8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
அசோட் எனப்படுவது எது?
ஆக்சிஜன்
நைட்ரஜன்
சல்பர்
கார்பன் டை ஆக்சைடு
2.
கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.
நீல லிட்மசை சிவப்பாக
சிவப்பு லிட்மசை நீலமாக
நீல லிட்மசை மஞ்சளாக
லிட்மசுடன் வினைபுரிவதில்லை
3.
சால்வே முறை _____________ உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
சுண்ணாம்பு நீர்
காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்
வாலை வடி நீர்
சோடியம் கார்பனேட்
4.
காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.
காற்று
ஆக்சிஜன்
கார்பன் டை ஆக்சைடு
நைட்ரஜன்
5.
கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?
முழுமையாக எரியும் வாயு
பகுதியளவு எரியும் வாயு
எரிதலுக்குத் துணைபுரியாத வாயு
எரிதலுக்குத் துணைபுரியும் வாயு
6.
அலோகங்களுடன் நைட்ரஜனின் வினையை எழுதுக.
7.
ஆக்சிஜனின் இயற்பண்புகள் யாவை?
8.
உலர்பனி என்பது என்ன ? அதன் பயன்களை எழுதுக.
9.
அமில மழையின் விளைவுகள் யாவை? அதை எவ்வாறு தடுக்கலாம்?
10.
கீழ்க்காண்பவற்றுடன் கார்பன் டை ஆக்சைடு எவ்வாறு வினைபுரிகிறது?
அ) பொட்டாசியம் ஆ) சுண்ணா ம்பு நீர் இ) சோடியம் ஹைட்ராக்சைடு
11.
தெளிந்த சுண்ணாம்பு நீரின் வழியே கார்பன் டை ஆக்சைடு வாயுவை ச் செலுத்தும் பொழுது என்ன நிகழ்கிறது? அதற்கான சமன்பாட்டைத் தருக.
12.
மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்து விடுகிறது. ஏன்?
13.
இரவு நேரங்களில் மரங்களின் அடியில் படுத்து உறங்குவது ஆரோக்கியத்திற்குக் கேடு எனப்படுகிறது. இதன் காரணம் என்ன ?
1.
(b)
நைட்ரஜன்
2.
(a)
நீல லிட்மசை சிவப்பாக
3.
(d)
சோடியம் கார்பனேட்
4.
(c)
கார்பன் டை ஆக்சைடு
5.
(d)
எரிதலுக்குத் துணைபுரியும் வாயு
6.
(i) அலோகங்களான ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றுடன் நைட்ரஜன் அதிக வெப்பநிலையில் வினைபுரிந்து அவற்றின் நைட்ரஜன் சேர்மங்களைத் தருகிறது.
7.
(i) பூமியில் அதிகளவு கிடைக்கக்கூடிய வாயுக்களுள் ஆக்சிஜனும் ஒன்று.
(ii) இது வளிமண்டலக் காற்றில் 21% உள்ளது.
(iii) ஆக்சிஜனானது தனித்த நிலையிலும், இணைந்த நிலையிலும் கிடைக்கிறது.
(iv) வளிமண்டலத்தில் தனித்த நிலையில் ஈரணு வாயு மூலக்கூறாக (O2) இது உள்ளது.
(v) இணைந்த நிலையில் ஆக்சிஜனானது பூமியின் மேலோட்டில் சிலிக்கேட்களாகவும், உலோக ஆக்சைடுகளாகவும் உள்ளது. பூமியின் மேற்பரப்பில் உள்ள நீரிலும் ஆக்சிஜன் உள்ளது.
(vi) வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் ஆக்சிஜன் ஓசோன் எனப்படும் மூவணு மூலக்கூறாக (O3) உள்ளது.
(vii) ஆக்சிஜனானது நைட்ரஜனை விட இருமடங்கு நீரில் அதிகமாகக் கரையும் தன்மை உடையது
8.
(1) திட கார்பன் டை ஆக்சைடு உலர் பனிக்கட்டி எனப்படுகிறது.
பயன்கள் :
(i) இது குளிர்பதனப் பெட்டிகளில் குளிரூட்டியாகப் பயன்படுகிறது.
(ii) இது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் காற்றிலுள்ள ஈரப்பதம் இதன் மீது விழுந்து அடர்த்தியான வெண்ணிற புகைமூட்டம் போன்ற தோற்றம் உருவாகிறது. இப்பண்பு மேடை நிகழ்ச்சிகளிலும், சினிமாக் காட்சிகளிலும் பயன்படுகிறது.
9.
அமில மழையின் விளைவுகள் :
(i) மனிதர்களின் கண்களிலும் தோலிலும் எரிச்சலை உண்டாக்குகிறது.
(ii) விதை முளைத்தலையும் வளர்தலையும் தடை செய்கிறது.
(iii) மண்ணின் வளத்தை மாற்றுவதோடு தாவரங்களையும், நீர்வாழ் உயிரினங்களையும் அழிக்கிறது.
(iv) கட்டடங்கள் மற்றும் பாலங்களின் அரிப்பிற்குக் காரணமாகிறது.
தடுக்கும் வழிமுறைகள் :
(i) பெட்ரோல், டீசல் போன்ற படிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்தல்.
(ii) அழுத்தப்பட்ட இயற்கை வாயுவைப் பயன்படுத்துதல்.
(iii) மாற்று எரிபொருளைப் பயன்படுத்துதல்.
(iii) மாற்று எரிபொருளைப் பயன்படுத்துதல்.
(iv) தொழிற்சாலைக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதல் மூலம் அமில மழையின் பாதிப்புகளைத் தடுக்கலாம்.
10.
அ) பொட்டாசியம் :
(i) கார்பன் டை ஆக்சைடு லேசான உலோகமான பொட்டாசியத்துடன் இணைந்து பொட்டாசியம் கார்பனேட்டை உருவாக்குகின்றது.
4K + 3CO2 → 2K2CO3 + C
சுண்ணாம்பு நீர் :
(i) சுண்ணாம்பு நீரில் ஓரளவு கார்பன் டை ஆக்சைடை செலுத்தும் பொழுது கரையாத கால்சியம் கார்பனேட் உருவாவதால் கரைசல் பால் போல் மாறுகிறது.
(ii) Ca(OH)2 + CO2 → CaCO3 + H2O
(iii) அதிகளவு கார்பன் டை ஆக்சைடை சுண்ணாம்பு நீரில் செலுத்தும் பொழுது முதலில் பால் போன்ற நிறம் தோன்றி பின்னர் அது மறைகிறது. இதற்குக் காரணம் கரையக்கூடிய கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட், (CaHCO3)2 உருவாவதேயாகும்.
இ) சோடியம் ஹைட்ராக்சைடு :
(i) சோடியம் ஹைட்ராக்சைடு (காரம்), கார்பன் டை ஆக்சைடு (அமிலம்) மூலம் நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தப்பட்டு சோடியம் கார்பனேட்டையும் (உப்பு),
நீரையும் தருகிறது.
(ii) 2NaOH + CO2→ Na2CO3 + H2O
11.
(i) சுண்ணாம்பு நீரில் ஓரளவு கார்பன் டை ஆக்சைடை செலுத்தும் பொழுது கரையாத கால்சியம் கார்பனேட் உருவாவதால் கரைசல் பால் போல் மாறுகிறது.
(ii) Ca(OH)2 + CO2 -→ CaCO3 + H2O
(iii) அதிகளவு கார்பன் டை ஆக்சைடை கண்ணாம்பு நீரில் செலுத்தும் பொழுது முதலில் பால் போன்ற நிறம் தோன்றி பின்னர் அது மறைகிறது. இதற்குக் காரணம் கரையக்கூடிய கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் Ca(HCO3) உருவாவதேயாகும்.
12.
(i) மீன்களின் சுவாச உறுப்பான செவுள்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை மட்டுமே உறிஞ்சும் தன்மை உடையன. அவற்றால் வளிமண்டல ஆக்சிஜனைப் பயன்படுத்த இயலாது.
(ii) மீன்களால் வளிமண்டல ஆக்சிஜனைப் பயன்படுத்த முடியாமையால் நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் அவை இறந்து விடுகின்றன.
13.
(i) இரவு நேரங்களில் ஒளிச்சேர்க்கை நிகழாது. அதனால். மரங்கள் இரவு நேரங்களில் ஆக்சிஜனை வெளியிடாது. மாறாக ஆக்சிஜனை உள்ளிழுக்கின்றன.
(ii) மரங்கள் சுவாசிப்பதால் அவை ஆக்சிஜனை உள்ளிழுத்து, கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. அவற்றின் மிகப்பெரிய அளவின் காரணமாக மனிதனை ஒப்பிடும் பொழுது மரங்கள் அதிகளவு ஆக்சிஜனை உள்ளிழுக்கும். அதனால் இரவு நேரங்களில் மரத்தின் கீழ் நமக்கு சுவாசிக்கப் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இது மூச்சுத்திணறலையும், சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தலாம். அதனால் இது ஆரோக்கியத்திற்குக் கேடு ஆகும்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards