8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
_____ பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன.
கார்பன் டை ஆக்சைடு
மீத்தேன்
குளோரோ புளோரோ கார்பன்கள்
இவை அனைத்தும்
2.
உட்புறமாக வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடி
குவி ஆடி
குழி ஆடி
வளைவு ஆடி
இவற்றில் எதுவுமில்லை
3.
விரலி என்பது ஒரு__________ கருவி.
உள்ளீட்டு
வெளியீட்டு
சேமிப்பகம்
இணைப்பு வட ம்
4.
இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு______
1970
1975
1978
1623
5.
வெப்பநிலையின் SI அலகு
செல்சியஸ்
ஃபாரன்ஹீட்
கெல்வின்
ஆம்பியர்
6.
கோளக ஆடியின் வடிவியல் மையம் _____ எனப்படும்.
7.
நீரியல் உயர்த்தி _________ விதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
8.
செல்லானது ___________ என்ற அலகால் அளக்கப்படுகிறது.
9.
பழுப்புப் பாசி __________ வகுப்பைச் சார்ந்தது.
10.
குவார்ட்ஸ் கடிகாரங்கள் ______ அலைவுகளைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன.
11.
CFC என்பது ஒரு மாசுபடுத்தியாகும்.
12.
உருளும் உராய்வு நழுவு உராய்வை விட சற்று அதிகமாக இருக்கும்.
13.
பிரையோஃபைட்டுகளில் மாஸ்கள் நன்கு வளர்ச்சியடைந்த தாவரங்களாகும்.
14.
ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு நிமிடத்தில் பாயும் எனில், அது ஓர் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது.
15.
மாசுபடுதல் என்றால் என்ன?
16.
பின்வரும் குறியீடுகளால் குறிக்கப்பெறும் தனிமங்களின் பெயர்களை எழுதுக.
அ. Na
ஆ. Ba
இ. W
ஈ. U
17.
பாஸ்கல் விதியைக் கூறி அதன் பயன்பாடுகளைத் தருக.
18.
கணினியின் பாகங்களைக் கூறுக.
19.
ஆம்பியர் - வரையறு.
20.
நோய்க்கிருமிகள் என்றால் என்ன?
21.
மின்னாற்பகுத்தல்
22.
டங்ஸ்டன்
23.
ஒழுங்கற்ற எதிரொளிப்பு
24.
உருளும் உராய்வு
25.
துல்லியத்தன்மை
26.
சவ்வூடு பரவலை உதாரணத்துடன் விளக்குக.
27.
மருத்துவத் துறையில் நுண்ணுயிரிகள் எவ்வாறு பயன்படுகின்றன?
28.
கத்தியால் வெட்டுமளவுக்கு மென்மையான இரண்டு தனிமங்களைக் குறிப்பிடுக.
29.
கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 20 செ.மீ. எனில் அதன் குவியத் தொலைவினைக் காண்க.
30.
பற்பைசை அதன் டியூபிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த எடுத்துக்காட்டுக்கு எந்த இயற்பியல் அளவை மேற்கோள் காட்டுவாய்?
31.
வளர்சிதை மாற்றம் - வரையறு.
32.
தாலஸ் - வரையறு.
33.
ஒளிச்செறிவின் SI அலகு என்ன?
34.
2 கூலும் மின்னூட்டம் ஒரு கடத்தியின் வழியாக 10 வினாடிகளுக்குப் பாய்கிறது எனில், கடத்தியில் பாயும் மின்னோ ட்டத்தைக் கணக்கிடுக.
1.
(d)
இவை அனைத்தும்
2.
(b)
குழி ஆடி
3.
(c)
சேமிப்பகம்
4.
(d)
1623
5.
(c)
கெல்வின்
6.
( )
ஆடி மையம்
7.
( )
பாஸ்கல்
8.
( )
மைக்ரான்
9.
( )
பியோஃபைசி
10.
( )
மின்னனு
11.
சரி.
12.
தவறு.
உருளும் உராய்வு நழுவு உராய்வைவிட குறைவாக இருக்கும்.
13.
சரி
14.
தவறு.
ஒரு கடத்தியின் வழியே ஒரு விநாடியில் ஒரு கூலும் மின்னூட்டம் பாய்ந்தால் அது ஓர் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது.
15.
சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படும் நிகழ்வு மாசுபடுதல் எனப்படும்.
16.
| குறியீடு | பெயர் | ||
| அ) | Na | - | சோடியம் |
| ஆ) | Ba | - | பேரியம் |
| இ) | W | - | டங்க்ஸ்டன் |
| ஈ) | U | - | யுரேனியம் |
17.
(i) வாகனங்களை பழுதுநீக்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த பாஸ்கல் விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன் படுத்தப்படுகின்றன.
(ii) வாகனங்களில் உள்ள தடை அமைப்பு பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
(iii) பஞ்சு அல்லது ஆடைகள் மிகக் குறைவான இடத்தை அடைத்துக் கொள்ளும் அழுத்தப்பட்ட பொதிகளாக மாற்றுவதற்கு பாஸ்கல் விதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நீரியல் அழுத்தி பயன்படுத்தப்படுகின்றன.
18.
1. உள்ளீட்டு அலகு
2. மத்திய செயல்பாட்டு மையம்
3. வெளியீட்டு அலகு.
19.
ஒரு கடத்தியின் வழியே ஒரு விநாடியில் ஒரு கூலும் மின்னூட்டம் சென்றால் மின்னோட்டத்தின் மதிப்பு ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.
20.
நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகள் என அழைக்கப்படுகின்றன.
21.
பிரைன்
22.
மின்விளக்கிற்கான இழைகள் செய்ய
23.
சொர சொரப்பான சுவர்
24.
குறைந்த உராய்வு
25.
உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு
26.
சவ்வூடு பரவல்:
(i) நீர்த்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு கரைப்பானின் மூலக்கூறுகள் அரை கடத்தி அல்லது தேர்வுக் கடத்து சவ்வின் வழியே இடப்பெயர்ச்சி அடையும் நிகழ்ச்சி ஆகும்.
(ii) சவ்வின் இருபுறமும் செறிவு சமநிலையை அடையும் வரை கரைப்பானின் மூலக்கூறுகள் செறிவு குறைந்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு நகர்கின்றன.
(iii) செல்லிற்கு உள்ளேயும், வெளியேயும் மூலக்கூறுகள் இடம் பெயர்வது செல்களைச் சூழ்ந்துள்ள கரைசலின் செறிவைப் பொறுத்தது.
சவ்வூடு பரவலின் வகைகள்:
(i) மூன்று வகைப்படும்
i) ஒத்த செறிவு கரைசல்:
(i) செல்லின் உட்புறக் கரைசலின் செறிவும் வெளிப்புற கரைசலின் செறிவும் ஒரே மாதிரியாக இருக்கும்.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் ஒத்த செறிவு கரைசலில் வைக்கப்படும் போது அதன் இயல்பு தட்டுவடிவத்திலேயே இருக்கும். ஏனெனில் செல்லினுள் நீர் செல்லும் வேகமும் வெளிவரும் வேகமும் சமமாகவே இருக்கும்.
ii) குறை செறிவு கரைசல்:
(i) செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட குறைவு. அதனால் வெளியிலிருந்து நீரானது செல்லின் உள்ளே செல்கிறது.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் குறை செறிவு கரைசலில் வைக்கப்படும் போது அது வீங்கி வெடித்து விடும்.
iii) மிகைச் செறிவு கரைசல்:
(i) செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட அதிகம். இதனால் நீரானது செல்லை விட்டு வெளியேறுகிறது.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் மிகை செறிவு கரைசலில் வைக்கப்படும்போது அவை சுருங்கி வடிவம் இழந்து காணப்படும்.
27.
நாம் நுண்ணுயிரிகளிலிருந்து எதிர் உயிர்க்கொல்லிகள் (ஆன்டிபயாட்டிக்) மற்றும் தடுப்பூசிகளைப் பெறலாம்.
i) எதிர்உயிர்க்கொல்லிகள் (ஆன்டிபயாட்டிக்):
‘ஆன்டி' என்ற வார்த்தை 'எதிராக’ என்ற பொருள்படும். எதிர் உயிர்க்கொல்லி பொருள்கள் உயிருடன் உள்ள உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன. இது மற்ற உயிரினங்களுக்கு நச்சாக உள்ளது. முதன்முதலில் எதிர் உயிர்க்கொல்லி மருந்தான பெனிசிலின் சர்.அலெக்ஸாண்டர் பிளம்மிங் என்பவரால் 1928இல் கண்டறியப்பட்டது. எதிர் உயிர்க்கொல்லி பெனிசிலின், பெனிசிலியம் கிரைசோஜீனம் என்ற பூஞ்சையிலிருந்து பெறப்படுகிறது. இது டெட்டனஸ், டிப்தீரியா போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. ஸ்ட்ரெப்டோமைசின் எனும் எதிர் உயிர்க்கொல்லி ஸ்ரெப்டோமைசிஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து பெறப்படுகிறது. இது பல்வேறுபட்ட பாக்டீரியத் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. எ.கா. பிளேக்.
ii) தடுப்பூசிகள்:
தடுப்பூசிகள் இறந்து போன அல்லது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரிகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. எட்வர்ட் ஜென்னர் முதன்முதலில் பெரியம்மைக்கான தடுப்பூசியினைக் கண்டறிந்தார். வாக்சினேஷன் என்ற சொல் இவரால் சூட்டப்பட்டது. நோயாளியின் உடலில் இத்தடுப்பூசியானது செலுத்தப்படும் போது, உடலிலிருந்து நோய் எதிர்ப்பொருள்கள் (ஆன்டிபாடிகள்) உற்பத்தியாகி நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போரிடுகின்றன. இந்த நோய் எதிர்ப்பொருள்கள் உடலிலேயே தங்கியிருந்து, எதிர்காலத்தில் அக்குறிப்பிட்ட நோய்க்கிருமிகளின் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. எனவே, வாக்சினேஷன் நோய்த்தடுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. எ.கா: தட்டம்மைக்கான MMR தடுப்பூசி, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா, காசநோய்க்கான BCG தடுப்பூசி.
28.
1. சோடியம்
2. பொட்டாசியம்
29.
வளைவு ஆரம் = 20 செ.மீ
=\(\frac { R }{ 2 } =\frac { 20 }{ 2 } \)=10 செ.மீ
30.
பாஸ்கல் விதி
31.
மொத்த உயிரி வேதிவினைகளும் ஆற்றலை வெளிப்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் அல்லது உயிரினத்திற்குள் ஆற்றலை பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி வளர்சிதை மாற்றமாகும்.
32.
பாசிகளின் தாவர உடலமானது தாலஸ் என அழைக்கப்படுகிறது. அதாவது தாவர உடலமானது வேர், தண்டு, இலை என வேறுபடுத்த இயலாது.
33.
கேண்டிலா
34.
தீர்வு
மின்னூட்டம் (Q) = 2 கூலும்;
காலம் (t) = 10 வினாடி
மின்னோட்டம், I = \(\frac { Q }{ t } \) = \(\frac { 2 }{ 10 } \)
=0.2 A
8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards