8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்
ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெ ற்றுள்ளன.
ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன.
ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.
அணு எண் மற்றும் நிறை எண் அகிய இரண்டும் வேறுபடுகின்றன.
2.
டால்டனின் கூற்றுக்களுள் எந்தக்கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?
அணுவைப் பிளக்க முடியாது
அணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்றுகூடி சேர்மங்கள் உருவாகின்றன.
தனிமங்கள் அணுக்களால் ஆனவை
ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை
3.
நீரில், ஹைட்ர ஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை __________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.
1: 8
8: 1
2: 3
1: 3
4.
கார்பன் டை ஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறை விகிதம் மாறாதிருப்பது ______________ விதியை நிரூபிக்கிறது.
தலைகீழ் விகித விதி
மாறா விகித விதி
பெருக்கல் விதி
பொருண்மை அழியா விதி
5.
கேதோடு கதிர்கள் _______________ ஆல் உருவாக்கப்பட்டவை.
மின்சுமையற்ற துகள்கள்
நேர்மின்சுமை பெற்ற துகள்கள்
எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்
மேற்கண்ட எதுவுமில்லை
6.
அயனி, அயனித் தொகுப்பு – வரையறு.
7.
ஆனோடு கதிர்களின் பண்புகளை எழுதுக
8.
மாறா விகித விதி – வரையறு.
9.
கீழ்க்காண்பவற்றின் வேதி வாய்பாட்டினை எழுதுக.
அ. அலுமினியம் சல்பேட்
ஆ. பேரியம் குளோரைடு
இ. சில்வர் நைட்ரேட்
ஈ. மெக்னீசியம் ஆக்சைடு
10.
அடிக்கோடிடப்பட்டுள்ள தனிமங்களின் இணைதிறனைக் காண்க.
அ) NaCl
ஆ) CO2
இ) AlPO4
ஈ) Ba(NO3)2
உ) CaCl2
11.
கீழ்க்காணும் சமன்பாடுகளைச் சமன் செய்க.
| அ. Na + O2 | → | Na2O |
| ஆ. Ca + N2 | → | Ca3N2 |
| இ. N2 + H2 | → | NH3 |
| ஈ. CaCO3 + HCl | → | CaCl2 + CO2 + H2O |
| உ. Pb (NO3)2 | → | PbO + NO2 + O2 |
12.
ருத்ரேஷ், ஹரி, கனிக்ஷ்கா மற்றும் தாஹிரா முறையே கிணறு, குளம் , ஆறு, மற்றும் நிலத்தடி நீரைச் சேகரித்து அந்த நீர் மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பினர். அவற்றின் ஆய்வு முடிவுகளின்படி அவை அனைத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் 1: 8 என்ற விகிதத்தில் இருந்தன .
அ) மேற்கண்ட சோதனையிலிருந்து நீங்கள் என்ன அறிகிறீர்கள்?
ஆ) இது எந்த வேதிச்சேர்க்கை விதிக்கு உட்பட்டது?
13.
எலக்ட்ரான்கள் எதிர்மின்னூட்டம் கொண்டவை என்பதை எவ்வாறு நிரூபிப்பாய்?
1.
(c)
ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.
2.
(d)
ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை
3.
(a)
1: 8
4.
(b)
மாறா விகித விதி
5.
(c)
எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்
6.
(i) அயனி அல்லது அயனித்தொகுப்பு என்பது அணுக்கள் எலக்ட்ரான்களை இழப்பதாலோ அல்லது ஏற்பதாலோ உருவாக்கூடிய மின்சுமை பெற்ற துகள் ஆகும்.
7.
1. ஆனோடு கதிர்கள் நேர்கோட்டில் செல்கின்றன.
2. ஆனோடு கதிர்கள் துகள்களால் ஆனவை.
3. ஆனோடு கதிர்கள் மின்புலம் மற்றும் காந்தப் புலத்தால் விலக்கமடைகின்றன.அவை நேர் மின்னூட்டம் கொண்டுள்ளதால் எதிர்மின்விசையை நோக்கி விலக்கமடைகின்றன.
4. நேர் மின்வாய்க் கதிர்களின் பண்புகள் மின்னிறக்க குழாயினுள் இருக்கும் வாயுவின் தண்மையைச் சார்ந்து அமையும்.
5. துகளின் நிறை மின்னிறக்கக் குழாயிலுள்ள வாயுவின் அணு நிறைக்குச் சமமாக இருக்கும்.
8.
(i) ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட நிறை விகிதத்தில் ஒன்றிணைந்து தூய சேர்மத்தை உருவாக்குகின்றன.
9.
| அ. அலுமினியம் சல்பேட் | - | Al2(SO4)4 |
| ஆ. பேரியம் குளோரைடு | - | BaCl2 |
| இ. சில்வர் நைட்ரேட் | - | AgNO3 |
| ஈ. மெக்னீசியம் ஆக்சைடு | - | MgO |
10.
| அ) NaCl | - | Na+ | - | இணைதிறன் 1 |
| ஆ) CO2 | - | C | - | இணைதிறன் 0 |
| இ) AlPO4 | - | Al+ | - | இணைதிறன் 3 |
| ஈ) Ba(NO3)2 | - | Ba+ | - | இணைதிறன் 2 |
| உ) CaCl2 | - | Ca+ | - | இணைதிறன் 2 |
11.
| அ.4Na+O2 | → | 2Na2O |
| ஆ.3Ca+N2 | → | Ca3N2 |
| இ.N2+3H2 | → | 2NH3 |
| ஈ.CaCO3+2HCl | → | CaCl2+CO2+H2O |
| உ.2Pb(NO3)2 | → | 2PbO+4NO2+O2 |
12.
அ) சேர்மங்கள், எங்கிருந்து பெறப்பட்டாலும், எவ்வாறு தயாரிக்கப்பட்டாலும் அவை ஒரே விகிதத்தில் தனிமங்களைப் பெற்றுள்ளன. அவை குறிப்பிட்ட விகிதத்தில் தான். இருக்கும்.
ஆ) மாறா விகித விதி.
13.
(i) கேதோடு கதிர்களை மின்புலத்தில் செலுத்தும்போது அவை நேர்மின்வாயை நோக்கி விலக்கமடைகின்றன.
(ii) எதிர்மின்வாயிலிருந்து வெளிவரும் இக்கேதோடு கதிர்கள் எதிர்மின்னூட்டம் பெற்றவை என்பது இதன் மூலம் புலனாகிறது.
(iii) கேதோடு கதிர்களின் துகள்கள் 'எலக்ட்ரான்கள்' என அழைக்கப்படுகின்றன. எனவே எலக்ட்ரான்கள் எதிர்மின்னூட்டம் கொண்டவை ஆகும்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards