7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/02/2020
7 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 7th Standard science Tamil Medium Model Questions Full Chapter 2020 )
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
_____ நேர்மின் சுமையுடையது.
புரோட்டான்
எலக்ட்ரான்
மூலக்கூறு
நியூட்ரான்
2.
பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.
தனிமம்
அணு
மூலக்கூறு
எலக்ட்ரான்
3.
கீழ்க்காண்பவற்றுள் கணினியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது எது?
இங்க்ஸ்கேப்
போட்டோ ஸ்டோரி
மெய்நிகர் தொழில் நுட்பம்
அடோபி இல்லுஸ்ட்ரேட்டர்
4.
மைக்ரோசாப்ட் போட்டோஸ்டோரியில் நமது படங்களைப் பதிவேற்ற பயன்படுத்தபடும் தெரிவு எது?
BEGIN A STORY
IMPORT PICTURES
SETTINGS
VIEW YOUR STORY
5.
அசைவூட்டம் எதற்கு உதாரணம்?
ஒலித் தொடர்பு
காட்சித் தொடர்பு
வெக்டர் தொடர்பு
ராஸ்டர் தொடர்பு
6.
அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் எது?
குளோரின்
சல்பர்
பாதரசம்
வெள்ளி
7.
ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் எதற்கு உதாரணம்?
உலோகம்
அலோகம்
உலோகப்போலிகள்
மந்த வாயுக்கள்
8.
கீழ்க்கண்டவற்றுள் உலோகம் எது?
இரும்பு
ஆக்சிஜன்
ஹீலியம்
தண்ணீர்
9.
கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது?




10.
கீழே கொடுக்கப்பட்டுள்ள திசைவேகம்- காலம் வரைபடத்திலிருந்து அப்பொ ருளானது

சீரான இயக்கத்தில் உள்ளது
ஓய்வு நிலையில் உள்ளது
சீரற்ற இயககத்தில் உள்ளது
சீரான முடுககத்தில் பொருள் இயங்குகிறது
11.
புகையிலையை மெல்லுவதால் ஏற்படுவது
இரத்த சோகை
பற்குழிகள்
காசநோய்
நிமோனியா
12.
தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் சிறந்தது.
மகிழ்ச்சி
ஓய்வு
மனம்
சுற்றுச்சூழல்
13.
பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
வெற்றிலை
மிளகு
இவை இரண்டும்
இவை இரண்டும் அல்ல
14.
மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை
காற்று
நீர்
பூச்சிகள்
மேற்கூறிய அனைத்தும்
15.
இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
பிரையோபில்லம்
பூஞ்சை
வைரஸ்
பாக்டீரியா
16.
ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
தொலைவு
நேரம்
அடர்த்தி
நீளம் மற்றும் நேரம்
17.
அடர்த்தியின் SI அலகு
கிகி / மீ2
கிகி / மீ3
கிகி / மீ
கி / மீ3
18.
பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
நிறை
நேரம்
பரப்பு
நீளம்
19.
நியூட்ரான்கள் ஏன் மின்சுமையற்ற துகள்கள் என அழைக்கப்படுகின்றன?
20.
அணு - வரையறு.
21.
தனிமங்கள் என்றால் என்ன? அவை எவற்றால் ஆனவை ? இரண்டு உதாரணம் தருக.
22.
கீழ்க்காணும் தனிமங்களை உலோகம், அலோகம் மற்றும் உலோகப் போலிகள் என வகைப்படுத்துக.
சோடியம், பிஸ்மத் , வெள்ளி, நைட்ரஜன், சிலிக்கான், கார்பன், குளோரின், இரும்பு மற்றும் தாமிரம்.
23.
கீழ்க்காணும் தனிமங்களின் குறியீடுகளை எழுதி அவற்றை திண்மம், திரவம் மற்றும் வாயு அடிப்படையில் வகைப்படுத்தவும். அலுமினியம், கார்பன், குளோரின், பாதரசம், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.
24.
கீழ்க்கண்ட சேர்மங்களின் வேதியியல் வாய்ப்பாட்டையும், அதில் அடங்கியுள்ள தனிமங்களின் பெயர்களை எழுதவும்.
1. சோடியம் குளோரைடு
2. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
3. கார்பன்டை ஆக்ஸைடு
4. கால்சியம் ஆக்ஸைடு
5. சல்பர் டை ஆக்ஸைடு
25.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?
26.
முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது என்று உன் நண்பன் கூறுகின்றான். இவ்வாக்கியத்தில் உள்ள பிழையினைக் கண்டறிந்து மாற்றுக.
27.
சுங்காவிற்கு சிறிய தீக்காயம் ஏற்பட்டதால், நான் தண்ணீரால் விட்டுப் புண்ணைக் கழுவினேன் என்று ரவி கூறினான். அவனது கூற்றினை ஏற்றுக் கொள்கிறாயா, இல்லையா? ஏன் என்பதை விவரி.
28.
மழைக்காலத்தில் உங்கள் பகுதியில் பரவும் இரண்டு தொற்றுநோய்களின் பெயர்களைக் கூறு.
29.
தனது கைபேசியில் சோபி அடிக்கடி விளையாடுகிறார். கண் எரிச்சலிலிருந்து அவரது கண்களைப் பாதுகாக்க உனது பரிந்துரை என்ன?
30.
கீழே காண்பவற்றின் கனஅளவினைக் கணக்கிடவும் (π = 22/7 எனக் கொள்ளவும்).
அ) 3 செ.மீ பக்க அளவுள்ள கனசதுரம்
ஆ) 3 மீ ஆரமும் 7 மீ உயரமும் கொண்ட உருளை ஆகியவற்றின் கனஅளவினைக் காணவும். (π = 22/7 எனக் கொள்ளவும்).
31.
முட்கள் என்றால் என்ன?
32.
மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் காரணிகள் யாவை?
33.
எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?
34.
பொருள்களின் அடர்த்தியைக் காண்பதற்கான வாய்ப்பாட்டைத் தருக.
35.
ஐசோடோன்கள் என்றால் என்ன? ஓர் உதாரணம் தருக.
36.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டம், சதுரம், முக்கோணம் போன்றவை வெவ்வேறு தனிமத்தின் அணுக்களைக் குறிக்கின்றன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து, கீழ்க்கண்டவற்றை கண்டுபிடிக்கவும்.
a) சேர்மங்களின் மூலக்கூறுகள்.
b) இரண்டு அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்.
c) மூன்று அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்
37.
பின்வரும் நிகழ்வுகளுக்குத் தொலைவு – காலம் வரைபடத்தினை வரையவும்.
அ. மாறாத திசைவேகத்தில் இயங்கும் பேருந்து.
ஆ. சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் மகிழுந்து.
38.
ஒரு நபர் அலுவலகத்தில் தூங்குவது அல்லது வகுப்பறையில் பகல் நேரத்தில் ஒருவர் தூங்குவது ஏன்? இத்தகைய சூழ்நிலையை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா?
39.
முதலுதவி அவசியம் என்ன?
40.
தாமிரத்தால் செய்யப்பட்ட ஒரு கோளத்தின் நிறை 3000கிகி. தாமிரத்தின் அடர்த்தி 8900 கிகி/மீ3 எனில், கோளத்தின் பருமனைக் காண்க.
41.
இருபால் மலரை, ஒருபால் மலரிலிருந்து வேறுபடுத்து
42.
பொருட்களின் அடர்த்தியை வரையறு.
43.
உலோகப் போலிகளின் பண்புகளை எழுதவும்.
44.
சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
45.
ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எவ்வாறு நோய் பரவுகிறது?
46.
மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.
47.
ஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்?
48.
ஒரு பள்ளியின் விளையாட்டுத்திடலின் பரிமாணம் 800 மீ × 500 மீ. அத்திடலின் பரப்பைக் காண்க.
1.
(a)
புரோட்டான்
2.
(b)
அணு
3.
(c)
மெய்நிகர் தொழில் நுட்பம்
4.
(b)
IMPORT PICTURES
5.
(a)
ஒலித் தொடர்பு
6.
(c)
பாதரசம்
7.
(b)
அலோகம்
8.
(a)
இரும்பு
9.
(a)

10.
(a)
சீரான இயக்கத்தில் உள்ளது
11.
(b)
பற்குழிகள்
12.
(c)
மனம்
13.
(c)
இவை இரண்டும்
14.
(d)
மேற்கூறிய அனைத்தும்
15.
(a)
பிரையோபில்லம்
16.
(a)
தொலைவு
17.
(b)
கிகி / மீ3
18.
(c)
பரப்பு
19.
அணுக்கருவிற்கு வெளியேயுள்ள அனைத்து எலக்ட்ரான்களின் மொத்த எதிர் மின்னூட்டமும், அணுக்கருவினுள் காணப்படும் புரோட்டான்களின் மொத்த நேர் மின்னூட்டமும் சமம். இதனால் அணுக்கள் மின் நடுநிலை பெற்றுள்ளன. அதாவது, அணுக்கருவின் மின்சுமை என்பது புரோட்டான்களின் மொத்த மின்சுமையைக் குறிப்பிடுகிறது. எனவே, நியூட்ரான்கள் மின்சுமையற்ற துகள்கள் என அழைக்கப்படுகின்றன.
20.
ஒரு தனிமத்தின் வேதிப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளத்தக்க மிகச்சிறிய துகளே 'அணு' ஆகும்.
21.
1. தனிமங்கள் தூய பொருளின் எளிய வடிவங்களாகும்.
2. தனிமங்கள் அணுக்களால் ஆனவை.
3. உதாரணம் : ஹைட்ரஜன், ஆக்ஸிஜன்
22.
1. உலோகங்கள் : சோடியம், பிஸ்மத், வெள்ளி, இரும்பு, தாமிரம்
2. அலோகங்கள் : நைட்ரஜன், கார்பன், குளோரின்
3. உலோகப்போலிகள் : சிலிக்கான்
23.
| தனிமம் | குறியீடு | நிலைமை |
| அலுமினியம் | Al | திண்மம் |
| கார்பன் | C | திண்மம் |
| குளோரின் | Cl | வாயு |
| பாதரசம் | Hg | திரவம் |
| ஹைட்ரஜன் | H | வாயு |
| ஹீலியம் | He | வாயு |
24.
| சேர்மம் | வேதி வாய்ப்பாடு | தனிமங்களின் பெயர்கள் |
| சோடியம் குளோரைடு | NaCl | சோடியம், குளோரின் |
| பொட்டாசியம் ஹைட்ராக்சைடு | KOH | பொட்டாசியம், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் |
| கார்பன் டை ஆக்ஸைடு | CO₂ | கார்பன், ஆக்ஸிஜன் |
| கால்சியம் ஆக்ஸைடு | CaO | கால்சியம், ஆக்ஸிஜன் |
| சல்ஃபர் டை ஆக்ஸைடு | SO₂ | சல்ஃபர், ஆக்ஸிஜன் |
25.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை. இவ்வகைப் படங்களைப் பெரிதாக்கி பார்க்கும் போது அவை செவ்வக அடுக்குகளாகத் தெரியும்.
26.
முடுக்கமானது ஒரு பொருளின் திசைவேகம் எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது.
27.
ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலம் பிற திசுக்கள் மேலும் பாதிப்படையாமல் தடுக்கலாம்.
28.
காலரா மற்றும் டைபாய்டு ஆகிய இரண்டு நோய்களும் மழைக்காலத்தில் எங்கள் பகுதியில் பரவும் தொற்று நோயாகும்.
29.
அடிக்கடி கைபேசியை உபயோகிக்கக்கூடாது. ஏனெனில் அதிலிருந்து வெளிப்படும் அதிகப்படியான ஒளி கண்ணைப் பாதிப்பதால் பின்னர் பார்வையிழக்கும் வாய்ப்பு ஏற்படும்.
30.
அ) கனசதுரத்தின் கனஅளவு
= பக்கம் × பக்கம் × பக்கம் = 3 × 3 × 3 = 27 செ.மீ3 (அ) கன செ.மீ
ஆ) உருளையின் கனஅளவு = π × r2 × h = (22/7) × 3 × 3 × 7 = 198 மீ3.
31.
இலைகள் முட்களாக மாறுகின்றன. தண்டு ஒளிச்சேர்க்கை செய்யும் வகையில் பசுமையான சதைப்பற்றுள்ள பகுதியாக மாறுகின்றது.
எ.கா: கள்ளி வகைகள்
32.
பூச்சிகள், பறவைகள், காற்று மற்றும் நீர் ஆகியன மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் காரணிகளாகும்.
33.
பாதரசத்தைத் தவிர மற்ற அனைத்து திரவங்களிலும் இரும்பு மூழ்கும்.
34.
அடர்த்தி (D) = நிறை(M)/பருமன் (V)
35.
1. ஒரே எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களைக் கொண்டுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் 'ஐசோடோன்கள்' எனப்படுகின்றன.
2. உதாரணம்: 20Ca40 19K39
3. இவற்றிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை = A - Z = 20
36.
a) சேர்மங்களின் மூலக்கூறுகள்.
,
- 3, 4 மூலக்கூறுகள் } மொத்தம் 7 மூலக்கூறுகள்
b) இரண்டு அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்.
- 4 மூலக்கூறுகள்
c) மூன்று அணுக்களைக் கொண்ட தனிமங்களின் மூலக்கூறுகள்.
- 3 மூலக்கூறுகள்
37.
அ. மாறாத திசைவேகத்தில் இயங்கும் பேருந்து.
| காலம் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
| தொலைவு | 0 | 10 | 20 | 30 | 40 | 50 |
மகிழந்து 10 மீவி என்ற மாறாத திசைவேகத்தில் செல்லுதல்.
ஆ. சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் மகிழுந்து.
| காலம் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
| தொலைவு | 0 | 20 | 20 | 20 | 20 | 20 |
மகிழந்து ஒய்வு நிலையில் இருத்தல்.
38.
ஆம். சில சமயங்களில் அச்சூழ்நிலையை உணர்ந்திருக்கிறேன். இச்சூழ்நிலை கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படுகிறது.
1. மிகக்கடினமான வேலைகளைச் செய்வதால் உடல் சோர்வடைகிறது.
2. மனம் போதிய ஓய்வை எடுக்காததால் ஏற்படுகிறது.
3. இச்சூழ்நிலைகளை சமாளிக்க நம் உடலுக்கும், மனதுக்கும் போதிய ஓய்வு கொடுக்க வேண்டும்.
39.
1. உயிரைப் பாதுகாக்க.
2. நோயாளியின் இரத்தக்கசிவைத் தடுக்க மற்றும் நிலையை உறுதிப்படுத்த.
3. வலி நிவாரணம் அளிக்க.
4. ஆரம்ப நிலைக்கான ஒரு அவசர மருத்துவ சேவை.
40.
அடர்த்தி = நிறை/கனஅளவு
எனவே, கன அளவு = நிறை/அடர்த்தி
= 3000/8900 = 0.34மீ3
41.
| இருபால் மலர் | ஒருபால் மலர் |
| ஒரு மலர் மகரந்தத்தாள் மற்றும் சூலகம் இரண்டையும் பெற்றிருந்தால் அம்மலர் இருபால் மலர் எனப்படும். | ஒரு மலர் மகரந்தத்தாள் அல்லது சூலகம்ஏதேனும் ஒன்றை மட்டும் பெற்றிருந்தால் அது ஒருபால் மலர் எனப்படும். |
42.
ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதன் ஓரலகு பருமனில் அப்பொருள் பெற்றுள்ள நிறைக்குச் சமம்.
அடர்த்தி (D) = நிறை(M)/பருமன் (V)
அடர்த்தியின் SI அலகு கி.கி./மீ3
43.
1. உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் தனிமங்கள் 'உலோகப் போலிகள்' எனப்படும்.
2. இவை பொதுவாக உலோகங்கள் போன்ற தோற்றமும், அலோகங்கள் போன்ற செயல்பாடுகளும் கொண்டுள்ளன.
3. உலோகங்கள் போன்று கலவைகளை உருவாக்குகின்றன.
44.
சமநிலை: ஒரு பொருளின் ஆரம்ப நிலையினைத் தக்க வைத்துக்கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை எனப்படும்.
சமநிலை மூன்று வகைப்படும்.
i) உறுதிச்சமநிலை
ii) உறுதியற்ற சமநிலை
iii) நடுநிலை சமநிலை
i) உறுதிச்சமநிலை:
i) கூம்பானது மிக அதிகக் கோணத்திற்கு சாய்க்கப்பட்டு பின்னர் விடப்பட்டாலும் கவிழ்ந்து விடாமல் மீண்டும் பழைய நிலையை அடையும்.
ii) கூம்பு சாய்க்கப்படும் போது அதன் ஈர்ப்பு மையம் உயர்கிறது.
iii) ஈர்ப்பு மையத்தின் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது சாய்க்கப்பட்ட நிலையிலும் அதன் அடிப்பரப்பிற்கு உள்ளேயே விழுகிறது.
iv) எனவே அதனால் மீண்டும் தனது பழைய நிலையை அடைய முடிகிறது.
ii) உறுதியற்ற சமநிலை:
i) கூம்பினை சாய்க்கும் போது ஈர்ப்பு மையம் அதன் நிலையிலிருந்து உயர்கிறது.
ii) ஈர்ப்பு மையம் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது அதன் அடிப்பரப்பிற்கு வெளியே விழுகிறது.
iii) எனவே கூம்பானது கீழே கவிழ்கிறது.
iii) நடுநிலை சமநிலை:
i) கூம்பினை நகர்த்தும் போது அதன் ஈர்ப்பு மையத்தின் உயரம் மாறுவதில்லை.
ii) கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருக்கிறது.
45.
நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நீர், காற்று மற்றும் பல உயிரிகளால் பரவுகிறது.
காற்று:
தும்மல் மற்றும் இருமல் மூலம் காசநோய், தட்டம்மை).
மாசடைந்த நீர்:
கொதிக்க வைத்து சுத்தப்படுத்தப்படாத நீரை பருகுவதன் மூலம் (காலரா, ஹெபாடிட்டிஸ்).
பூச்சிகள்:
கொசு, ஈ போன்றவை கடிப்பதன் மூலம் (டெங்கு, டைபாய்டு).
விலங்குகள்:
பாதிக்கப்பட்ட பூனை, எலி, நாய் போன்றவை கடிப்பதன் மூலம் (ரேபிஸ்).
46.
மலரின் மகரந்தத்தூள் சூல் முடியை அடையும் நிகழ்ச்சி மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
மகரந்தச் சேர்க்கை இரு வகைப்படும்.
i) செயற்கை மகரந்தச்சேர்க்கை:
மகரந்தத்தாள் வட்டத்திலுள்ள மகரந்தத்தூளை சூல் முடியில் கொண்டு நாமாக சேர்ப்பது செயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
ii) இயற்கை மகரந்தச்சேர்க்கை:
மகரந்தத்தாள் வட்டத்திலுள்ள மகரந்தத்தூள் பூச்சிகள், காற்று, நீர் போன்ற இயற்கை காரணிகளால் இயற்கையாக சூல் முடியை அடைவது இயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
இயற்கை மகரந்தச்சேர்க்கை இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
அ) தன் மகரந்தச்சேர்க்கை:
ஒரு மலரின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே மலரின் அல்லது மற்றொரு மலரின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி தன் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
ஆ) அயல் மகரந்தச்சேர்க்கை:
ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தாள்கள் அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
47.
i) ஒரு அளவிடும் குவளையை எடுத்து அதில் சிறிது நீரை ஊற்றவும்.
ii) நீரின் கனஅளவினைக் குறித்துக் கொள்ளவும், இதை V1 எனக்கொள்க.
iii) இப்போது ஒரு சிறிய கல்லை ஒரு நூலினால் கட்டவும்.
iv) நூலைப் பிடித்துக்கொண்டு கல்லை நீரினுள் மூழ்கச் செய்யவும்.
v) கல் குவளையின் சுவர்களில் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
vi) தற்போது நீரின் கனஅளவினை, குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும். இதனை V2 எனக்கொள்க.
vii) கல்லின் கனஅளவு அதிகரித்துள்ள நீரின் கனஅளவிற்குச் சமம்.
கல்லின் கனஅளவு (V) = V2 - V1
48.
நீளம் l = 800 மீ
அகலம் b = 500 மீ
விளையாட்டுத் திடலின் பரப்பு = l × b
= 800 × 500 = 4,00,000 மீ2
விளையாட்டுத் திடலின் பரப்பு = 4,00,000 மீ2
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards