8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
ரேஞ்சர் விளையாட்டின் பயன் யாது?
2.
சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?
3.
பனுவல் கருவியின் (Text Tool) பயன் என்ன ?
4.
இரண்டாம் நிலை பால் பண்புகள் என்றால் என்ன?
5.
அச்சு மற்றும் இணைப்பு எலும்புக்கூட்டை வேறுபடுத்துக
6.
நமது முதுகெலும்பு ஏன் சற்று நகரக் கூடியது?
7.
வெப்ப ஆற்றலின் விளைவுகள் யாவை?
8.
கருவுறுதல் நிகழ்வை விளக்குக.
9.
வேதிச்சமன்பாடு என்றால் என்ன?
10.
மாறா விகித விதி – வரையறு.
11.
உலக வெப்பமயமாதல் என்றால் என்ன?
12.
ஆக்சிஜனின் இயற்பண்புகள் யாவை?
13.
மின்முலாம் பூசுதலுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
14.
மின்சுற்று என்றால் என்ன?
15.
வெப்பக் கடத்தல் என்றால் என்ன?
1.
2.
3.
4.
பெண்களிலிருந்து ஆண்களை உடல் அமைப்பில் வேறுபடுத்தும் பண்புகள் இரண்டாம் நிலை பால்பண்புகள் எனப்படுகின்றன.
எ.கா. - குரல் - ஆண்களில் - கரகரப்பான குரல்
பெண்களில் - உரத்த மற்றும் கீச்சிடும் குரல்
5.
| அச்சு எலும்புக்கூடு | இணைப்பு எலும்புக்கூடு |
| i) மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ள எலும்புகளை அச்சு எலும்புக்கூடு கொண்டுள்ளது. | i) இணையுறுப்பு எலும்புக்கூடு, உடலின் இணையுறுப்புகளிலுள்ள எலும்புகளையும் , இணை உறுப்புகளை அச்சு எலும்புக்கூட்டுடன் இணைக்கும் அமைப்பிலுள்ள எலும்புகளையும் கொண்டுள்ளது. |
| ii) அச்சு எலும்புக்கூட்டில் மண்டை ஓடு , முக எலும்புகள் , ஸ்டேர்னம், விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்புத்தொடர் ஆகியவை உள்ளன. | ii) இதில் தோள்பட்டை எலும்பு,கை , மணிக்கட்டு ,மேற்கை எலும்புகள் , இடுப்பு , கால்,கணுக்கால் மற்றும் பாத எலும்புகள் உள்ளன. |
6.
(i) தனிப்பட்ட முள்ளெலும்புகளால் உருவாக்கப்பட்ட நமது முதுகெலும்பு ஒரு குருத்தெலும்பு வழுக்கு மூட்டு ஆகும்.
(ii) இவ்வகை மூட்டு வரையறுக்கப்பட்ட அசைவுகளை உடையது
(iii) அதனால் நமது முதுகெலும்பு சற்று நகரக்கூடியதாக உள்ளது.
7.
ஒரு பொருளிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது அது அப்பொருளில் மூன்று முக்கிய மாற்றங்களை உண்டு பண்ணுகிறது.
அவை :
(i) விரிவடைதல்
(ii) வெப்பநிலை உயர்வு
(iii) நிலைமாற்றம்
8.
அண்டக்கதிலிருந்து விடுபட்ட அண்டம் பெலோப்பியன் நாளத்தை அடைந்தவுடன், கருவுறுதல் நடைபெறுகிறது. கருவுற்ற முட்டை வளர்ச்சியடைந்தவுடன், அது கருப்பையில் பதிய வைக்கப்படுகிறது. கார்பஸ்லூட்டியத்தின் தொடர் வளர்ச்சியினால் அதிக அளவில் புரோஜெஸ்ட்ரான் உற்பத்தி செய்யப்படுகிறது. இது கர்ப்பதைத் தோற்றுவிக்கிறது. பொதுவாக இது 280 நாட்கள் நீடிக்கும், இதன் முடிவில் குழந்தைப் பிறப்பு உண்டாகிறது.
9.
(i) வேதிச் சமன்பாடு என்பது ஒரு வேதிவினையை குறியீடுகள் மற்றும் வாய்பாடுகள் வடிவத்தில் எடுத்துக்கூறும் குறியீட்டு முறையாகும்.இதில் வினைபடு பொருள்கள் மற்றும் வினைவிளை பொருள்கள் என இரு கூறுகள் உள்ளன.
10.
(i) ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட நிறை விகிதத்தில் ஒன்றிணைந்து தூய சேர்மத்தை உருவாக்குகின்றன.
11.
வளிமண்டலத்தில் காற்று மாசுபடுத்திகளின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால் பசுமை இல்ல விளைவு அதிகமாகி புவியின் வாயுமண்டல வெப்பநிலை சராசரியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இது உலக வெப்பமயமாதல் எனப்படும்.
12.
(i) பூமியில் அதிகளவு கிடைக்கக்கூடிய வாயுக்களுள் ஆக்சிஜனும் ஒன்று.
(ii) இது வளிமண்டலக் காற்றில் 21% உள்ளது.
(iii) ஆக்சிஜனானது தனித்த நிலையிலும், இணைந்த நிலையிலும் கிடைக்கிறது.
(iv) வளிமண்டலத்தில் தனித்த நிலையில் ஈரணு வாயு மூலக்கூறாக (O2) இது உள்ளது.
(v) இணைந்த நிலையில் ஆக்சிஜனானது பூமியின் மேலோட்டில் சிலிக்கேட்களாகவும், உலோக ஆக்சைடுகளாகவும் உள்ளது. பூமியின் மேற்பரப்பில் உள்ள நீரிலும் ஆக்சிஜன் உள்ளது.
(vi) வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் ஆக்சிஜன் ஓசோன் எனப்படும் மூவணு மூலக்கூறாக (O3) உள்ளது.
(vii) ஆக்சிஜனானது நைட்ரஜனை விட இருமடங்கு நீரில் அதிகமாகக் கரையும் தன்மை உடையது
13.
(i) இரும்பின் மீது ஏற்படும் அரிமானம் மற்றும் துருப்பிடித்தலைத் தவிர்ப்பதற்காக அதன் மீது துத்தநாகப்படலம் மின்முலாம் பூசுதல் மூலம் பூசப்படுகிறது. இது வாகனங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
(ii) வானங்களின் உதிரிபாகங்கள், சக்கரங்கள், குழாய்கள், மிதிவண்டியின் கைப்பிடிகள் போன்றவற்றைத் தயாரிக்க துருபிடிக்காத, கீறல் விழாத, பளபளப்பான உலோகம் தேவை. குரோமியம் இத்தயாரிப்புகளுக்கு பொருத்தமானதாக இருப்பினும் விலை உயர்ந்தது. எனவே இவை விலை மலிவான உலோகத்தால் செய்யப்பட்டு, பிறகு மின்முலாம் பூசுதல் மூலம் குரோமியம் மேற்பூச்சாகப் பூசப்படுகிறது.
14.
மின்மூலாம் ஒன்றின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எலக்ட்ரான்கள் பாயும் பாதை மின்சுற்று எனப்படும்.
15.
திடப்பொருள்களில் அதிக வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் இயக்கம் இல்லாமல் வெப்ப ஆற்றல் பரவும் நிகழ்வுக்கு வெப்பக் கடத்தல் எனப்படும்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards