7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/02/2020
7 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 (7th Standard science Tamil Medium Book Back and Creative Important Questions All Chapters 2019-2020)
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
அணுக்கருவைச் சுற்றி வரும் அடிப்படை அணுத்துகள் _____ ஆகும்.
அணு
நியூட்ரான்
எலக்ட்ரான்
புரோட்டான்
2.
பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.
தனிமம்
அணு
மூலக்கூறு
எலக்ட்ரான்
3.
சின்னங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?
போட்டோஷாப்
இல்லுஸ்ட்ரேட்டர்
வெக்டார் வரைகலை
போட்டோ ஸ்டோரி
4.
படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை எவை?
ராஸ்டர்
வெக்டர்
இரண்டும்
மேற்கண்ட எதுவுமில்லை
5.
போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன் படுத்துபவர்கள் யார்?
ஆசிரியர்
மருத்துவர்
வண்ணம் அடிப்பவர்
புகைப்படக் கலைஞர்கள்.
6.
எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?
அலோகம்
உலோகம்
உலோகப்போலிகள்
வாயுக்கள்
7.
அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் எது?
குளோரின்
சல்பர்
பாதரசம்
வெள்ளி
8.
கீழ்க்கண்டவற்றுள் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறைக் குறிக்க க்கூடிய எளிய மற்றும் அறிவியல் பூர்வமான முறை எது?
கணித வாய்ப்பாடு
வேதியியல் வாய்ப்பாடு
கணிதக் குறியீடு
வேதியியல் குறியீடு
9.
ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது
சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்
சிறுவனின் இயககம் முடுக்கப்படாத இயக்கமாகும்
சிறுவனின் இயககம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்
சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்
10.
கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது?




11.
தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் சிறந்தது.
மகிழ்ச்சி
ஓய்வு
மனம்
சுற்றுச்சூழல்
12.
ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான்.இது எதைக் குறிக்கிறது.
சுகாதாரம்
உடல்நலம்
சுத்தம்
செல்வம்
13.
பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
வெற்றிலை
மிளகு
இவை இரண்டும்
இவை இரண்டும் அல்ல
14.
மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை
காற்று
நீர்
பூச்சிகள்
மேற்கூறிய அனைத்தும்
15.
ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
ஸ்போர்கள்
துண்டாதல்
மகரந்த சேர்க்கை
மொட்டு விடுதல்
16.
அடர்த்தியின் SI அலகு
கிகி / மீ2
கிகி / மீ3
கிகி / மீ
கி / மீ3
17.
பின்வருவனவற்றுள் எது சரி?
1L = 1cc
1L = 10 cc
1L = 100 cc
1L = 1000 cc
18.
பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
நிறை
நேரம்
பரப்பு
நீளம்
19.
அணு எண் என்றால் என்ன?
20.
அணுவின் அடிப்படைத் துகள்களைக் குறிப்பிடவும்.
21.
கீழ்க்காணும் தனிமங்களின் குறியீடுகளை எழுதி அவற்றை திண்மம், திரவம் மற்றும் வாயு அடிப்படையில் வகைப்படுத்தவும். அலுமினியம், கார்பன், குளோரின், பாதரசம், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.
22.
ஒரு சேர்மத்தின் வேதியியல் வாய்ப்பாடு என்றால் என்ன ? இதன் முக்கியத்துவம் என்ன ?
23.
கீழ்க்கண்ட சேர்மங்களின் வேதியியல் வாய்ப்பாட்டையும், அதில் அடங்கியுள்ள தனிமங்களின் பெயர்களை எழுதவும்.
1. சோடியம் குளோரைடு
2. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
3. கார்பன்டை ஆக்ஸைடு
4. கால்சியம் ஆக்ஸைடு
5. சல்பர் டை ஆக்ஸைடு
24.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?
25.
முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது என்று உன் நண்பன் கூறுகின்றான். இவ்வாக்கியத்தில் உள்ள பிழையினைக் கண்டறிந்து மாற்றுக.
26.
காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?
27.
மழைக்காலத்தில் உங்கள் பகுதியில் பரவும் இரண்டு தொற்றுநோய்களின் பெயர்களைக் கூறு.
28.
சுகாதாரம் என்றால் என்ன?
29.
மகரந்தச்சேர்க்கை - வரையறு.
30.
மலரின் இரு முக்கியமான பாகங்கள் யாவை?
31.
எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?
32.
ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக.
33.
ஒரு சில வழி அளவுகளைக் கூறுக.
34.
நிறை எண், அணு எண் - வேறுபடுத்துக.
35.
ஆகாஷ் பகல் நேரங்களில் அவனுடைய வீட்டின் நுழைவு வாயிலில் உள்ள உலோகத் தாழ்ப்பாளைத் திறப்பதற்கு சிரமமாக உள்ளது என்பதைக் கவனித்தான். ஆனால் அதே தாழ்ப்பாளை இரவு நேரங்களில் திறக்க எளிமையாக உள்ளது என்பதையும் கவனித்தான். தாழ்ப்பாளும், நுழைவு வாயிலும் பகலில் வெயிலில் இருப்பதை ஆகாஷ் உற்று நோக்கினான்.
அ) வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு கருதுகோளை உருவாக்கு.
ஆ) சுருக்கமாக நீங்கள் கூறும் கருதுகோளைச் சோதித்துப் பாருங்கள்.
36.
உன்னுடைய வீடு மற்றும் பள்ளியில் நீ பயன்படுத்தக்கூடிய உலோகம், அலோகம் மற்றும் உலோகப்போலிகளைப் பட்டியலிடவும். அதன் பண்புகளை ஒப்பிடவும்.
37.
ஈர்ப்பு மையம் என்றால் என்ன?
38.
உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைக்க நீங்கள் எடுக்க நடவடிக்கைகள் என்னென்ன?
39.
முதலுதவி அவசியம் என்ன?
40.
இஞ்சி என்பது தண்டு. வேர் அல்ல ஏன்?
41.
பொருட்களின் அடர்த்தியை வரையறு.
42.
ஓரு திரவத்தின் கன அளவையும் ஒரு கலனின் கொள்ளளவையும் வேறுபடுத்துக.
43.
உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.
44.
சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
45.
ஒரு நபருக்குத் தோலில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வாய்? முதலுதவிக்கான பல்வேறு சூழ்நிலைகளையும் கூறுங்கள்.
46.
தரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக
47.
ஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்?
48.
ஒரே அளவுடை ய இரு கோளங்கள் தாமிரம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் நிறைகளின் விகிதத்தைக் காண்க (தாமிரம் மற்றும் இரும்பின் அடர்த் தி 8900 கிகி / மீ3 மற்றும் 7800 கிகி / மீ3.
1.
(c)
எலக்ட்ரான்
2.
(b)
அணு
3.
(a)
போட்டோஷாப்
4.
(a)
ராஸ்டர்
5.
(d)
புகைப்படக் கலைஞர்கள்.
6.
(b)
உலோகம்
7.
(c)
பாதரசம்
8.
(b)
வேதியியல் வாய்ப்பாடு
9.
(a)
சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்
10.
(a)

11.
(c)
மனம்
12.
(b)
உடல்நலம்
13.
(c)
இவை இரண்டும்
14.
(d)
மேற்கூறிய அனைத்தும்
15.
(d)
மொட்டு விடுதல்
16.
(b)
கிகி / மீ3
17.
(d)
1L = 1000 cc
18.
(c)
பரப்பு
19.
ஒரு அணுவில் காணப்படும் எலக்ட்ரான்கள் (அல்லது) புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண் (Z) ஆகும்.
20.
புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள்.
21.
| தனிமம் | குறியீடு | நிலைமை |
| அலுமினியம் | Al | திண்மம் |
| கார்பன் | C | திண்மம் |
| குளோரின் | Cl | வாயு |
| பாதரசம் | Hg | திரவம் |
| ஹைட்ரஜன் | H | வாயு |
| ஹீலியம் | He | வாயு |
22.
1. வேதியியல் வாய்ப்பாடு என்பது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தினைக் குறிக்கக்கூடிய குறியீட்டு முறையாகும்.
2. இது ஒரு தனிமத்திலுள்ள மூலக்கூறுகள் மற்றும் அணுக்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களைத் தருகிறது.
முக்கியத்துவம்:
வேதியியல் வாய்ப்பாட்டின் மூலம் மூலக்கூறிலுள்ள அணுக்களின் வகைகள் மற்றும் அணுக்களின் எண்ணிக்கையை அறியலாம்.
23.
| சேர்மம் | வேதி வாய்ப்பாடு | தனிமங்களின் பெயர்கள் |
| சோடியம் குளோரைடு | NaCl | சோடியம், குளோரின் |
| பொட்டாசியம் ஹைட்ராக்சைடு | KOH | பொட்டாசியம், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் |
| கார்பன் டை ஆக்ஸைடு | CO₂ | கார்பன், ஆக்ஸிஜன் |
| கால்சியம் ஆக்ஸைடு | CaO | கால்சியம், ஆக்ஸிஜன் |
| சல்ஃபர் டை ஆக்ஸைடு | SO₂ | சல்ஃபர், ஆக்ஸிஜன் |
24.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை. இவ்வகைப் படங்களைப் பெரிதாக்கி பார்க்கும் போது அவை செவ்வக அடுக்குகளாகத் தெரியும்.
25.
முடுக்கமானது ஒரு பொருளின் திசைவேகம் எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது.
26.
சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவிய பின் ஒரு கிருமி நாசினித் திரவத்தால் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
27.
காலரா மற்றும் டைபாய்டு ஆகிய இரண்டு நோய்களும் மழைக்காலத்தில் எங்கள் பகுதியில் பரவும் தொற்று நோயாகும்.
28.
சுகாதாரம் என்பது சத்துள்ள உணவை உண்டு. உடற்பயிற்சி செய்து ஓய்வெடுக்கவும், நல்ல தூக்கத்துடன் நாம் வாழும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதும் சுகாதாரமாகும்.
29.
ஒரு மலரில் மகரந்தத்தாள் சூலக முடியை அடையும் நிகழ்ச்சியே மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
30.
1. மகரந்தத்தாள் வட்டம் (ஆண் இனப்பெருக்க உறுப்பு) என இனப்பெருக்கம் இரு வகைப்படும்.
2. சூலக வட்டம் (பெண் இனப்பெருக்க உறுப்புர் இவை இரண்டும் மலரின் முக்கிய பாகங்களாகும்.
31.
பாதரசத்தைத் தவிர மற்ற அனைத்து திரவங்களிலும் இரும்பு மூழ்கும்.
32.
1 ஒளி ஆண்டு = 9.46 × 1015 மீ
33.
பரப்பு, கனஅளவு, வேகம், மின்னூட்டம் மற்றும் அடர்த்தி
34.
| நிறை எண் | அணு எண் |
| அணுக்கருவினுள் உள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதலுக்குச் சமமாகும். | ஒரு அணுவில் காணப்படும் எலக்ட்ரான்கள் அல்லது புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண் ஆகும். |
| A என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. | Z என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. |
| A = p + n | Z = p (அல்லது) e |
35.
அ) வெப்பப்படுத்தும் போது பருப்பொருள்கள் விரிவடைகின்றன.
ஆ) இக்கருதுகோளைச் சோதிக்க உலோகப்பந்து-வளையம் சோதனை மிகப்பொருத்தமானது.
உலோகத்தை வெப்பப்படுத்தும்போது, விரிவடைதல் நிகழ்ந்து பருமன் அதிகரிப்பதால் உலோகப் பந்து வளையத்திற்குள் நுழைய இயலாது; குளிர்வித்த பின்னரே நுழையும்.
36.
| இடம் | உலோகங்கள் | அலோகங்கள் | உலோகப்போலிகள் |
| எனது வீடு | இரும்பு, அலுமினியம், வெள்ளி, காப்பர், தங்கம் |
ஆர்கான், அயோடின் | சிலிக்கான், ஆர்சனிக் |
| எனது பள்ளி | பாதரசம், லெட் | கார்பன் (கிராஃபைட்) | போரான், ஜெர்மானியம் |
| வ.எண் | பண்பு | உலோகங்கள் | அலோகங்கள் | உலோகப்போலிகள் |
| 1. | இயற்பியல் நிலைமை | திண்மங்கள், அறை வெப்பநிலையில் சில நீர்மங்கள் |
பெரும்பாலும் வாயுக்கள் |
பெரும்பாலும் திண்மங்கள் |
| 2. | தோற்றம் | கடினமானவை, பளபளப்பானவை |
மிருதுவானவை, பளபளப்பானவை |
பளபளப்பற்றவை |
| 3. | கடத்துதிறன் | மின்சாரம், வெப்பத்தை நன்கு கடத்தும் |
மின்சாரம், வெப்பத்தை அரிதிற் கடத்தும் |
குறைக்கடத்திகள் |
| 4, | உலோகக் கலவை உருவாதல் | உருவாக்கும் | உருவாக்குவதில்லை | உருவாக்கும் |
37.
எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.
38.
1. நாம் ஒரு நாளைக்கு இரு முறை பல் துலக்குதல் மூலம் பற்களிலும், ஈறுகளிலும் பற்காரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்கிறது.
2. நாம் பற்களைத் தழுவும் போது (ஃப்ளோசிங்) உணவுத்துகள்கள், பற்காரை மற்றும் பாக்டீரியங்கள் நீக்கப்படுகின்றன.
39.
1. உயிரைப் பாதுகாக்க.
2. நோயாளியின் இரத்தக்கசிவைத் தடுக்க மற்றும் நிலையை உறுதிப்படுத்த.
3. வலி நிவாரணம் அளிக்க.
4. ஆரம்ப நிலைக்கான ஒரு அவசர மருத்துவ சேவை.
40.
பெரும்பாலும் தாவரத்தின் தண்டிலிருந்தே இலைகள் தோன்றும். இஞ்சியில் தரைமேல் இலை மற்றும் செதில் இலைகள் போன்றவை வேர் போன்ற பகுதியிலிருந்து தோன்றுவதால் அவை தண்டு ஆகும்.
41.
ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதன் ஓரலகு பருமனில் அப்பொருள் பெற்றுள்ள நிறைக்குச் சமம்.
அடர்த்தி (D) = நிறை(M)/பருமன் (V)
அடர்த்தியின் SI அலகு கி.கி./மீ3
42.
| திரவத்தின் கனஅளவு | கலனின் கொள்ளளவு |
| திரவத்தின் கனஅளவு என்பது அது கலனில் நிரப்பும் அளவைக் குறிக்கிறது. |
ஒரு கொள்கலனில் ஊற்றக்கூடிய அதிகபட்ச திரவத்தின் பருமனே கலனின் கொள்ளளவு எனப்படும். |
43.
| வ.எண் | உலோகங்கள் | அலோகங்கள் |
| 1. | பளபளப்பான மேற்பரப்பு கொண்டவை. | பளபளப்பான தன்மையற்றவை. |
| 2. | பொதுவாக கடினமானவை. | பொதுவாக மிருதுவானவை. |
| 3. | தகடாகவும், கம்பியாகவும் நீட்டலாம். | தகடாகவும், கம்பியாகவும் நீட்ட இயலாது. |
| 4. | வெப்பத்தையும், மின்சாரத்தையும் நன்கு கடத்தக்கூடியவை | வெப்பத்தையும், மின்சாரத்தையும் அரிதிற் கடத்திகள் |
| 5. | தட்டும்போது ஒலியெழுப்பும் தன்மையுடையன. | தட்டும்போது ஒலியெழுப்பும் தன்மையற்றவை. |
44.
சமநிலை: ஒரு பொருளின் ஆரம்ப நிலையினைத் தக்க வைத்துக்கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை எனப்படும்.
சமநிலை மூன்று வகைப்படும்.
i) உறுதிச்சமநிலை
ii) உறுதியற்ற சமநிலை
iii) நடுநிலை சமநிலை
i) உறுதிச்சமநிலை:
i) கூம்பானது மிக அதிகக் கோணத்திற்கு சாய்க்கப்பட்டு பின்னர் விடப்பட்டாலும் கவிழ்ந்து விடாமல் மீண்டும் பழைய நிலையை அடையும்.
ii) கூம்பு சாய்க்கப்படும் போது அதன் ஈர்ப்பு மையம் உயர்கிறது.
iii) ஈர்ப்பு மையத்தின் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது சாய்க்கப்பட்ட நிலையிலும் அதன் அடிப்பரப்பிற்கு உள்ளேயே விழுகிறது.
iv) எனவே அதனால் மீண்டும் தனது பழைய நிலையை அடைய முடிகிறது.
ii) உறுதியற்ற சமநிலை:
i) கூம்பினை சாய்க்கும் போது ஈர்ப்பு மையம் அதன் நிலையிலிருந்து உயர்கிறது.
ii) ஈர்ப்பு மையம் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது அதன் அடிப்பரப்பிற்கு வெளியே விழுகிறது.
iii) எனவே கூம்பானது கீழே கவிழ்கிறது.
iii) நடுநிலை சமநிலை:
i) கூம்பினை நகர்த்தும் போது அதன் ஈர்ப்பு மையத்தின் உயரம் மாறுவதில்லை.
ii) கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருக்கிறது.
45.
முதலுதவி என்பது மருத்துவ உதவி கிடைக்கும் முன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உடனடி சிகிச்சையாகும்.
ஏதேனும் வாகன அல்லது பிற விபத்துக்கள். வெப்பம், வேதிப்பொருள் அல்லது மின்சாரத்தால் திசுச்சேதம் ஏற்படும் போது. வெட்டுக்காயம் அல்லது சிராய்ப்பு தோலில் ஏற்பட்டால். தோலில் தீக்காயத்திற்கான முதலுதவி:
1. குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். காயம் ஆழமாக இருப்பின் நீரினை பயன்படுத்தக்கூடாது.
2. கிருமி நாசினிக் களிம்பு இட வேண்டும்.
3. காயம்பட்ட இடத்தைச் சுற்றி சுத்தமான ஒட்டக்கூடிய தன்மையற்ற துணியால் கற்ற வேண்டும்.
46.
பொதுவாக தண்டுகள் தரைக்கு மேலே வளரும். ஆனால் சில தண்டுகள் தரைக்கு கீழே வளர்ந்து உணவைச் சேமிக்கும்.
தரைகீழ்த் தண்டுகள் நான்கு வகைப்படும்.
i) மட்டநிலத்தண்டு:
தண்டு தரைக்குக் கீழ் கணு மற்றும் கணுவிடைகளோடு தடித்துக் காணப்படும். கணுவில் செதில் இலைகள் தோன்றும். எ.கா: இஞ்சி, மஞ்சள்
ii) கந்தம்:
இத்தரைகீழ்த் தண்டு வட்ட வடிவில் இருக்கும். இதன் மேற்பகுதியும் அடிப்பகுதியும் தட்டையாக இருக்கும்.
இதன் செதில் இலைகளின் கோணத்திலிருந்து பல மொட்டுகள் உருவாகும். ஒவ்வொரு மொட்டும் வளர்ந்து சேய் தாவரங்களை உருவாக்கும். எ.கா: சேனைக்கிழங்கு
iii) கிழங்கு:
இது கோள வடிவில் உணவைச் சேமிக்கும் தரைகீழ்த் தண்டாகும். இதன் தண்டில் வளர்வடங்கிய மொட்டுகள் காணப்படும். அவை முளைத்து புதிய தாவரத்தை உருவாக்கும். எ.கா: உருளைக்கிழங்கு
iv) குமிழம்:
இதன் தண்டு மிகவும் குறுகியவை, தட்டு போன்றது. இதன் சதைப்பற்றான இலைகள் உணவைச் சேமிக்கும்.
குமிழத்தில் இரண்டு வகையான இலைகள் உள்ளன.
i) சதைப்பற்றுள்ள இலை
ii) செதில் இலை
47.
i) ஒரு அளவிடும் குவளையை எடுத்து அதில் சிறிது நீரை ஊற்றவும்.
ii) நீரின் கனஅளவினைக் குறித்துக் கொள்ளவும், இதை V1 எனக்கொள்க.
iii) இப்போது ஒரு சிறிய கல்லை ஒரு நூலினால் கட்டவும்.
iv) நூலைப் பிடித்துக்கொண்டு கல்லை நீரினுள் மூழ்கச் செய்யவும்.
v) கல் குவளையின் சுவர்களில் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
vi) தற்போது நீரின் கனஅளவினை, குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும். இதனை V2 எனக்கொள்க.
vii) கல்லின் கனஅளவு அதிகரித்துள்ள நீரின் கனஅளவிற்குச் சமம்.
கல்லின் கனஅளவு (V) = V2 - V1
48.
இரு கோளங்களும் ஒரே அளவு. எனவே அவற்றின் பருமனும் சமம். அதை V எனக்கொள்க.
தாமிரத்தின் அடர்த்தி = 8900 கி.கி/மீ
இரும்பின் அடர்த்தி = 7800 கி.கி/மீ
தாமிரத்தின் நிறை M1 எனக் கொள்க.
இரும்பின் நிறை M2 எனக் கொள்க.
M = D x V
தாமிரத்தின் நிறை M1 = 8900 × V
இரும்பின் நிறை M2 = 7800 x V
நிறைகளின் விகிதம் = \(\frac{\mathrm{M}_{1}}{\mathrm{M}_{2}}=\frac{8900 \times \mathrm{V}}{7800 \times \mathrm{V}}=\frac{89}{78}
\)
\(\mathrm{M}_{1}: \mathrm{M}_{2}=89: 78\)
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards