7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 06/08/2019
அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண்
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
தனிமங்கள்: இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன :: சேர்மங்கள்: _____
2.
அளவுகோலின் நீளம் :: மீட்டர் : வானூர்தியின் வேகம் _____
3.
முதல்நிலைத் தீக்காயம் : மேற்புறத்தோல் :: இரண்டாம்நிலைத் தீக்காயம் :_______
4.
பரப்பு: மீ2 : : கன அளவு :____________
5.
கூற்று : சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
காரணம் : உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல், மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கா ன சரியான விளக்கம்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கா ன சரியான விளக்கமல்ல .
இ. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
6.
கூற்று: பூவில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல், கனிகளையும், விதைகளையும் உருவாக்குகின்றன.
காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறுகிறது. சூலானது, விதையாக மாறுகிறது.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல .
இ. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
7.
கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
8.
புரோட்டான்களின் பண்புகள் யாவை?
9.
அணு எண் என்றால் என்ன?
10.
ஒரு சேர்மத்தின் வேதியியல் வாய்ப்பாடு என்றால் என்ன ? இதன் முக்கியத்துவம் என்ன ?
11.
கீழ்க்கண்ட சேர்மங்களின் வேதியியல் வாய்ப்பாட்டையும், அதில் அடங்கியுள்ள தனிமங்களின் பெயர்களை எழுதவும்.
1. சோடியம் குளோரைடு
2. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
3. கார்பன்டை ஆக்ஸைடு
4. கால்சியம் ஆக்ஸைடு
5. சல்பர் டை ஆக்ஸைடு
12.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?
13.
காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?
14.
உனது முடியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணுவது எவ்வாறு?
15.
சுகாதாரம் என்றால் என்ன?
16.
கீழே காண்பவற்றின் கனஅளவினைக் கணக்கிடவும் (π = 22/7 எனக் கொள்ளவும்).
அ) 3 செ.மீ பக்க அளவுள்ள கனசதுரம்
ஆ) 3 மீ ஆரமும் 7 மீ உயரமும் கொண்ட உருளை ஆகியவற்றின் கனஅளவினைக் காணவும். (π = 22/7 எனக் கொள்ளவும்).
17.
முட்கள் என்றால் என்ன?
18.
மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் காரணிகள் யாவை?
19.
மலரின் இரு முக்கியமான பாகங்கள் யாவை?
20.
தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?
21.
எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?
22.
ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக.
23.
ii. பின்வரும் தாவரங்களின் மாற்றுருக்களை எழுதுக.
| தாவரங்களின் பெயர் | மாற்றுருக்கள் | |
| 1. | ஆலமரம் | |
| 2. | நெப்பன்தஸ் | |
| 3. | வெங்காயத்தாமரை | |
| 4. | ஸ்டோலன் |
24.
i. பின்வரும் படங்களைப் பார்த்து, அதன் பாகங்களை குறிக்க

1.
தனிமங்களைப் பிரிக்க இயலும்
2.
நாட்
3.
உட்புறத்தோல்
4.
மீ3
5.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கா ன சரியான விளக்கம்.
6.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
7.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
8.
1. அணுக்கருவினுள் காணப்படும் நியூக்ளியான்களுள் ஒன்று.
2. நேர்மின்னூட்டம் மதிப்பு கொண்டது (+1).
3. புரோட்டானின் நிறை 1.6726 x 10-27 Kg
9.
ஒரு அணுவில் காணப்படும் எலக்ட்ரான்கள் (அல்லது) புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண் (Z) ஆகும்.
10.
1. வேதியியல் வாய்ப்பாடு என்பது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தினைக் குறிக்கக்கூடிய குறியீட்டு முறையாகும்.
2. இது ஒரு தனிமத்திலுள்ள மூலக்கூறுகள் மற்றும் அணுக்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களைத் தருகிறது.
முக்கியத்துவம்:
வேதியியல் வாய்ப்பாட்டின் மூலம் மூலக்கூறிலுள்ள அணுக்களின் வகைகள் மற்றும் அணுக்களின் எண்ணிக்கையை அறியலாம்.
11.
| சேர்மம் | வேதி வாய்ப்பாடு | தனிமங்களின் பெயர்கள் |
| சோடியம் குளோரைடு | NaCl | சோடியம், குளோரின் |
| பொட்டாசியம் ஹைட்ராக்சைடு | KOH | பொட்டாசியம், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் |
| கார்பன் டை ஆக்ஸைடு | CO₂ | கார்பன், ஆக்ஸிஜன் |
| கால்சியம் ஆக்ஸைடு | CaO | கால்சியம், ஆக்ஸிஜன் |
| சல்ஃபர் டை ஆக்ஸைடு | SO₂ | சல்ஃபர், ஆக்ஸிஜன் |
12.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை. இவ்வகைப் படங்களைப் பெரிதாக்கி பார்க்கும் போது அவை செவ்வக அடுக்குகளாகத் தெரியும்.
13.
சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவிய பின் ஒரு கிருமி நாசினித் திரவத்தால் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
14.
வழக்கமாக உச்சந்தலையைத் தேய்த்துக் குளிப்பதால் இறந்த சருமச் செல்கள், அதிக எண்ணெய் மற்றும் தூசி ஆகியவற்றை அகற்றலாம்.
15.
சுகாதாரம் என்பது சத்துள்ள உணவை உண்டு. உடற்பயிற்சி செய்து ஓய்வெடுக்கவும், நல்ல தூக்கத்துடன் நாம் வாழும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதும் சுகாதாரமாகும்.
16.
அ) கனசதுரத்தின் கனஅளவு
= பக்கம் × பக்கம் × பக்கம் = 3 × 3 × 3 = 27 செ.மீ3 (அ) கன செ.மீ
ஆ) உருளையின் கனஅளவு = π × r2 × h = (22/7) × 3 × 3 × 7 = 198 மீ3.
17.
இலைகள் முட்களாக மாறுகின்றன. தண்டு ஒளிச்சேர்க்கை செய்யும் வகையில் பசுமையான சதைப்பற்றுள்ள பகுதியாக மாறுகின்றது.
எ.கா: கள்ளி வகைகள்
18.
பூச்சிகள், பறவைகள், காற்று மற்றும் நீர் ஆகியன மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் காரணிகளாகும்.
19.
1. மகரந்தத்தாள் வட்டம் (ஆண் இனப்பெருக்க உறுப்பு) என இனப்பெருக்கம் இரு வகைப்படும்.
2. சூலக வட்டம் (பெண் இனப்பெருக்க உறுப்புர் இவை இரண்டும் மலரின் முக்கிய பாகங்களாகும்.
20.
தங்கத்தின் அடர்த்தி = 19,300 கி.கி./மீ3
21.
பாதரசத்தைத் தவிர மற்ற அனைத்து திரவங்களிலும் இரும்பு மூழ்கும்.
22.
1 ஒளி ஆண்டு = 9.46 × 1015 மீ
23.
| தாவரங்களின் பெயர் | மாற்றுருக்கள் | |
| 1. | ஆலமரம் | வேர் (தூண்கள்) |
| 2. | நெப்பன்தஸ் | இலை (குடுவைகள்) |
| 3. | வெங்காயத்தாமரை | தண்டு (குட்டையான ஓடு தண்டு) |
| 4. | ஸ்டோலன் | தண்டு (காட்டு-ஸ்ட்ராபெர்ரி) |
24.
1. சூலகமுடி
2. சூலகம்
3. மகரந்தக்கம்பி
4. சூல்
5. புல்லி
6. மகரந்தத்தாள்
7. அல்லி
8. சூலகத்தண்டு
9. மகரந்ததாள்
10. சூற்பை
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards