8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ABS என்பதனை விரிவாக்கம் செய்க.
எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)
வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)
பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)
இவற்றுள் எதுவுமில்லை
2.
ஐ. நா. சபை 1979ஆம் ஆண்டை_____________ சர்வதேச ஆண்டாக அறிவித்தது.
பெண் குழந்தைகள்
குழந்தைகள்
பெண்கள்
இவற்றில் எதுவுமில்லை
3.
ஒரு நாடு சமயச்சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது
ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளை தடை செய்தால்
ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்
எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்
4.
சுனாமி என்ற சொல் _______ மொழியிலிருந்து பெறப்பட்டது.
ஹிந்தி
பிரெஞ்சு
ஜப்பானிய
ஜெர்மன்
5.
கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ________
பம்பாய்
அகமதாபாத்
கான்பூர்
டாக்கா
6.
இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1992
2009
1986
1968
7.
வாகனம் ஓட்டும் பொழுது எப்போதும் ___________ புறம் செல்லவும்
8.
நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் _________ மற்றும் _________ ஊக்குவிப்பதாகும்
9.
ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் ______ இடம்பெயர்வு எனப்படும்.
10.
இந்தியாவின் _______ மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது
11.
அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______
12.
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ________
13.
சாலை விபத்துகளின் நேரடி விளைவுகள் என்ன?
14.
அரசியல் உரிமைகள் மற்றும் சிலவற்றைக் குறிப்பிடுக.
15.
மனித உரிமைகள் என்றால் என்ன?
16.
அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?
17.
வறட்சியின் வகைகளைக் குறிப்பிடுக.
18.
இடரின் முக்கிய வகைகள் யாவை?
19.
உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக.
20.
‘இடம் பெயர்தல்’ – வரையறு.
21.
செல்வச் சுரண்டல் கோட்பாடு பற்றி எழுதுக.
22.
கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன?
23.
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை விளக்குக.
24.
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் யாவை?
25.
சமயச்சார்பற்ற கல்வி நமக்கு ஏன் தேவை?
26.
இந்தியத் தொழில்மயம் அழிதலுக்கு பிரிட்டிஷாரின் வர்த்தகக் கொள்கை எவ்வாறு காரணமானது?
27.
உலக வரைபடத்தில் கீழக்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
1. டோக்கியோ
2. புது தில்லி
3. மெக்சிகோ நகரம்
4. ஷாங்காய்
5. சா - பாலோ
6. ஓசியானியா
7. இலத்தீன்அமெரிக்கா
8. பாரிஸ்
9. இலண்டன்
10. கெய்ரோ
1.
(c)
பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)
2.
(b)
குழந்தைகள்
3.
(c)
ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்
4.
(c)
ஜப்பானிய
5.
(c)
கான்பூர்
6.
(c)
1986
7.
( )
இடது
8.
( )
தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு
9.
( )
தன்னார்வ
10.
( )
புது தில்லி
11.
( )
1839
12.
( )
1956
13.
சாலை விபத்துக்களின் நேரடி விளைவுகள் உயிரிழப்பு, படுகாயம், உடமைகளுக்கு சேதம் ஆகியனவாகும்.
14.
1. அரசாங்கத்தை அமைப்பதிலும், நிர்வகிப்பதிலும் அரசியல் உரிமைகள் பயன்படுத்தப்படுகின்றன. வாழ்வியல் உரிமைகளும், அரசியல் உரிமைகளும் நவீன மக்களாட்சியுடன் நேரடி தொடர்புள்ளவைகள் ஆகும்.
2. கருத்துச் சுதந்திரம், அமைதியாக கூட்டம் நடத்துதல், தன் நாட்டின் அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, பேச்சுரிமை மற்றும் தகவல்களைப் பெறும் உரிமை ஆகியவை அரசியல் உரிமைகளுள் அடங்கும்.
15.
மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும் .
16.
1. இந்தியாவில் அனைத்து சமயங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே சமயச் சார்பின்மை கோட்பாடு படிப்படியாகத் தோன்றியது.
2. பல்வேறு சமயக் கோட்பாடுகளைக் கொண்டுள்ள மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பராமரிக்க நமக்கு சமயச் சார்பற்ற நாடு அவசியமாகும். அது சம உரிமைகளையும் வழங்கும் மக்களாட்சியின் ஒரு பகுதி ஆகும்.
17.
வறட்சியின் வகைகள்:
1. வானிலையில் வறட்சி
2. நீரியியல் வறட்சி
3. வேளாண் வறட்சி
18.
இடர்கள் பல வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை,
I. நிகழ்விற்கான காரணிகளின் அடிப்படையிலான இடர்கள்
1. இயற்கையினால் ஏற்படும் இடர்கள்
2. மனித செயல்களால் உருவாக்கப்படும் இடர்கள்
3. சமூக - இயற்கை காரணிகளால் ஏற்படும் இடர்கள்
II. உருவாகும் அடிப்படையிலான இடர்கள்
1. வளிமண்டலத்தால் ஏற்படும் இடர்கள்
2. நிலவியல் சார்ந்த இடர்கள்
3. நீரியல் தொடர்பான இடர்கள்
4. எரிமலை சார்ந்த இடர்கள்
5. சுற்றுச்சூழல் சார்ந்த இடர்கள்
6. உயிரியல் சார்ந்த இடர்கள்
7. தொழில்நுட்பம் சார்ந்த இடர்கள்
8. மனித தூண்டுதலால் ஏற்படும் இடர்கள்
19.
அதிக மக்கள் தொகை கொண்ட நான்கு மாநகரங்கள்
| வ.எண் | மாநகரத்தின் பெயர் | மக்கள் தொகை (மில்லியனில்) |
| 1. | டோக்கியோ (ஜப்பான்) | 37 |
| 2. | புது தில்லி (இந்தியா) | 29 |
| 3. | சாங்காய் (சீனா) | 26 |
| 4. | மெக்சிகோ நகரம் (மெக்சிகோ) | 22 |
20.
ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல் எனப்படும்.
21.
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதும் இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டவர் தாதாபாய் நௌரோஜி ஆவார். இதுவே செல்வச் சுரண்டல் கோட்பாடு என்பதாகும்.
22.
கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) :
கல்வி உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் குழந்தைகளின் உரிமையான இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE – 2009) சட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக தற்போது செயல்படுகிறது.
23.
சாலை விபத்துக்களையும், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க பல நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அவையாவன:
1. ஒரு பன்முக ஏற்புடைய வியூகம்: ஆங்கில எழுத்து நான்கு E - பொறியியல் (Engineering) செயலாக்கம் (Enforcement) கல்வி (Education) அவசரம் (Emergency) ஆகியவற்றின் அடிப்படையில் சாலை பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பன்முக யுக்தியாகும்.
2. ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்தல், செம்மைப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை பராமரிப்பு மற்றும் பொது மக்கள் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு சிறந்த பாதுகாப்பான யோசனை ஆகும்.
3. வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்துவது: சரக்கு வாகனங்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் கம்பிகளை ஏற்றிச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்களில் பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பும் (Anti-locking Brake System) இருசக்கர வண்டிகளிலும் ABS/CBS நிறுத்தக் கருவியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
4. இரு சக்கர வண்டிகள் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்பு விளக்கு ஒளர்விப்பான் (Automatic Head Light on) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
5. தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவிலும் ஒரு அவசர சிகிச்சை ஊர்தியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நிறுத்தப்பட்டிருக்கின்றது.
6. வேகக்கட்டுப்பாட்டு கருவிகள்: இக்கருவியில் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்லுகின்றது என்பதை கண்டறியக்கூடிய தொடர்ச்சியான உணர்க்கருவிகள் உள்ளன. இவ்வுணர்வுக் கருவிகள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தினை தாண்டும்போது வாகனத்தின் (engine) உந்துபொறிக்கு செல்லும் காற்று மற்றும் எரிபொருளின் அளவினை கட்டுப்படுத்துகிறது.
7. பல்வேறு செய்திக்குறியீடுகள்: இவை பயணிகளுக்கு முக்கியத் தகவல்களை தெரிவிக்கும் ஒளி உமிழும் முனைய பலகைகள் ஆகும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பொழுது இப்பலகைகள் பயன்படுகின்றன.
24.
குழந்தைக்கான உரிமைகள்:
1. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் பிரிவு-1இன்படி பதினெட்டு வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தை எனப்படுவர்.
2. குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் அறிக்கை 1989ஆம் ஆண்டு நவம்பர் 20இல் வெளியிடப்பட்டது.
3. குழந்தை ஒரு முக்கியமான தேசியச் சொத்தாக கருதப்படுகிறது. தேசத்தின் எதிர்காலமானது அந்நாட்டின் குழந்தைகள் எவ்வாறு வளர்ந்து முதிர்ச்சியடைகிறார்கள் என்பதைப் பொறுத்தது.
4. எனவே அனைத்து வகையான சுரண்டல்கள் மற்றும் தவறான பயன்பாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது நமது சமூகத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
1. கல்வி உரிமைச் சட்டம்: 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்கு சட்டப்பிரிவு 21 A வழிவகை செய்கிறது.
2. குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்புச் சட்டம் 1986): இது 15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை செய்கிறது.
3. சிறார் நீதிச்சட்டம் 2000 (குழந்தைகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்): இந்தச் சட்டம் போதுமான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது.
4. போக்சோ (POCSO) சட்டம் 2012 : பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம். குழந்தைகளின் நலனே மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் எனக் கருதுகிறது. 1098 குழந்தைகளுக்கான உதவி மைய எண். இது இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணிநேர கட்டணமில்லா அவசரத் தொலைத் தொடர்பு சேவையாகும்.
25.
கல்வியில் சமயசார்பின்மை என்பது பொதுக்கல்வியை அனைத்து சமய ஆதிக்கத்திலிருந்தும் விடுவிப்பதாகும் வருங்கால குடிமக்களாகிய குழந்தைகள் சமய தொடர்பில்லாமல் அவர்களின் பண்புநலன் மற்றும் தார்மீக நடத்தை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலான கல்வியையே பெறவேண்டும். சமயசார்பற்ற கல்வி கீழ்க்காணும் நோக்கங்களுக்காக தேவைப்படுகிறது.
1. குறுகிய மனப்பான்மையை போக்குவதற்கும், சக்தி வாய்ந்த ஆற்றல் மற்றும் அறிவான நோக்கத்தினை உருவாக்குவதற்கும்,
2. தார்மீக மற்றும் மனிதநேய பார்வையை உருவாக்குவதற்கும்,
3. இளைஞர்களை நல்ல குடிமக்களாக்க பயிற்சியளிப்பதற்கும்,
4. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டுறவு வாழ்க்கை போன்ற மக்களாட்சியின் மதிப்புகளை பலப்படுத்துவதற்கும்,
5. வாழ்க்கை குறித்த பரந்த பார்வையை அளிப்பதற்கும்,
6. பிறரை பாராட்டுதல் மற்றும் மற்றவர் நிலையிலிருந்து புரிந்து கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும்
7. அன்பு, சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு, சமத்துவம் மற்றும் இரக்க உணர்வை வளர்ப்பதற்கும்
8. பொருள் முதல்வாத கொள்கை மற்றும் ஆன்மீக கொள்கையை ஒருங்கிணைக்கவும் தேவைப்படுகிறது.
26.
1. இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அனைத்து கொள்கைகளும் இந்திய உள்நாட்டு தொழில்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
2. கிழக்கிந்திய கம்பெனியால் பின்பற்றப்பட்ட தடையில்லா வாணிபக் கொள்கை, இந்திய வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை சந்தை விலைக்கு குறைவாக விற்க கட்டாயப்படுத்தியது.
3. இது பல கைவினைஞர்கள் தங்கள் மூதாதையர்கள் காலம் தொட்டு செய்து வந்த கைவினை திறமைகளை கைவிட கட்டாயப்படுத்தியது.
4. கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் மலிவான விலையில் இந்திய தயாரிப்பு பொருட்களை பெருமளவிற்கு வாங்கி மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் லாபத்திற்கு விற்க வேண்டும் என்பதாகும்.
5. இது இந்தியப் பாரம்பரிய தொழில்களை வெகுவாக பாதித்தது.
6. பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட ஆங்கிலேயர் பொருட்களுக்கு பெயரளவில் மட்டுமே வரி விதிக்கப்பட்டன.
27.

8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards