7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 09/08/2019
அறிவியல் முதல் பருவம்
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
_____ நேர்மின் சுமையுடையது.
புரோட்டான்
எலக்ட்ரான்
மூலக்கூறு
நியூட்ரான்
2.
மைக்ரோசாப்ட் போட்டோஸ்டோரியில் நமது படங்களைப் பதிவேற்ற பயன்படுத்தபடும் தெரிவு எது?
BEGIN A STORY
IMPORT PICTURES
SETTINGS
VIEW YOUR STORY
3.
கீழ்க்கண்டவற்றுள் உலோகம் எது?
இரும்பு
ஆக்சிஜன்
ஹீலியம்
தண்ணீர்
4.
பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
வெற்றிலை
மிளகு
இவை இரண்டும்
இவை இரண்டும் அல்ல
5.
இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
பிரையோபில்லம்
பூஞ்சை
வைரஸ்
பாக்டீரியா
6.
பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
நிறை
நேரம்
பரப்பு
நீளம்
7.
அணுவின் உட்கருவில் ______ மற்றும் _____ இருக்கும்.
8.
தனிமங்கள் _____ வகையான அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
9.
காசநோய் என்பது ________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
10.
_________ என்பது சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதியாகும்
11.
பாதரசத்தின் அடர்த்தி ______
12.
இரும்பு
13.
வெக்டர்
14.
ஒழுங்கான பொருள்களின் ஈர்ப்புமையம்
15.
கொக்கி
16.
பரப்பு
17.
மூலக்கூறு - வரையறு.
18.
கீழ்க்கண்ட சேர்மங்களின் வேதியியல் வாய்ப்பாட்டையும், அதில் அடங்கியுள்ள தனிமங்களின் பெயர்களை எழுதவும்.
1. சோடியம் குளோரைடு
2. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
3. கார்பன்டை ஆக்ஸைடு
4. கால்சியம் ஆக்ஸைடு
5. சல்பர் டை ஆக்ஸைடு
19.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?
20.
சீரான இயக்கத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் சீரான திசைவேகத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஆசேர் கூறுகிறான். காரணம் தருக.
21.
சுகாதாரம் என்றால் என்ன?
22.
மலரின் இரு முக்கியமான பாகங்கள் யாவை?
23.
தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?
24.
ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக.
25.
வேகம் மற்றும் திசைவேகம் இவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டினைக் கூறுக.
26.
தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்களை வேறுபடுத்துக.
27.
இஞ்சி என்பது தண்டு. வேர் அல்ல ஏன்?
28.
ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?
29.
உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.
30.
மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.
31.
ஒரு பள்ளியின் விளையாட்டுத்திடலின் பரிமாணம் 800 மீ × 500 மீ. அத்திடலின் பரப்பைக் காண்க.
1.
(a)
புரோட்டான்
2.
(b)
IMPORT PICTURES
3.
(a)
இரும்பு
4.
(c)
இவை இரண்டும்
5.
(a)
பிரையோபில்லம்
6.
(c)
பரப்பு
7.
( )
புரோட்டான்கள், நியூட்ரான்கள்
8.
( )
ஒரே
9.
( )
மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலே
10.
( )
சூலகம்
11.
( )
13,600 கி.கி./மீ3
12.
Fe
13.
இல்லுஸ்ட்ரேட்டர்
14.
வடிவியல் மையம்
15.
பிக்னோனியா
16.
மீ2
17.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் வேதிப்பிணைப்பினால் இணைந்து மூலக்கூறு உருவாகிறது.
18.
| சேர்மம் | வேதி வாய்ப்பாடு | தனிமங்களின் பெயர்கள் |
| சோடியம் குளோரைடு | NaCl | சோடியம், குளோரின் |
| பொட்டாசியம் ஹைட்ராக்சைடு | KOH | பொட்டாசியம், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் |
| கார்பன் டை ஆக்ஸைடு | CO₂ | கார்பன், ஆக்ஸிஜன் |
| கால்சியம் ஆக்ஸைடு | CaO | கால்சியம், ஆக்ஸிஜன் |
| சல்ஃபர் டை ஆக்ஸைடு | SO₂ | சல்ஃபர், ஆக்ஸிஜன் |
19.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை. இவ்வகைப் படங்களைப் பெரிதாக்கி பார்க்கும் போது அவை செவ்வக அடுக்குகளாகத் தெரியும்.
20.
சீரான இயக்கத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் சீரான திசைவேகத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனெனில் வேகம் நிலையானதாக இருக்கும்போது திசை மாறக்கூடும்.
எ.கா: வட்டப்பாதையில் நிலையான வேகத்துடன் நகரும் மகிழுந்து.
21.
சுகாதாரம் என்பது சத்துள்ள உணவை உண்டு. உடற்பயிற்சி செய்து ஓய்வெடுக்கவும், நல்ல தூக்கத்துடன் நாம் வாழும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதும் சுகாதாரமாகும்.
22.
1. மகரந்தத்தாள் வட்டம் (ஆண் இனப்பெருக்க உறுப்பு) என இனப்பெருக்கம் இரு வகைப்படும்.
2. சூலக வட்டம் (பெண் இனப்பெருக்க உறுப்புர் இவை இரண்டும் மலரின் முக்கிய பாகங்களாகும்.
23.
தங்கத்தின் அடர்த்தி = 19,300 கி.கி./மீ3
24.
1 ஒளி ஆண்டு = 9.46 × 1015 மீ
25.
| வ.எண் | வேகம் | திசைவேகம் |
| 1. | தொலைவு மாறுபடும் வீதம் வேகம் எனப்படும். | இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் திசைவேகம் எனப்படும். |
| 2. | வேகம் = தொலைவு/காலம் | திசைவேகம் = இடப்பெயர்ச்சி/காலம் |
| 3. | இதன் அலகு மீ/வி | இதன் அலகு மீ/வி |
26.
| தொற்று நோய்கள் | தொற்றா நோய்கள் |
| தொற்று நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகின்றன. |
தொற்றா நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதில்லை. |
| அசுத்தமான காற்று, நீர், உணவு அல்லது வெக்டார்கள் எனப்படும் நோய்க் கடத்திகளான பூச்சிகள் மூலம் பரவுகிறது. எ.கா: காசநோய், காலரா |
வெக்டார்களைத் தவிர பிற காரணிகளால் ஏற்படுகிறது. எ.கா: ஆஸ்துமா, சீரோப்தால்மியா |
27.
பெரும்பாலும் தாவரத்தின் தண்டிலிருந்தே இலைகள் தோன்றும். இஞ்சியில் தரைமேல் இலை மற்றும் செதில் இலைகள் போன்றவை வேர் போன்ற பகுதியிலிருந்து தோன்றுவதால் அவை தண்டு ஆகும்.
28.
ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவு ஆகும்.
1 ஒளி ஆண்டு = 9.46 x 1015 மீ
29.
| வ.எண் | உலோகங்கள் | அலோகங்கள் |
| 1. | பளபளப்பான மேற்பரப்பு கொண்டவை. | பளபளப்பான தன்மையற்றவை. |
| 2. | பொதுவாக கடினமானவை. | பொதுவாக மிருதுவானவை. |
| 3. | தகடாகவும், கம்பியாகவும் நீட்டலாம். | தகடாகவும், கம்பியாகவும் நீட்ட இயலாது. |
| 4. | வெப்பத்தையும், மின்சாரத்தையும் நன்கு கடத்தக்கூடியவை | வெப்பத்தையும், மின்சாரத்தையும் அரிதிற் கடத்திகள் |
| 5. | தட்டும்போது ஒலியெழுப்பும் தன்மையுடையன. | தட்டும்போது ஒலியெழுப்பும் தன்மையற்றவை. |
30.
மலரின் மகரந்தத்தூள் சூல் முடியை அடையும் நிகழ்ச்சி மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
மகரந்தச் சேர்க்கை இரு வகைப்படும்.
i) செயற்கை மகரந்தச்சேர்க்கை:
மகரந்தத்தாள் வட்டத்திலுள்ள மகரந்தத்தூளை சூல் முடியில் கொண்டு நாமாக சேர்ப்பது செயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
ii) இயற்கை மகரந்தச்சேர்க்கை:
மகரந்தத்தாள் வட்டத்திலுள்ள மகரந்தத்தூள் பூச்சிகள், காற்று, நீர் போன்ற இயற்கை காரணிகளால் இயற்கையாக சூல் முடியை அடைவது இயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
இயற்கை மகரந்தச்சேர்க்கை இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
அ) தன் மகரந்தச்சேர்க்கை:
ஒரு மலரின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே மலரின் அல்லது மற்றொரு மலரின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி தன் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
ஆ) அயல் மகரந்தச்சேர்க்கை:
ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தாள்கள் அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
31.
நீளம் l = 800 மீ
அகலம் b = 500 மீ
விளையாட்டுத் திடலின் பரப்பு = l × b
= 800 × 500 = 4,00,000 மீ2
விளையாட்டுத் திடலின் பரப்பு = 4,00,000 மீ2
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards