7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 27/02/2020
7 ஆம் வகுப்பு அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 (7th Standard science Tamil Medium Book Back and Creative Important Questions 2020)
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஓர் அணுவின் அணு எண் என்பது அதிலுள்ள _____ ஆகும்.
நியூட்ரான்களின் எண்ணிக்கை
புரோட்டான்களின் எண்ணிக்கை
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை
அணுக்களின் எண்ணிக்கை
2.
அணுக்கருவைச் சுற்றி வரும் அடிப்படை அணுத்துகள் _____ ஆகும்.
அணு
நியூட்ரான்
எலக்ட்ரான்
புரோட்டான்
3.
படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை எவை?
ராஸ்டர்
வெக்டர்
இரண்டும்
மேற்கண்ட எதுவுமில்லை
4.
மைக்ரோசாப்ட் போட்டோஸ்டோரியில் நமது படங்களைப் பதிவேற்ற பயன்படுத்தபடும் தெரிவு எது?
BEGIN A STORY
IMPORT PICTURES
SETTINGS
VIEW YOUR STORY
5.
அசைவூட்டம் எதற்கு உதாரணம்?
ஒலித் தொடர்பு
காட்சித் தொடர்பு
வெக்டர் தொடர்பு
ராஸ்டர் தொடர்பு
6.
எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?
அலோகம்
உலோகம்
உலோகப்போலிகள்
வாயுக்கள்
7.
அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் எது?
குளோரின்
சல்பர்
பாதரசம்
வெள்ளி
8.
கீழ்க்கண்டவற்றுள் உலோகம் எது?
இரும்பு
ஆக்சிஜன்
ஹீலியம்
தண்ணீர்
9.
கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது?




10.
ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்த பின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி
சுழி
r
2r
r/2
11.
முதலுதவி என்பதன் நோக்கம்
பணத்தைச் சேமித்தல்
வடுக்களைத் தடுத்தல்
மருத்துவப் பராமரிப்பைத் தடுத்தல்
வலி நிவாரணம்
12.
புகையிலையை மெல்லுவதால் ஏற்படுவது
இரத்த சோகை
பற்குழிகள்
காசநோய்
நிமோனியா
13.
பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
வெற்றிலை
மிளகு
இவை இரண்டும்
இவை இரண்டும் அல்ல
14.
ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
ஸ்போர்கள்
துண்டாதல்
மகரந்த சேர்க்கை
மொட்டு விடுதல்
15.
இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
பிரையோபில்லம்
பூஞ்சை
வைரஸ்
பாக்டீரியா
16.
சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்
1:2
2:1
4:1
1:4
17.
பின்வருவனவற்றுள் எது சரி?
1L = 1cc
1L = 10 cc
1L = 100 cc
1L = 1000 cc
18.
பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
நிறை
நேரம்
பரப்பு
நீளம்
19.
அணு எண் என்றால் என்ன?
20.
அணுவின் அடிப்படைத் துகள்களைக் குறிப்பிடவும்.
21.
கீழ்க்காணும் தனிமங்களின் வேதியியல் குறியீட்டை எழுதுக.
அ. ஹைட்ரஜன்
ஆ. நைட்ரஜன்
இ. ஓசோன்
ஈ. சல்பர்
22.
கீழ்க்காண்பவற்றை தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் என வகைப்படுத்துக. தண்ணீர், சாதாரண உப்பு, சர்க்கரை, கார்பன்டை ஆக்சைடு, அயோடின் மற்றும் அலுமினியம்.
23.
கீழ்க்காண்பவற்றை தக்க உதாரணத்துடன் வரையறு.
அ. தனிமம்
ஆ. சேர்மம்
இ. உலோகம்
ஈ. அலோகம்
உ. உலோகப் போலிகள்
24.
ஒரு சேர்மத்தின் வேதியியல் வாய்ப்பாடு என்றால் என்ன ? இதன் முக்கியத்துவம் என்ன ?
25.
இருபரிமாண மற்றும் முப்பரிமாணப் படங்கள் பற்றி எழுதுக?
26.
சீரான இயக்கத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் சீரான திசைவேகத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஆசேர் கூறுகிறான். காரணம் தருக.
27.
தனது கைபேசியில் சோபி அடிக்கடி விளையாடுகிறார். கண் எரிச்சலிலிருந்து அவரது கண்களைப் பாதுகாக்க உனது பரிந்துரை என்ன?
28.
கண்களைப் பாதுகாக்கும் முறைகள் பற்றி எழுது.
29.
சுகாதாரம் என்றால் என்ன?
30.
கீழே தரப்பட்டுள்ள ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் பரப்பளவைக் காணவும்: (π = 22/7 எனக் கொள்க)
அ) 12 செ.மீ. நீளமும், 4 செ.மீ அகலமும் கொண்ட செவ்வகம்
ஆ) 7 செ.மீ ஆரம் கொண்ட வட்டம்
இ) 6 செ.மீ அடிப்பக்கமும் 8 செ.மீ உயரமும் கொண்ட முக்கோணம்.
31.
கந்தம் மற்றும் கிழங்கு ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டு தருக.
32.
தாவரத்தில் உள்ள இரு வகையான இனப்பெருக்க முறைகளை எழுது.
33.
எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?
34.
ஓர் உருளையின் கனஅளவைக் காணும் சூத்திரத்தை எழுதுக.
35.
உலோகப் போலிகளின் பண்புகளை எழுதவும்.
36.
சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
37.
ஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுக.
38.
மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.
39.
ஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்?
40.
ஐசோடோன்கள் என்றால் என்ன? ஓர் உதாரணம் தருக.
41.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டம், சதுரம், முக்கோணம் போன்றவை வெவ்வேறு தனிமத்தின் அணுக்களைக் குறிக்கின்றன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து, கீழ்க்கண்டவற்றை கண்டுபிடிக்கவும்.
a) சேர்மங்களின் மூலக்கூறுகள்.
b) இரண்டு அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்.
c) மூன்று அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்
42.
ஈர்ப்பு மையம் என்றால் என்ன?
43.
இந்தப் படம் எதை விளக்குகிறது?
44.
முதலுதவி அவசியம் என்ன?
45.
தாமிரத்தால் செய்யப்பட்ட ஒரு கோளத்தின் நிறை 3000கிகி. தாமிரத்தின் அடர்த்தி 8900 கிகி/மீ3 எனில், கோளத்தின் பருமனைக் காண்க.
46.
280 கிகி நிறை கொண்ட ஒரு திட உருளையின் கனஅளவு 4 மீ3. அதன் அடர்த்தியை காண்க.
47.
இலைத் தொழில் இலைக்காம்பு பற்றி எழுது.
48.
1 செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க. (π = 22/7 எனக் கொள்க).
1.
(b)
புரோட்டான்களின் எண்ணிக்கை
2.
(c)
எலக்ட்ரான்
3.
(a)
ராஸ்டர்
4.
(b)
IMPORT PICTURES
5.
(a)
ஒலித் தொடர்பு
6.
(b)
உலோகம்
7.
(c)
பாதரசம்
8.
(a)
இரும்பு
9.
(a)

10.
(c)
2r
11.
(d)
வலி நிவாரணம்
12.
(b)
பற்குழிகள்
13.
(c)
இவை இரண்டும்
14.
(d)
மொட்டு விடுதல்
15.
(a)
பிரையோபில்லம்
16.
(a)
1:2
17.
(d)
1L = 1000 cc
18.
(c)
பரப்பு
19.
ஒரு அணுவில் காணப்படும் எலக்ட்ரான்கள் (அல்லது) புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண் (Z) ஆகும்.
20.
புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள்.
21.
| வ.எண் | தனிமம் | வேதியியல் குறியீடு |
| 1 | ஹைட்ரஜன் | H2 |
| 2 | நைட்ரஜன் | N2 |
| 3 | ஓசோன் | 03 |
| 4 | சல்ஃபர் | S8 |
22.
1. தனிமங்கள் : அயோடின் மற்றும் அலுமினியம்
2. சேர்மங்கள் : தண்ணீர், சாதாரண உப்பு, சர்க்கரை, கார்பன் டை ஆக்ஸைடு
23.
அ) தனிமம்:
பருப்பொருளின் எளிமையான வடிவம் தனிமம் எனப்படுகிறது.
உதாரணம்: சோடியம், குளோரின், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்
ஆ) சேர்மம்:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில்,
வேதிப்பிணைப்பின் மூலம் இணைந்து கிடைக்கும் தூய பொருள் சேர்மம் ஆகும்.
உதாரணம்: நீர் (H2O)
இ) உலோகம்:
பொதுவாக உலோகங்கள் கடினமானவை மற்றும் பளபளப்பானவை.
உதாரணம்: காப்பர், லெட்
ஈ) அலோகம்:
பொதுவாக அலோகங்கள் பளபளப்புத் தன்மையற்ற மற்றும் மிருதுவான தனிமங்கள் ஆகும்.
உதாரணம்: ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், குளோரின்
உ) உலோகப் போலிகள்:
உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் தனிமங்கள் உலோகப் போலிகள் எனப்படும்.
உதாரணம்: சிலிகான், ஆர்சனிக், போரான்
24.
1. வேதியியல் வாய்ப்பாடு என்பது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தினைக் குறிக்கக்கூடிய குறியீட்டு முறையாகும்.
2. இது ஒரு தனிமத்திலுள்ள மூலக்கூறுகள் மற்றும் அணுக்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களைத் தருகிறது.
முக்கியத்துவம்:
வேதியியல் வாய்ப்பாட்டின் மூலம் மூலக்கூறிலுள்ள அணுக்களின் வகைகள் மற்றும் அணுக்களின் எண்ணிக்கையை அறியலாம்.
25.
இருபரிமாண படங்கள் நீளம் மற்றும் அகலம் ஆகிய இரு பரிமாணங்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் முப்பரிமாணப் படங்கள் நீளம், அகலம் மற்றும் உயரத்தையும் கொண்டிருக்கும். இருபரிமாண படங்களை விட முப்பரிமாணப் படங்கள் நம் கண் முன்னே நம் நிகழ் உலகில் தோன்றுவது போல இருக்கும்.
26.
சீரான இயக்கத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் சீரான திசைவேகத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனெனில் வேகம் நிலையானதாக இருக்கும்போது திசை மாறக்கூடும்.
எ.கா: வட்டப்பாதையில் நிலையான வேகத்துடன் நகரும் மகிழுந்து.
27.
அடிக்கடி கைபேசியை உபயோகிக்கக்கூடாது. ஏனெனில் அதிலிருந்து வெளிப்படும் அதிகப்படியான ஒளி கண்ணைப் பாதிப்பதால் பின்னர் பார்வையிழக்கும் வாய்ப்பு ஏற்படும்.
28.
கண்களைப் பாதுகாக்க ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதோடு, கண் நோய்கள் வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சொட்டு மருந்து அல்லது களிம்புகளை பயன்படுத்த வேண்டும்.
29.
சுகாதாரம் என்பது சத்துள்ள உணவை உண்டு. உடற்பயிற்சி செய்து ஓய்வெடுக்கவும், நல்ல தூக்கத்துடன் நாம் வாழும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதும் சுகாதாரமாகும்.
30.
அ) செவ்வகத்தின் பரப்பு = நீளம் × அகலம் = 12 × 4 = 48 செ.மீ2
ஆ) வட்டத்தின் பரப்பு = π × r2 = (22/7) × 7 × 7 = 154 செ.மீ2
இ) முக்கோணத்தின் பரப்பு = 1/2 × அடி × உயரம் = ½ × 6 × 8 = 24 செ.மீ2
31.
கந்தம் - சேனைக்கிழங்கு, கிழங்கு - உருளைக்கிழங்கு
32.
பாலினப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம்
33.
பாதரசத்தைத் தவிர மற்ற அனைத்து திரவங்களிலும் இரும்பு மூழ்கும்.
34.
உருளையின் கனஅளவு = πr2h
35.
1. உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் தனிமங்கள் 'உலோகப் போலிகள்' எனப்படும்.
2. இவை பொதுவாக உலோகங்கள் போன்ற தோற்றமும், அலோகங்கள் போன்ற செயல்பாடுகளும் கொண்டுள்ளன.
3. உலோகங்கள் போன்று கலவைகளை உருவாக்குகின்றன.
36.
சமநிலை: ஒரு பொருளின் ஆரம்ப நிலையினைத் தக்க வைத்துக்கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை எனப்படும்.
சமநிலை மூன்று வகைப்படும்.
i) உறுதிச்சமநிலை
ii) உறுதியற்ற சமநிலை
iii) நடுநிலை சமநிலை
i) உறுதிச்சமநிலை:
i) கூம்பானது மிக அதிகக் கோணத்திற்கு சாய்க்கப்பட்டு பின்னர் விடப்பட்டாலும் கவிழ்ந்து விடாமல் மீண்டும் பழைய நிலையை அடையும்.
ii) கூம்பு சாய்க்கப்படும் போது அதன் ஈர்ப்பு மையம் உயர்கிறது.
iii) ஈர்ப்பு மையத்தின் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது சாய்க்கப்பட்ட நிலையிலும் அதன் அடிப்பரப்பிற்கு உள்ளேயே விழுகிறது.
iv) எனவே அதனால் மீண்டும் தனது பழைய நிலையை அடைய முடிகிறது.
ii) உறுதியற்ற சமநிலை:
i) கூம்பினை சாய்க்கும் போது ஈர்ப்பு மையம் அதன் நிலையிலிருந்து உயர்கிறது.
ii) ஈர்ப்பு மையம் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது அதன் அடிப்பரப்பிற்கு வெளியே விழுகிறது.
iii) எனவே கூம்பானது கீழே கவிழ்கிறது.
iii) நடுநிலை சமநிலை:
i) கூம்பினை நகர்த்தும் போது அதன் ஈர்ப்பு மையத்தின் உயரம் மாறுவதில்லை.
ii) கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருக்கிறது.
37.
| நோய் | நோய்க்காரணி | பரவும் விதம் | அறிகுறி | தடுப்பு மற்றும் சிகிச்சை |
| காசநோய் | மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலே |
ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதாக காற்றின் மூலமும் நோயாளியின் சளி மற்றும் இதர உடமைகள் மூலம் |
காய்ச்சல், எடை இழப்பு, தொடர்ந்து இருமல், சளியுடன் இரத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் |
BCG தடுப்பூசி போடுதல். சிறப்பு கவனம் செலுத்துதல். DOT போன்ற தொடர்ச்சியாக அளிக்கப்படும் மருந்துகளைப் பயன்படுத்துதுல். |
| தட்டம்மை | வாரிசெல்லா ஜோஸ்டர் | காற்றின் மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபரின் தொடர்பு மூலமும் |
உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல் மற்றும் அம்மைக் கொப்புளங்கள் |
சின்னம்மை தடுப்பூசி போடுதல். நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். |
| ரேபீஸ் | ரேப்டோ வைரஸ் | நோய்த் தொற்றுடைய நாய், பூனை போன்ற விலங்குகள் கடிப்பதால் |
ஹைட்ரோ போபியா, 2-12 வாரங்களாக காய்ச்சல் |
அறிகுறி ஏற்படும் முன் சரியான நேரத்தில் தடுப்பூசி போட வேண்டும். |
38.
மலரின் மகரந்தத்தூள் சூல் முடியை அடையும் நிகழ்ச்சி மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
மகரந்தச் சேர்க்கை இரு வகைப்படும்.
i) செயற்கை மகரந்தச்சேர்க்கை:
மகரந்தத்தாள் வட்டத்திலுள்ள மகரந்தத்தூளை சூல் முடியில் கொண்டு நாமாக சேர்ப்பது செயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
ii) இயற்கை மகரந்தச்சேர்க்கை:
மகரந்தத்தாள் வட்டத்திலுள்ள மகரந்தத்தூள் பூச்சிகள், காற்று, நீர் போன்ற இயற்கை காரணிகளால் இயற்கையாக சூல் முடியை அடைவது இயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
இயற்கை மகரந்தச்சேர்க்கை இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
அ) தன் மகரந்தச்சேர்க்கை:
ஒரு மலரின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே மலரின் அல்லது மற்றொரு மலரின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி தன் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
ஆ) அயல் மகரந்தச்சேர்க்கை:
ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தாள்கள் அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
39.
i) ஒரு அளவிடும் குவளையை எடுத்து அதில் சிறிது நீரை ஊற்றவும்.
ii) நீரின் கனஅளவினைக் குறித்துக் கொள்ளவும், இதை V1 எனக்கொள்க.
iii) இப்போது ஒரு சிறிய கல்லை ஒரு நூலினால் கட்டவும்.
iv) நூலைப் பிடித்துக்கொண்டு கல்லை நீரினுள் மூழ்கச் செய்யவும்.
v) கல் குவளையின் சுவர்களில் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
vi) தற்போது நீரின் கனஅளவினை, குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும். இதனை V2 எனக்கொள்க.
vii) கல்லின் கனஅளவு அதிகரித்துள்ள நீரின் கனஅளவிற்குச் சமம்.
கல்லின் கனஅளவு (V) = V2 - V1
40.
1. ஒரே எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களைக் கொண்டுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் 'ஐசோடோன்கள்' எனப்படுகின்றன.
2. உதாரணம்: 20Ca40 19K39
3. இவற்றிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை = A - Z = 20
41.
a) சேர்மங்களின் மூலக்கூறுகள்.
,
- 3, 4 மூலக்கூறுகள் } மொத்தம் 7 மூலக்கூறுகள்
b) இரண்டு அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்.
- 4 மூலக்கூறுகள்
c) மூன்று அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்.
- 3 மூலக்கூறுகள்
42.
எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.
43.
குப்பைகளைப் போடாதீர் என்பதை இப்படம் உணர்த்துகிறது. அதை மீறி குப்பைகளை கொட்டினால் ஈ, கொசு போன்ற நோய் பரப்பிகள் பெருகி நோய் ஏற்படுத்தும்.
44.
1. உயிரைப் பாதுகாக்க.
2. நோயாளியின் இரத்தக்கசிவைத் தடுக்க மற்றும் நிலையை உறுதிப்படுத்த.
3. வலி நிவாரணம் அளிக்க.
4. ஆரம்ப நிலைக்கான ஒரு அவசர மருத்துவ சேவை.
45.
அடர்த்தி = நிறை/கனஅளவு
எனவே, கன அளவு = நிறை/அடர்த்தி
= 3000/8900 = 0.34மீ3
46.

=\(\frac{280}{4}\)=70 கிகி/மீ3.
47.
அகேஷியா ஆரிகுலிடார்மிஸ் தாவரத்தில் இலைக்காம்பு அகன்று இலை போல் மாறி இலை செய்ய வேண்டிய வேலையை இலைக்காம்பு மேற்கொள்கிறது.
48.
ஆரம் r = 1 செ.மீ = 1/100 மீ
நிறை M = 33 கி = 33/1000 கி.கி
அடர்த்தி \(\mathrm{D} =\frac{\mathrm{M}}{\mathrm{V}} \)
வெள்ளி கோளத்தின் பருமன் \(\mathrm{V} =\frac{4}{3} \pi \mathrm{r}^{3} \)
\(=\frac{4}{3} \times \frac{22}{7} \times \frac{1}{100} \times \frac{1}{100} \times \frac{1}{100} \)
\(\mathrm{V} =\frac{4.186}{1000000} \mathrm{~m}^{3} \)
\(\mathrm{D} =\frac{\mathrm{M}}{\mathrm{V}} \)
\(\mathrm{D} =\frac{33 \times 1000000}{4.186 \times 1000}
\)
D = 7880 கி.கி/மீ3
வெள்ளியின் அடர்த்தி = 7880 கி.கி/மீ3
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards