10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 11/07/2019
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
பொது ஈர்ப்பியல் விதியின் பயன்பாட்டினை விவரி.
2.
1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10 மீ.வி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.
3.
கீல் (keel) முனையில் இருந்து 90 செ.மீ தூரத்தில் கைப்பிடி கொண்ட கதவொன்று 40 N விசை கொண்டு திறக்கப்படுகிறது. கதவின் கீல் முனைப் பகுதியில் ஏற்படும் திருப்புத்திறன் மதிப்பினை கணக்கிடு.
4.
ஒரு கத்தியை கூர் செய்யும் போது சாணை பிடிக்கும் கருவியின் சக்கரத்தின் விளிம்பிற்கு தொடு புள்ளியில் உண்டாகும் பொறிகள் இதற்கு எடுத்துக்காட்டு.
ஓய்வில் நிலைமம்
இயக்கத்தில் நிலைமம்
திசையில் நிலைமம்
செலுத்தப்பட்ட விசை
5.
ஒரு டம்ளர் பாலில் சர்க்கரையை கலக்குவது
விசை
உந்தம்
திசையில் நிலைமம்
இயக்கத்தில் நிலைமம்
6.
விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றிய அறிவியல் பாடம் _______
இயங்கியல்
நிலையியல்
இயக்கவிசையியல்
இயந்திரவியல்
7.
கீழ்கண்டவற்றில் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
இயக்க நிலையிலுள்ள பொருளில்
அ மற்றும் ஆ
சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்
8.
1N = ______
9.
ஒரு பொருள் முடுக்கமடைந்துள்ளது எனில் _____
10.
ஒரு பொருளின் முடுக்கம் ஏற்படுவது _______
11.
100 கிகி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் ______ அளவாக இருக்கும்.
12.
நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் தீடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்னோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு _____ மூலம் விளக்கப்படுகிறது.
13.
எடையில்லா நிலை என்றால் என்ன?
14.
கணத்தாக்கு என்பது யாது?
15.
பொருள் எப்பொழுது 'ஓய்வு' அல்லது இயக்கத்தில் உள்ளது எனலாம்?
16.
பெரிய வாகனங்களில் திருகுமறைகளை (nuts) சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு (spanner) பயன்படுத்தப்படுவது ஏன்?
17.
நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு.
18.
கூற்று : செயல் மற்றும் எதிர் செயல் விசைகள் ஒன்றையொன்று சமன் செய்யும்.
காரணம் : இருவிசைகளும் எப்பொழுதும் வெவ்வேறு பொருள்களில் செயல்படும்.
(அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளங்குகிறது.
(ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
(இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரி.
19.
கூற்று : சீரான திசைவேகத்தில் நகரும் பொருளினை தொடர்ந்து நகர்த்த புறவிசை ஏதும் தேவையில்லை.
காரணம் : ஏனெனில் F = ma = m(0) = 0
(அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளங்குகிறது.
(ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
(இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரி.
20.
R=m(g+a) :R<W :: _____ R=W
21.
ஒரு பேனாவின் மூடியைத் திறத்தல் : ______ கதவினைத் திறத்தல் : விசை நிலைமம்
22.
நேர்க்கோட்டு விசையின் அலகு: N :: திருப்பு விசையின் அலகு : _______
23.
நிறை 'm' கொண்ட பெட்டியை தலை மீது வைத்துள்ள ஒரு சிறுவன் உயரமான கட்டிடத்தின் மேலிருந்து தரைக்கு குதிக்கிறான். அப்பொழுது பெட்டியால் அவன் தலைக்கு அளிக்கப்படும் விசையின் அளவு யாது? அவன் கீழே விழும் போது புவி ஈர்ப்பு முடுக்கம் உயருமா?
24.
0.5 கிகி நிறையுடைய ஒரு பந்து 20 ms-1 வேகத்துடன் நகர்கிறது. முழுவதும் மீட்சி தன்மையுடைய ஒரு சுவரின் மீது குத்தாக தாக்கிய பிறகு அது திருப்பி அனுப்பப்படுகிறது. உந்த மாறுபாடு யாது?
25.
ஒரு பொருளின் மீது செயல்படும் மொத்த விசை சுழி. எனில் பொருளானது ஓய்வு நிலையில் இருக்குமா?
26.
ஒரு பொருளின் மீது விசையானது நகரும் திசைக்கு குத்தாக செயல்படுகிறது. அதனால் பொருளின் வேகத்தில் மாற்றம் ஏதும் நிகழுமா?
27.
அதிக நிறையுடைய பொருட்களுக்கு அதிக முயற்சியெடுத்து அதனை இயங்கவைக்க வேண்டியுள்ளது ஏன்?
28.
ஒரு மின் தூக்கியில் 20 kg நிறையுடைய ஒரு பொருள் சுருள் தராசு மூலம் தொங்கவிடப்படுகிறது. கீழ்கண்ட நிலைகளில் எடை என்னவாக இருக்கும்?
(i) மின்தூக்கி 2 m/s2 முடுக்கத்துடன் மேலே உயரும்போது
(ii) அதே முடுக்கம் 2 ms-2 ல் மின்தூக்கி இறங்கும்போது
(iii) மின்தூக்கி மாறா திசைவேகம் 2 ms-1 உடன் இறங்கும்போது g =10ms-2.
1.
1. அண்டத்தில் உள்ள விண்பொருட்களின் பரிமாணங்களை அளவிட பொது ஈர்ப்பியல் விதி பயன்படுகிறது.
2. புவியின் நிறை, ஆரம், புவி ஈர்ப்பு முடுக்கம் முதலியனவற்றை துல்லியமாக கணக்கிட இவ்விதி உதவுகிறது.
3. புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களை கண்டுபிடிக்க இவ்விதி உதவுகிறது.
4. சில நேரங்களில் விண்மீன்களின் சீரற்ற நகர்வு (Wobble) அருகில் உள்ள கோள்களின் இயக்கத்தை பாதிக்கும். அந்நேரங்களில் அவ்விண்மீன்களின் நிறையினை அளவிட இவ்விதி பயன்படுகிறது.
5. தாவரங்களில் வேர் முளைத்தல் மற்றும் வளர்ச்சி புவியின் ஈர்ப்புவிசை சார்ந்து அமைவது "புவிதிசை சார்பியக்கம்" என்றழைக்கப்படுகிறது.
6. விண்பொருட்களின் பாதையினை வரையறை செய்வதற்கு இவ்விதி பயன்படுகிறது.
2.
m = 1கிகி ; v = 10 மீ.வி-1
மோதலுக்கு பின் அதே வேகத்தில் பந்து உயரச் செல்வதால் உந்தம் mv - லிருந்து - mv க்கு மாற்றமடைகிறது. ஆகவே உந்த மாற்றம்
உந்த மாற்றம் = இறுதி உந்தம் - தொடக்க உந்தம்
= - mv - mv
= -2 mv = - 2 \(\times\) 1 \(\times\) 10
= - 20 கிகி மீ.வி-1
3.
தரவுகள் : விசையின் மதிப்பு F = 40 நியூட்டன்
விசை செயல்படும் தூரம் = கீல்முனை அமைந்துள்ள தொலைவு = d = 90 செ.மீ = 0.9 மீ
சூத்திரம் : திருப்புத்திறன் M = விசையின் மதிப்பு F \(\times\) விசை செயல்படும் தொலைவு d
ஃ திருப்புத்திறன் = 40 \(\times\) 0.9 = 36 நியூட்டன் - மீட்டர்
4.
(c)
திசையில் நிலைமம்
5.
(d)
இயக்கத்தில் நிலைமம்
6.
(d)
இயந்திரவியல்
7.
(c)
அ மற்றும் ஆ
8.
( )
1 kg ms-2
9.
( )
ஒரு விசை எப்போதும் அதன் மீது செயல்படும்
10.
( )
சமன் செய்யப்படாத விசையினால்
11.
( )
980 N
12.
( )
இயக்கத்தில் நிலைமம்
13.
(i) மேலிருந்து கீழே ஒரு குறிப்பிட்ட முடுக்கத்தில் வரும் போது நமது எடை இழப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இது சில சமயங்களில் மின்தூக்கியில் நாம் நகரும் போதும் ஏற்படலாம்.
(ii) மேலிருந்து கீழே வரும் பொருளின் முடுக்கம், புவியின் ஈர்ப்பு முடுக்கத்திற்கு சமமாக உள்ள போது (a =g) தடையில்லாமல் தானே விழும் நிலை (free fall) ஏற்படுகிறது.
(iii) இந்நிலையில் பொருளின் எடை முற்றிலும் குறைந்து சுழி நிலைக்கு வருகிறது (R=m(g-g)=0) இது எடையில்லா நிலை (Weightlessness) என அழைக்கப்படுகிறது.
14.
(i) மிகக் குறைந்த காலஅளவில் மிக அதிக அளவு செயல்படும் விசை, கணத்தாக்கு விசை எனப்படும்.
(ii) F என்ற விசை t கால அளவில் ஒரு பொருள் மீது செயல்பட்டால், ஏற்படும் கணத்தாக்கு (J) ன் மதிப்பு, விசை மற்றும் கால அளவின் பெருக்கற் பலனுக்கு சமமாக இருக்கும்.
கணத்தாக்கு J=F x t ....(1)
(iii) நியூட்டனின் இரண்டாவது இயக்க விதிப்படி, F=Δp/t (Δp என்பது t கால இடைவெளியில் ஏற்படும் உந்தமாற்றம் என்பதை குறிக்கிறது).
Δp = F x t
(iv) சமன்பாடு (1) மற்றும் (2)-ஐ சமன் செய்ய, கணத்தாக்கு J = Δp
(v) கணத்தாக்கு என்பது உந்த மாற்றத்திற்கு சமமான அளவாகும். இதன் அலகு கிகி மீவி-1 அல்லது நியூட்டன் விநாடி ஆகும்.
15.
(i) ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொருள் தனது நிலையை மாற்றவில்லையெனில் அது ஓய்வு நிலையில் உள்ளது எனலாம்.
(ii) ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு பொருளானது தனது நிலையில் மாற்றம் அடையுமானால் அது இயக்க நிலையில் உள்ளது எனலாம்.
16.
திருகுக்குறடு நீளமான கைப்பிடியை கொண்டதாக இருந்தால் சிறிதளவே திருப்புத்திறன் விசையை செலுத்தி பயன்பாட்டை எளிதாக்கலாம்.
விசையின் திருப்புத்திறன் \(\tau\) = F x d
17.
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது, அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகவில் அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
F = m x a
18.
(இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறு.
19.
(அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளங்குகிறது.
20.
R =mg
21.
இரட்டையின் திருப்புத்திறன்
22.
Nm
23.
( )
(i) F =mg
(ii) கீழே விழும் போது புவி ஈர்ப்பு முடுக்கம் அதிகரிக்காது.
24.
( )
ΔP = Pஇறுதி - Pதொடக்கம் = mv - mu
= mv - mv = -2 mv[u - v]
= -2mv =2 x 0.5 x 20
=20 x 1 = 20 kg ms-1
25.
( )
இல்லை. ஒரே நேர்க்கோட்டில் சீரான இயக்கத்தை மேற்கொள்ளலாம்.
26.
( )
வேகத்தில் மாற்றம் ஏற்படாது
27.
( )
நியூட்டனின் இரண்டாம் விதிப்படி F =ma
அதிக விசை செலுத்தப்படும்போது அதிக முடுக்கமடையும்.
28.
கொடுக்கப்பட்டவை:
ஒரு பொருளின் நிறை m =20 kg
கண்டறிய:
தோற்ற எடை R =?
(i) முடுக்கம் 2 m/s2 உடன் மின்தூக்கி மேலேறும்போது
(ii) முடுக்கம் 2 m/s2 உடன் மின்தூக்கி கீழிறங்கும்போது
(iii) மாறா திசைவேகம் 2 ms-1 உடன் மின்தூக்கி கீழிறங்கும்போது
(i) மேலேறும்போது R= m (g + a)
R=20[10+2] = 240 N
= 24 kg எடை
(ii) கீழிறங்கும்போது R =m (g-a)
= 20 (10 - 2)
= 20 x 8 = 160 N
(iii) மாறா திசைவேகத்தில் a =0
R = mg= 20 x 10 = 200 N = 20 kg எடை
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards