8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பருவமழை பொய்ப்பின் காரணமாக _________ ஏற்படுகிறது.
ஆவி சுருங்குதல்
வறட்சி
ஆவியாதல்
மழைப்பொழிவு
2.
புவி மேற்பரப்பு நீருக்கு _______ எடுத்துக்காட்டாகும்.
ஆர்டீசியன் கிணறு
நிலத்தடி நீர்
அடி பரப்பு நீர்
ஏரிகள்
3.
சுனாமி என்ற சொல் _______ மொழியிலிருந்து பெறப்பட்டது.
ஹிந்தி
பிரெஞ்சு
ஜப்பானிய
ஜெர்மன்
4.
இந்தியப் பெருங்கடலில் சுனாமி ______ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
1990
2004
2005
2008
5.
காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் ________
78.09%
74.08%
80.07%
76.63%
6.
மலை அடிவாரப் பகுதிகளில் நாம் ஏன் குடியிருப்புகளை அமைக்க கூடாது?
7.
வறட்சியின் வகைகளைக் குறிப்பிடுக.
8.
நமது நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
9.
அபாயகரக் கழிவுகள் பற்றி குறிப்பு எழுதுக.
10.
‘இடர்’ - வரையறு.
11.
நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்க.
12.
நிலச்சரிவிற்கான காரணங்கள் குறித்து விரிவான விளக்கம் தருக.
13.
நிலஅதிர்வை வரையறுத்து அதன் விளைவுகளைப் பட்டியலிடுக.
1.
(b)
வறட்சி
2.
(d)
ஏரிகள்
3.
(c)
ஜப்பானிய
4.
(b)
2004
5.
(a)
78.09%
6.
மலை அடிவாரப் பகுதிகளில் நிலச்சரிவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அடிவாரத்தில் வீடுகளை கட்டுவது ஆபத்தை உண்டாக்கும்.
7.
வறட்சியின் வகைகள்:
1. வானிலையில் வறட்சி
2. நீரியியல் வறட்சி
3. வேளாண் வறட்சி
8.
1. வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம், வட பீகார், மேற்கு வங்கத்தை உள்ளடக்கிய கங்கைச் சமவெளி மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதிகள் வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளாகும்.
2. கடலோர ஆந்திரம், ஒடிசா, குஜராத் போன்றவை அடிக்கடி வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் இதர பகுதிகளாகும்.
9.
சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு பெருத்த சுகாதார தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுக் கழிவுகள் அபாயகர கழிவுகள் எனப்படுகிறது.
1. கதிரியக்க பொருள்கள்
2. இரசாயனங்கள்
3. மருத்துவ கழிவுகள்
4. எளிதில் தீப்பற்றக் கூடிய கழிவுகள்
5. வெடிப் பொருட்கள்
6. குடிசார் அபாயகர கழிவுகள்
10.
(i) ஒரு பொருளோ, நபரோ, நிகழ்வோ அல்லது காரணியோ மக்கள் அல்லது கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தலாகவும், இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால் அது இடர் எனப்படும்.
(ii) இவை சுற்றுச் சூழலில் மனிதனால் உருவாக்கட்டவையாகவோ அல்லது இயற்கையான நிகழ்வாகவோ இருக்கலாம்.
11.
நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள்:
1. மாசடைந்த நீரைப் பருகுவதால் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. மலேரியா, டெங்கு, டைபாய்டு, யானைக்கால் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
2. நீர் மாசு அடைவதால் நீர் வாழ் உயிரினங்கள் அழிந்து விடும். நீரில் இரசாயனக் கழிவுகள் கலப்பதாலும், நீர் வெப்பமடைவதாலும் இத்தகைய அழிவுகள் ஏற்படுகின்றன.
3. மேலும் இவை நீர் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆறுகள், குளங்கள் மாசு அடையும் போது அப்பகுதி மக்களின் நீர் ஆதாரங்களும் மாசு அடைகின்றன.
4. இவை விவசாயத்தையும் விளைச்சலையும் குறைத்துவிடும். நீரின் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் உற்பத்தி திறன் பாதிப்பு அடைகிறது.
5. நீர் மாசு அடைவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
12.
நிலச்சரிவுகளுக்கான காரணங்கள்:
1. நிலச்சரிவு என்பது புவியீர்ப்பு விசையினால் பாறைகள், மண் மற்றும் தாவரங்கள் மலைச் சரிவுகளில் கீழ் நோக்கி வேகமாகச் செல்லும் நகர்வைக் குறிப்பதாகும்.
2. பொதுவாக நிலச்சரிவுகள் திடீரென்று ஏற்படும் அரிதான நிகழ்வாகும்.
3. செங்குத்துச் சரிவு மற்றும் கனமழை நிலச்சரிவுகள் ஏற்பட முக்கியக் காரணங்களாகும்.
4. பலவீனமான தளர்ந்த நில அமைப்பு, காடழிப்பு, நில அதிர்வு, எரிமலை வெடிப்பு, சுரங்கம் தோண்டுதல்,மலைப்பிரதேசங்களில் சாலைகள் மற்றும் இருப்புபாதைகளின் கட்டுமானம் ஆகியவை நிலச்சரிவு ஏற்படுவதற்கான மற்ற காரணங்களாகும்.
5. இந்தியாவில் சுமார் 15 சதவீத நிலப்பரப்பு நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகும் பகுதிகளாகும்.
6. இமயமலைச் சரிவுகள், மேற்கு தொடர்ச்சி மலைச்சரிவுகள் மற்றும் ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிலச்சரிவுகள் அதிகம் காணப்படுகின்றன.
7. தமிழ்நாட்டில் கொடைக்கானல், (திண்டுக்கல் மாவட்டம்) மற்றும் உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) பகுதிகள் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
13.
நில அதிர்வு :
1. நில அதிர்வு என்பது புவியின் மேலோட்டில் திடீரென ஏற்படும் கடும் அதிர்வாகும். இவ்வதிர்வு தோன்றும் மையத்திலிருந்து அனைத்து திசைகளிலும் தொடர்ச்சியான அதிர்வு அலைகளை ஏற்படுத்துகிறது.
2. ஒரு பகுதியினுடைய நிலவியல் அமைப்பு, கடந்த காலங்களில் ஏற்பட்ட நில அதிர்வு, அதிர்வலைகளின் தன்மைகள் ஆகியவற்றை அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நில அதிர்வு மண்டலங்கள் கண்டறியப்படுகின்றன. இதனடிப்படையில் இந்திய தரநிர்ணய நிறுவனம் இந்தியாவை 5 நில அதிர்வு மையங்களாக வகைப்படுத்தியுள்ளது.
3. மண்டலம் 2, மண்டலம் 3, மண்டலம் 4, மண்டலம் 5 (இந்தியாவின் எப்பகுதியும் மண்டலம் 1இன் கீழ் வகைப்படுத்தப்படவில்லை.)
4. இந்தியாவின் நில அதிர்வு மண்டலங்கள்
மண்டலம் - 5 - அபாயத் தன்மை மிக அதிகம்
மண்டலம் - 4 - அதிகம்
மண்டலம் - 3 - மிதமானது
மண்டலம் - 2 - குறைவு
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards