
3. கோளங்கள் A மற்றும் C இன் நிறை களின் விகிதத்தைக் காண்க.
75.
ஓரு திரவத்தின் கன அளவையும் ஒரு கலனின் கொள்ளளவையும் வேறுபடுத்துக.
76.
ஐந்து உலக வகைப்பாட்டின் வரைபடம் வரைக
77.
உலர் மின்கலம் ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக
78.
ஆய்வக வெப்பநிலைமானிக்கும், மருத்துவ வெப்பநிலைமானிக்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை?
79.
தனிமங்களின் குறியீடுகளை எழுதக்கூடிய பல்வேறு விதமான வழிமுறைகளை விவரி. பொருத்தமான உதாரணம் தருக.
80.
சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
81.
ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எவ்வாறு நோய் பரவுகிறது?
82.
மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.
83.
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.
84.
250 கி நிறையுள்ள ஒரு திரவம் 1000 cc இடத்தை நிரப்புகிறது. திரவத்தின் அடர்த்தியைக் காண்க.
1.
(a)
எளிய கூட்டல்
2.
(a)
Ctrl + Z
3.
(d)
கொலம்பா லிவியா
4.
(c)
விட்டேக்கர்
5.
(c)
இரண்டும்
6.
(d)
உட்கரு
7.
(a)
செல்
8.
(d)
துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது
9.
(c)
பசுஞ்சாணம் உயிர் - எரிவாயுவாவது
10.
(c)
ஆவியாதல் மற்றும் உருகுதல்
11.
(b)
12.
(c)
ஒரே சீராக விரிவடையக்கூடியது.
13.
(a)
விரிவடைகிறது
14.
(a)
புரோட்டான்
15.
(b)
அணு
16.
(c)
மெய்நிகர் தொழில் நுட்பம்
17.
(d)
புகைப்படக் கலைஞர்கள்.
18.
(a)
ஒலித் தொடர்பு
19.
(c)
பாதரசம்
20.
(b)
வேதியியல் வாய்ப்பாடு
21.
(a)
இரும்பு
22.
(a)

23.
(a)
சீரான இயக்கத்தில் உள்ளது
24.
(d)
வலி நிவாரணம்
25.
(b)
பற்குழிகள்
26.
(c)
இவை இரண்டும்
27.
(d)
மொட்டு விடுதல்
28.
(a)
பிரையோபில்லம்
29.
(a)
1:2
30.
(b)
கிகி / மீ3
31.
(c)
பரப்பு
32.
1. 'Tux Math' என்பது கணிதம் கற்பதற்கான காணொலி விளையாட்டாகும்.
2. ஒரு மாற்றியமைக்கக் கூடிய இலவச மென்பொருளாகும். கணக்கைச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கற்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
33.
சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை Ctrl + S ஆகும்.
34.
1. புரோடிஸ்டா உலகத்தில் ஒரு செல் உயிரிகளும் சில எளிய பல செல் யூகேரியோட்டுகளும் அடங்கும்.
2. தாவர வகை புரோடிஸ்டுகள் தற்சார்பு ஊட்ட மூலமும் விலங்கு வகை புரோடிஸ்டுகள் பிற ஊட்ட முறை மூலமும் உணவு எடுத்துக் கொள்ளும்.
35.
1. இருசொல் பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு உலக அளவில் பெயரிடும் முறை ஆகும்.
2. உயிரினங்களை இரண்டு சொல் கொண்ட பெயர்களோடு அழைப்பது இருசொல் பெயரிடும் முறை ஆகும்.
36.
பாக்டீரியங்கள் மற்றும் நீலப்பசும்பாசிகள் மொனிரா வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
37.
செல்லில் உள்ள தேவையில்லாத நுண்உறுப்புகளை அழிக்கக் கூடியது. எனவே இவை செல்களின் துப்புரவாளர்கள் என அழைக்கப்படுகிறது.
38.
செல் சவ்வு தாவர செல்லின் உள்ளே சில பொருட்களை மட்டும் ஊடுருவ அனுமதிக்கிறது. மேலும் செல்லைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது.
39.
இது இயற்பியல் மாற்றமாகும்.
40.
வேதியியல் மற்றும் கால ஒழுங்கற்ற மாற்றம்.
41.
சோப்புத்தூளுடன் நீரைச் சேர்த்தால் வெப்பம் வெளியிடப்படும். மரக்கட்டை எரியும் போது ஒளியும், வெப்பமும் வெளியிடப்படும்.
42.
மின்சாரத்தை நேரடியாகவோ அல்லது எளிதாகவோ பெற முடியாத மின்சாதனங்களுக்கு மின்சாரத்தை அளிக்கவல்ல சாதனமே மின்கலனாகும்.
43.
மின்வேதிக் கலன்கள் மற்றும் மின்னியக்கி.
44.
இந்த குறுகிய வளைவானது வெப்பநிலைமானியை நோயாளியின் வாயிலிருந்து எடுத்தவுடன் பாதரசமானது மீண்டும் குமிழுக்குள் செல்வதைத் தடுக்கிறது.
45.
கொடைக்கானலின் வெப்பநிலை அதிகமாகும். வெப்பநிலை வேறுபாடு = −4°C + 3°C = 7°C
46.
1. அணுக்கருவினுள் காணப்படும் நியூக்ளியான்களுள் ஒன்று.
2. நேர்மின்னூட்டம் மதிப்பு கொண்டது (+1).
3. புரோட்டானின் நிறை 1.6726 x 10-27 Kg
47.
ஒரு அணுவில் காணப்படும் எலக்ட்ரான்கள் (அல்லது) புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண் (Z) ஆகும்.
48.
H2SO4 மூலக்கூறில் 2 H அணுக்கள், 1 S அணு மற்றும் 4 O அணுக்கள் உள்ளன.
எனவே அணுக்கட்டு எண் = 2+1+4=7
49.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் வேதிப்பிணைப்பினால் இணைந்து மூலக்கூறு உருவாகிறது.
50.
1. உலோகங்கள் : சோடியம், பிஸ்மத், வெள்ளி, இரும்பு, தாமிரம்
2. அலோகங்கள் : நைட்ரஜன், கார்பன், குளோரின்
3. உலோகப்போலிகள் : சிலிக்கான்
51.
| தனிமம் | குறியீடு | நிலைமை |
| அலுமினியம் | Al | திண்மம் |
| கார்பன் | C | திண்மம் |
| குளோரின் | Cl | வாயு |
| பாதரசம் | Hg | திரவம் |
| ஹைட்ரஜன் | H | வாயு |
| ஹீலியம் | He | வாயு |
52.
| சேர்மம் | வேதி வாய்ப்பாடு | தனிமங்களின் பெயர்கள் |
| சோடியம் குளோரைடு | NaCl | சோடியம், குளோரின் |
| பொட்டாசியம் ஹைட்ராக்சைடு | KOH | பொட்டாசியம், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் |
| கார்பன் டை ஆக்ஸைடு | CO₂ | கார்பன், ஆக்ஸிஜன் |
| கால்சியம் ஆக்ஸைடு | CaO | கால்சியம், ஆக்ஸிஜன் |
| சல்ஃபர் டை ஆக்ஸைடு | SO₂ | சல்ஃபர், ஆக்ஸிஜன் |
53.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை. இவ்வகைப் படங்களைப் பெரிதாக்கி பார்க்கும் போது அவை செவ்வக அடுக்குகளாகத் தெரியும்.
54.
சஃபைரா சீரான திசைவேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள்.
55.
சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவிய பின் ஒரு கிருமி நாசினித் திரவத்தால் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
56.
வழக்கமாக உச்சந்தலையைத் தேய்த்துக் குளிப்பதால் இறந்த சருமச் செல்கள், அதிக எண்ணெய் மற்றும் தூசி ஆகியவற்றை அகற்றலாம்.
57.
சுகாதாரம் என்பது சத்துள்ள உணவை உண்டு. உடற்பயிற்சி செய்து ஓய்வெடுக்கவும், நல்ல தூக்கத்துடன் நாம் வாழும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதும் சுகாதாரமாகும்.
58.
ஒரு சதுரத்தின் பரப்பளவு = பக்கம் × பக்கம்
= 1 மீ × 1 மீ
= 1 மீ2
= 1 சதுர மீட்டர்
10 சதுரங்கள கொண்ட பொருளொன்றின் பரப்பளவு
= 1 சதுர மீட்டர் × 10
= 10 சதுர மீட்டர்
59.
இலைகள் முட்களாக மாறுகின்றன. தண்டு ஒளிச்சேர்க்கை செய்யும் வகையில் பசுமையான சதைப்பற்றுள்ள பகுதியாக மாறுகின்றது.
எ.கா: கள்ளி வகைகள்
60.
பாலினப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம்
61.
தங்கத்தின் அடர்த்தி = 19,300 கி.கி./மீ3
62.
பாதரசத்தைத் தவிர மற்ற அனைத்து திரவங்களிலும் இரும்பு மூழ்கும்.
63.
1. வகைப்பாட்டில் ஏழு முக்கிய படிநிலைகள் உள்ளன.
2. அவை உலகம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், சிற்றினம் ஆகும்.
3. வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினமாகும்.
64.
வைரஸ் செல்லற்றவை அவை செல்களால் ஆனவை அல்ல. இவை செல்களைக் காட்டிலும் மேலும் சிறியவை. இவை உயிருள்ள செல்களில் மட்டுமே இனப்பெருக்கம் செய்ய இயலும். எனவே வைரஸ் செல்லற்றவை எனப்படுகிறது.
65.
செல் ➝திசு➝ உறுப்பு➝ உறுப்பு மண்டலம் ➝உயிரினம்
66.
ஆவியாதல் என்ற தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி கரைந்த நிலையில் உள்ள திண்மங்களை அதன் திண்மம் திரவம் கலவையில் இருந்து பிரித்தெடுக்க முடியும். இம்முறையின் மூலம் கடல் நீரினை ஆவியாக்கி நல்ல நீரினை பெறலாம்.
67.
மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும். மின்சாதனங்கள் இயங்க வேண்டும் எனில் அச்சாதனங்கள் வழியே மின்னோட்டம் பாய வேண்டும். ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டமானது ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதேனும் ஓர் புள்ளி வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவால் அளவிடப்படுகிறது.
68.
ஆம். ரமணியின் கூற்றினை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் ரமணியின் கூற்று சரியானது. மேலும் ஆய்வக வெப்பநிலைமானியில் குறுகிய வளைவு காணப்படுவதில்லை. எனவே நாம் அளவிடும் பொருளை விட்டு வெளியே எடுத்தவுடன் பாதரசம் குமிழிக்குள் சிறிதளவு சென்றுவிடும். சரியான அளவீடு நமக்கு கிடைக்காது. எனவே சுவாதியின் அளவீடு தவறானதாகும்.
69.
1. சாதாரண உப்பு என்பது சோடியம் குளோரைடு ஆகும்.
2. இதில், சோடியம் மற்றும் குளோரின் ஆகிய தனிமங்கள் உள்ளன.
3. சோடியம் குளோரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு NaCl ஆகும்.
| தனிமம் | அணு எண் | நிறை எண் | அயனி நிலை |
| சோடியம் | 11 | 23 | Na+ |
| குளோரின் | 17 | 35.5 | Cl- |
70.
சீரான கால இடைவெளியில் காலத்தினைப் பொறுத்து திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் சீரானதாக இருப்பின் அம்முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்.
71.
1. வழக்கமாக உச்சந்தலையை நன்றாக தேய்த்துக் குளிப்பதன் மூலம் இறந்த சருமச் செல்கள், அதிக எண்ணெய் மற்றும் தூசி ஆகியவற்றை அகற்றலாம
2. சுத்தமான தண்ணீரில் குளித்தல், நல்ல தரமான சீப்புகளைப் பயன்படுத்துதல் முடி பராமரிப்பிற்கு மிக அவசியமாகக் கருதப்படுகிறது.
72.
1. நாம் ஒரு நாளைக்கு இரு முறை பல் துலக்குதல் மூலம் பற்களிலும், ஈறுகளிலும் பற்காரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்கிறது.
2. நாம் பற்களைத் தழுவும் போது (ஃப்ளோசிங்) உணவுத்துகள்கள், பற்காரை மற்றும் பாக்டீரியங்கள் நீக்கப்படுகின்றன.
73.
ஒரு மலரிலுள்ள மகரந்தத்தாள் அதே தாவரத்திலுள்ள அல்லது வேறொரு தாவரத்திலுள்ள சூலகத்துடன் இணைவது அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
74.
1) கோளங்கள் (A) மற்றும் (B)-இன் நிறைகளின் விகிதம்:
கோளங்கள் (A) மற்றும் (B) ஒரே பொருளால் செய்யப்பட்டவை.
கோளங்கள் (A) மற்றும் (B) இன் அடர்த்தி சமம். இதை (D) எனக்கொள்க,
D =M/V
M = D x V
கோளம் (A) இன் பருமன் V1 எனக்கொள்க.
கோளம் (B) இன் பருமன் V2.
கோளம் (A) இன் நிறை M1 எனக்கொள்க.
கோளம் (B) இன் பருமன் M2.
M₁ = D x V₁
M₂ = D x V₂
கோளம் (B) இன் ஆரம் கோளம் (A) - இன் ஆரத்தில் பாதி. எனவே கோளம் (A) - இன் ஆரம் r=2 எனக்கொள்க.
பருமன் \(V_{1} =\frac{4}{3} \pi r^{3} =\frac{4}{3} \times \pi \times 2 \times 2 \times 2 \)
\(V_{1} =32 \frac{\pi}{3}\)
கோளம் (B) இன் ஆரம் r=1
பருமன் V2 \(=\frac{4}{3} \pi r^{3} =\frac{4}{3} \times \pi \times 1 \times 1 \times 1 \)
\(V_{1} =4 \frac{\pi}{3}\)
கோளம் (A) இன் நிறை \(M_{1}=D \times 32 \frac{\pi}{3} \)
கோளம் (B) இன் நிறை \(M_{2}=D \times 4 \frac{\pi}{3} \)
நிறைகளின் விகிதம் \(\frac{M_{1}}{M_{2}}=\frac{D \times 32 \pi / 3}{D \times 4 \pi / 3}=\frac{8}{1} \)
கோளம் (A) மற்றும் (B) இன் நிறை விகிதம் M1:M2 = 8:1
2) கோளங்கள் (A) மற்றும் (B)-இன் கன அளவுகளின் விகிதம்:
கோளம் (A) இன் கன அளவு \(V_{1} =32 \frac{\pi}{3} \)
கோளம் (B) இன் கன அளவு \(V_{2} =4 \frac{\pi}{3} \)
கன அளவுகளின் விகிதம் \(V_{1} =\frac{32 \pi / 3}{4 \pi / 3}=\frac{8}{1} \)
கோளம் (A) மற்றும் (B) இன் கன அளவுகளின் விகிதம் V1 : V2 = 8:1
3) கோளங்கள் (A) மற்றும் (C)-இன் நிறைகளின் விகிதம்:
கோளங்கள் (A) மற்றும் (C) இன் ஆரங்கள் சமம். எனவே இரு கோளங்களின் பருமனும் சமம். அதை V எனக்கொள்க. கோளம் (A) இன் அடர்த்தி கோளம் (C) ஐ விட இரு மடங்கு. எனவே, கோளம் (A) இன் அடர்த்தி 2D எனக் கொள்க,
கோளம் (C) இன் அடர்த்தி =D
M = D x V
கோளம் (A) இன் நிறை = M₁
கோளம் (C) இன் நிறை = M₂
M₁ = 2D x V
M3 = D x V
கோளம் (A) மற்றும் (C) இன் நிறை \(\frac{\mathrm{M}_{1}}{\mathrm{M}_{3}}=\frac{2 \mathrm{D} \times \mathrm{V}}{\mathrm{D} \times \mathrm{V}}=\frac{2}{1}\)
கோளம் (A) மற்றும் (C) இன் நிறை M1: M3 = 2:1
75.
| திரவத்தின் கனஅளவு | கலனின் கொள்ளளவு |
| திரவத்தின் கனஅளவு என்பது அது கலனில் நிரப்பும் அளவைக் குறிக்கிறது. |
ஒரு கொள்கலனில் ஊற்றக்கூடிய அதிகபட்ச திரவத்தின் பருமனே கலனின் கொள்ளளவு எனப்படும். |
76.
77.
1. உலர் மின்கலன் ஆனது பெரும்பாலான மின் சாதனங்களில் பொதுவாகப் பயன்படும் வேதி மின்கலன்களின் ஓர் சாதாரண வகையாகும். இது சிறிய வடிவிலான எளிதில் எடுத்துச் செல்லத்தக்க ஓர் மின்மூலமாகும். இது 1887 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த யேய் சுகியோவால் உருவாக்கப்பட்டது.
2. உலர் மின்கலன்கள் தொலைக்காட்சியின் தொலைவியக்கி, டார்ச், புகைப்படக் கருவி மற்றும் விளையாட்டுப் பொம்மைகளில் பொதுவாகப் பயன்படுபவைகள் ஆகும்.
3. உலர் மின்கலன்கள் எடுத்துச் செல்லதக்க வடிவிலான லெக்லாஞ்சி மின்கலத்தின் ஓர் எளிய வடிவம் ஆகும். இது எதிர் மின்வாய் அல்லது ஆனோடாகச் செயல்படும் துத்தநாக மின்தகட்டை உள்ளடக்கியது.
4. அம்மோனியம் குளோரைடு மின்பகுளியாகச் செயல்படுகிறது.
5. துத்தநாக குளோரைடானது அதிக அளவு நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதால் பசையின் ஈரப்பதத்தை பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது.
6. கலனின் நடுவில் ஒரு வெண்கல மூடி கொண்டு மூடப்பட்டிருக்கும் கார்பன் தண்டானது வைக்கப்பட்டுள்ளது. இத்தண்டு நேர் மின்வாய் அல்லது கேதோடாக செயல்படுகிறது.
7. இது ஒரு மெல்லிய பையில் மிக நெருக்கமாக மரக்கரி மற்றும் மாங்கனீசு டை ஆக்ஸைடு (MnO2) நிரம்பிய கலவையால் சூழப்பட்டிருக்கும், இங்கே MnO2 ஆனது மின்முனைவாக்கியாகச் செயல்படுகிறது. துத்தநாகப் பாண்டமானது மேலே மூடப்பட்ட நிலையில் மூடப்பட்டிருக்கும் வேதிவினையின் விளைவாக உருவாகும் வாயுக்களை வெளியேற்ற ஏதுவாக அதில் ஓர் சிறியத் துளையானது இடப்பட்டு இருக்கும். இரசாயன நடவடிக்கைகளால் வெளியேற இயலாத வாயுக்களை அனுமதிக்க ஒரு சிறியத் துளை உள்ளது. கலத்திற்குள்ளான வேதிவினையானது லெக்லாஞ்சி மின்கலம் போன்றே நடைபெறும்.
78.
| மருத்துவ வெப்பநிலைமானி | ஆய்வக வெப்பநிலைமானி |
| மருத்துவ வெப்பநிலைமானியானது 35oC முதல் 42oC வரை அல்லது 94oF முதல் 108oF வரை அளவீட்டினைக் கொண்டுள்ளது. | ஆய்வக வெப்பநிலைமானியானது பொதுவாக -10oC முதல் 110oC வரை அளவிடப்பட்டிருக்கும். |
| பாதரச மட்டமானது தானாகவே கீழ் இறங்காது.அதில் உள்ள குறுகிய வளைவானது பாதரச மட்டத்தினை கீழ் இறங்காமல் பாதுகாக்கிறது. | குறுகிய வளைவு இல்லாத காரணத்தினால் பாதரச மட்டமானது தானாகவே கீழ் இறங்கிவிடும். |
| கைகளுக்கு அடியில் இருந்தோ அல்லது வாயிலிருந்தோ வெப்பநிலைமானியினை எடுத்த பிறகு அளவீடானது எடுக்கப்படுகிறது. | வெப்பநிலைமானியானது வெப்பமூலத்தில் இருக்கும் நிலையிலேயே அளவீடானது எடுக்கப்படுகிறது.எ.கா .திரவம் அல்லது வேறு ஏதேனும் பொருள். |
| பாதரசத்தினை கீழே கொண்டு வர வெப்பநிலைமானியினை உதற வேண்டும். | பாதரச மட்டத்தினை கீழே கொண்டுவர வெப்பநிலைமானியினை உதற வேண்டியதில்லை. |
| இது உடல் வெப்பநிலையினை அளக்க பயன்படுகிறது. | இது ஆய்வகத்தில் பல்வேறு பொருள்களின் வெப்பநிலையை அளக்க பயன்படுகிறது. |
79.
1. தனிமங்களின் குறியீட்டில் ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
பெரும்பாலான தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு குறிக்கப்படுகிறது.
உதாரணம் : ஆக்ஸிஜனின் குறியீடு O, ஹைட்ரஜனின் குறியீடு H
2. ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் போது, அத்தனிமத்தின் முதல் இரண்டு எழுத்துக்களை குறியீடாகக் கருத வேண்டும். (முதல் எழுத்து பெரிய எழுத்து)
உதாரணம்: ஹீலியத்தின் குறியீடு He, கால்சியத்தின் குறியீடு Ca
3. சில தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் இலத்தீன் பெயர்களிலிருந்து பெறப்பட்டவை.
உதாரணம் : இரும்பின் குறியீடு Fe என்பது ஃபெர்ரம், சோடியத்தின் குறியீடு Na என்பது நாட்ரியம்
80.
சமநிலை: ஒரு பொருளின் ஆரம்ப நிலையினைத் தக்க வைத்துக்கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை எனப்படும்.
சமநிலை மூன்று வகைப்படும்.
i) உறுதிச்சமநிலை
ii) உறுதியற்ற சமநிலை
iii) நடுநிலை சமநிலை
i) உறுதிச்சமநிலை:
i) கூம்பானது மிக அதிகக் கோணத்திற்கு சாய்க்கப்பட்டு பின்னர் விடப்பட்டாலும் கவிழ்ந்து விடாமல் மீண்டும் பழைய நிலையை அடையும்.
ii) கூம்பு சாய்க்கப்படும் போது அதன் ஈர்ப்பு மையம் உயர்கிறது.
iii) ஈர்ப்பு மையத்தின் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது சாய்க்கப்பட்ட நிலையிலும் அதன் அடிப்பரப்பிற்கு உள்ளேயே விழுகிறது.
iv) எனவே அதனால் மீண்டும் தனது பழைய நிலையை அடைய முடிகிறது.
ii) உறுதியற்ற சமநிலை:
i) கூம்பினை சாய்க்கும் போது ஈர்ப்பு மையம் அதன் நிலையிலிருந்து உயர்கிறது.
ii) ஈர்ப்பு மையம் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது அதன் அடிப்பரப்பிற்கு வெளியே விழுகிறது.
iii) எனவே கூம்பானது கீழே கவிழ்கிறது.
iii) நடுநிலை சமநிலை:
i) கூம்பினை நகர்த்தும் போது அதன் ஈர்ப்பு மையத்தின் உயரம் மாறுவதில்லை.
ii) கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருக்கிறது.
81.
நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நீர், காற்று மற்றும் பல உயிரிகளால் பரவுகிறது.
காற்று:
தும்மல் மற்றும் இருமல் மூலம் காசநோய், தட்டம்மை).
மாசடைந்த நீர்:
கொதிக்க வைத்து சுத்தப்படுத்தப்படாத நீரை பருகுவதன் மூலம் (காலரா, ஹெபாடிட்டிஸ்).
பூச்சிகள்:
கொசு, ஈ போன்றவை கடிப்பதன் மூலம் (டெங்கு, டைபாய்டு).
விலங்குகள்:
பாதிக்கப்பட்ட பூனை, எலி, நாய் போன்றவை கடிப்பதன் மூலம் (ரேபிஸ்).
82.
மலரின் மகரந்தத்தூள் சூல் முடியை அடையும் நிகழ்ச்சி மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
மகரந்தச் சேர்க்கை இரு வகைப்படும்.
i) செயற்கை மகரந்தச்சேர்க்கை:
மகரந்தத்தாள் வட்டத்திலுள்ள மகரந்தத்தூளை சூல் முடியில் கொண்டு நாமாக சேர்ப்பது செயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
ii) இயற்கை மகரந்தச்சேர்க்கை:
மகரந்தத்தாள் வட்டத்திலுள்ள மகரந்தத்தூள் பூச்சிகள், காற்று, நீர் போன்ற இயற்கை காரணிகளால் இயற்கையாக சூல் முடியை அடைவது இயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
இயற்கை மகரந்தச்சேர்க்கை இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
அ) தன் மகரந்தச்சேர்க்கை:
ஒரு மலரின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே மலரின் அல்லது மற்றொரு மலரின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி தன் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
ஆ) அயல் மகரந்தச்சேர்க்கை:
ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தாள்கள் அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
83.
i) மரத்திலிருந்து ஓர் இலையை எடுத்துக்கொள்க.
i) அந்த இலையை ஒரு வரைபடத்தாளின் மீது வைத்து அதன் எல்லைக் கோடுகளை வரைந்து கொள்க.
ii) இலையின் எல்லைக் கோட்டுக்குள் அமைந்த முழு சதுரங்களை எண்ணவும், இதை M எனக்கொள்க.
iv) பின் பாதி அளவு பரப்பிற்கு மேல் உள்ள சதுரங்களை எண்ணவும், இதை N எனக்கொள்க.
v) அடுத்து பாதி அளவு பரப்புள்ள சதுரங்களை எண்ணவும், இதை P எனக்கொள்க.
vi) இறுதியாக பாதி அளவு பரப்பிற்குக் கீழ் உள்ள சதுரங்களை எண்ணவும், இதைQ எனக்கொள்க.
இலையின் தோராயமான பரப்பு = \(\mathrm{M}+\left(\frac{3}{4}\right) \mathrm{N}+\left(\frac{1}{2}\right) \mathrm{P}+\left(\frac{1}{4}\right) \mathrm{Q}\) ச.செமீ
இச்சூத்திரத்தைப் பயன்படுத்தி எந்த ஒரு ஒழுங்கற்ற வடிவமுள்ள தள பொருளின் பரப்பளவையும் காண முடியும்.
84.
M =250 கி \(=\frac{250}{1000} \)கி.கி
V=1000 cc \(=\frac{1000}{1000000}=\frac{1}{1000}\) மீ3
திரவத்தின் அடர்த்தி \(D=\frac{M}{V}\) 1 மீ3 =1000000 cc
\(=\frac{250 \times \not 1000}{\not 1000 \times 1}\)
திரவத்தின் அடர்த்தி = 250 கி.கி/மீ3
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards