7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 08/08/2019
அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண்
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு தனிமத்தின் அணு எண் மற்றும் நிறை எண் முறையே 26 மற்றும் 56. அந்த அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. அதன் அணு அமைப்பினை வரையவும்.
2.
சேர்மங்களின் பண்புகளுள் ஏதேனும் ஐந்தை எழுதுக.
3.
உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.
4.
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி மூலம் படக்கதை காணொளி ஒன்றை எவ்வாறு உருவாக்குவாய்?
5.
சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
6.
ஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுக.
7.
தரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக
8.
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.
9.
ஒரு மகிழுந்து அமைதி நிலையிலிருந்து 10 விநாடிகளில் 20 மீட்டர் / விநாடி என்ற வேகத்தில் பயணம் செய்யத் தொடங்குகிறது. மகிழுந்தின் முடுக்கம் யாது?
10.
1 செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க. (π = 22/7 எனக் கொள்க).
1.
அணு எண் (Z) = 26
நிறை எண் (A) =56
புரோட்டான்களின் எண்ணிக்கை P = 26
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை e = 26
நியூட்ரான்களின் எண்ணிக்கை n = A-Z
= 56-26 = 30
அணு எண் Z = 9
அணு எண் Z = 9
2.
i) தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன.
ii) சேர்மத்தின் பண்புகள் அதனை உருவாக்கிய தனிமங்களின் பண்புகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன.
ii) சேர்மங்கள் வேதிப் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ள வெவ்வேறு தனிமங்களைக் கொண்டுள்ளன.
iv) சேர்மங்களை இயற்பியல் முறையில் பிரிக்க இயலாது.
v) சேர்மங்களை வேதியியல் முறையில் மட்டுமே அவற்றின் உறுப்புக் கூறுகளாக பிரிக்க இயலும்.
3.
| வ.எண் | உலோகங்கள் | அலோகங்கள் |
| 1. | பளபளப்பான மேற்பரப்பு கொண்டவை. | பளபளப்பான தன்மையற்றவை. |
| 2. | பொதுவாக கடினமானவை. | பொதுவாக மிருதுவானவை. |
| 3. | தகடாகவும், கம்பியாகவும் நீட்டலாம். | தகடாகவும், கம்பியாகவும் நீட்ட இயலாது. |
| 4. | வெப்பத்தையும், மின்சாரத்தையும் நன்கு கடத்தக்கூடியவை | வெப்பத்தையும், மின்சாரத்தையும் அரிதிற் கடத்திகள் |
| 5. | தட்டும்போது ஒலியெழுப்பும் தன்மையுடையன. | தட்டும்போது ஒலியெழுப்பும் தன்மையற்றவை. |
4.
படி 1 : மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி செயல்பாட்டைத் திறந்து, அதில் Begin a New Story என்பதைத் தேர்வு செய்து Next யை கிளிக் செய்யவும்.
படி2 : அடுத்ததாக Import Picture யை கிளிக் செய்து, காணொளிக்காக சேமித்த புகைப்படங்களை தேர்வு செய்து Next யை கிளிக் செய்யவும்.
படி 3 : இப்போது ஒவ்வொரு படத்திற்கும் பொருத்தமான சிறு சிறு உரைகளை உள்ளிடலாம். படங்களுக்கு அசைவூட்டம் கொடுத்து Next யை கிளிக் செய்யவும்.
படி 4 : கதைக்கு பின்னணி இசையை இணைக்க Select Music மூலம் இசைக் கோப்பைத் தேர்ந்தெடுத்த பின்னர் Next யை கிளிக் செய்யவும்.
படி 5 : கதைக்கான பெயரைத் தேர்வு செய்து, Settings மூலம் காணொளியின் தரத்தினை மாற்றிக் கொள்ளலாம்.
படி6 : இறுதியாக View Your Story என்பதனை கிளிக் செய்து நமது காணொளியினைக் காணலாம்.
5.
சமநிலை: ஒரு பொருளின் ஆரம்ப நிலையினைத் தக்க வைத்துக்கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை எனப்படும்.
சமநிலை மூன்று வகைப்படும்.
i) உறுதிச்சமநிலை
ii) உறுதியற்ற சமநிலை
iii) நடுநிலை சமநிலை
i) உறுதிச்சமநிலை:
i) கூம்பானது மிக அதிகக் கோணத்திற்கு சாய்க்கப்பட்டு பின்னர் விடப்பட்டாலும் கவிழ்ந்து விடாமல் மீண்டும் பழைய நிலையை அடையும்.
ii) கூம்பு சாய்க்கப்படும் போது அதன் ஈர்ப்பு மையம் உயர்கிறது.
iii) ஈர்ப்பு மையத்தின் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது சாய்க்கப்பட்ட நிலையிலும் அதன் அடிப்பரப்பிற்கு உள்ளேயே விழுகிறது.
iv) எனவே அதனால் மீண்டும் தனது பழைய நிலையை அடைய முடிகிறது.
ii) உறுதியற்ற சமநிலை:
i) கூம்பினை சாய்க்கும் போது ஈர்ப்பு மையம் அதன் நிலையிலிருந்து உயர்கிறது.
ii) ஈர்ப்பு மையம் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது அதன் அடிப்பரப்பிற்கு வெளியே விழுகிறது.
iii) எனவே கூம்பானது கீழே கவிழ்கிறது.
iii) நடுநிலை சமநிலை:
i) கூம்பினை நகர்த்தும் போது அதன் ஈர்ப்பு மையத்தின் உயரம் மாறுவதில்லை.
ii) கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருக்கிறது.
6.
| நோய் | நோய்க்காரணி | பரவும் விதம் | அறிகுறி | தடுப்பு மற்றும் சிகிச்சை |
| காசநோய் | மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலே |
ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதாக காற்றின் மூலமும் நோயாளியின் சளி மற்றும் இதர உடமைகள் மூலம் |
காய்ச்சல், எடை இழப்பு, தொடர்ந்து இருமல், சளியுடன் இரத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் |
BCG தடுப்பூசி போடுதல். சிறப்பு கவனம் செலுத்துதல். DOT போன்ற தொடர்ச்சியாக அளிக்கப்படும் மருந்துகளைப் பயன்படுத்துதுல். |
| தட்டம்மை | வாரிசெல்லா ஜோஸ்டர் | காற்றின் மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபரின் தொடர்பு மூலமும் |
உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல் மற்றும் அம்மைக் கொப்புளங்கள் |
சின்னம்மை தடுப்பூசி போடுதல். நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். |
| ரேபீஸ் | ரேப்டோ வைரஸ் | நோய்த் தொற்றுடைய நாய், பூனை போன்ற விலங்குகள் கடிப்பதால் |
ஹைட்ரோ போபியா, 2-12 வாரங்களாக காய்ச்சல் |
அறிகுறி ஏற்படும் முன் சரியான நேரத்தில் தடுப்பூசி போட வேண்டும். |
7.
பொதுவாக தண்டுகள் தரைக்கு மேலே வளரும். ஆனால் சில தண்டுகள் தரைக்கு கீழே வளர்ந்து உணவைச் சேமிக்கும்.
தரைகீழ்த் தண்டுகள் நான்கு வகைப்படும்.
i) மட்டநிலத்தண்டு:
தண்டு தரைக்குக் கீழ் கணு மற்றும் கணுவிடைகளோடு தடித்துக் காணப்படும். கணுவில் செதில் இலைகள் தோன்றும். எ.கா: இஞ்சி, மஞ்சள்
ii) கந்தம்:
இத்தரைகீழ்த் தண்டு வட்ட வடிவில் இருக்கும். இதன் மேற்பகுதியும் அடிப்பகுதியும் தட்டையாக இருக்கும்.
இதன் செதில் இலைகளின் கோணத்திலிருந்து பல மொட்டுகள் உருவாகும். ஒவ்வொரு மொட்டும் வளர்ந்து சேய் தாவரங்களை உருவாக்கும். எ.கா: சேனைக்கிழங்கு
iii) கிழங்கு:
இது கோள வடிவில் உணவைச் சேமிக்கும் தரைகீழ்த் தண்டாகும். இதன் தண்டில் வளர்வடங்கிய மொட்டுகள் காணப்படும். அவை முளைத்து புதிய தாவரத்தை உருவாக்கும். எ.கா: உருளைக்கிழங்கு
iv) குமிழம்:
இதன் தண்டு மிகவும் குறுகியவை, தட்டு போன்றது. இதன் சதைப்பற்றான இலைகள் உணவைச் சேமிக்கும்.
குமிழத்தில் இரண்டு வகையான இலைகள் உள்ளன.
i) சதைப்பற்றுள்ள இலை
ii) செதில் இலை
8.
i) மரத்திலிருந்து ஓர் இலையை எடுத்துக்கொள்க.
i) அந்த இலையை ஒரு வரைபடத்தாளின் மீது வைத்து அதன் எல்லைக் கோடுகளை வரைந்து கொள்க.
ii) இலையின் எல்லைக் கோட்டுக்குள் அமைந்த முழு சதுரங்களை எண்ணவும், இதை M எனக்கொள்க.
iv) பின் பாதி அளவு பரப்பிற்கு மேல் உள்ள சதுரங்களை எண்ணவும், இதை N எனக்கொள்க.
v) அடுத்து பாதி அளவு பரப்புள்ள சதுரங்களை எண்ணவும், இதை P எனக்கொள்க.
vi) இறுதியாக பாதி அளவு பரப்பிற்குக் கீழ் உள்ள சதுரங்களை எண்ணவும், இதைQ எனக்கொள்க.
இலையின் தோராயமான பரப்பு = \(\mathrm{M}+\left(\frac{3}{4}\right) \mathrm{N}+\left(\frac{1}{2}\right) \mathrm{P}+\left(\frac{1}{4}\right) \mathrm{Q}\) ச.செமீ
இச்சூத்திரத்தைப் பயன்படுத்தி எந்த ஒரு ஒழுங்கற்ற வடிவமுள்ள தள பொருளின் பரப்பளவையும் காண முடியும்.
9.
இறுதித் திசைவேகம் (v) = 20 மீ/வி
தொடக்கத் திசைவேகம் (u) = 20 மீ/வி
நேரம் (v) = 10வி
முடுக்கம் = ?
முடுக்கம் = திசைவேக மாறுபாடு/காலம்
\(=\frac{v-u}{t}=\frac{20-0}{10}=\frac{20}{10}\)
மகிழுந்தின் முடுக்கம் = 2 மீ/வி2
10.
ஆரம் r = 1 செ.மீ = 1/100 மீ
நிறை M = 33 கி = 33/1000 கி.கி
அடர்த்தி \(\mathrm{D} =\frac{\mathrm{M}}{\mathrm{V}} \)
வெள்ளி கோளத்தின் பருமன் \(\mathrm{V} =\frac{4}{3} \pi \mathrm{r}^{3} \)
\(=\frac{4}{3} \times \frac{22}{7} \times \frac{1}{100} \times \frac{1}{100} \times \frac{1}{100} \)
\(\mathrm{V} =\frac{4.186}{1000000} \mathrm{~m}^{3} \)
\(\mathrm{D} =\frac{\mathrm{M}}{\mathrm{V}} \)
\(\mathrm{D} =\frac{33 \times 1000000}{4.186 \times 1000}
\)
D = 7880 கி.கி/மீ3
வெள்ளியின் அடர்த்தி = 7880 கி.கி/மீ3
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards