8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?
வண்ணம் தீட்ட
கணிதம் கற்க
நிரல் பற்றி அறிய
வரைகலையைக் கற்க
2.
Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?
வண்ணம் தீட்ட
நிரல் அமைக்க
வருட
PDF ஆக மாற்ற
3.
_____________ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்
10 முதல் 16
11 முதல் 17
11 முதல்19
11 முதல் 20
4.
முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?
கழுத்தெலும்பு -7
மார்பெலும்பு -10
இடுப்பு எலும்பு - 4
வால் எலும்பு – 4
5.
_________ மூட்டுகள் அசையாதவை .
தோள்பட்டை மற்றும் கை
முழங்கால் மற்றும் மூட்டு
மேல் தாடை மற்றும் மண்டைஓடு
கீழ்தாடை மற்றும் மேல் தாடை
6.
ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்
ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெ ற்றுள்ளன.
ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன.
ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.
அணு எண் மற்றும் நிறை எண் அகிய இரண்டும் வேறுபடுகின்றன.
7.
கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.
நீல லிட்மசை சிவப்பாக
சிவப்பு லிட்மசை நீலமாக
நீல லிட்மசை மஞ்சளாக
லிட்மசுடன் வினைபுரிவதில்லை
8.
காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.
காற்று
ஆக்சிஜன்
கார்பன் டை ஆக்சைடு
நைட்ரஜன்
9.
எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?
எதிர் மின்னூட்டம்
நேர்மின்னூட்டம்
பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்
எதுவுமில்லை
10.
திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.
பதங்கமாதல்
குளிர்வித்தல்
உறைதல்
படிதல்
11.
Tux Math என்றால் என்ன?
12.
பனுவல் கருவியின் (Text Tool) பயன் என்ன ?
13.
தசை நார் என்றால் என்ன?
14.
அச்சு மற்றும் இணைப்பு எலும்புக்கூட்டை வேறுபடுத்துக
15.
கிரானியம் என்றால் என்ன?
16.
வெப்ப ஆற்றலின் விளைவுகள் யாவை?
17.
கருவுறுதல் என்றால் என்ன?
18.
பருவமடைதலின்போது ஏற்படும் மாற்றங்களைப் பட்டியலிடுக.
19.
வளரிளம் பருவம் என்றால் என்ன?
20.
எதிரெதிர் தசைகள் என்றால் என்ன? ஒரு உதாரணம் கொடு.
21.
கீழ்காணும் சேர்மங்களின் பெயர்களை எழுதுக.
அ) CO ஆ) N2O இ) NO2 ஈ) PCl5
22.
அயனி, அயனித் தொகுப்பு – வரையறு.
23.
பொருண்மை அழியாவிதி – வரையறு.
24.
உலக வெப்பமயமாதல் என்றால் என்ன?
25.
நைட்ரஜனின் பயன்கள் யாவை?
26.
மின்முலாம் பூசுதல் என்றால் என்ன?
27.
மின்சுற்று என்றால் என்ன?
28.
புவித்தொடுப்பு என்றால் என்ன?
29.
ஒரு கலோரி – வரையறு.
30.
வெப்பக் கடத்தல் என்றால் என்ன?
31.
மாதவிடாய் சுழற்சியினைப் பற்றி சுருக்கமாக விவரி
32.
மனித அச்சு எலும்புக்கூட்டைப் பற்றி எழுதுக. அதன் படம் வரைந்து பாகங்களைக் குறி.
33.
கீழ்க்காண்பவற்றின் வேதி வாய்பாட்டினை எழுதுக.
அ. அலுமினியம் சல்பேட்
ஆ. பேரியம் குளோரைடு
இ. சில்வர் நைட்ரேட்
ஈ. மெக்னீசியம் ஆக்சைடு
34.
மின்முலாம் பூசுதல் என்றால் என்ன? அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குக.
35.
வெப்பக் குடுவை வேலை செய்யும் விதத்தினை விளக்குக.
36.
கலோரிமீட்டர் வேலைசெய்யும் விதத்தை தெளிவான படத்துடன் விவரி.
37.
ஒரு இரும்புப் பந்தின் வெப்பநிலையை 20°C உயர்த்த 1000J ஆற்றல் தேவைப்படுகிறது. அப்பந்தின் வெப்ப ஏற்புத் திறனைக் கணக்கிடுக.
38.
உலர்பனி என்பது என்ன ? அதன் பயன்களை எழுதுக.
39.
வளரிளம் பருவமானது ஆற்றல்மிக்க பருவம். இப்பருவத்தில் எந்த மாதிரியான ஆரோக்கியம் மற்றும் நல்ல பழக்கங்களை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள்?
40.
மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்து விடுகிறது. ஏன்?
1.
(a)
வண்ணம் தீட்ட
2.
(a)
வண்ணம் தீட்ட
3.
(c)
11 முதல்19
4.
(a)
கழுத்தெலும்பு -7
5.
(c)
மேல் தாடை மற்றும் மண்டைஓடு
6.
(c)
ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.
7.
(a)
நீல லிட்மசை சிவப்பாக
8.
(c)
கார்பன் டை ஆக்சைடு
9.
(b)
நேர்மின்னூட்டம்
10.
(c)
உறைதல்
11.
12.
13.
(i) தசைநார் என்பது வலுவான நார்த்திசு அமைப்பு ஆகும்.
(ii) இவை எலும்புடன் எலும்பை இணைக்கின்றன.
14.
| அச்சு எலும்புக்கூடு | இணைப்பு எலும்புக்கூடு |
| i) மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ள எலும்புகளை அச்சு எலும்புக்கூடு கொண்டுள்ளது. | i) இணையுறுப்பு எலும்புக்கூடு, உடலின் இணையுறுப்புகளிலுள்ள எலும்புகளையும் , இணை உறுப்புகளை அச்சு எலும்புக்கூட்டுடன் இணைக்கும் அமைப்பிலுள்ள எலும்புகளையும் கொண்டுள்ளது. |
| ii) அச்சு எலும்புக்கூட்டில் மண்டை ஓடு , முக எலும்புகள் , ஸ்டேர்னம், விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்புத்தொடர் ஆகியவை உள்ளன. | ii) இதில் தோள்பட்டை எலும்பு,கை , மணிக்கட்டு ,மேற்கை எலும்புகள் , இடுப்பு , கால்,கணுக்கால் மற்றும் பாத எலும்புகள் உள்ளன. |
15.
(i) கிரானியம் என்பது மூளையை உள்ளடக்கிய மண்டை ஒட்டின் பகுதி ஆகும்.
(ii) 8 மண்டை ஓடு எலும்புகள் ஒன்றாக இணைவதால் கிரானியம் உருவாகிறது.
16.
ஒரு பொருளிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது அது அப்பொருளில் மூன்று முக்கிய மாற்றங்களை உண்டு பண்ணுகிறது.
அவை :
(i) விரிவடைதல்
(ii) வெப்பநிலை உயர்வு
(iii) நிலைமாற்றம்
17.
ஆண் மற்றும் பெண் இனச் செல்களின் (விந்தணு, அண்டம்) இணைவு கருவுறுதல் எனப்படும். பெண்களில் கருவுறுதல் பெலோப்பியன் நாளத்தில் நடைபெறுகிறது.
18.
(i) உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள்
(ii) உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
(iii) முதல்நிலைப் பால் பண்புகளின் வளர்ச்சி
(iv) இரண்டாம் நிலைப் பால் பண்புகளின் வளர்ச்சி
19.
வளரிளம் பருவம் என்பது இனப்பெருக்க முதிர்ச்சியின் காலம். இது பொதுவாக 11 முதல் 19 வயது வரை இருக்கும்.
20.
(i) தசைகள் பெரும்பாலும் ஜோடியாக ஒன்றுக்கொன்று எதிராக வேலை செய்கின்றன. இவை எதிரெதிர் ஜோடிகள் என்று அழைக்கப்படுகின்றன.
(ii) மேல்கையில் இருதலைத்தசை மற்றும் முத்தலைத்தசை எனப்படும் இரண்டு தசைகள் ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுகின்றன.
(iii) இருதலைத்தசை சுருங்கும்போது கையின் கீழ்ப்பகுதி உயர்ந்து, கை வளைகிறது. இந்த நிலையில் முத்தலைத்தசை தளர்த்தப்படுகிறது.
(iv) கை நேராவதற்கு இச்செயல் தலைகீழாக நடைபெறுகிறது.முத்தலைத்தசை சுருங்கி கையை நேராக்குகிறது. அதே நேரத்தில் இரு தலைத்தசை தளர்த்தப்படுகிறது.
21.
| அ) CO | - | கார்பன் மோனாக்சைடு |
| ஆ) N2O | - | நைட்ரஸ் ஆக்சைடு |
| இ) NO2 | - | நைட்ரஜன் டை ஆக்சைடு |
| ஈ) PCl5 | - | பாஸ்பரஸ் பென்டா குளோரைடு |
22.
(i) அயனி அல்லது அயனித்தொகுப்பு என்பது அணுக்கள் எலக்ட்ரான்களை இழப்பதாலோ அல்லது ஏற்பதாலோ உருவாக்கூடிய மின்சுமை பெற்ற துகள் ஆகும்.
23.
(i) ஒரு வேதிவினை நிகழும் போது உருவாகும் வினைவிளை பொருள்களின் மொத்த நிறையானது வினைபடுபொருள்களின் மொத்த நிறைக்குச் சமம்.
(ii) ஒரு வேதிவினையின் மூலம் நிறையை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.
24.
வளிமண்டலத்தில் காற்று மாசுபடுத்திகளின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால் பசுமை இல்ல விளைவு அதிகமாகி புவியின் வாயுமண்டல வெப்பநிலை சராசரியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இது உலக வெப்பமயமாதல் எனப்படும்.
25.
(i) திரவ நைட்ரஜன் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுகிறது.
(ii) சில வேதிவினைகள் நிகழ்வதற்குத் தேவையான மந்தத்தன்மை நிலவச் செய்கிறது.
(iii) அமோனியா தயாரிப்பில் (ஹேபர் முறை) இது பயன்படுகிறது. இம்முறை மூலம் தயரிக்கப்படும் அமோனியா உரங்கள் தயாரிப்பிலும், நைட்ரிக் அமிலம் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
(iv) இது வாகனங்களின் டயர்களில் நிரப்பப்படுகிறது.
(v) வெப்பநிலைமானிகளில் உள்ள பாதரசம் ஆவியாகாமல் தடுக்க பாதரசத்திற்கு மேலுள்ள வெற்றிடத்தை நிரப்ப நைட்ரஜன் பயன்படுகிறது.
(vi) பலவிதமான வெடிபொருள்களாகிய TNT, நைட்ரோகிளிசரின் மற்றும் துப்பாக்கி வெடிமருந்து ஆகியவை நைட்ரஜனைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
(vi) உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், துருப்பிடிக்காத இரும்பு தயாரித்தல், தீ விபத்து சார்ந்த பேராபத்துகளைக் குறைத்தல், வெப்பத்தினால் ஒளிரும் விளக்குகள் போன்றவற்றில் நைட்ரஜன் பயன்படுகிறது.
26.
மின்னோட்டத்தைப் பாயச் செய்வதன் மூலம், ஒரு உலோகத்தின் படலத்தை மற்றொரு உலோகத்தின் மேற்பரப்பில் படிய வைக்கும் நிகழ்வு மின்முலாம் பூசுதல் எனப்படும்.
27.
மின்மூலாம் ஒன்றின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எலக்ட்ரான்கள் பாயும் பாதை மின்சுற்று எனப்படும்.
28.
(i) ஒரு மின்சுற்றில் மின்னிறக்கம் அடையும் மின்னாற்றலை குறைந்த மின்தடை கொண்ட கம்பியின் மூலம் புவிக்கு இடமாற்றம் செய்யும் முறையே புவித்தொடுப்பு எனப்படும்.
(ii) இது மின்சாதனங்களில் இருக்கும் மின்காப்புறைகள் பழுதாகும்போது நமக்கு மின்னதிர்ச்சி ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை ஆகும்.
29.
1.கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1o C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு 1 கலோரி என வரையறுக்கப்படுகிறது.
30.
திடப்பொருள்களில் அதிக வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் இயக்கம் இல்லாமல் வெப்ப ஆற்றல் பரவும் நிகழ்வுக்கு வெப்பக் கடத்தல் எனப்படும்.
31.
1.ஒரு பெண் சுமார் 10 முதல் 20 வயதில் பருவ வயதை அடையும்போது அவளது இரத்தத்தில் வெளியாகும் பாலியல் ஹார்மோன்கள் அவளது அண்டகத்தில் உள்ள சில அண்டத்தை (முட்டையை) முதிர்ச்சியடையச் செய்கின்றன.
2. பொதுவாக ஒரு அண்டக்கதிலிருந்து ஒரு முதிர்ச்சியடைந்த அண்டமானது,28 நாட்களுக்கு ஒருமுறை அண்டநாளத்தை வந்தடைகிறது.இது அண்டம் விடுபடுதல் என்றழைக்கப்படுகிறது.
3. அண்டம் விடுபடுதலுக்கு முன்,கருப்பையின் சுவரானது தடித்து,மென்மையானதாகவும், முழுவதும் சிறிய இரத்தக் குழாய்களை கொண்டும் காணப்படுகிறது. இது கருவுற்ற முட்டையை ஏற்க தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.
4. அண்டமானது கருவறவில்லையெனில், தடித்த மென்மையான கருப்பைச் சுவர் தேவைப்படாது. எனவே அது சிதைந்து விடுகிறது. அதனால் தடித்த, மென்மையான
கருப்பைச் சுவர் இரத்தக்குழாயுடன் சேர்ந்து சிதைந்த அண்டத்துடன் கலவிக் கால்வாயின் வழியாக இரத்தமாக வெளியேறுகிறது. இதுவே மாதவிடாய் எனப்படுகிறது.
5. அண்டம் விடுபடுதலிலிருந்து 14வது நாள் தோன்றும் மாதவிடாய் 3 முதல் 4 நாட்கள் வரை காணப்படுகிறது.
6. மாதவிடாய் முடிந்ததும், அடுத்த கருமுட்டையைப் பெற கருப்பையின் உட்புறப் பகுதி தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.
7. இந்த நிகழ்வின் போதும் அண்டமானது கருவுறவில்லையெனில் மறுபடியும் மாதவிடாய் நடைபெறுகிறது. பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை இம்மாதவிடாய் சுழற்சி திரும்பத் திரும்ப நடைபெறுகிறது. மாதவிடாய் சுழற்சியானது ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது.
32.
அச்சு எலும்பு கூடு:
(i) மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ள எலும்புகளை அச்சு எலும்புக்கூடு கொண்டுள்ளது. அச்சு எலும்புக்கூட்டில் மண்டை ஓடு,முக எலும்புகள், ஸ்டெர்னம், விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்புத் தொடர் ஆகியவை உள்ளன.
அ) மண்டை ஓடு:
(i) மண்டை ஓடு என்பது சிறிய எலும்புகளால் ஆன கடினமான அமைப்பு ஆகும்.இது 22 எலும்புகளால் ஆனது. அதில் 8 எலும்புகள் ஒன்றாக இணைவதால் கிரேனியம் உருவாகிறது. மேலும் 14 எலும்புகள் இணைந்து முகத்தினை உருவாக்குகின்றன. அசையும் மூட்டு கொண்ட ஒரே எலும்பு கீழ்த்தாடை எலும்பாகும். இந்த நகரக்கூடிய மூட்டு தசைகள் மற்றும் தசைநார்களால் தாங்கப்படுகிறது. முதுகெலும்பின் மேற்புறத்தில் வைக்கப்பட்டுள்ள மண்டை ஓட்டை மேலும், கீழும் மற்றும் பக்கவாட்டிலும் நகர்த்தலாம்.
ஆ) முள்ளெலும்புத்தொடர் :
(i) உடலின் பின்புறத்தில் நீண்டிருக்கும் முள்லெலும்புத் தொடர் முதுகுத்தண்டு அல்லது முதுகெலும்பு என்று அழைக்கப்படுகிறது. உடலின் மேல் பகுதியினைத் தாங்குகின்ற தண்டுப்பகுதியாக இது உள்ளது.
(ii) முள்ளெலும்புத் தொடர் முதுகு எலும்புகள் எனப்படும்.தனிப்பட்ட எலும்புகளால் ஆனது. முள்ளெலும்புத் தொடர் முதுகு எலும்புகள் எனப்படும். தனிப்பட்ட எலும்புகளால் ஆனது. முள்ளெலும்புத் தொடரில் 7 கழுத்து எலும்புகள், 12 மார்பு எலும்புகள், 5 இடுப்பு எலும்புகள் மற்றும் 3 வால் எலும்புகள் அடங்கியுள்ளன.
(iii) முள்ளெலும்புத் தொடர் மண்டை ஓட்டின் அடிப்பகுதியிலிருந்து இடுப்பு எலும்பு வரை சென்று ஒரு குழாய் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இந்த குழாயின் உள்ளே முதுகுத்தண்டு செல்கிறது.
(iv) முள்ளெலும்புகள் வழுக்கு மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. அவை உடலை முன்னும், பின்னும் மற்றும் பக்கவாட்டில் வளைக்க உதவுகின்றன.
இ) மார்பெலும்பு அல்லது விலா எலும்பு :
(i) விலா எலும்பு மார்புப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இது 12 ஜோடி விலா எழும்புகளைக் கொண்ட கூம்பு வடிவ அமைப்பாகக் காணப்படுகிறது.
(ii) விலா எலும்புகள் பின்புறத்தில் உள்ள முதுகெலும்புகளுடன் இணைக்கப்பட்டு ஒரு கூண்டு போன்ற அமைப்பாகக் காணப்படுகின்றன.
(iii) முன்புறத்தில் 10 ஜோடி விலா எலும்புகள் மார்பக எலும்புடன் இணைக்கப்பட்டுள்ளன. 2 ஜோடி விலா எலும்புகள் தனித்துக் காணப்படுகின்றன. இவை மிதக்கும் விலா எலும்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
(iv) கவாசித்தல் நிகழ்வின்போது சுருங்கி விரிவடையும் வகையில் விலா எலும்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
(v) நுரையீரல், இதயம், கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளையும் இது மூடிப் பாதுகாக்கின்றது.
33.
| அ. அலுமினியம் சல்பேட் | - | Al2(SO4)4 |
| ஆ. பேரியம் குளோரைடு | - | BaCl2 |
| இ. சில்வர் நைட்ரேட் | - | AgNO3 |
| ஈ. மெக்னீசியம் ஆக்சைடு | - | MgO |
34.
மின்னோட்டத்தைப் பாயச் செய்வதன் மூலம், ஒரு உலோகத்தின் படலத்தை மற்றொரு உலோகத்தின் மேற்பரப்பில் படியவைக்கும் நிகழ்வு மின்முலாம் பூசுதல் எனப்படும்.
நடைபெறும் விதம் :
(i) ஒரு கண்ணாடி முகவையில் சிறிது தாமிர சல்பேட் கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
(ii) ஒரு சிறிய தாமிர உலோகத் தகட்டை எடுத்து. அதனை மின்கலத்தின் நேர்மின்வாயில் இணைக்க வேண்டும்.
(iii) எதிர்மின்வாயில் இரும்பினால் செய்யப்பட்ட கரண்டியினைப் பொருத்த வேண்டும்.
(iv) தாமிர சல்பேட் கரைசலில் மின்னோட்டத்தைச் செலுத்தும்போது இரும்புக் கரண்டியின் மேற்பரப்பில் தாமிரத்தின் மெல்லிய படலம் படர்ந்திருக்கும்.
(v) அதே அளவு தாமிரத்தை தாமிரத்தகடு இழந்திருப்பதை காணலாம்.
35.
(i) வெப்பக் குடுவை என்பது அதில் உள்ள பொருளின் வெப்பநிலையை அதன் சுற்றுப்புறத்தின் வெப்பநிலையை விட அதிகரித்து விடாமல் அல்லது குறைந்துவிடாமல் நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடிய வெப்பத்தைக் கடத்தாத சேமிப்புக் கலனாகும்.
வேலை செய்யும் விதம் :
(i) வெற்றிடக் குடுவை இரண்டு சுவர்களைக் கொண்ட ஒரு கலனாகும்.
(ii) அதன் உள்புறமானது சில்வரால் ஆனது.
(iii) இரண்டு சுவர்களுக்கும் இடையே வெற்றிடம் உள்ளது. அது வெப்பச்சலனம் மற்றும் வெப்பக்கடத்தல் ஆகிய நிகழ்வுகளால் வெப்ப ஆற்றல் வெளியே பரவாமல் இருக்க உதவுகிறது.
(iv) சுவர்களுக்கு இடையே சிறிதளவு காற்று இருப்பதால், வெளிப்புறத்திலிருந்து உள்புறத்திற்கும், உள்புறத்திலிருந்து வெளிப்புறத்திற்கும் வெப்பம் கடத்தப்படுவதில்லை.
(v) குடுவையின் மேற்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் இரண்டு சுவர்களும் இணைகின்ற இடத்தில் மட்டுமே வெப்பக்கடத்தல் மூலம் வெப்பமானது கடத்தப்பட முடியும்.
(vi) குடுவையிலுள்ள சில்வர் சுவர், வெப்பக்கதிர் வீச்சினை மீண்டும் குடுவையிலுள்ள திரவத்திற்கே அனுப்புவதால் நீண்ட நேரம் திரவம் சூடாக இருக்கிறது.
36.
(i) பொருள் ஒன்றினால் ஏற்க்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளவிடப் பயன்படுத்தும் உபகரணம் கலோரி மீட்டர் ஆகும்.
(ii) இது வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்கு கடத்தும் தன்மையுள்ள உலோகங்களால் ஆன தாமிரம் அல்லது அலுமினியத்தால் ஆன பாத்திரத்தை கொண்டுள்ளது.
(iii) வெப்ப ஆற்றலை சுற்றுப்புறத்திற்கு அளிப்பதன் மூலம் வெப்ப இழப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இது வெப்பத்தைக் கடத்தாத ஒரு கலனில் வைக்கப்பட்டுள்ளது.
(iv) இக்கலனின் மூடியின் மீது இரண்டு துளைகள் உள்ளன. ஒரு துளையின் வழியாக பொருளின் வெப்பநிலையை அளவிடுவதற்கு வெப்பநிலைமானியும், மற்றொரு துளையின் வழியே பாத்திரத்திலுள்ள திரவத்தை கலக்குவதற்கு ஒரு கலக்கியும் வைக்கப்பட்டுள்ளது.
(v) பாத்திரத்தினுள் வெப்ப ஏற்புத் திறனைக் கணக்கிட வேண்டிய திரவமானது வெப்பப்படுத்தப்படுகிறது.
(vi) இதைப் பயன்படுத்தி ஒரு திரவத்தின் வெப்ப ஏற்புத் திறனின் மதிப்பினைக் கணக்கிடலாம்.
37.
தேவைப்படும் வெப்ப ஆற்றல் Q = 1000 J
வெப்பநிலை உயர்வு
38.
(1) திட கார்பன் டை ஆக்சைடு உலர் பனிக்கட்டி எனப்படுகிறது.
பயன்கள் :
(i) இது குளிர்பதனப் பெட்டிகளில் குளிரூட்டியாகப் பயன்படுகிறது.
(ii) இது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் காற்றிலுள்ள ஈரப்பதம் இதன் மீது விழுந்து அடர்த்தியான வெண்ணிற புகைமூட்டம் போன்ற தோற்றம் உருவாகிறது. இப்பண்பு மேடை நிகழ்ச்சிகளிலும், சினிமாக் காட்சிகளிலும் பயன்படுகிறது.
39.
1. நான் என் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வேன்.
2. அன்றாடம் குளிப்பேன்.
3. தூய ஆடைகளை அணிந்து கொள்வேன்.
4. உணவு உண்பதற்கு முன் எனது கைகளை சோப்புப்போட்டு கழுவுவேன்.
5. நகங்களிலும்,முடியிலும் அழுக்கு சேரா வண்ணம் அவற்றை அளவாக வெட்டிப் பராமரிப்பேன்.
6. சரிவிகித உணவை உண்பேன்,அத்துடன் உடல் பயிற்சி செய்வேன்.
7. என் மனதை மகிழ்ச்சியுடன், மனநிறைவுடனும், உற்சாகத்துடனும் வைத்துக் கொள்வேன்.
40.
(i) மீன்களின் சுவாச உறுப்பான செவுள்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை மட்டுமே உறிஞ்சும் தன்மை உடையன. அவற்றால் வளிமண்டல ஆக்சிஜனைப் பயன்படுத்த இயலாது.
(ii) மீன்களால் வளிமண்டல ஆக்சிஜனைப் பயன்படுத்த முடியாமையால் நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் அவை இறந்து விடுகின்றன.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards