8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதியினைக் கூறுக.
2.
குவிய தொலைவு - வரையறு.
3.
கோளக ஆடி என்றால் என்ன?
4.
ஒளி எதிரொளிப்பிற்கான விதிகளைக் கூறுக.
5.
இரண்டு சமதள ஆடிகளுக்கிடைப்பட்ட கோணம் 45 எனில், தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையினைக் காண்க.
6.
நிறப்பிரிகை என்றால் என்ன? விவரி.
7.
பெரிஸ்கோப்பின் பயன்கள் யாவை?
8.
ஊடகத்தில் ஒளிவிலகல் பற்றியும் சில பொருள்களின் ஒளிவிலகல் எண்ணையும் எழுதுக?
9.
குவி ஆடிகளின் பயன்களை எழுதுக?
10.
குழி ஆடிகளின் பயன்களை எழுதுக?
1.
ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதி:
(i) படுகதிர், விலகுகதிர் மற்றும் அவை சந்திக்கும் புள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை அனைத்தும் ஒரே தளத்தில் அமையும்.
(ii) படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் (i), விலகுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் (r) இடையே உள்ள தகவு, ஒளிவிலகல் எண்ணிற்குச் சமமாகும். இது ஒரு மாறிலி ஆகும்.
\(\frac { sin\quad i }{ sin\quad r } =\mu \)
2.
குவிய தொலைவு:
ஆடிமையத்திற்கும், முதன்மைக் குவியத்திற்கும். இடைப்பட்ட தொலைவு குவியத் தொலைவு (f) எனப்படும்.
3.
வளைந்த ஆடிகள் ஒரு கோளத்தின் பகுதியாக கருதப்பட்டால் அவை 'கோளக ஆடிகள்' என அழைக்கப்படுகின்றன.
4.
எதிரொளிப்பு விதிகள்:
(i) படுகதிர், எதிரொளிப்புக்கதிர் மற்றும் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்துள்ளன.
(ii) படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் எப்போதும் சமமாகவே இருக்கும்.
5.
கண்ணாடிகளுக்கு இடைப்பட்ட சாய்வு கோணம் 0 = 45°
பிம்பங்களின் எண்ணிக்கை = \(\frac { { 360 }^{ o } }{ \theta } -1\)
= \(\frac { { 360 }^{ o } }{ { 45 }^{ o } } -1\)
= 8 -1
பிம்பங்களின் எண்ணிக்கை = 7
6.
(i) ஒளி ஊடுருவும் ஊடகத்தின் வழியே வெண்மைநிற ஒளியானது செல்லும் போது ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது. இது நிறப்பிரிகை எனப்படும்.
(ii) வெண்மைநிற ஒளியில் பல வண்ணங்கள் உள்ளன.
(iii) அவை வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்டுள்ளன.
(iv) அவை வெவ்வேறு திசைவேகத்தில் செல்லக்கூடியவை.
(v) ஒளி விலகலானது அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தைச் சார்ந்தது.
(vi) ஒவ்வொரு வண்ணமும் வெவ்வேறு திசைவேகத்தைக் கொண்டுள்ளதால் வெவ்வேறு வண்ண ஒளிக்கதிர்கள் முப்பட்டகத்திற்குள் வெவ்வேறு திசைகளில் விலகலடைந்து பிரிகை அடைகின்றன.
(vii) ஒளிவிலகல் அதன் அலைநீளத்திற்கு எதிர்த்தகவில் உள்ளது.
(viii) எனவே, சிவப்பு நிற ஒளிக்கதிரானது அதிக அலைநீளத்தையும், குறைந்த விலகலையும் கொண்டுள்ளது.
(ix) ஊதா நிறக்கதிர் குறைந்த அலைநீளத்தையும், அதிக அளவு விலகலையும் கொண்டுள்ளது.
7.
(i) போரின் போதும், நீர்மூழ்கிக் கப்பல்களை வழிநடத்தவும் பெரிஸ்கோப் பயன்படுகிறது.
(ii) ராணுவத்தில் பதுங்கு குழியிலிருந்து இலக்கினைக் குறிபார்ப்பதற்கும், சுடுவதற்கும்
பெரிஸ்கோப் பயன்படுகிறது.
(iii) தடை செய்யப்பட்ட ராணுவப்பகுதியில் உள்ள முக்கியமான இடங்களைப் பெரிஸ்கோப்பினைப் பயன்படுத்திப் புகைப்படம் எடுக்க முடியும்.
(iv) உடல் உள்உறுப்புகளைப் பார்ப்பதற்கு ஒளியிழை பெரிஸ்கோப்பினை மருத்துவர்கள்
பயன்படுத்துகின்றனர்.
8.
ஊடகத்தில் ஒளிவிலகல்:
1. ஓர் ஊடகத்தில் செல்லும் ஒளிவிலகல் அந்த ஊடகத்தில் செல்லும் ஒளியின் திசைவேகத்தினைச் சார்ந்தது.
2. ஓர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் அதிகமாக இருக்கும் போது, விலகல் குறைவாக இருக்கும்.
3. ஓர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும் போது, விலகல் அதிகமாக இருக்கும்.
| பொருள்கள் | ஒளிவிலகல் எண் |
| காற்று | 1.0 |
| நீர் | 1.33 |
| ஈதர் | 1.36 |
| மண்ணெண்ணெய் | 1.41 |
| சாதாரணக் கண்ணாடி | 1.5 |
| குவார்ட்ஸ் | 1.56 |
| வைரம் | 2.41 |
9.
1. குவி ஆடிகள் வெளிப்புறமாக வளைந்திருப்பதால் நேரான பிம்பத்தைத் தருவதோடு அதிக அளவு பின்புறப் பகுதியையும் காண்பிக்கின்றன.
2. வாகனங்களின் பின்புறம் வரும் பிற வாகனங்களை பார்ப்பதற்கு குவி ஆடிகள் பயன்படுகின்றன.
3. மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பள்ளிகள் மற்றும் அங்காடிகளில் இவை பயன்படுகின்றன.
4. பெரும்பாலும் கட்டடத்தின் குறுகிய வளைவுகள் உள்ள சுவர்கள் அல்லது கூரைகளில் இந்த ஆடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
5. சாலைகளின் மிகவும் குறுகிய மற்றும் நுட்பமான வளைவுகளில் குவி ஆடிகள் பயன்படுகின்றன.
10.
1. பெரிதான பிம்பத்தை உருவாக்குவதால் அலங்கார கண்ணாடியாகவும் முகச் சவரக் கண்ணாடியாகவும் பயன்படுகின்றன.
2. ஒளியை நீண்ட தொலைவு பரவச் செய்வதால் டார்ச் விளக்குகள், தெரு விளக்குகள் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் போன்றவற்றில் பயன்படுகின்றன.
3. குழி ஆடிகள் பரந்த பரப்புகளிலிருந்து ஒளியினைச் சேகரித்து, ஒரு புள்ளியில் குவியச் செய்கின்றன. எனவே இவ்வகை ஆடிகள் சூரிய சமையற்கலன்களில் பயன்படுகின்றன.
4. நிழலை ஏற்படுத்தாமல், பொருள்களை தெளிவாக காண்பிப்பதால் மருத்துவர்கள் கண், காத்து மற்றும் தொண்டைப்பகுதியினை சோதித்துப் பார்ப்பதற்காக அவர்கள் அணிந்திருக்கும் தலைக் கண்ணாடிகளில் குழி ஆடிகள் பயன்படுகின்றன.
5. எதிரொளிக்கும் தொலைநோக்கிகளிலும் குழி ஆடிகள் பயன்படுகின்றன.
8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards