8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
மூன்று வகையான மாசுபடுதல்களை எடுத்துக்காட்டுடன் விவரிக்க?
2.
காற்றில் ஒளியின் திசைவேகம் 3 × 108 மீவி-1 மற்றும் ஊடகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 எனில் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தினைக் காண்க.
3.
பெரிஸ்கோப் செயல்படும் விதம் பற்றி விவரிக்கவும்.
4.
உராய்வின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
5.
சுவாசச் செயலியல் நிகழ்வுகளை விளக்குக.
6.
மனிதக் கண்ணின் உள்ளமைபை படம் வரைந்து பாகங்களை க் குறி.
7.
ஜிம்னோஸ்பெர்ம்களின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
8.
நுண்ணுயிரிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பொதுவான நோய்கம் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
9.
பாக்டீரியா மற்றும் அதன் அமைப்பினைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
10.
அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகளுடன் பட்டியலிடுக.
1.
| வ. எண் | மாசுபடுதல் வகை | மாசுபடுதலை ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள் | விளைவுகள் |
| 1 | காற்று மாசுபாடு | கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள், குளோரோ புளோரோ கார்பன்கள், மீத்தேன் போன்றவை. | அமில மழை, புவி வெப்பமயமாதல், சுவாசக் கோளாறுகள் போன்றவை. |
| 2 | நீர் மாசுபாடு | வேதிப்பொருள்கள் கொண்ட கழிவுநீர் (சாயப்பட்டறைகள்), டிடர்ஜெண்டுகள், கச்சா எண்ணெய் போன்றவை. | நீரின் தரம் குறைதல், தோல் நோய்கள் போன்றவை. |
| 3 | நில மாசுபாடு | யூரியா போன்ற உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகள் போன்றவை. | பயிரிடும் நிலம் கெட்டுப் போதல், புற்றுநோய், சுவாச நோய்கள். |
2.
காற்றில் ஒளியின் திசைவேகம் C = 3 \(\times\) 108 மீவி-1
ஊடகத்தின் ஒளிவிலகல் எண் = 1.5
ஊடகத்தில் ஒளியில் திசைவேகம் V = ?
\(1.5 = \frac{3\times10^8}{v}\)
V = \(\frac { 3X{ 10 }^{ 8 } }{ 1.5 } \) = 2 \(\times\) 108 மீவி-1
ஊடகத்தில் ஒளியில் திசைவேகம் = 2 \(\times\) 108 மீவி-1
3.
பெரிஸ்கோப்:
(i) ஒரு பொருளுக்கு அல்லது நீர்மூழ்கிக் கப்பலுக்கு மேலாகவோ அல்லது அதைச் சுற்றியோ உள்ள பிற பொருள்களையோ அல்லது கப்பல்களையோ பார்ப்பதற்கான கருவியே பெரிஸ்கோப் ஆகும்.
செயல்படும் விதம்
(i) ஒளி எதிரொளித்தல் விதிகளின் அடிப்படையில் இக்கருவி செயல்படுகிறது.
(ii) இதன் அமைப்பானது நீண்ட வெளிப்பகுதியையும், உட்பகுதியையும் கொண்டது.
(iii) உட்பகுதியில் 45° கோணச் சாய்வில் ஒவ்வொரு முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகமானது பொருத்தப்பட்டுள்ளது.
(iv) நீண்ட தொலைவில் உள்ள பொருளிலிருந்து வரும் ஒளியானது பெரிஸ்கோப்பின் மேல்முனையில் உள்ள கண்ணாடியில் பட்டு, செங்குத்தாகக் கீழ்நோக்கி எதிரொளிக்கப்படுகிறது.
(v) இவ்வாறு வரும் ஒளியானது பெரிஸ்கோப்பின் கீழ்ப்பகுதியில் உள்ள கண்ணாடியால் மீண்டும் ஒருமுறை எதிரொளிக்கப்பட்டு கிடைமட்டத் திசையில் சென்று பார்ப்பவரின் கண்களை அடைகிறது.
(vi) சிக்கலான அமைப்புடைய சிலவகைப் பெரிஸ்கோப்களில் உயர் காட்சித்திறனைப் பெறுவதற்காக, கண்ணாடிகளுக்குப் பதிலாக ஒளியிழைகள் பயன்படுத்தப்படுகின்றன.
(vii) பெரிஸ்கோப்பின் பயன்பாட்டைப் பொறுத்து அதன் உட்பகுதியில் உள்ள கண்ணாடிகளுக்கிடையே உள்ள இடைவெளியானது மாற்றி அமைக்கப்படுகிறது.
4.
உராய்வின் வகைகள்:
உராய்வு இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.
I. நிலை உராய்வு
II. இயக்க உராய்வு
I. நிலை உராய்வு:
ஓய்வு நிலையில் இருக்கும் பொருட்களால் உணரப்படும் உராய்வு நிலை உராய்வு எனப்படும்.
புவியில் ஓய்வுநிலையில் உள்ள பொருள்கள் நிலையான இடத்தைப் பெற்றுள்ளன.
எ.கா. கயிற்றில் உள்ள முடிச்சு.
II. இயக்க உராய்வு:
பொருள்கள் இயக்கத்தில் இருக்கும் போது ஏற்படும் உராய்வு இயக்க உராய்வு எனப்படும். இது 2 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
(i) நழுவு உராய்வு
(ii) உருளும் உராய்வு:
(i) நழுவு உராய்வு:
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் நழுவும் போது இரண்டு பொருட்களின் பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு நழுவு உராய்வு எனப்படும்.
எ.கா. பனிச்சறுக்கு வண்டி (sledge) பனியில் சறுக்குதல்
(ii) உருளும் உராய்வு:
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் உருளும் போது அந்த இரண்டு பொருட்களின் மேற்பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு உருளும் உராய்வு எனப்படும். உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாக இருக்கும். எ.கா. தள்ளுவண்டிகள் மற்றும் பெட்டிகளில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு ஏற்படும் உராய்வு.
5.
சுவாசச் செயலியல்:
(i) உட்சுவாசம்:
(i) காற்றை நுரையீரல்களினுள் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு ஆகும்.
(ii) உட்சுவாசத்தின் போது மார்பெலும்பு மேல் நோக்கியும், வெளி நோக்கியும் தள்ளப்படுவதோடு உதரவிதானம் கீழ்நோக்கி இழுக்கப்படுகிறது.
(iii) இதனால் மார்பறையின் கொள்ளளவு அதிகரித்து அழுத்தம் குறைகிறது.
(iv) நுரையீரல்களினுள் அழுத்தம் குறைந்து வெளிக்காற்றானது நுரையீரல்களினுள் நுழைகிறது.
(v) காற்றுக்கும், இரத்தத்திற்கும் இடையே வாயு பரிமாற்றம் நிகழ்கிறது.
(ii) வெளிச் சுவாசம்:
(i) நுரையீரல்களிலிருந்து காற்றை வெளியேற்றும் நிகழ்வு ஆகும்.
(ii) வெளிச் சுவாசத்தின் போது நுரையீரல்கள் காற்றை அதிக விசையுடன் வெளித் தள்ளுகின்றன.
(iii) விலா எழும்பிடைத் தசைகள், மீட்சியடைந்து மார்பறையின் சுவர் அதன் பழைய நிலைக்குத் திரும்புகிறது.
(iv) உதரவிதானமும் மீட்சியடைந்து மார்பறையில் மேல் நோக்கி நகர்கின்றன.
(v) மார்பறையின் அழுத்தம் புறச் சூழலை ஒப்பிடும் போது அதிகரிக்கிறது.
(vi) மார்பறைக்கும் வளிமண்டலத்திற்கும் இடையே காணப்படும் இந்த அழுத்த வேறுபாட்டால் காற்றானது விசையுடன் வெளியேறுகிறது.
(vii) இந்நிகழ்வில் தசைகள் ஏதும் பங்கு பெறாததால் இது செயலற்ற நிகழவாகக் கருதப்படுகிறது.
(iii) காற்று நுண்ணறைகளினுள் வாயுப் பரிமாற்றம்:
(i) காற்று நுண்ணறைகளினுள் உள்ளிழுக்கப்படும் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அளவு அங்குள்ள இரத்தக் குழல்களில் உள்ள ஆக்ஸிஜன் அளவை விட அதிகம்.
(ii) இதனால் எளிய பரவல் மூலம் ஆக்ஸிஜன் இரத்தத்திற்குள் நுழைகிறது.
(iii) இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்ஸிஜனுடன் இணைந்து ஆக்ஸிஹீமோகுளோபின் ஆக மாறுகிறது.
(iv) ஆக்ஸிஜனை சுமந்து கொண்டு இரத்தமானது இரத்த குழல்கள் வழியே இதயத்தை அடைகிறது.
(v) இதயம் சுருங்கி இந்த ஆக்சிஜன் உள்ள ரத்தத்தை உடலின் அனைத்து திசுக்களுக்கும் அனுப்புகிறது.
(vi) திசுக்கள் வெளியேற்றும் கார்பன் டைஆக்ஸைடு இரத்தத்தின் வழியே காற்று நுண்ணறைகளுக்கு எடுத்து வரப்படுகிறது.
(vii) இரத்தத்திலிருந்து பரவல் முறையில் கார்பன் டைஆக்ஸைடு காற்று நுண்ணறைகளில் நுழைந்து வெளிச் சுவாசத்தின் போது உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது.
6.
7.
(i) ஊசியிலைத் தாவரங்களின் மரக்கட்டையானது தாள் தொழிற்சாலைகளில் தாள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. எ.கா. பைனஸ், அகாத்திஸ்
(ii) ஊசியிலைத் தாவரங்களின் மென்கட்டைகள் கட்டுமானத் தொழிலுக்கும், பொருள்களைப் பொதிவதற்கும் மற்றும் ஒட்டுப்பலகைத் தயாரிப்பிற்கும் பயன்படுகிறது. எ.கா. செட்ரஸ், அகாதிஸ்
(iii) பைனஸ் தாவரத்தின் பசையிலிருந்து பெறப்படும் டர்பன்டைன், வண்ணப்பூச்சு தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. மேலும் இது மூட்டுவலி மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
(iv) பைனஸ் ஜெரார்டியானா என்னும் தாவரத்தின் விதைகள் உண்பதற்குப் பயன்படும்.
(v) எஃபிடிரின் என்னும் அல்கலாய்டு எஃபிட்ரா என்னும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இது ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
(vi) அராவ்கேரியா பிட்வில்லீ என்னும் தாவரம் அழகுத் தாவரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
8.
| வ. எண் | மனிதரில் ஏற்படும் நோய்கள் | நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி |
பரவும் முறை | அறிகுறிகள் | தடுப்பு முறைகள் / சிகிச்சை |
| 1. | காசநோய்(டியூபர்குளோசிஸ்) | மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் (பாக்டீரியா) | காற்றின் மூலமும், நோய்த் தொற்று உடைய மனிதனின் சளி மூலம். | தொடர்ச்சியான இருமல், இரத்தத்துடன் கூடிய சளி, எடை இழப்பு, மூச்சு திணறல். | BCG தடுப்பூசி |
| 2. | காலரா | விப்ரியோ காலரா (பாக்டீரியா) | ஈக்களின் மூலமும், அசுத்தமான உணவு, மற்றும் நீர்ன் மூலமும் |
நீர்த்த வயிற்றுப் போக்கு, வாந்தி, விரைவான நீர் இழப்பு | காலராவுக்கு எதிரான தடுப்பூசி, தன் சுகாதாரம் |
| 3. | சாதாரண சளி | இன்புளூயன்சா (வைரஸ்) | காற்றின் மூலம் | சளி ஒழுகுதல், தும்முதல். | நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல் |
| 4. | ரேபிஸ் | ரேப்டோவிரிடி (வைரஸ்) | விலங்குகள் கடிப்பதனால் | காய்ச்சல், மாயத்தோற்றம், பக்கவாதம், உணவை விழுங்க இயலாமை. | ரேபிஸ்க்கு எதிரான தடுப்பூசி |
| 5. | அமீபிக் சீதபேதி | என்டமீபா ஹிஸ்டாலைடிகா (புரோட்டோசோவா) |
உணவு, நீர் மற்றும் ஈக்கள் | கடுமையான வயிற்றுப் போக்கு, இரத்தத்துடன் கூடிய மலம் | முறையான துப்புரவினை பராமரித்தல் மற்றும் மெட்ரோனிடையசோல் எதிர் உயிர்க் கொல்லிகளை பயன்படுத்த அறிவுறுத்தல் |
| 6. | மலேரியா | பிளாஸ்மோடியம் (புரோட்டோசோவா) | பெண் அனோபிலஸ் கொசு | குமட்டல், வாந்தி, கடும் காய்ச்சல் | மலேரியாவுக்கு எதிரான குயினைன், குளோரோகுயின் மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல், மேலும் கொசு வெறுக்கும் களிம்புகள் (விலக்கிகள்) கொசுவலைகளைப் பயன்படுத்துதல் |
9.
பாக்டீரியங்கள் ஒரு செல்லாலான புரோகேரியோட்டுகள் (உட்கரு அற்றவை) ஆகும். இவை பூமியில் முதன்முதலில் தோன்றிய வாழும் உயிரினமாகக் கருதப்படுகின்றன. வகைப்பாட்டியலில் மொனிரா என்னும் உலகத்தின் கீழ் இது இடம் பெற்றுள்ளது. பாக்டீரியாவைப் பற்றிய படிப்பு பாக்டீரியாலஜி எனப்படுகிறது. பாக்டீரியா 1μm முதல் 5μm (மைக்ரோமீட்டர்) அளவுடையது. இவை இரண்டு வகைப்படும்.
(i) காற்று சுவாச பாக்ரியா (கவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது)
(ii) காற்றில்லா சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுவதில்லை)
செல்லின் அமைப்பு:
பாக்டீரியாவின் வெளி அடுக்கு செல் சுவரினால் ஆனது. உட்கரு பொருள்கள் நியூக்ளியாய்டு எனக் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் உட்கரு சவ்வு காணப்படுவதில்லை. சைட்டோபிளாசத்தில் கூடுதலாகக் காணப்படும் குரோமோசோமல் டி.என்.ஏ-க்கள் பிளாஸ்மிட் என அழைக்கப்படுகின்றன. புரதச் சேர்க்கையானது 70S வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது. சவ்வினால் மற்ற சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் (மைட்டோகாண்ட்ரியா, கோல்கை உடலம், எண்டோபிளாச வலைப்பின்னல்) காணப்படுவதில்லை. கசையிழையினால் இடப்பெயர்ச்சி நடைபெறுகின்றது.
10.
| அடிப்படை அளவு | SI அலகு | |
| (i) | நீளம் | மீட்டர் m |
| (ii) | நிறை | கிலோ கிராம் kg |
| (iii) | காலம் | வினாடி S |
| (iv) | வெப்பநிலை | கெல்வின் K |
| (v) | மின்னோட்டம் | ஆம்பியர் A |
| (vi) | பொருளின் அளவு | மோல் mol |
| (vii) | ஒளிச்செறிவு | கேண்டிலா cd |
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards