7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 06/08/2019
முதல் பருவம் இரு மதிப்பெண்
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
உற்பத்திக் காரணிகளைக் கூறுக.
2.
உற்பத்தியின் வகைகளைக் குறிப்பிடுக.
3.
பயன்பாட்டின் வகைகளை எழுதுக.
4.
உற்பத்தி என்றால் என்ன?
5.
குறிப்பு வரைக : கூட்டணி அரசாங்கம்
6.
ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் எவை?
7.
சமத்துவம் என்றால் என்ன?
8.
மதத்தின் வகைகளை கூறுக
9.
இனங்களின் வகைகள் யாவை?
10.
அரித்தல் வரையறு
11.
‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.
12.
ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?
13.
செயலிழந்த எரிமலைக்கு உதாரணம் கொடு.
14.
சியால் என்றால் என்ன ?
15.
’சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?
16.
கண்டுபிடிக்கவும்:
| பிரம்மதேயம் | |
| தேவதானம் | |
| பள்ளிச்சந்தம் | |
| வேளாண்வகை |
17.
தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக
18.
ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக
19.
இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய மசூதிகளையும், கொட்டைகளையும் பட்டியலிடவும்.
20.
‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?
21.
பெருநகரம் மற்றும் நகரம்
22.
மொழி மற்றும் மதம்
23.
‘V’ வடிவ பள்ளத்தாக்குமற்றும் ‘U’ வடிவ பள்ளத்தாக்கு
24.
செயல் எரிமலை மற்றும் செயலற்ற எரிமலை
25.
சியால் மற்றும் சிமா
1.
2.
உற்பத்தியின் வகைகள்:
(i) முதன்மை நிலை உற்பத்தி (வேளாண்துறை உற்பத்தி)
(ii) இரண்டாம் நிலை உற்பத்தி (தொழில்துறை உற்பத்தி)
(iii) மூன்றாம் நிலை உற்பத்தி (சேவைத்துறை உற்பத்தி)
3.
பயன்பாட்டை அதன் இயல்பைப் பொருத்து வடிவப் பயன்பாடு, இடப்பயன்பாடு, காலப் பயன்பாடு என வகைப்படுத்தலாம்.
4.
பொருளாதாரத்தில் உற்பத்தி என்னும் சொல், மாற்றத் தக்க மதிப்புடைய பொருள்களையும் சேவைகளையும் உருவாக்குவதைக் குறிக்கிறது. அதாவது, பயன்பாட்டை உருவாக்குதலே உற்பத்தியாகும்.
5.
1. பல கட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை.
2. இது போன்ற நேர்வில் சில கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கின்றன.
3. இது கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.
6.
ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள்:
(i) தலைவர்
(ii) செயல் உறுப்பினர்கள்
(iii) தொண்டர்கள்
7.
சமத்துவம் என்பது ஒரு தனி மனிதன் அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பால், இயலாமை, சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல் சார்ந்த போக்கு வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் முதலியவற்றை உறுதி செய்தலாகும்.
8.
மதத்தின் வகைகள்:
(i) உலகளாவிய மதங்கள் - கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தம்
(ii) மனித இனப்பிரிவு மதங்கள் - ஜூடோயிசம், இந்து மதம், ஷிண்டோயிசம்
(iii) நாடோடி (அல்லது) பாரம்பரிய மாதங்கள் - அனிமிசம், ஷாமானிசம், ஷாமன்
9.
பெருமளவில் பரந்து காணப்படும் மனித இனத்தின் வகைகளை தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடியின் வகை, தோலின் நிறம் மற்றும் இரத்தத்தின் வகை போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கலாம்.
10.
நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்.
11.
1. இல்துமிஷ் ஆட்சி காலத்தில் மங்கோலியர்கள் செங்கிஸ்கானின் தலைமையில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை அச்சுறுத்தினர்.
2. செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலூதீன் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளை மறுத்தது மூலம் மங்கோலிய ஆபத்தைத் தவிர்த்தார்.
3. மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்ள துருக்கிய பிரபுக்கள் 40 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அதுவே சகல்கானி அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.
12.
சிக்கந்தர் லோடி ஆக்ரா நகரை நிர்மாணித்தார்.
13.
மியான்மரின் போப்பா, ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சரோ மற்றும் கென்யா செயலிழந்த எரிமலைகள் உதராணங்களாகும்.
14.
அ) புவிமேலோடு இரண்டு பிரத்யேக பிரிவுகளைக் கொண்டது.
ஆ) கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது.
இ) இப்பகுதி முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது.
ஈ) இதனையே சியால் என்று இணைத்து அழைக்கின்றோம்.
15.
அரசர்களும் உள்ளூர் தலைவர்களும் மங்கலம் அல்லது சதுர்வேதி மங்கலம் எனும் பிராமணர் குடியிருப்புகளை நீர்ப்பாசன வசதிகளோடு உருவாக்கினர்.
16.
| பிரம்மதேயம் | பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் |
| தேவதானம் | கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இடம் |
| பள்ளிச்சந்தம் | ஜெயின் நிறுவனங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இடம் |
| வேளாண்வகை | பிராமணர் அல்லாத சொத்துக்கான நிலம் |
17.
"உமையத்துக்களும்” “அப்பாசித்துகளும்" தொடக்கக்கால கலீஃபாத்துகளாகும்.
18.
1. பிரதிகாரர்கள்
2. சௌகான்கள்
3. சாளுக்கியர்கள்
4. பரமாரர்கள்
19.
மசூதிகள்:
1. குவ்வத் - உல் - இஸ்லாம் மசூதி
2. மோத் - கி - மசூதி
3. ஜமா மசூதி
4. பதேப்பூர் சிக்ரி தர்கா
5. சார்மினார்
கோட்டைகள்:
1. ஆக்ரா கோட்டை
2. சித்தூர் கோட்டை
3. குவாலியர் கோட்டை
4. டெல்லி செங்கோட்டை மேலும் தௌலதாபாத் (ஔரங்காபாத்).
20.
தசுக் என்பது பாரசீகச் சொல் இதன் பொருள் சுயசரிதை எனப்படும்.
21.
| பெருநகரம் | நகரம் |
|---|---|
| நன்கு வளர்ச்சி அடைந்த மத்திய வாணிப வட்டத்தைக் கொண்ட பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய ஒரு தனித்த குடியிருப்பே மாநகரமாகும். |
குறைந்த பட்ச மக்கள் தொகையான கொண்ட இடத்தையே நகரம் என்கிறோம். |
| இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள இடங்களையே மாநகரம் என அழைக்கிறோம். (1,00,000 மேல்) |
5000 க்கும் அதிகமான மக்கள் இருக்கும் இடம் நகரம் ஆகும். |
22.
| மொழி | மதம் |
|---|---|
| சமுதாய அமைப்பில் மொழியானது கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். | மதம் என்பது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையையும், வழிபாட்டு முறைகளையும் கொண்டதாகும். இது மனிதர்களை மனித சமுதாயத்துடன் கொண்டு சேர்க்கும். |
| ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்வதற்கு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ பயன்படுத்தப்படுகிறது. | மதம் ஒரு குழுவின் அடையாளமாகவும்,கலாச்சார புத்துணர்வுப் புள்ளியின் அடையாளமாகவும் திகழ்கிறது. |
23.
| 'V' வடிவ பள்ளத்தாக்கு | 'U' வடிவ பள்ளத்தாக்கு |
|---|---|
| ஆற்று நீரானது செங்குத்து சரிவைக் கொண்ட மலைப் பிரதேசத்தை அரிப்பதால் அங்கு ஆழமான V வடிவ பள்ளத்தாக்குகளை உருவாக்குகிறது. | 'U' வடிவ பள்ளத்தாக்கு பனியாற்றின் பக்கவாட்டு மற்றும் செங்குத்து அரிப்பினால் ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் மூலம் உருவாகின்றன. |
24.
| செயல் எரிமலை | செயலற்ற எரிமலை |
|---|---|
| செயல்படும் எரிமலை அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் என்றழைக்கப்படுகின்றன. |
செயல்படாத எரிமலை பல வருடங்களாக எரிமலைக் குழம்பை வெளியேற்றுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் செயல்படக்கூடிய எரிமலைகள் என அழைக்கப்படுகிறது. |
| மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள ஸ்ட்டராம்போலி, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள செயிண்ட் ஹெலன், பிலிப்பைன்ஸ் தீவிலுள்ள பினாடுபோ. ஹவாய் தீவிலுள்ள மவுனாலோ (3,255 மீட்டர்) உலகின் மிகப் பெரிய செயல்படும் எரிமலையாகும். |
இதை உறங்கும் எரிமலை என்றும் அழைப்பர். |
| முக்கிய எரிமலைகள்: ஸ்டராம்போலி (மத்திய தரைக்கடல்), செயின்ட் ஹெலன்ஸ் (அமெரிக்கா), மவுனாலோ (ஹவாய் திவு) |
இத்தாலியில், வெசுவியஸ், ஜப்பானில் பியூ ஜியாமா, இந்தோனேஷியாவில் சிரகோட்டா ஆகியவை இவ்வகைக்கு பிரசித்தி பெற்ற எடுத்துக்காட்டுகளாகும். |
25.
| சியால் | சிமா |
|---|---|
| புவிமேலோடு இரண்டு பிரத்யேக பிரிவுகளைக் கொண்டது. கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது. இப்பகுதி முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது. |
மேலோட்டின் கீழ்ப்பகுதி அடர்ந்த பசால்ட் பாறைகளாலான ஓர் தொடர்ச்சியான பிரதேசமாகும். கடல் தரைகளாலான இப்பகுதி சிலிக்கா மற்றும் மக்னீசியத்தை மூலக்கூறுகளாக கொண்டு அமைந்ததாகும். |
| இதனையே சியால் என்று இணைத்து அழைக்கின்றோம். | எனவே இப்பகுதியை சிமா என்று அழைக்கிறோம். |
| இதன் சராசரி அடர்த்தி 2.7 கி/செ.மீ | இதன் சராசரி அடர்த்தி 3.0 கி/செ.மீ |
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards