8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
பெரிய இலைகள் கொண்ட பாசி _________
மேக்ரோசிஸ்டிஸ்
வால்வாக்ஸ்
ஸ்பைரோகைரா
குளோரெல்லா
2.
மிகவும் பழமையான வகைப்பாட்டு முறை _________
செயற்கை வகைப்பாட்டு முறை
இயற்கை வகைப்பாட்டு முறை.
மரபு வழி வகைப்பாட்டு முறை
நவீன வகைப்பாட்டு முறை
3.
ஏறத்தாழ ________ மில்லியன் உயிரினங்கள் இந்த உலகத்தில் உள்ளன.
10
20
8.7
5
4.
காலனி வடிவில் காணப்படும் பாசிகளுக்கு எடுத்துக்காட்டு_________ .
ஆசில்லடோரியா
நாஸ்டாக்
வால்வாக்ஸ்
குளோரெல்லா
5.
தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலோபேட்டம் ஆகும். இதில் சொலானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?
சிற்றினம்
பேரினம்
வகுப்பு
துறைகள்
6.
கோனிஃபெரேல்ஸ்க்கு எடுத்துக்காட்டு பைனஸ்.
7.
அலோவேரா, சொலனேசி குடும்பத்தை சேர்ந்தது.
8.
ஜிம்னோஸ்பெர்ம் திறந்த விதைத் தாவரங்கள்.
9.
பைனஸ் ஒரு மூடிய விதைத் தாவரம்.
10.
பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது.
11.
செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் ஒரு சில புறத்தோற்றப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
12.
இருசொல் பெயர் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கும்.
13.
பாலிபெட்டலே துணை வகுப்பில் அல்லி இதழ்கள் தனித்தவை.
14.
அ) ஃபில்லாந்தஸ் அமாரஸ் - யூபோ ர்பியே சி
ஆ) சொலானம் ட்ரைலொபேட்டம் – சொ லானே சி
இ) அகாலிபா இன்டிகா – மால்வே சி
ஈ) ஏகில் மார்மிலாஸ் – ரூட்டே சி
1) அ, ஆ
2) இ, ஈ
3) அ, ஆ, இ
4) அ, ஆ, ஈ
15.
| அ) லாமினே ரியா | - | அயோ டின் |
| ஆ) நாஸ்டாக் | - | நை ட்ரஜன் நிலை நிறுத்தம் |
| இ) பாலிசை ப்போ னியா | - | பசும் பாசி |
| ஈ) ரோடோ ஃபை சி | - | -பியூகோசாந்தின் |
அ) லாமினேரியா – அயோடின்
ஆ) நாஸ்டாக் – நைட்ரஜன் நிலை நிறுத்தம்
இ) பாலிசை ப்போ னியா – பசும் பாசி
ஈ) ரோடோஃபை சி -பியூகோசாந்தின்
1) அ, ஆ, இ
2) இ, ஈ
3) அ, இ, ஈ
4) அ, ஆ, இ, ஈ
16.
ஸீனோசைட்டிக் மைசீலியம் என்றால் என்ன?
17.
தனிச்செல் புரதம் (SCP) என்றால் என்ன?
18.
தாவர வகைப்படுத்துதலின் பிரிவுகள் யாவை?
19.
இருசொற் பெயரிடு முறை என்பது என்ன ? எடுத்துக்காட்டு தருக.
20.
தாலஸ் - வரையறு.
21.
கிளாவிசெப்ஸ் பர்பூரியா என்பது என்ன?
22.
ஒட்டுண்ணிகள் என்றால் என்ன?
23.
பாசிகளின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.
24.
பாசிகளின் ஏதேனும் மூன்று பொருளாதார முக்கியத்துவங்களை எழுதுக.
25.
இயற்கை வகைப்பாட்டு முறை பற்றி சுருக்கமாக எழுதுக.
26.
பிரையோஃபைட்டுகளின் பொதுப்பண்புகளை எழுதுக.
27.
பூஞ்சைகளின் உடல் அமைப்பை விவரி.
28.
ஒரு விதை யிலை மற்றும் இரு விதை யிலை தாவரங்களுக்கு இடையே உள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
29.
பெந்தம் ஹுக்கர் வகை பாட்டு சுருக்க அட்டவணையை வரைக.
30.
சில பூஞ்சைகள் கூட்டுயிரிகளாக உயிர் தாவரங்களின் வேர்களுடன் இனைந்து வளர்வது _________
31.
வயிற்றுப் புண்ணுக்குரிய மருந்தாகப் பயன்படுவது._________
32.
ஸ்பேக்னம் எனும் தாவரத்திலிருந்து கிடைக்கும் நிலக்கரியைப் போன்ற எரிபொருள் _________
33.
பெனிசிலின் _________ பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
34.
இளைஞர்களிடத்தில் மாய தோற்றத்தை ஏற்படுத்தும் பூஞ்சை _________
35.
கூற்று (A): ஜிம்னோஸ்பெர்மில் நன்கு வளர்ச்சி அடைந்த கடத்தும் திசுக்கள் உள்ளன.
காரணம் (R): நீரைக் கடத்தக்கூடிய திசு ட்ராக்கீடுகளாகும். உணவைக் கடத்தக் கூடியது சல்லடை சொல்லாகும்.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
இ. கூற்று சரி. காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. காரணம் சரி.
36.
கூற்று (A): சில பாசிகள் குழுவாகச் சேர்ந்து வாழும் தன்மை கொண்டவை.
காரணம் (R): பாசிகள் உடலானது ஒரு செல் அல்லது பல செல்களால் ஆனது.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
இ. கூற்று சரி. காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. காரணம் சரி.
1.
(a)
மேக்ரோசிஸ்டிஸ்
2.
(a)
செயற்கை வகைப்பாட்டு முறை
3.
(c)
8.7
4.
(c)
வால்வாக்ஸ்
5.
(b)
பேரினம்
6.
சரி
7.
தவறு - லில்லியேசி குடும்பத்தை சேர்ந்தது.
8.
சரி
9.
தவறு. பைனஸ் விதைகள் இறகு வடிவ அமைப்பைக் கொண்டிருக்கும்.
10.
சரி
11.
தவறு. செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் ஒரு சில புறத்தோற்றப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
12.
தவறு. இருசொற்பெயரில் இரண்டு சொற்களை மட்டுமே கொண்டிருக்கும்.
13.
சரி
14.
4) அ, ஆ, ஈ
15.
அ, ஆ
16.
குறுக்குச் சுவரற்ற பூஞ்சை இழைகளில் உட்கருக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதை ஸீனோசைட்டிக் மைசீலியம் எனப்படும்.
17.
1. சில ஒரு செல் பாசிகள் மற்றும் நீலப் பச்சைப் பாசிகள் புரதத்தை உற்பத்தி செய்கின்றன.
2. எ.கா. குளோரெல்லா.
18.
1. செயற்கை வகைப்பாட்டு முறை
2. இயற்கை வகைப்பாட்டு முறை
3. மரபு வழி வகைப்பாட்டு முறை
4. நவீன வகைப்பாட்டு முறை
19.
1. ஓர் உயிரினத்தை இரண்டு சொற்களால் பெயரிட்டு அழைப்பது இரு சொல் பெயரிடுதல் எனப்படும்.
2. மாஞ்சிஃபெரா இன்டிகா என்பது மாமரத்தின் தாவரவியல் பெயர் ஆகும்.
3. மாஞ்சிஃபெரா என்னும் சொல் பேரினத்தையும்; இன்டிகா என்ற சொல் சிற்றினத்தையும் குறிக்கும்.
20.
பாசிகளின் தாவர உடலமானது தாலஸ் என அழைக்கப்படுகிறது. அதாவது தாவர உடலமானது வேர், தண்டு, இலை என வேறுபடுத்த இயலாது.
21.
1. இது ஒரு பூஞ்சை. இந்த பூஞ்சை இளந்தலைமுறையினரை அதிக அளவு பாதிப்படைய செய்கிறது.
2. ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
22.
(i) ஒட்டுண்ணிகள் உறிஞ்சு உறுப்புகள் மூலம் உயிருள்ள பொருள்களிலிருந்து உணவைப் பெறுகின்றன.
எ.கா. செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா
இது வேர்க்கடலைச் செடியில் டிக்கா நோயை உருவாக்குகிறது.
23.
1. பாசிகளில் பச்சையம் உண்டு.
2. தாவர உடலம் தாலஸ் எனப்படும்.
3. சில பாசிகள் தொற்றுத் தாவரங்களாக மற்ற தாவரங்களின் மேல் வளர்கின்றன.
24.
(1) அகார் அகார்: அகார் அகார் என்பது சிவப்பு பாசிகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இது ஆய்வகங்களில் வளர்ச்சி ஊக்கியாக விளங்குகிறது. எ.கா. ஜெலீடியம், கிரேசிலேரியா.
(2) விண்வெளிப் பயணத்தில் பாசிகள்: விண்வெளிப் பயணத்தின் போது குளோரெல்லா ஃபைரினாய்டோசா என்னும் பாசி, கார்பன் டை ஆக்ஸைடை அகற்றுவதற்கும் மனிதக் கழிவுகளை மட்கச் செய்வதற்கும் பயன்படுகிறது.
(3) தனிசெல் புரதம் (SCP): சில ஒரு செல் பாசிகள் மற்றும் நிலப் பச்சைப் பாசிகள் புரதத்தை உற்பத்தி செய்கின்றன. எ.கா. குளோரெல்லா, ஸ்பைருலினா.
25.
(i) தாவரங்களின் புறத்தோற்றப் பண்பு இனப்பெருக்கப் பண்பின் அடிப்படையில் இயற்கை வகைப்பாட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது.
(ii) உலர் தாவரத் தொகுப்பு மற்றும் தாவரவியல் பூங்காக்களில் தாவரங்களை வகைப்படுத்த இம்முறை பயன்படுத்தப்படுகிறது.
(iii) எ.கா. பெந்தம் மற்றும் ஹூக்கர் வகைப்பாட்டியல் முறை
26.
1. பிரையோஃபைட்டா மிக எளிமையான உடலமைப்பைக் கொண்ட பழமையான தாவரங்கள்.
2. இவை கடத்தும் திசுக்கள் சைலம் மற்றும் புளோயம் அற்ற நிலத்தில் வளரக் கூடிய பூவாத் தாவரம்.
3. வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்வதற்கு நீர் மிகவும் முக்கியம்.
4. எனவே இவை தாவர உலகின் இருவாழ்விகள் எனஅழைக்கப்படுகின்றன.
5. இவற்றின் சந்ததியில் கேமீட்டோஃபைட் ஓங்குத்தன்மை கொண்டது.
6. ஸ்போரோபைட் சந்ததி சிறிதளவு கேமீட்டோஃபைட் சந்ததியைச் சார்ந்திருக்கிறது.
27.
1. பூஞ்சைகளின் தாவர உடலம் வேர், தண்டு, இலை என பிரிக்கப்பட்டிருப்பதில்லை.
2. இதன் உடலம் பூஞ்சை இழைகளால் ஆனது.
3. ஒன்றிக்கும் மேற்பட்ட பூஞ்சை இழைப் பின்னைல (மைசீலியம்) உருவாக்குகிறது.
4. செல்களுக்கு இடையே குறுக்குச்சுவர் இருந்தால் குறுக்குச்சுவர் பூஞ்சை எனவும், குறுக்குச்சுவர் இல்லையெனில் குறுக்குச்சுவரற்ற பூஞ்சை எனவும் அழைக்கப்படும்.
5. குறுக்குச் சுவரற்ற பூஞ்சைகளில் உட்கருக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதை ஸீனோசைட்டிக் மைசீலியம் என்கிறோம்.
6. சில பூஞ்சைகள் ஒரு செல்லால் ஆனதும் வேறு சில பூஞ்சைகள் பல செல்களால் ஆனா யூகேரியாட் செல் அமைப்பைக் கொண்டவை.
7. செல் சுவர் கைட்டின் எனும் வேதிப் பொருளால் ஆனது.
8. பூஞ்சையின் உணவுப்பொருள் கிளைக்கோஜன் மற்றும் எண்ணெயாக சேமிக்கப்படுகின்றன.
9. பூஞ்சைகளில் பச்சையம் கிடையாது.
28.
| எண் | ஒரு விதையிலைத் தாவரங்கள் | இரு விதையிலைத் தாவரங்கள் |
| 1. | விதை, ஒரு விதையிலையைக் கொண்டுள்ளது. | விதைகள் இரண்டு விதையிலைகளைக் கொண்டிருக்கும். |
| 2. | இத்தாவரங்கள் சல்லிவேர்த் தொகுப்புடன் காணப்படுகின்றன. | இத்தாவரங்கள் ஆணிவேர்த் தொகுப்புடன் காணப்படுகின்றன. |
| 3. | இலைகள் இணைப்போக்கு நரம்பமைவுடன் காணப்படுகின்றன | இலைகள் வலைப்பின்னல் நரம்பமைவுடன் காணப்படுகின்றன |
| 4. | மலர்கள் மூன்று அடுக்கு உடையவை | மலர்கள் நான்கு அல்லது ஐந்து அங்கங்களைக் கொண்டிருக்கும் |
| 5. | அல்லி மற்றும் புல்லி இதழ்கள் பிரிக்கப்படாமல் ஒரே வட்டத்தில் அமைந்திருக்கும். | அல்லி மற்றும் புல்லி. என இரண்டு இதழ் அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருக்கும். |
| 6. | மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் காற்றின் மூலம் நடைபெறும். எ.கா. புல், நெல் | மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் பூச்சிகள் மூலம் நடைபெறும். எ.கா. அவரை மாமரம் |
29.
30.
( )
வேர்ப் பூஞ்சைகள்
31.
( )
அலோவேரா
32.
( )
பீட்
33.
( )
பெனிசிலியம் நொட்டேட்டம்
34.
( )
கிளாவிசெப்ஸ் பர்பூரியா
35.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
36.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards