7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 31/07/2019
நிலத்தோற்றங்கள்
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று _____________
கடல் ஓங்கல்கள்
கடல் வளைவுகள்
கடல் தூண்கள்
கடற்கரை
2.
பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் _____________ ஆகும்.
சர்க்
அரெட்டுகள்
மொரைன்
டார்ன் ஏரி
3.
குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது
காவேரி
பெண்ணாறு
சிற்றாறு
வைகை
4.
மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் _____________ ஆகும்.
உட்பாயத் தேக்கம்
வண்டல் விசிறி
வெள்ளச் சமவெளி
டெல்டா
5.
உலகின் மிக நீண்டகடற்கரை _____________ ஆகும்.
6.
ஜெர்மனியில் காணப்படும் சர்க் _____________ என்று அழைக்கப்படுகிறது.
7.
காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் _____________ பாலைவனத்தில் காணப்படுகிறது
8.
பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் _____________ என்கிறோம்.
9.
காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.
10.
காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக.
11.
குதிரைக் குளம்பு ஏரி எவ்வாறு உருவாகிறது?
12.
அரித்தல் வரையறு
13.
‘V’ வடிவ பள்ளத்தாக்குமற்றும் ‘U’ வடிவ பள்ளத்தாக்கு
14.
கிளையாறு மற்றும் துணையாறு.
15.
கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன
16.
வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.
17.
ஆற்றின் வளைவுகளின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
18.
காற்றின் செயல்களல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விளக்குக
1.
(d)
கடற்கரை
2.
(c)
மொரைன்
3.
(c)
சிற்றாறு
4.
(b)
வண்டல் விசிறி
5.
( )
மியாமி கடற்கரை
6.
( )
கார் சர்க்
7.
( )
கலஹாரி
8.
( )
பாறைச்சிதைவு
9.
1. கடற்கரையிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாக பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும்.
2. எ.கா: ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி, தமிழ்நாட்டிலுள்ள பழவேற்காடு ஏரி மற்றும் கேரளாவில் உள்ள வேம்பநாடு ஏரி.
10.
1. பாறையின் மேற்பகுதியைவிட கீழ்ப்பகுதியை காற்று வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப்பாறைகளின் மேற்பகுதி அகன்றும் மற்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகின்றன.
2. இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன. இதை பாலை வனப்பகுதியில் நம்மால் காண முடியும்.
11.
1. ஆற்று வளைவுகளின் (Meanders) இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
2. நாளடைவில், ஆற்றுவளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியாக உருவெடுக்கின்றது.
3. இதுவே குதிரைக்குளம்பு ஏரி எனப்படுகிறது.
12.
நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்.
13.
| 'V' வடிவ பள்ளத்தாக்கு | 'U' வடிவ பள்ளத்தாக்கு |
|---|---|
| ஆற்று நீரானது செங்குத்து சரிவைக் கொண்ட மலைப் பிரதேசத்தை அரிப்பதால் அங்கு ஆழமான V வடிவ பள்ளத்தாக்குகளை உருவாக்குகிறது. | 'U' வடிவ பள்ளத்தாக்கு பனியாற்றின் பக்கவாட்டு மற்றும் செங்குத்து அரிப்பினால் ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் மூலம் உருவாகின்றன. |
14.
| கிளையாறு | துணையாறு |
|---|---|
| ஒரு முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து விலகிச் செல்லும் ஓர் ஆறு. | ஒரு நீரோடை அல்லது ஆறு தன் போக்கில் ஒரு முதன்மை ஆற்றுடன் இணைவது ஓர் ஆறு. |
| எடுத்துக்காட்டு: கொள்ளிடம் | எடுத்துக்காட்டு: பவானி |
15.
கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும் போது குகையின் மேற்சுடரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை தோற்றுவிக்கின்றது. மேலும் கடல் அலைகள் மேற்கூரையை அரிப்பதால் பக்கச்சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் எனப்படும்.
16.
காரணம்:
சில நேரங்களில் ஆறு தன் கரைகளை தாண்டி நிரம்பி வழிகின்றது. இதனால் ஆற்றின் அண்டைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. இவ்வெள்ளப் பெருக்கானது மென்மையான மண் மற்றும் இதர பொருட்களையும் அடுக்குகளாக படிய வைக்கின்றன. இவை வண்டல் படிவுகள் எனப்படுகிறது. இதனால் வளமான சமதள வெள்ளச் சமவெளி உருவாகின்றது.
17.
காரணம்:
ஆற்று வளைவுகள் (Meanders) இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் நெருங்கி வருகின்றன.
18.
1. பாறையின் மேற்பகுதியைவிட கீழ்ப்பகுதியை வேகமாக காற்று அரிக்கின்ற காரணத்தினால் அப்பாறைகளின் மேற்பகுதி அகன்றும் மற்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகின்றன.
2. ஒரு தனித்து விடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் ஒரு தூண் போன்று காட்சி அளிப்பது காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் (Inselbergs) என்று அழைக்கப்படுகிறது. (எ.கா) தென் அமெரிக்காவில் கலஹாரி பாலைவனத்தில் காணப்படும் காற்றரிப்புத் தனிக்குன்றுகள்.
3. காற்று வீசும் போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது. காற்று வீசுவது நிற்கும் போது மணலானது உயரம் குறைவான குன்றுகள் போன்று படியவைக்கின்றது.
4. இப்படிவுகள் மணல் குன்றுகள் என அழைக்கப்படுகிறது.
5. பிறைச்சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள் பிறைவடிவ மணல் குன்றுகள் எனப்படுகின்றன.
6. மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும் எடை குறைவாகவும் இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்தி செல்கின்றது.
7. இவ்வாறு கடத்தப்பட்ட மணல் ஒரு பெரும் பரப்பில் படிவதை காற்றடி வண்டல் படிவுகள் (Loess) எனப்படுகிறது.
8. காற்றடி வண்டல் படிவுகள் சீனாவில் அதிகமாக காணப்படுகின்றன.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards