8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
குடிப்பதற்கு உகந்த நீரை __________ என்று அழைப்பர்.
நிலத்தடி நீர்
மேற்பரப்பு நீர்
நன்னீர்
ஆர்ட்டீசியன் நீர்
2.
நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.
நீர் உட்கசிந்து வெளியிடுதல்
நீர் சுருங்குதல்
நீராவி சுருங்குதல்
பொழிவு
3.
மூடுபனி __________ ஐ விட அதிக அடர்த்தி கொண்டது.
4.
மழைத்துளியின் அளவு 0.5 மி.மீ குறைவாக இருந்தால், அம்மழை பொழிவின் பெயர் __________.
5.
"மேல் மட்ட நீர் வழிந்தோடல்” -குறிப்பு வரைக.
6.
பனி உருவாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?
7.
நீர்கொள் பரப்பு பற்றி குறிப்பு வரைக.
8.
துருவப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் பனிப்பொழிவு பொதுவான நிகழ்வாக உள்ளது.
9.
புவியில் நன்னீர் குறைவாக உள்ளது.
10.
நீர் வழிந்தோடல் மற்றும் அதன் வகைகளை விவரி.
11.
நீர்ச்சுழற்சியின் பல்வேறு படிநிலைகளைப் படத்துடன் விவரி.
1.
(c)
நன்னீர்
2.
(a)
நீர் உட்கசிந்து வெளியிடுதல்
3.
( )
அடர் மூடுபனி
4.
( )
தூறல்
5.
மழைப் பொழிந்தவுடன் மழைநீரின் ஒரு பகுதி நீரோடையோடு கலந்து விடுகிறது. இது மழைப்பொழிவு அதிகமாகவும் நீண்ட காலத்திற்கும் ஊடுருவலை விட அதிகமாக இருக்கும் பொழுதும் ஏற்படுகிறது. இந்நிலையில் அதிக நீரானது நிலப்பரப்பில் செரிவடைவதால் அது நிலச்சரிவின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதால் நிலநீர் ஓட்டம் எனவும் அறியப்படுகிறது. இந்த நிலநீர் ஓட்டம், ஆறுகள், சிறு ஓடைகள் மற்றும் கடல்களில் இணைவதால் இது மேல்மட்ட நீர் வழிந்தோடல் என அழைக்கப்படுகிறது.
6.
நீர்த்துளிகள் புவியின் மேற்பரப்பில் குளிர்ந்த பொருள்களின் மீது படும்பொழுது பனி உருவாகிறது. பொருட்களின் வெப்பநிலை பனிநிலையின் வெப்பநிலையை விடக்குறைவாக இருக்கும்பொழுது பனி உருவாகிறது
7.
நீர் கொள் பரப்பு :
1. உப்பு நீர் - 97.2%
2. நன்னீர் - 2.8% (2.2% - புவியின் மேற்பரப்பிலும் மற்றும் 0.6% - நிலத்தடி நீர்)
2.15% - பனியாறுகள் மற்றும் பனி மலைகள்
0.01% - ஆறு, ஏரி
0.04% - மற்ற நீர் வடிவங்கள்
8.
மேகத்திலுள்ள வெப்பம் குறைவதின் காரணமாக நீராவி அடிக்கடி நேரடியாக பனிக்கட்டிகளாக மாற்றப்படுகிறது. இது துகள் போன்று பனியின் நுண்துகள்களைத் திரளாகக் கொண்டு காணப்படுகிறது. இது துருவப் பகுதிகளிலும், உயரமான மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது.
9.
புவியில் நன்னீர் குறைவாக உள்ளது ஏனென்றால் புவியில் உள்ள மொத்த நீரில் 97.20% உவர்ப்பு நீராகவும் மற்றும் 2.80% நன்னீராகவும் உள்ளது. இந்நன்னீரில் 2.20% புவியின் மேற்பரப்பிலும் மீதமுள்ள 0.60% நிலத்தடி நீராகவும் கிடைக்கப்பெறுகிறது.
10.
நீர் வழிந்தோடல் :
நீர் வழிந்தோடல் என்பது ஓடும் நீர் ஈர்ப்பு விசையினால் இழுக்கப்பட்டு நிலப்பகுதியின் மேற்பரப்பு முழுவதும் செல்வதாகும்.
நீர் வழிந்தோடலின் வகைகள் :
நீர் வழிந்தோடல் மூன்று வகைப்படும்.
1. மேல்மட்ட மழைநீர் வழிந்தோடல்
2. அடிப்பரப்பு நீர் வழிந்தோடல்
3. அடிமட்ட நீர் ஓட்டம்
1. மேல்மட்ட மழைநீர் வழிந்தோடல்:
மழைப்பொழிந்தவுடன் மழைநீரின் ஒரு பகுதி நீரோடையோடு கலந்து விடுகிறது. இது மழைப்பொழிவு அதிகமாகவும் நீண்ட காலத்திற்கும் ஊடுருவலை விட அதிகமாக இருக்கும்பொழுது ஏற்படுகிறது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதால் நிலநீர் ஓட்டம் எனவும் அறியப்படுகிறது. இந்த நிலநீர் ஓட்டம் ஆறுகள், சிறு ஓடைகள் மற்றும் கடல்களில் இணைவதால் இது மேல்மட்ட நீர் வழிந்தோடல் என அழைக்கப்படுகிறது.
2. அடிப்பரப்பு நீர் வழிந்தோடல்:
நீரானது அடிமண் அடுக்கினுள் நுழைந்து நிலத்தடி நீரில் கலக்காமல் பக்கவாட்டு திசையில் நகர்ந்து ஓடைகள், ஆறுகள், மற்றும் கடலுடன் கலப்பதால் இதற்கு அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் என்று பெயர்.
3. அடிமட்ட நீர் ஓட்டம் :
செறிவடைந்து நிலத்தடி நீர் மண்டலத்திலிருந்து நீர்பாதை வழியாகத் நிலத்தடி நீராக ஓடுவதே அடிமட்ட நீர் ஓட்டமாகும். நிலத்தடி நீர் மட்டத்தைவிட நீர் பாதையின் உயரம் குறைவாக இருக்கும் பகுதியில் மட்டுமே இது காணப்படும்.
இவை வறண்ட மழையற்ற காலங்களில் நிலத்தடி நீரால் நீரூட்டப்படுகின்றன.
11.

நீரியல் சுழற்சி
நீர்மயியல் சுழற்சியில் 6 முக்கிய கூறுகள் காணப்படுகின்றன. அவை
1. ஆவியீர்ப்பு
2. நீர் திரவமாய் சுருங்குதல்
3. மழைப்பொழிவு
4. நீர் ஊடுருவல்
5. உட்கசிவுகள்
6. நீர்வழிந்தோடல்
1. ஆவியீர்ப்பு:
ஆவியீர்ப்பு என்பது புவியின் மேற்பரப்பு நீர் நிலைகளில் இருந்து ஆவியாதல் வழியாகவும், மற்றும் தாவரங்களிலிருந்து நீர் உட்கசிந்து வெளியிடுதல் மூலமாகவும் நிகழும். புவியின் மொத்த நீர் இழப்பாகும். விளை நிலப்பகுதிகளில் ஆவியாதல் மற்றும் நீர் உட்கசிந்து வெளியிடுதலைத் தனித்தனியாகக் கணிப்பது கடினம். எனவே இங்கு அனைத்து நிகழ்வுகளும் ஆவியீர்ப்பு என அழைக்கப்படுகிறது.
2. நீர் திரவமாய் சுருங்குதல் :
நீராவி நீராக மாறும் செயல்முறைக்கு நீர் சுருங்குதல் என்று பெயர். வளிமண்டலத்தில் வெப்பக்காற்று மேலே எழுந்து குளிர்வடைந்து நீராவியைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனை இழக்கும் போது நீர் சுருங்குதல் நிகழ்வு நடைபெறுகிறது.
நீர் சுருங்குதலின் வகைகள் :
பனி, உறைபனி, மூடுபனி, புகைபனி மற்றும் மேகங்கள் ஆகியவை நீர் சுருங்குதலின் உருவங்களாகும்.
3. மழைபொழிவு :
மழைப்பொழிவு என்பது மேகங்களிலிருந்து பல்வேறு வடிவங்களில் நீராக புவியின் மேற்பரப்பை வந்தடையும் நிகழ்வு.
4. நீர் ஊடுருவல்:
புவியின் மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர் புகுவதற்கு நீர் ஊடுருவல் என்று பெயர். நீர் ஊடுருவல் மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் கிடைக்கச் செய்கிறது.
5. நீர் உட்கசிதல் :
நீர் உட்கசிவு என்பது மண்ணடுக்கு மற்றும் பாறை அடுக்குகளின் வாயிலாக ஊடுருவிய நீர் கீழ்நோக்கி நிலத்திற்கு அடியில் செல்வதாகும். நீரின் ஊடுருவல் என்பது மண்ணின் மேற்பரப்பின் அருகில் நடைபெறுகிறது.
6. நீர் வழிந்தோடல்:
நீர் வழிந்தோடல் என்பது ஓடும் நீர், ஈர்ப்பு விசையினால் இழுக்கப்பட்டு நிலப்பகுதியின் மேற்பரப்பு முழுவதும் நீரும், நிலத்தடி நீரும் புதுப்பிக்கப்படுகின்றன. நீர் ஊடுருவல் மூலம் நிலத்தடியில் ஊடுருவி நீர்கொள்பாறை அடுக்குகளில் சேமித்து நிலத்தடி நீரைப் புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards